Tuesday, February 8, 2011

தூங்கா நகரத்தில் யுத்தம் செய்யும் காவலன் (நானா யோசிச்சேன்)

ஒரு வழியாக தூங்கா நகரம், யுத்தம் செய், காவலன் பார்த்தாச்சு. அதைப் பற்றி கதைக்கும் முன்...

ஒரு அறிவிப்பு:
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு படித்து முடித்தால் ’எந்தெந்த டிபார்ட்மெண்டுக்கு வேலைக்குப் போகலாம்’ என எதுவும் சொல்லித் தருவதில்லை. நம்ம பசங்களுக்குத் தெரிவதெல்லாம் ‘படிச்சா என்ஜினியர் ஆகலாம்’என்பது மட்டுமே. நான் ஏறக்குறைய கடந்த 10 வருடங்களாக மெக்கானிகல் என்ஜினியராக குப்பை கொட்டிக்கொண்டிருக்கேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘என்ன வேலையில் சேரலாம்?(மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)’ என்ற ஒரு பதிவை எழுத ஆரம்பித்தேன். முடித்துவிட்டுப் பார்த்தால், மினி தொடராகப் போடும் அளவிற்கு பதிவு நீண்டுவிட்ட்து.

என்னைப் பின் தொடரும் நண்பர்களுக்கும் பின் தொடராமல் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கும் அதனால் ஏதும் பிரயோஜனம் இருக்குமெனத் தோன்றவில்லை.

எனவே அந்தப் பதிவைப் படித்து, பின்னூட்டமிட்டு, ஓட்டுப் போட்டு உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் தலைதெறிக்க ஓடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். (ஏற்கனவே அப்படித் தானா...)

வழக்கமான பதிவுகளுக்கு இடையில் அதுவும் வலையேற்றப் படும். உங்களுக்குத் தெரிந்த மெக்கானிகல் என்ஜினியரிங்-டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்கள் இருந்தால், என் வலைப்பூ முகவரி கொடுத்து உதவுங்கள். நன்றி.
 தூங்கா நகரம் பார்த்தேன். விமர்சனம் எழுதினால் அஞ்சலி..அஞ்சலி..அஞ்சலி.....என்றே எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதுவது ஒரு கல்யாணமான புத்திசாலி செய்யும் காரியம் அல்ல என்பதால் விமர்சனம் எழுதும் ஐடியாவைக் கைவிட்டேன்..படத்தின் முதல் பாதி மிகவும் பொறுமையைச் சோதித்தது. இரண்டாம்பாதி ’கொஞ்சம்தான்’ பொறுமையைச் சோதிக்கிறது.

களவாணி விமல் இந்த ரேஞ்சில் போனால் கஷ்டம்தான்.சிங்கம்புலியின் காமெடி வழக்கம்போல் ஃபிட்னெஸ் இல்லாமல் எரிச்சல் படுத்துகிறது. ஒரு படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகியும் கதைக்குள் நுழையவில்லையென்றால்,என்னன்னு சொல்றது. பாடல்களாவது தேறுமா என்று பார்த்தால், அதிலும் அஞ்சலி தான்..சரி, விடுங்கள்.

வீச்சருவா, ரவுடிகள்,குழந்தைக் காதல் என ஒரே டெம்ப்ளேட்டில் வரும் மதுரைக்காரப் படங்களைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது.இந்த மதுரைக்காரப் படம் எடுப்பவங்க மனசுல தன்னை மிஷ்கின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க போல.

அஞ்சாதே படத்தை மறுபடியும் யுத்தம் செய்ங்கிற பேர்ல எடுத்திருக்கார் மிஷ்கின்..வேட்டையாடு விளையாடுவை கொஞ்சம் மிக்ஸ் பண்ணியிருக்கார்.
இருந்தாலும் அவர் ஒலகப் பட இயக்குனர்னு எல்லாரும் சொல்றதால நாம ஒன்னும் சொல்லக்கூடாது. ஒரே மாதிரி காட்சி அமைப்புகள், கால்கள், தலைகுனிவு(!) எனத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது. ஆனாலும் வெளில சொல்லமுடியுமா..சேரனை விட கமல் அந்தக் கேரக்டருக்கு நன்றாகப் பொருந்தியிருந்தார்.

வன்முறை, கற்பழிப்பு இல்லாம ஒலகப் படம் எடுக்க முடியாதுன்னு ஆகிப்போச்சு.அதனால அந்தக் கண்ராவியைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லை. முன்னாடில்லாம் மணிரத்னம், ஷங்கர் படங்களைக் குறை சொன்னா லோ-கிளாஸ்னு முத்திரை குத்திடுவாங்க. இப்போ மிஷ்கினை அந்த லிஸ்ட்ல வச்சுட்டாங்க. 

ஏற்கனவே நந்தலாலா பார்த்துட்டு எனக்கு வந்த டவுட்டே (நானா யோசிச்சேன் - டிஸம்பர் 2010)இன்னும் தீரலை. அதனால எதுக்கு வம்பு..
 
 சமீபத்திய இன்ப அதிர்ச்சியென்றால் காவலன் தான்.விஜய்யின் கடந்த படங்கள் ரணகளமா ஆயிட்டதனால காவலனை நான் முதல்ல பார்க்கலை. அப்புறம் நம்ம மக்கள்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னதால பார்த்தேன். அடேயப்பா..எத்தனை நாளாச்சு இந்த விஜய்யைப் பார்த்து.உண்மையிலேயே கலக்கிட்டார்.

வருங்கால சி.எம்னு நினைப்புல பஞ்ச் டயலாக் பேசறதெல்லாம் விட்டுட்டு, இது மாதிரி நல்ல கதையுள்ள படத்துல நடிச்சா விஜய்யும் தப்பிப்பாரு. நாமும் தப்பிப்போம். சுறாவையெல்லாம் சொந்தமா எடுக்காங்க..இந்த மாதிரிப் படத்தைத் தடுக்காங்க..என்னய்யா இது.

அசினை விட அந்த ஃப்ரண்ட்டா வந்த பொண்ணுதான் பார்க்க லட்சணமா இருந்துச்சு. அதனால, கடைசீல அப்படிஆனதுல ரொம்ப சந்தோசம். அசின் ஏன் இப்படி ஆகிட்டார்? ஹிந்திக்குப் போகும்போதே நினைத்தேன். நம்ம ஸ்ரீதேவியையே கிழவி ஆக்குன பயகலாச்சே!
என்னோட லேட்டஸ்ட் படம் போடலியா!
ரொம்ப நாளைக்கு அப்புறம். குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி, ஒரு நல்ல படம் கொடுத்த சித்திக்குக்கு நன்றி.இனி அப்பப்போ நல்ல படத்துலயும் நடிப்பேன்னு விஜய் சொல்லியிருக்கார். நடந்தால் சந்தோஷமே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

 1. //வன்முறை, கற்பழிப்பு இல்லாம ஒலகப் படம் எடுக்க முடியாதுன்னு ஆகிப்போச்சு//
  ஜனங்க அதைத்தானே விரும்புறாங்க....கேட்டா இப்படிச் சொல்வாங்களோ? :-)

  ReplyDelete
 2. @ஜீ...: காலங்காலமா அதைத்தானே சொல்றாங்க ஜீ.

  ReplyDelete
 3. //அப்படி எழுதுவது ஒரு கல்யாணமான புத்திசாலி செய்யும் காரியம் அல்ல என்பதால் விமர்சனம் எழுதும் ஐடியாவைக் கைவிட்டேன்//

  ஓ! அண்ணியும் blog படிப்பாங்களோ? குடுத்து வச்சவங்க பாஸ் நீங்க! நம்ம தமிழ் பெண்களுக்கு வாசிப்பு பழக்கம் குறைவு. அப்படியே வாசித்தாலும் ரமணிசந்திரன்தான் (அதுக்கு பேசாமலே இருக்கலாம்). கல்யாணமானா எழுத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுமோ! :-)

  ReplyDelete
 4. @ஜீ...: //கல்யாணமானா எழுத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுமோ!// எழுத்துச் சுதந்திரம் மட்டுமா..என்னமோ போங்க!

  ReplyDelete
 5. இனி அப்பப்போ நல்ல படத்துலயும் நடிப்பேன்னு விஜய் சொல்லியிருக்கார்.

  ....

  ரைட்டு...

  ReplyDelete
 6. @Chitra: இப்பவாவது திருந்தினாரேன்னு சந்தோசப்படுவோம்க்கா.

  ReplyDelete
 7. //இனி அப்பப்போ நல்ல படத்துலயும் நடிப்பேன்னு விஜய் சொல்லியிருக்கார்//

  Parkalaam.

  ReplyDelete
 8. //அசினை விட அந்த ஃப்ரண்ட்டா வந்த பொண்ணுதான் பார்க்க லட்சணமா இருந்துச்சு. அதனால, கடைசீல ‘அப்படி’ ஆனதுல ரொம்ப சந்தோசம். அசின் ஏன் இப்படி ஆகிட்டார்? ஹிந்திக்குப் போகும்போதே நினைத்தேன். நம்ம ஸ்ரீதேவியையே கிழவி ஆக்குன பயகலாச்சே!


  சேம் பீலிங்

  ReplyDelete
 9. ஆஹா த்ரீ இன் ஒண்ணா கலக்குங்க

  ReplyDelete
 10. @சே.குமார்: ஆமாங்க..நல்ல படத்துல நடிச்சா பார்க்கலாம்.

  ReplyDelete
 11. @Speed Master: உங்களுக்குமா..ரைட்டு!

  ReplyDelete
 12. விஜயின் அந்த கார சாரமான பேச்செல்லாம் அந்த கேமரா முன்னாடிதான். கேமரா போச்சு அப்புறம் பேச்சு போச்சு. என்றென்றும் இரா. தேவாதிராஜன் .

  ReplyDelete
 13. @R. Thevathirajan:நேர்ல பேசினா, ஆப்பு வைக்கிறாங்களே சார்...

  ReplyDelete
 14. உங்கள் blog நன்றாக உள்ளது! visiting frequently:)

  ReplyDelete
 15. @KKPSK: தொடர்ந்து படிப்பதற்கும் உங்கள் அங்கீகாரத்திற்கும் நன்றிங்க..நீங்கள் பாராட்டியதில் ரொம்ப சந்தோசம்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.