Thursday, February 24, 2011

கார்த்திக்கும் சுகாசினியும் சர்வே செஞ்ச குளம் (நானா யோசிச்சேன்-பிப்.24)

உச்..உச்..உச்!

எங்க பாட்டி அடிக்கடி சொல்லும் ‘யானை படுத்தா குதிரை மட்டம்..உங்க தாத்தா படுத்தா குறட்டைச் சத்தம்’னு..ஆனா இப்போ புர்ச்சித் தலைவி நிலைமை அதை விட மோசமாப்போச்சு. பின்னே, போன தேர்தல்ல தனியா மலங்க மலங்க முழிச்சுக்கிட்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியையும் கார்த்திக்கையும் கூப்பிட்டு சீட் கொடுத்தா, அது அவங்களுக்குப் பத்தாதாம். தேவேந்திர குல மக்கள் 1 1/2 கோடி பேர் இருக்கறதால 9 சீட் வேணும்ங்காரு டாக்டர்...தேவர் இன மக்கள் 1 1/2கோடிக்கு மேல இருப்பாங்க போல..அதனால கார்த்திக் 10 சீட் கொடுக்கலேன்னா அவ்வளவுதாங்காரு.....

எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க மக்கா!..பழக்க தோஷத்துல அருவா எடுத்து அம்மாவைப் போட்றாதீங்க!

மிரண்டு போய் யோசிச்சது:
பளிங்கினால் ஒரு மாளிகை...
அட, நம்புங்க..நம்ம சுகாசினி மேடம் தான் அது..ஏன் இப்படி நிக்காங்கன்னு தெரியல..கவர்ச்சி ஏதாவது காட்ட ட்ரை பண்றாங்களோ..ஒருவேளை ஏதாவது திகில் படத்துல பேய் வேஷம் போடுதாங்களோ..இல்லே, பெண்களை கவர்ச்சிப் பொருளாவே பார்க்கிற ஆணாதிக்க ஆம்பிளைங்க கண்ணு அவிஞ்சு போகணும்னு தான் இப்படிக் கிளம்பிட்டாங்களோ..இவங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

எப்படியோப்பா, மேடத்தோட இந்த மாதிரி பயங்கரமான போட்டோக்கள் நெட்ல உலாவுது..அதனால ப்ரௌஸ் பண்ணும்போது, பாத்து சூதானமா இருந்துக்கோங்கப்பு! (யாருய்யா அது லின்க் கேட்கிறது..பிச்சுப்புடுவேன் பிச்சு.)

பயந்துபோய் யோசிச்சது:
நாளைக்கு சைட்டுக்கு ஒரு சர்வே எடுக்கப் போக வேண்டியிருக்கு.அதனால நானும் என் ஜூனியர் எஞ்சினியர்களும் டிராயிங்ஸை ஸ்டடி பண்ணிக்கிட்டிருந்தோம்..அப்போ அவங்கள்ல ஒருத்தன் ஒரு டிராயிங்கைக் காட்டி “இது என்னது சார் கோடு?”ன்னான். நானும் “தம்பி, அது எலெக்ட்ரிகல் எர்த் கொடுக்கணும்னு காட்டியிருக்காங்க..வீட்ல கொடுப்பாங்களே எர்த்.. தெரியும்ல?”ன்னேன். அதுக்கு அவன் சொன்னான்:”தெரியும் சார்..கிரைண்டர்க்கு எல்லாம் கொடுப்பாங்களே..எங்கம்மா ரொம்ப திட்டுச்சுன்னா அதைப் புடுங்கி விட்ருவேன் சார்..அதானே இது?”  

நாளைக்கு சில டேங்க்-க்கு உள்ள ஏறி இறங்க வேண்டியிருக்கும்..இவனை நம்பி, கூட கூப்பிட்டுக்கிட்டு போகலாமா..என்ன முருகா சோதனை இது...

*********************
சயிண்டிஸ்ட் ரேஞ்சுக்கு யோசிச்சது:
யுரேகா..யுரேகா கதை தெரியும்தானே..2000 வருஷத்துக்கு முன்னே விஞ்சானி ஆர்க்கிமிடீஸ்கிட்ட மன்னன் தங்கக் கிரீடத்தைக் கொடுத்து, அது சுத்தமான தங்கத்தால செய்யப்பட்டது தானா-ன்னு சொல்லச் சொன்னான். சுத்த தங்கதோட நிறையும், கிரீடத்தோட நிறையும் ஒன்னா-ன்னு துல்லியமா அளக்கணும். நம்மள மாதிரி(!) யோசிச்சுக்கிட்டே குளிக்கப் போன ஆர்க்கிமிடீஸ்க்கு, பாத்-டப்ல தண்ணிக்குள்ள கிடக்கும்போது டக்னு ஸ்ட்ரைக் ஆச்சு..உடனே ’அப்படியே’ எந்திரிச்சு யுரேகா..யுரேகான்னு கத்திக்கிட்டே ஓடி வந்தாரு. யுரேகாங்கிறது அவரோட தங்கமணி பேரு இல்லீங்க..யுரேகான்னா ‘கண்டுபுடிச்சுட்டேன்’னு அர்த்தம்..அப்போ இயற்பியல் உலகம் இரண்டு அரிய அறிவியல் உண்மைகளை உணர்ந்து கொண்டது:

முதலாவது, ஆர்க்கிமிடீஸும் நம்மள மாதிரியே ‘சுதந்திரக் குளியல்’ பார்ட்டிங்கிற உண்மை!

இரண்டாவது, ஆர்க்கிமிடீஸ் தத்துவம் : “”ஒரு திடப்பொருளின் எடை காற்றில் இருக்கும்போதை விட, திரவத்தில் இருக்கும்போது குறைவாக இருக்கும்; இந்த இரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்”. (இது மூலமா தங்கக் கிரீடத்தையும், சுத்த தங்கக்கட்டியையும் தண்ணீல போட்டு, வெளியேறுன அளவை ஒப்பிட்டு கிரீடம் சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டதல்ல-ன்னு சொல்லீட்டாரு.)


இப்போ கீழே உள்ள படத்தைப் பார்த்துட்டு நான் யோசிக்கிறது என்னன்னா, அம்மணிக குளத்துல இறங்குனதும், குளத்துல இருந்து எத்தனை குடம்(பேரல்?) தண்ணி வெளியேறி இருக்கும்....
கொஞ்சம் கொறைச்சு சொல்லுங்க!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

 1. அய்யய்யோ! இது என்ன சோதனை! எவ்வளவு பயங்கரம்!! ஒருவேளை மணி கெடுக்க சாரி எடுக்கப்போற பொன்னியின் செல்வனில நடிக்கப் போறாய்ங்களோ?

  ReplyDelete
 2. @ஜீ...:அது ஏதோவொரு புது தெலுங்குப் படமாம் ஜீ!

  ReplyDelete
 3. இரவு நேரத்தில இப்பிடி மிரட்டிட்டீங்களே பாஸ்? :-)அது யாரு கீழே ரெண்டு ஆன்டீஸ்?

  ReplyDelete
 4. @ஜீ...: என்ன ஜீ இப்படிக் கேட்கீங்க..அது கே.ஆர்.விஜயா...அந்தப் படத்தை ரொம்ப தயக்கத்தோடு தான் போட்டிருக்கேன்..யாராவது ஆட்சேபணை தெரிவித்தால் தூக்கப் படும்!

  ReplyDelete
 5. தூக்கிடாதீங்க(படத்த)பாஸ்!பாத்து!? ரொம்.........................ப நாளாச்சு

  ReplyDelete
 6. // கொஞ்சம் கொறைச்சு சொல்லுங்க! //இதுக்கு மேலயா?

  ReplyDelete
 7. நீங்க சுயேச்சை எம்.எல்.ஏ.வா...நிக்கப்போறதா.......

  ReplyDelete
 8. எதுக்கும் ஜூனியர் எஞ்சினியர்கிட்டே கொஞ்சம் கேர்புல் ஆ இருங்க :)))

  ReplyDelete
 9. ஆமா அந்த போட்டோல யாரோ ராம பக்தன் மாதிரி இருக்காங்களே யாருப்பா அது!

  ReplyDelete
 10. நல்லாத்தான் யோசிச்சு இருக்கீங்க செங்கோவி....அப்படியே சுகாசினி ஆண்டி லிங்கையும் கொடுங்க(நீங்க...பிச்சுப்புடுவேன்னு சொன்னாலும் பரவாயில்லை)

  ReplyDelete
 11. சந்தேகம் அருமை

  ReplyDelete
 12. அட அது சுகாசினியா?? நா யாரோ இட்டாலி நாட்டு நடிகயோன்னுள்ள நினைச்சேன்.ஏனய்யா அவங்க கிட்ட வம்புக்கு போறீங்க??

  ReplyDelete
 13. @Yoga.s.FR: //பாத்து ரொம்....................ப நாளாச்சு// உங்க ஃபீலிங்ஸ் எனக்குப் புரியுது பாஸ்..கவலைப்படாதீங்க..தூக்க மாட்டேன்!

  ReplyDelete
 14. @Vijay @ இணையத் தமிழன்://இதுக்கு மேலயா?// என்னங்க பேரல் கணக்குல தான சொல்லி இருக்கேன்..

  ReplyDelete
 15. @! சிவகுமார் !://நீங்க சுயேச்சை எம்.எல்.ஏ.வா...நிக்கப்போறதா....// ஏன்யா இப்படிக் கிளப்பி விடுதீங்க..சிவா, மேல பாத்தீங்கள்ல, தமிழ்மணத்துல 4 ஓட்டு..நீங்கள்லாம் இப்படி இருந்தா நான் என்ன நம்பிக்கைல நிக்குறது..

  ReplyDelete
 16. @விக்கி உலகம்: //சரிப்பா சரி// அப்படீன்னா..பதிவுக்கு யோசிக்கிறது பத்தாதுன்னு பின்னூட்டத்துக்கு வேற யோசிக்க வைக்கீங்களே!

  ReplyDelete
 17. @ஆனந்தி..://எதுக்கும் ஜூனியர் எஞ்சினியர்கிட்டே கொஞ்சம் கேர்புல் ஆ இருங்க :)// நன்றிக்கா..என்னை நம்பி 84(82+2) ஃபாலோயர்ஸ் இருக்காங்களே..அதுக்காகவாவது கேர்ஃபுல்-ஆ இருந்து தான் ஆகணும்.

  ReplyDelete
 18. @ரஹீம் கஸாலி: //அப்படியே சுகாசினி ஆண்டி லிங்கையும் கொடுங்க// கூகுள்ல ‘பிசாசு ஹாட்’-னு போட்டு தேடுங்க பாஸ்..வரும்!

  ReplyDelete
 19. @Speed Master://சந்தேகம் அருமை// ஏன் மாஸ்டர், சந்தேகத்தை தீர்த்து வப்பீங்கன்னு பார்த்தா..இப்படியா நழுவுறது..

  ReplyDelete
 20. @கக்கு - மாணிக்கம்:///ஏனய்யா அவங்க கிட்ட வம்புக்கு போறீங்க??// நான் எங்கங்க போனேன்..நான் எதையோ தேடுனா அவங்க ‘டிங்’னு வந்து நிக்காங்க..!

  ReplyDelete
 21. @கக்கு - மாணிக்கம்://நா யாரோ இட்டாலி நாட்டு நடிகயோன்னுள்ள நினைச்சேன்// ரொம்ப அநியாயமாப் பேசாதீங்க சார்..மோனிகா பெல்லுஸி மாதிரி ’நல்ல’ நடிகைகள் உள்ள தேசம் அது..

  ReplyDelete
 22. @அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்!://அந்த போட்டோல யாரோ ராம பக்தன் மாதிரி இருக்காங்களே யாருப்பா அது// ஹா..ஹா..பாவம் பாஸ் அவங்க..விட்டுடுங்க!

  ReplyDelete
 23. உங்களுக்காவது நாலு ஓட்டு தலைவா.... எனக்கு அடிக்கடி டெபாசிட்டே காலி ஆய்டுது.

  ReplyDelete
 24. ஜூனியர்'ங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்க பாஸ்...

  ReplyDelete
 25. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi: பாராட்டுக்கு நன்றி ரவி!

  ReplyDelete
 26. @! சிவகுமார் !: படித்த, படிக்கிற தமிழனுக்கு ஓட்டுன்னாலே அலர்ஜி..படிப்பாங்க..ஓட்டுப் போட மாட்டாங்க(நம்மளே அப்படித் தானே இருந்தோம்!)..நமக்கு படிச்சாலே போதும் தானே..

  ReplyDelete
 27. @MANO நாஞ்சில் மனோ: /ஜூனியர்'ங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்க பாஸ்...// ஆமாம் சார், கொலைகாரப் பசங்களா இருக்காங்களே..

  ReplyDelete
 28. அவங்களும் யுரேக்கான்னு சொல்லி கத்திக்கிட்டு ஒடுவாங்களா பாஸ் ...........சும்மா பொது அறிவ வளர்க்கிறதுக்கு கேட்டேன் ....................

  ReplyDelete
 29. தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று கேட்டு பார்பான திமிரோடு பேசிவிட்டு தமிழ் நாட்டிலே இருக்கும் அவலம் இந்த சுகாசினி. பார்பான் தமிழரை எதை விடவும் கேவலமாக பேசுவான், நடத்துவான் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

  ReplyDelete
 30. http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

  கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

  ReplyDelete
 31. சுகாசினி படம் முதலில் உமா ரியாஸ் மாதிரி இருந்தது, அப்புறம் blow up பண்ணி பாத்ததும்தான் மூஞ்சி அடையாளமே தெரிஞ்சது. ஹி..ஹி..ஹி.. பெண்ணுரிமைக்கு போராட இந்த உடை தான் சரியா இருக்கும்!!

  ReplyDelete
 32. //இப்போ கீழே உள்ள படத்தைப் பார்த்துட்டு நான் யோசிக்கிறது என்னன்னா, அம்மணிக குளத்துல இறங்குனதும், குளத்துல இருந்து எத்தனை குடம்(பேரல்?) தண்ணி வெளியேறி இருக்கும்..//ஹி ஹி ரொம்ப கரக்ட்டு

  ReplyDelete
 33. @அஞ்சா சிங்கம்://அவங்களும் யுரேக்கான்னு சொல்லி கத்திக்கிட்டு ஒடுவாங்களா பாஸ்// அவங்க குத்தவச்சதிலேயே பாதி குளம் காலி ஆகிடிச்சு..ஓட வேற செய்யணுமா..நினைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே..ஏங்க இப்படி பீதியைக் கிளப்புறீங்க.

  ReplyDelete
 34. @ssk:சார், எப்பவுமே சூடாத் தான் இருப்பீங்களா..உங்களையெல்லாம் கூலாக்கத் தான் ரெண்டு படம் போட்டிருக்கேனே சார்!

  ReplyDelete
 35. @Jayadev Das: //அப்புறம் blow up பண்ணி பாத்ததும்தான் மூஞ்சி அடையாளமே தெரிஞ்சது// ’முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’னு நிரூபிச்சதுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 36. @தங்கராசு நாகேந்திரன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வனூரான்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.