Monday, February 21, 2011

கனிமொழி கைதுப் பயணத்தில் நடுநிசிநாய்கள் (நானா யோசிச்சேன் - Feb.20)

தீவிரமாய் யோசிப்பது:

என்னோட ‘கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்’ பதிவுக்கு வந்த கூட்டம், என்னோட நல்ல ‘காதலர்தின ஸ்பெஷல்’பதிவுக்கு வந்த கூட்டத்தை விட ரெண்டு மடங்கு!..ஏன் இப்படி...
அப்பாடி..தோஷம் கழிஞ்சது!
கனிமொழி கைது:
மீனவர் பிரச்சினையில் தவறு செய்தவர் தன் தந்தை/கட்சி/அண்ணன்/பங்காளி காங்கிரஸே ஆனாலும் விடாது தட்டிக்கேட்டு, போராட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார் வீர மங்கை கனிமொழி. அப்புறம் சாயந்தரமே வெளில வந்தாச்சு..ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கும் லஞ்சுக்கும் இடையில் நடந்த உண்ணாவிரததையே பார்த்த நமக்கு இது ஒன்னும் அதிர்ச்சி இல்லைதான்..

ஆனால் இதைப் பற்றி ஜெ. அடித்திருக்கும் நக்கல்தான் மேட்டரே. ‘யாரோ ஒரு ஜோசியன் கனிமொழி ஜெயிலுக்குப் போவார்னு சொல்லீட்டான்..அதுக்கு பரிகாரமாத்தான் சும்மா போராட்டம் நடத்தி கைது பண்ணியிருக்காங்க.ஆனா, தந்தையே கைது பண்ணதால இது செல்லாது, செல்லாது’ன்னு தன் அனுபவத்தின் அடிப்படையில் புர்ச்சித் தலைவி சொல்லியிருக்காங்க..என்னமா யோசிச்சிருக்காங்க..மம்மி மட்டும் பதிவெழுத வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் போல!

பயணம்:
இந்த வார இனிய அனுபவமா ‘பயணம்’ படம் பார்த்தது அமைந்தது. ராதா மோகனோட ஸ்பெஷாலிட்டியே மெல்லிய நகைச்சுவை ததும்பும் வசனங்கள் தான். இதிலும் கலக்கியிருக்கார். சினிமா ஸ்டாரின் ரசிகனா வர்ற ஷாம், நல்ல டயலாக் டெலிவரியோட பின்றார். அவர் பேர் வெளில தெரியற அளவுக்கு நல்ல ரோல்! கொஞ்சம் சந்திரபாபு ஸ்டைல் தெரியுது இவர்கிட்ட. இவரை சரியா யூஸ் பண்ணா, இன்னொரு நல்ல காமெடியன் நமக்குக் கிடைப்பார்.. 
ரொம்ப குறியீடு பார்த்துக் குழப்பிக்காம, படம் பார்த்தா நல்ல பொழுதுபோக்குப் படம். டூயட் மூவீஸ்க்கும் எஸ்.ஜே.பாஸ்கருக்கும் கரியர்ல இது ஒரு முக்கியமான படம். பஞ்ச் டயலாக் இல்லாம, டூயட் இல்லாம விறுவிறுப்பா படத்தைக் கொண்டுபோயிருக்காங்க. படம் பார்க்காதவங்க தாராளமாப் பார்க்கலாம் குடும்பத்தோட!

நடுநிசி நாய்கள்:

பயணம் பார்த்த இனிய அனுபவத்தைக் கெடுக்கிறதுக்குன்னே இந்தப் படம் வந்திருக்கும்போல. இந்தப் படம் ஓடாதுன்னு எனக்கு முதல்லயே தெரியும்(அடேங்கப்பா!)..ஏன்னா கௌதம் படம் எடுக்குறது ஏ செண்டருக்கு மட்டும்தான். மத்தவங்க பார்க்கணும்னா கமல், சூர்யா மாதிரி யாராவது நடிச்சிருக்கணும். அந்த ஏ செண்டர் மக்கள்லயும்ம் திகில் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கிறவங்க ரொம்பக் கம்மி. 
ஷங்கருக்கு ஒரு பாய்ஸ்ன்னா, கௌதம் மேனனுக்கு நடுநிசி நாய்கள். இதில ரொம்ப ஆறுதலான விஷயம் ’இது பார்க்கக்கூடிய படமல்ல’ன்னு சக பதிவர்கள் விமர்சனம் எழுதுனதுதான். கௌதம் மாதிரி ஏ செண்டர் இயக்குனர்கள் மேல நம்ம பதிவர்களுக்கு எப்பவும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும். ஆனா அதையும் மீறி உண்மையைச் சொல்லியிருக்காங்க. எனக்குப் பிடித்த சில ‘சீன் படத் திலகங்களுக்கே’ இந்தப் படம் பிடிக்கலைன்னா படத்தோட அழகியலை நீங்களே புரிஞ்சிக்கோங்க!இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதி, நீங்க படிக்கிற அளவுக்கு நானோ, நீங்களோ வேற வேலையில்லாம இல்லை..அதனால....

மறுபடியும் தீவிரமா யோசிச்சது:

என் அதிரடிக்கார மச்சான் சொன்னாரு ‘அரபு நாடுகள்ல பல வருஷமா பெட்ரோல் விலையை ஏத்தவேயில்லை;ன்னு. ஏன்னு கேட்டா, அங்க தானே பெட்ரோல் கிடைக்குது..அப்புறம் ஏன் ஏத்தப் போறாங்க’ன்னு திருப்பிக் கேட்காரு. அதுசரி, அப்போ இந்த அரிசி, பருப்பு, வெங்காயமெல்லாம் நம்ம ஊர்லயே விளையுதே..அப்புறம் ஏன் இது மட்டும் இங்க விலை ஏறிகிட்டே போகுது..ஒன்னியும் புரியலையே...

இந்த வார தேர்தல் ஸ்பெஷல் தொடரில் வரப் போவது:

ரஜினிகாந்தும் தமிழகமும்


Get Ready Folks!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

 1. சூப்பரு அப்படியே தேர்தல்ல நின்னுடுங்கோ ஹி ஹி!

  ReplyDelete
 2. //மம்மி மட்டும் பதிவெழுத வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் போல!//

  ஆமாம்...அப்போ நாம டம்மி தான்...:)

  ReplyDelete
 3. @விக்கி உலகம்:இல்லீங்க..எங்க தலவர் விக்கியைத் தான் விஜயகாந்த்துக்கு எதிரா நிப்பாட்றதா இருக்கோம்...

  ReplyDelete
 4. @சங்கவி: பாராட்டுக்கு நன்றி சங்கவி..

  ReplyDelete
 5. @ஆனந்தி..: மம்மிக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்கத் தான் நீங்களும் சித்ராக்காவும் இருக்கீங்களே..

  ReplyDelete
 6. super nanba, nanum nadunishi naykal parthu valkaiya veruthutten :-(

  ReplyDelete
 7. @ஆனந்தி..: மம்மிக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்கத் தான் நீங்களும் சித்ராக்காவும் இருக்கீங்களே..

  ReplyDelete
 8. @இரவு வானம்: //nadunishi naykal parthu valkaiya veruthutten// அப்போ அதைப் பத்தி ஒரு பதிவு போட்டு, மனசை ஆத்திக்கோங்க!

  ReplyDelete
 9. சூப்பரு... சூப்பரு...

  ReplyDelete
 10. மம்மி மட்டும் பதிவெழுத வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் போல!///அருமையா சொன்னீங்க...

  ReplyDelete
 11. நல்லா யோசிச்சு இருக்கீங்களே! :-)

  ReplyDelete
 12. கலக்கல் டைட்டில்!

  ReplyDelete
 13. //‘யாரோ ஒரு ஜோசியன் கனிமொழி ஜெயிலுக்குப் போவார்னு சொல்லீட்டான்..அதுக்கு பரிகாரமாத்தான் சும்மா போராட்டம் நடத்தி கைது பண்ணியிடுக்காங்க.ஆனா, தந்தையே கைது பண்ணதால இது செல்லாது, செல்லாது’ன்னு தன் அனுபவத்தின் அடிப்படையில் புர்ச்சித் தலைவி சொல்லியிருக்காங்க..என்னமா யோசிச்சிருக்காங்க..மம்மி மட்டும் பதிவெழுத வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் போல!//


  அட்ரா அட்ரா அட்ரா சக்கை........

  ReplyDelete
 14. //செல்லாது, செல்லாது’ன்னு தன் அனுபவத்தின் அடிப்படையில் புர்ச்சித் தலைவி சொல்லியிருக்காங்க..//

  கலக்கல்..

  ReplyDelete
 15. //அந்த ஏ செண்டர் மக்கள்லயும்ம் திகில் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கிறவங்க ரொம்பக் கம்மி. //ஹா.. ஹா.. ஹா..

  ReplyDelete
 16. //அந்த ஏ செண்டர் மக்கள்லயும்ம் திகில் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கிறவங்க ரொம்பக் கம்மி. //ஹா.. ஹா.. ஹா..

  ReplyDelete
 17. //மறுபடியும் தீவிரமா யோசிச்சது://

  இதில நல்லாவே யோசித்திருக்கிறீர்கள்..

  ReplyDelete
 18. //‘யாரோ ஒரு ஜோசியன் கனிமொழி ஜெயிலுக்குப் போவார்னு சொல்லீட்டான்..அதுக்கு பரிகாரமாத்தான் சும்மா போராட்டம் நடத்தி கைது பண்ணியிடுக்காங்க.ஆனா, தந்தையே கைது பண்ணதால இது செல்லாது, செல்லாது’ன்னு//
  சூப்பர் கமென்ட் இல்ல! மம்மி பதிவெழுத வந்தா நம்ம பன்னிகுட்டிக்குத்தான் செம போட்டியா இருக்கும்! :-)

  ReplyDelete
 19. @Chitra: யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு...

  ReplyDelete
 20. @MANO நாஞ்சில் மனோ: பாராட்டுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 21. @நிலவு: வருகைக்கு நன்றி நிலவு.

  ReplyDelete
 22. @நிலவு: வருகைக்கு நன்றி நிலவு.

  ReplyDelete
 23. @பாரத்... பாரதி...:வந்து ரசித்து, சிரித்ததற்கு நன்றி பாரதி..

  ReplyDelete
 24. @ஜீ...: பன்னிக்குட்டியாரை ஏங்க இழுக்கீங்க..சும்மாயிருக்கிற சிங்கத்தைத் தூண்டி விடாதீங்க..டெரர் குரூப் வந்தா என்னாகும்னு தெரியும்ல ஜீ!

  ReplyDelete
 25. எப்புடியெல்லாம் யோசிக்கிறீங்க பாஸ்! நாங்க எல்லாம் என்னிக்குத்தான் கத்துக்கப் போறமோ? :-)

  ReplyDelete
 26. அய்யய்யோ நீங்க வேற நான் பன்னிக்குட்டியோட பெரிய விசிறி! அவரோட கமென்ட் மாதிரியே கலக்கலா இருக்கு மம்மி கமென்ட்! அத சொன்னேன்! :-)

  ReplyDelete
 27. அய்யய்யோ நீங்க வேற நான் பன்னிக்குட்டியோட பெரிய விசிறி! அவரோட கமென்ட் மாதிரியே கலக்கலா இருக்கு மம்மி கமென்ட்! அத சொன்னேன்! :-)

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. @ஜீ...: அவரு நம்ம ஆளுதான்..ஒன்னும் பிரச்சினை இல்லை!!

  ReplyDelete
 30. @ஜீ...://எப்புடியெல்லாம் யோசிக்கிறீங்க பாஸ்// ஜீ..நீங்க இப்போ யோசிக்கிறதே போதும்!

  ReplyDelete
 31. நீங்கள் யோசிச்சது என்னையும் சிந்திக்க வைத்துள்ளது விலைவாசி உயர்வு.

  ReplyDelete
 32. @ராஜவம்சம்: உங்களை சிந்திக்க வைத்ததில் சந்தோஷம்...நன்றி.

  ReplyDelete
 33. //சீன் படத் திலகங்களுக்கே’ //
  :-)

  ReplyDelete
 34. >>>>
  என்னோட ‘கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்’ பதிவுக்கு வந்த கூட்டம், என்னோட நல்ல ‘காதலர்தின ஸ்பெஷல்’பதிவுக்கு வந்த கூட்டத்தை விட ரெண்டு மடங்கு!..ஏன் இப்படி...

  ஹா ஹா தமிழன்னா அப்படித்தான்

  ReplyDelete
 35. >>>பயணம் பார்த்த இனிய அனுபவத்தைக் கெடுக்கிறதுக்குன்னே இந்தப் படம் வந்திருக்கும்போல. இந்தப் படம் ஓடாதுன்னு எனக்கு முதல்லயே தெரியும்

  அடடா.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்.. பாஸ்.. இதை முதல்லயே சொல்லி இருந்தா எனக்கு யூஸ் ஆகி இருக்குமே.. தப்[பிச்சிருப்பனே..

  ReplyDelete
 36. >>ஏ செண்டர் இயக்குனர்கள் மேல நம்ம பதிவர்களுக்கு எப்பவும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும். ஆனா அதையும் மீறி உண்மையைச் சொல்லியிருக்காங்க. எனக்குப் பிடித்த சில ‘சீன் படத் திலகங்களுக்கே’ இந்தப் படம் பிடிக்கலைன்னா படத்தோட அழகியலை நீங்களே புரிஞ்சிக்கோங்க!

  என்னைக்கேவலப்படுத்டுனாலும் பரவால்ல. உங்களுக்கு ஓட்டு உண்டு.. ஹா ஹா ஹா

  ReplyDelete
 37. பதிவுக்கு பரபரப்பா டைட்டில் வைப்பது எப்படி?என்ற ரகசியத்தை உங்க கிட்ட தொடர்ந்து கத்துக்க வேண்டி இருப்பதால் ஃபாலோயர் ஆகிட்டேன்.. ஹி ஹி

  ReplyDelete
 38. @சி.பி.செந்தில்குமார்: உங்களைத் தடுத்து நிறுத்தற சக்தி எனக்கு இருக்குன்னு நான் நினைக்கலை பாஸ்!

  ReplyDelete
 39. @சி.பி.செந்தில்குமார்: //என்னைகேவலப்படுத்டுனாலும் பரவால்ல// என்ன வார்த்தை சொல்லீட்டீங்க..அது பாராட்டு சார்..பாராட்டு..!

  ReplyDelete
 40. @சி.பி.செந்தில்குமார்: //பதிவுக்கு பரபரப்பா டைட்டில் வைப்பது எப்படி// யாரு யார்கிட்ட கத்துக்கிறது..உங்கல்ளைப் பாத்து நான் தலைப்பு வச்சுக்கிட்டிருக்கேன்..உங்க நக்கலுக்கு அளவேயில்லாமப் போச்சு!

  ReplyDelete
 41. என்னமா யோசிச்சிருக்காங்க..மம்மி மட்டும் பதிவெழுத வந்துட்டா நம்ம பாடு திண்டாட்டம்தான் போல!
  அதே....

  ReplyDelete
 42. //‘யாரோ ஒரு ஜோசியன் கனிமொழி ஜெயிலுக்குப் போவார்னு சொல்லீட்டான்..அதுக்கு பரிகாரமாத்தான் சும்மா போராட்டம் நடத்தி கைது பண்ணியிருக்காங்க.// ஜெ. வுக்கு ஜோதிடம், பரிகாரம், கேரளா மாந்திரீகம் எல்லாம் அத்துபடி, அதன், டக்குன்னு இதைச் சொல்லிவிட்டார். வளர்ப்புமகன் திருமணம், கண்ணகி சிலை அகற்றல், சட்டசபையை அன்ன பல்கலைப் பக்கம் மாற்றி அந்த இடத்தை நாறடிக்கப் பார்த்தது எல்லாம் சசிகலாவுக்குத் தெரிந்த இத்து போன ஜோசியக்காரர்களின் வேலைதான்.

  ReplyDelete
 43. //கனிமொழி கைது// சோ நாடகம் பார்த்தேன் எஸ்.வீ. சேகர் நாடகம் பாத்தேன், ஆனா இந்த மாதிரி நாடகத்த பாக்கவேயில்லைடா சாமி. கனிமொழி, கே.ஆர் விஜய, சாவித்திரி எல்லாத்தையும் மிஞ்சிட்ட நடிகை! எங்களை வச்சு நீ, உங்கப்பன், அண்ணன் தம்பிகள் எல்லோரும் இன்னும் எவ்வளவு காமெடி பண்ணுவீர்களோ தெரியலையே!

  ReplyDelete
 44. @Jayadev Das: ஊழலில் மட்டுமல்ல, ஜோசியத்திலும் இரு கழகங்களுக்கு இடையே கடும் போட்டி தான்...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.