Saturday, January 29, 2011

ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.

பொதுவாக நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்றுதான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் சொல்வார்கள். ஆனால் மீனவச் சமுதாயம் ”எங்களை வேலை செய்யவிடு” என்று போராடும் துரதிர்ஷ்டநிலை தொடர்ந்து இங்கு இருந்துவருகிறது. கூடவே உயிர்பலி வேறு..

ஒரு சிறிய நாடு, இந்தியாவின் குடிமக்களைக் கொல்வதும் அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. மீனவனைக் கொன்றால், அவர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற திமிரில் தான் நம் அரசுகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, இந்தியா செய்த மாபெரும் தவறு. அதனுடைய விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறோம். ‘மீனவர்களும் எல்லை தாண்டுகிறார்களே’ என்று பிரதமரே வைகோவிடம் கேட்டிருக்கிறார். ‘எல்லை தாண்டினால், சுட்டுக் கொல்லவேண்டும்’ என்று சர்வதேச /இலங்கை சட்டத்தில் சொல்லப் பட்டுள்ளதா? பாகிஸ்தானே எல்லை தாண்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும்போது, இலங்கைக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது யார் என கொஞ்சம் யோசித்தாலே அனைவருக்கும் புரியும்.

நிருபமா இலங்கை சென்றிருக்கிறார். மீனவரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அல்ல..இனிமேல் தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள் என்று மன்றாட..இந்தியா இவ்வளவு மோசமான நிலையில் இதற்குமுன் இருந்ததே இல்லை. அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட, நம் முன்னோர் தைரியமாக தன் உரிமையை வெள்ளைக்காரனிடம் கேட்கவில்லையா?

ஈழப்போர் முடிவுக்கு முன், விடுதலைப் புலிகளுக்கும் மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுடுவதாகச் சப்பைக்கட்டு கட்டிய அறிவுஜீவிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வார்கள்?

மோசமான கொலை வெறியில் சிக்குண்டு கிடக்கிறது இலங்கை ராணுவமும் அரசும். அவர்களுக்கு உடனடித் தேவை மனநலச் சிகிச்சை..இல்லையென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில்தான் இது முடியும்.

இணையத்தில் இந்த மாபெரும் எழுச்சியை உண்டாக்கி நடத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

  1. அனைவரும் ஒருங்கிணைந்துபோராடுவோம்.. என் கவிதை...http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.htmlபடிக்கவும் ..

    ReplyDelete
  2. //அவர்களுக்கு உடனடித் தேவை மனநலச் சிகிச்சை//

    இப்போது நடப்பதை பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தேவையான ஒன்று தான்

    ReplyDelete
  3. >>> பதிவுலகம் ஒன்றாக போராடட்டும். நம் பலம் உலகுக்கு தெரியட்டும்.

    ReplyDelete
  4. இவனுங்க போற போக்க பாத்தா யாரும் கொல்றதுக்கு கிடைக்கலன்னு தங்க மக்களையே சுடப்போரானுங்கன்னு தோணுது...........நம்ம நாட்டப்பாத்தா - ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர், களவானிகுடும்ப தலைவன் முதல்வரு இப்படி இருந்தா யாருகிட்ட போயி புலம்பறது..........

    ReplyDelete
  5. //ஈழப்போர் முடிவுக்கு முன், விடுதலைப் புலிகளுக்கும் மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுடுவதாகச் சப்பைக்கட்டு கட்டிய அறிவுஜீவிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வார்கள்?//
    நச்!!

    ReplyDelete
  6. ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...

    ReplyDelete
  7. எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

    ReplyDelete
  8. //கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, இந்தியா செய்த மாபெரும் தவறு//

    ஒன்று படுவோம் வென்று காட்டி வாழுவோம்

    ReplyDelete
  9. தொடர்ந்து போராடுவோம்

    ReplyDelete
  10. செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!

    ReplyDelete
  11. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): போலீஸ்கார், இந்த விஷயத்தில் உங்க கும்மி குரூப்பின் ஆக்டிவான செயல்பாடும் மிகவும் பாராட்டுக்குரியது..

    ReplyDelete
  12. @மதுரை சரவணன்: கவிதை அருமை நண்பரே..நன்றி.

    ReplyDelete
  13. @THOPPITHOPPI: நண்பரே, உங்கள் பதிவை இவ்விஷயத்தில், உங்கள் ஸ்டைலில் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  14. @! சிவகுமார் !: இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்..

    ReplyDelete
  15. @விக்கி உலகம்: வன்முறையின் உச்சத்தில் அதுவே நிகழும் நண்பரே.

    ReplyDelete
  16. நன்றி குமார் & ஜீ.

    ReplyDelete
  17. @வைகை: தொடர்ந்து ட்வீட்டுவோம் வைகை...

    ReplyDelete
  18. @சேட்டைக்காரன்: //செய்து விட்டேன் நண்பரே// என்னங்க செஞ்சீங்க..எதுவாயிருந்தாலும் நல்லது நடந்தா சரி.

    ReplyDelete
  19. True.. Our Central and State Governments are finally going to talk in person about this today 31st Jan at Delhi.. That too as the side track of the Electtoral discussion.

    Shame on them...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  20. @சங்கர் குருசாமி: உண்மைதான் சார்..வெட்கம் கெட்ட மனிதர்கள்..

    ReplyDelete
  21. //நிருபமா இலங்கை சென்றிருக்கிறார். மீனவரைக் கொன்ற ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அல்ல..இனிமேல் தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள் என்று மன்றாட//
    அதற்காகவும் இருக்காது.சட்டசபை தேர்தல் முடியற வரைக்குமாவது சும்மா இருக்க முடியுமா என்று கேட்பதற்காக இருக்கும்

    ReplyDelete
  22. @சேக்காளி: சரியான கமெண்ட் சேக்காளி..வருகைக்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.