Tuesday, December 28, 2010

நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

அழுது யோசிச்சது: 
ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டேன்னா எனக்கு மூளை வேலை செய்யாது. அப்படித்தான் நந்தலாலா படம் இந்த மாசம் பார்க்கப் போய்ட்டு, தேம்பித் தேம்பி அழுதுட்டு வந்தேன்.( குசேலன் கிளைமாக்ஸுக்கே குலுங்கி குலுங்கி அழுவுற ஆளு நானு..) இப்போ நிதானமா யோசிச்சுப் பார்த்தால் ஒரு டவுட்:

சிறு வயதிலேயே மிஷ்கினை மனநலக்காப்பகத்தில் விட்டுச் சென்ற தாய்(படத்துல தாங்க!), அதன்பிறகு பார்க்க வரவேயில்லை. எனவே வளர்ந்து பெரியவனான மிஷ்கின் கோபத்துடன் தன் தாயைப் பார்க்க போகிறார். போய்ப் பார்த்தால், சங்கிலியில் கட்டிவைக்கப் பட்ட நிலையில், அழுக்கு உடை & தலையுடன் தாய். பிண்ணனியில் இளையராஜா.

மிஷ்கினின் குடும்பத்திற்கு மனநலக் காப்பகத்தைப் பற்றிய அறிவு ஏற்கனவே உள்ளது. அதனால்தான் மிஷ்கினை அங்கே விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மிஷ்கினின் தாயை மட்டும் ஏன் மனநலக் காப்பகத்தில் சேர்க்கவில்லை? ஏன் காலில் புண் வரும் அளவிற்கு கட்டிப் போட்டிருக்கிறார்கள்? மிஷ்கின் கடைசியில் தாயைக் கண்ட 5 நிமிடத்தில் குளிப்பாட்டி, அருகிலிருக்கும் மனநலக் காப்பகத்தில் சேர்க்கிறார். மனநிலை பிறண்ட மிஷ்கினுக்கு இருக்கும் அறிவு, ஏன் அவரது அண்ணனுக்கு இல்லை?
ஒருவேளை ஒலகப் படம் பார்க்கிற அளவுக்கு நான் வளரலையோ?...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதி யோசிச்சது:
’முதல் முதலாப் பதிவேற்றப் போறோம், பதிவுலகே பதறப்போகுது, தமிழ்மணமே தள்ளாடப்போகுது’அப்படீன்னு நினைச்சுக்கிட்டே என் முதல் பதிவான உலகக்கடவுள் முருகனை வலையேற்றினால்..அடப்பாவிகளா.வந்ததே 35 பேர்..அப்புறம் ஏன் இந்த ஊர்ல இப்படி மழை பெய்ய்ய்யுது?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூம் போட்டு யோசிச்சது:
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா உள்ளே போய்விடுவார் போலிருக்கிறது. அப்படி நடந்தால் திமுகவும் கழட்டிவிடத் தயாராகி விட்டது. அப்புறம் ராசா என்ன செய்வார்? ஓவரா அடிச்சுட்டமேன்னு உட்கார்ந்து ’எண்ணுவாரோ’?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படிச்சு யோசிச்சது:
 உ.பி.யில் மக்கள் ஒரு பிச்சைக்காரரை பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளார்களாம். அந்தளவுக்கு நொந்து போயிட்டாங்களா?..அதைவிடுங்க..அந்தப் பிச்சைக்காரருக்கு (இப்படிச் சொல்லலாமா?) 4 மகன்களும் 14 பேரன்களும் உள்ளார்களாம். அதை நினைச்சாத்தான்..................
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடுப்பாகி யோசிச்சது:
மன்மதன் அம்பு படத்தில் கமலுக்கு த்ரிஷா மேல் காதல் வருவதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்படலைன்னு சொல்றாங்க..என்னய்யா படம் பார்க்குறீங்க?..அதான் தெளிவா காட்டியிருக்காங்களே..கமல் தன் ஃபாரின் தங்கமணிகூட கார்ல போகும்போது, திடீர்னு த்ரிஷாவோட கார் குறுக்க வர்றதால ஆக்சிடெண்ட் ஆகி, தங்க மணி பொட்-னு போய்டுது. கமல் ஃப்ரீ ஆயிடுதாரு. ‘அடடா, பலநாள் ப்ளான் பண்ணியும் நம்மால முடியாத ஒரு நல்ல காரியத்தை, இந்தச் சின்னப் பொண்ணு ஒரு நிமிஷத்துல சாதிச்சிருச்சே’ன்னு கமல் ஃபீல் ஆகி த்ரிஷாவை லவ்ஸ் வுடுறாரு..அம்புட்டுதேன்..இது கல்யாணம் ஆகாத மைனர்களுக்கு புரியாதது பரவாயில்லை, ஆனா கல்யாணம் ஆன ’மைனர்’களுக்கு ஏன் புரியலை?......
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோசிக்காமல் ஏற்றுக் கொண்டது:
நீங்கள் தமிழ்மணத்திலும்இன்ட்லியிலும் இன்ன பிற திரட்டிகளிலும் வாக்களிப்பதன் மூலம்நான் என்னவோ...எம்.பி-யாகிமத்திய மந்திரியாகி ஒரு லட்சம் கோடிஇரண்டு லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கப்போவதில்லை என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.நீங்கள் தைரியமாக வாக்களிக்கலாம்.


--தன் வலைப்பக்கத்தில் கஸாலி (எ) ரஹீம் கஸாலி (எ) அரசையூரான் (எ)...............................

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

 1. //மிஷ்கினின் குடும்பத்திற்கு மனநலக் காப்பகத்தைப் பற்றிய அறிவு ஏற்கனவே உள்ளது. அதனால்தான் மிஷ்கினை அங்கே விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மிஷ்கினின் தாயை மட்டும் ஏன் மனநலக் காப்பகத்தில் சேர்க்கவில்லை?//

  இதே 'டவுட்டு' எனக்கும் வந்திச்சு! ஒருவேளை 'கிகுஜிரோ' பார்த்தா தெரியுமோ?

  ReplyDelete
 2. //மன்மதன் அம்பு படத்தில் கமலுக்கு த்ரிஷா மேல் காதல் வருவதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்படலைன்னு சொல்றாங்க//

  காரணம் வலுவாச் சொன்னாதான் காதலிக்க முடியமென்றால் நாட்டில யாருமே????..
  டைவர்ஸ் க்குதான் காரணம் வலுவாச் சொல்ல வேணும்! :-)

  நீங்க சொன்ன விளக்கம் சூப்பர்!

  ReplyDelete
 3. பல்சுவை பதிவு, நச் என இருந்தது..

  ReplyDelete
 4. @ஜீ...:உங்களுக்கும் அதே டவுட்டா..வாங்க..வாங்க..சேர்ந்து யோசிப்போம்.

  ReplyDelete
 5. @பார்வையாளன்:பாராட்டுக்கு நன்றி பார்வையாளன்..

  ReplyDelete
 6. //மன்மதன் அம்பு படத்தில் கமலுக்கு த்ரிஷா மேல் காதல் வருவதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்படலைன்னு சொல்றாங்க//

  காரணம் வலுவாச் சொன்னாதான் காதலிக்க முடியமென்றால் நாட்டில யாருமே????..
  டைவர்ஸ் க்குதான் காரணம் வலுவாச் சொல்ல வேணும்! :-)

  நீங்க சொன்ன விளக்கம் சூப்பர்! //

  Repeattu..........

  ReplyDelete
 7. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):வருகைக்கும் ரிப்பீட்டியதற்கும் நன்றி போலீஸ்கார்.

  ReplyDelete
 8. அருமை, அசத்தல், சங்கவிக்கு ஒரு அஞ்சறை பெட்டிபோல், செங்கோவிக்கு இது. தொடருங்கள்.

  ReplyDelete
 9. அத்தன குழந்தையும் பேரக்குழந்தையும் இருந்தால் பிச்சைகாரனாகம பேங்க் மேனேஜரா ஆவான்?

  ReplyDelete
 10. @ரஹீம் கஸாலி: பாராட்டுக்கு நன்றி கஸாலி.

  ReplyDelete
 11. @இரவு வானம்: ஹா..ஹா..மெயின் பாயிண்டைப் பிடிக்கிறீங்களே.

  ReplyDelete
 12. நீங்க யோசிச்சது நல்லா இருக்கு செங்கோவி.

  ReplyDelete
 13. ////"மிஷ்கினின் குடும்பத்திற்கு மனநலக் காப்பகத்தைப் பற்றிய அறிவு ஏற்கனவே உள்ளது. அதனால்தான் மிஷ்கினை அங்கே விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மிஷ்கினின் தாயை மட்டும் ஏன் மனநலக் காப்பகத்தில் சேர்க்கவில்லை? ஏன் காலில் புண் வரும் அளவிற்கு கட்டிப் போட்டிருக்கிறார்கள்? மிஷ்கின் கடைசியில் தாயைக் கண்ட 5 நிமிடத்தில் குளிப்பாட்டி, அருகிலிருக்கும் மனநலக் காப்பகத்தில் சேர்க்கிறார். மனநிலை பிறண்ட மிஷ்கினுக்கு இருக்கும் அறிவு, ஏன் அவரது அண்ணனுக்கு இல்லை?
  ஒருவேளை ஒலகப் படம் பார்க்கிற அளவுக்கு நான் வளரலையோ?..."///

  நல்லாதான் கொஸ்டின கெளப்புரீங்க!
  என் வீட்டிற்கு அருகில் 3 டாக்ட‌ர்கள் உள்ள ஒரு வீட்டில் தங்க‌ள் மூத்த சகோதரியை வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கிறார்கள்.அவர் ஒரு தீவிரமான மன நோயாளி.அது போல மிஷ் கினின் சகோதரருக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம். மன நோய் காப்பகத்தில் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது என்பதையும் மிஷ்கினின் காப்பகக்க் காட்சிகள் காண்பிக்கின்றனவே.எனக்குத் தெரிந்து வேறொரு ஏழை விதவைத் தாய், தன் வயதுக்கு வந்த மனநோயாளி மகளிடம் தினசரி அடி, உதை, கடி வாங்குகிறார். எவ்வளவு சொல்லியும் காப்பகத்தில் விட மறுக்கிறார்.எல்லாத்துக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியாத பல காரணங்க‌ள் இருக்கும்.ஒரு திரைப் படத்தில் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தால் தினத்தந்தி சிந்துபாத் கதைபோல முடிவுறவே முடிவுறாது.

  ReplyDelete
 14. ////"மிஷ்கினின் குடும்பத்திற்கு மனநலக் காப்பகத்தைப் பற்றிய அறிவு ஏற்கனவே உள்ளது. அதனால்தான் மிஷ்கினை அங்கே விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மிஷ்கினின் தாயை மட்டும் ஏன் மனநலக் காப்பகத்தில் சேர்க்கவில்லை? ஏன் காலில் புண் வரும் அளவிற்கு கட்டிப் போட்டிருக்கிறார்கள்? மிஷ்கின் கடைசியில் தாயைக் கண்ட 5 நிமிடத்தில் குளிப்பாட்டி, அருகிலிருக்கும் மனநலக் காப்பகத்தில் சேர்க்கிறார். மனநிலை பிறண்ட மிஷ்கினுக்கு இருக்கும் அறிவு, ஏன் அவரது அண்ணனுக்கு இல்லை?
  ஒருவேளை ஒலகப் படம் பார்க்கிற அளவுக்கு நான் வளரலையோ?..."///

  நல்லாதான் கொஸ்டின கெளப்புரீங்க!
  என் வீட்டிற்கு அருகில் 3 டாக்ட‌ர்கள் உள்ள ஒரு வீட்டில் தங்க‌ள் மூத்த சகோதரியை வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கிறார்கள்.அவர் ஒரு தீவிரமான மன நோயாளி.அது போல மிஷ் கினின் சகோதரருக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம். மன நோய் காப்பகத்தில் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது என்பதையும் மிஷ்கினின் காப்பகக்க் காட்சிகள் காண்பிக்கின்றனவே.எனக்குத் தெரிந்து வேறொரு ஏழை விதவைத் தாய், தன் வயதுக்கு வந்த மனநோயாளி மகளிடம் தினசரி அடி, உதை, கடி வாங்குகிறார். எவ்வளவு சொல்லியும் காப்பகத்தில் விட மறுக்கிறார்.எல்லாத்துக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியாத பல காரணங்க‌ள் இருக்கும்.ஒரு திரைப் படத்தில் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தால் தினத்தந்தி சிந்துபாத் கதைபோல முடிவுறவே முடிவுறாது.

  ReplyDelete
 15. @kmr.krishnan: ஐயா, தங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி..அந்தக் கேள்விக்குப் பின்னால் ஒரு சினிமா-அரசியல் உள்ளது. இந்தப் படம் ஒரு ஜப்பானியப் படத்தின் தழுவல்..அதில் அந்தத்தாய் காப்பகத்தில் தான் இருப்பார்..இந்த மாதிரி ஓவர் செண்டிமெண்டும் கிடையாது..ஆனால் தமிழ்’படுத்துவதாய்’ நினைத்து திணிக்கப்பட்ட காட்சி அது..இப்படி ஒரு காட்சியில்லையென்றால் ஜப்பான்காரனுக்குப் புரிந்த தாய்மை நமக்குப் புரியாதா என்பது அடுத்தடுத்து வரும் கேள்விகள்..உங்கள் கருத்தில் உள்ள யதார்த்த உண்மையை ஏற்கிறேன்.

  ReplyDelete
 16. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

  http://blogintamil.blogspot.com/2010/12/1.html

  ReplyDelete
 17. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): மிகவும் நன்றி போலீஸ்கார்..வந்தேன், கண்டேன், மகிழ்ந்தேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.