Wednesday, March 9, 2011

ராணா ஆன ரஜினிகாந்தும் வீணாப்போன அரசியலும் (நானா யோசிச்சேன்.மார்ச்09)

டிஸ்கி-1: இந்தப் பதிவு ஒருவேளை 18+ஆ இருக்கலாம்..ஜாக்ரதை!
டிஸ்கி-2: ஆம்பிளைங்க படம் போட இடம் இல்லாததால் சூப்பர் ஸ்டார் படம் போடவில்லை..ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்!

புதிய பகுதி:
பொதுவாக சினிமாப் பாடல்களில் நல்ல செறிவான விஷயங்கள் வருவதில்லை. ஆனாலும் சில கவிஞர்கள் கமர்சியல் கட்டுப்பாடுகளையும் மீறி நல்ல கவிதையைத் தருவதுண்டு. சில வரிகளைக் கேட்கும்போது வாழ்வின் நிலையாமை பற்றிய தெளிவும், உலகம் பற்றிய புரிதலும் கிடைப்பதுண்டு. அந்த வகையில் என் மனம் கவர்ந்த பாடல் வரிகளை ’நானா யோசிச்சேன்’ பகுதியில் போட்டு, உங்கள் சிந்தனையை தூண்டுவதாக உள்ளேன். ...இனி ஆட்டம் ஆரம்பம்:

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
ஏ..காளி மச்சினி கூழி மச்சினி
கமள மச்சினி கம்மா
ஏ..குமள மச்சினி கும்மா
ஏ..கமாலோ குமாலோ
கூழி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா! 
(மொச்சைக் கொட்டைப் பல்லழகி..பாட்டிலிருந்து!)
நம்ம மச்சினி தாங்கோ!
புலம்பல்:
பதிவர் ஆகுறதுக்கு முன்னாடி நான் கூகுள் இமேஜ் யூஸ் பண்ணது கிடையாது(ஒன்லி வீடியோ தானா..ம்..ம்). இப்போ ஒவ்வொரு பதிவுக்கும் ஏதாவது போட்டோ தேட அதைத் தான் யூஸ் பண்ண வேண்டியிருக்கு. ஏதாவது Search-ஐ போட்டா, ...கர்மம்..கர்மம்..கண்றாவிப் படமா வந்து நிக்குது..ச்சே..ஒரு பதிவுக்கு படம் போடணும்னா எப்படியும் 10 அஜால்குஜால் படத்தையாவது தாண்டி வர வேண்டியிருக்கு..இந்த பாவத்தை எல்லாம் என்ன பண்ணி தொலைக்கறதோ தெரியலை..

அப்படித்தான் ஒருநாளு சிவாஜி படத்தைத் தேடுனா பத்மினி படம் வந்து மாட்டுச்சு..அதுவும் எப்படி, செம ஹாட்டா ஒரு குளியல் சீன்!.. என்னடா இது நம்ம பத்மினியா இப்படி-ன்னு நான் அசந்து போய் பார்க்கும்போதே, பக்கத்துல உட்காந்திருந்த என் பையன் வீல்-னு அழுக ஆரம்பிச்சுட்டான்..பயபுள்ள பயந்துட்டான் போல..அவன் அழுகுற சத்தம் கேட்டு ஓடி வந்த தங்கமணி ஸ்க்ரீனைப் பாத்திருச்சு..

கடுப்பாகி ‘இங்க பாருங்க, கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க எப்படி வேணா இருந்திருக்கலாம்..ஆனா இப்போ குடும்பம், குழந்தைன்னு ஆயிடுச்சுங்கிறதை ஞாபகம் வச்சிக்கோங்க’ன்னு சொல்லிடிச்சுங்க. என்ன அநியாயம் பாருங்க..என்னமோ எனக்கும் பத்மினிக்கும் கல்யாணத்துக்கு முன்ன கனெக்சன் இருந்த மாதிரியும், அது இன்னும் தொடர்ற மாதிரியும் பேசுதாங்களேன்னு நொந்து போனேன்..

ராணா:
பதிவுலகத்துல என்ன ரகளை நடந்தாலும் ‘நாம உண்டு..நமீதா உண்டு’ன்னு நான் இருக்குற மாதிரியே சூப்பர் ஸ்டாரும் தேர்தல் ரகளையை கொஞ்சம்கூடக் கண்டுக்காம ராணா வேலையில இறங்கிட்டாரு..என்னன்னே தெரியலை, எந்திரன் படத்தை அறிவிச்சப்போ இருந்த உற்சாகம் ராணாக்கு இல்லே..’முதல்ல ‘சுல்தான்’ தான் ராணாவா வர்றாரு..எங்களை ஏமாத்தப் பாக்கீங்களா’ன்னு தோணுச்சு. அப்புறம் இது வேற கதை-ன்னு சொல்லியிருக்காங்க..பார்ப்போம்..

திடீர்னு ‘இந்தி நடிகை ரேகா வில்லியா நடிக்கார்’னு சொன்னாங்க..அடப்பாவிகளா..அந்தம்மாவோட Youtube வீடியோவையே நாங்க கண்டுக்க மாட்டமே..அது வில்லியா நடிக்கிறதையா கண்டுக்கப்போறோம்.

தீபிகா படுகோன்(என்னா பேரு!), வித்யா பாலன் ஜோடின்னு சொல்றாங்க..என்னய்யா இது..’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் டேஸ்ட் உண்டு’ன்னு தெரியாதா இவங்களுக்கு..அதுக்கெல்லாம் நமீதா மாதிரி ஃபிகரை ஜூஸ் பண்ணனும்;;ச்சே..சூஸ் பண்ணனும்! சூப்பர் ஸ்டார் படம்னா எங்க தலைவி சும்மாவே நடிச்சுக் கொடுப்பாரே..(’சும்மா’ன்னா சம்பளம் வாங்காமன்னு அர்த்தம்ங்க!)

அரசியல்:
’மானம் தான் முக்கியம்’-னு சொல்லி காங்கிரஸைத் தூக்கியெறிஞ்ச தமிழினத் தலைவர், ஒரே நாள்ல மானத்தைக் கைவிட்டு காங்கிரஸைக் கைப்பிடிச்சுட்டாரு..அந்தப் பக்கம் ’ஜெயலலிதா பேரவைத் தலைவர்’ வைகோ நிலைமை என்னாச்சுன்னு தெரியல..ஒருவழியா கேப்டன் மம்மியைப் பாத்துட்டாரு..

ஆனாலும் பாருங்க, குமுதம் பேட்டில சொல்றாரு ‘ஜெ.கூட ஒன்னா பிரச்சாரம் பண்ண மாட்டேன்’னு..போயஸ்கார்டனுக்குள்ள இருந்து சீட் வாங்கிட்டு வெளில வந்தவர் மீடியாகிட்ட ஒன்னும் சொல்லாம தலையில முக்காடு போட்டு ஓடாத குறையா ஓடியிருக்காரு..அட, அந்தம்மாகூட கூட்டணி வக்கிறது அவ்வளவு கேவலமா இருக்குன்னா ஏன் அங்க போகணும்..அந்தம்மாவும் ஏன் இவருக்கு 41-ஐ தூக்கிக் கொடுக்கணும்?..ச்சே..சுத்த மானங்கெட்ட பொழப்பால்ல இருக்கு..இதுக்கு ‘கதை-திரைக்கதை’ எழுதுறதே பரவாயில்லையோ?

இந்தா புடிங்க:

எப்படியும் பின்னூட்டத்துல ‘எங்கய்யா அந்த பத்மினி படம்’னு என் சட்டையைப் புடிச்சு உலுப்பி கேட்கப்போறீங்க..அதனால எதுக்கு வம்பு..துணிஞ்சு அந்த படத்தை கீழே போடுறேன்..அந்த ரணகளத்துலயும் ரைட் க்ளிக் பண்ணி பத்மினியை பத்திரமா SAVE பண்ணினேன்-ங்கிறதை பெருமையோட தெரிவித்துக் கொள்கிறேன். (அட, கை தட்டாதீங்கப்பா!)
எம்மாம் பெரிய தொட்டி..யுரேகா!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. வடை,தக்காளி, பப்பாளி, ரஸ்தாளி எல்லாம் எமக்கே!

  ReplyDelete
 2. படிச்சுட்டு அப்புறமா கமென்ட் போடுறேன்

  ReplyDelete
 3. ஸ்ஸ்ஸ் முடியல முடியல................நான் பதிவ சொன்னேன் ஹி ஹி!

  ReplyDelete
 4. பத்மினி படம் எங்கே என கமெண்ட் போட நினைத்தேன் . படம் கடைசியில் இருந்தது. பின்னூட்டம் போடும் உரிமையை பறித்ததற்கு கண்டனங்கள்

  ReplyDelete
 5. அப்பப்பா தலைப்பும். டிஸ்கியும்... அருமையான கற்பனை..

  ReplyDelete
 6. @டக்கால்டி://வடை,தக்காளி, பப்பாளி, ரஸ்தாளி எல்லாம் எமக்கே!// பத்மினியும் அண்ணன் டகால்டிக்கே!

  ReplyDelete
 7. @விக்கி உலகம்://ஸ்ஸ்ஸ் முடியல முடியல// ம்..ம்..பப்ளிக்..பப்ளிக்!

  ReplyDelete
 8. @பார்வையாளன்://பத்மினி படம் எங்கே என கமெண்ட் போட நினைத்தேன் // உங்களுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுப்பேனா?

  ReplyDelete
 9. @வேடந்தாங்கல் - கருன்://அப்பப்பா தலைப்பும். டிஸ்கியும்... அருமையான கற்பனை.// என்னா வாத்யாரே...தலைப்பையும் டிஸ்கியையும் மட்டும் தான் பாத்தீங்களாக்கும்...

  ReplyDelete
 10. நெஞ்சை தொட்ட வரிகள் சூப்பர் ...
  அதற்கு ஒரு விளக்கவுரை தேவை...
  எங்களுக்கு உலகம் பற்றிய புரிதல் இன்னும் இல்லை ...ஏன்நா நாங்க 18 + இல்ல 18 -.

  அவ்வ்...

  ReplyDelete
 11. \\ஏ..காளி மச்சினி கூழி மச்சினி
  கமள மச்சினி கம்மா
  ஏ..குமள மச்சினி கும்மா
  ஏ..கமாலோ குமாலோ
  கூழி மச்சினி கும்மா
  காளி மச்சினி கம்மா! \\ அர்த்தமே புரியாத இந்தப் பட்டு உங்க நெஞ்சை தொட்டுடுச்சா!! ம்ம்... இப்ப புரியுது, மச்சினி.....மச்சினி..... என்று எல்லா வரியிலும் வருது, அதுலயே நீங்க flat ஆயிட்டீங்க. [இந்த மாதிரி நமீதா படத்தை போட்டு........ ஐயோ என்ன சொல்றதுன்னே தெரியாலே.... செத்தேன் நானு.]

  ReplyDelete
 12. @IlayaDhasan அது மச்சினியைப் பற்றிய பல யதார்த்த மதிப்பீடுகளையும் உறவுச்சிக்கலில் உள்ள உள்ளீடுகளையும் வெளியீடுகளையும் ஞானத்தின் தோற்றுவாய்க்கான ஆரம்ப அறிகுறிகளையும் கொண்ட பாடல். உலகம் உருண்டை என்ற உட்கருத்துக்கும் அங்கு இடம் உண்டு..இதற்கு மேல் மச்சினியைப் பற்றி பிரஸ்தாபித்தால் வீட்டில் சோறு கிடைக்காது என்பதால் நீங்களே பாவனாவை உற்றுப் பார்த்து புரிந்து கொள்ளவும்!

  ReplyDelete
 13. @சே.குமார் தங்கமணி ஊர்ல இல்லை..அதான் என்ஜாய் பண்றென்..ஹி..ஹி

  ReplyDelete
 14. @Jayadev Das நானே மச்சினி இல்லாத சோகத்துல இருக்கேன்...பத்மினியைப் பார்த்தும் பார்க்காதது போல் நீங்கள் நடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

  ReplyDelete
 15. ஓஹ், அதுதான் அர்த்தமா,இப்பதான் நல்ல பிரியுது ...இனிமே நம்ம ரிங் டோன் இது தான்... பின்ன , நமீதா சூப்பர், லாஸ்ட் பேஜ் தேடினா, நீங்க முன்னாடியே கிழிசுடீங்க போல

  ReplyDelete
 16. அப்புறம் பத்மினி போட்டோ ஒரே இருட்டு , யாராவுது விளக்கு வைங்கப்பா!

  ReplyDelete
 17. அந்த பத்மினி மேட்டருல சிரிப்ப அடக்க முடியலப்பா...

  ReplyDelete
 18. @IlayaDhasan //அப்புறம் பத்மினி போட்டோ ஒரே இருட்டு , யாராவுது விளக்கு வைங்கப்பா!

  // என்னது விளக்குப் பிடிக்கவா..யோவ், அது ஒன்னுதான்யா பதிவு எழுத வந்து செய்யலை...

  ReplyDelete
 19. @ரஹீம் கஸாலி அடுத்தவன் அடி வாங்கிறதுல நமக்கு எப்பவும் சந்தோசம் தானே கஸாலி!

  ReplyDelete
 20. pathminikku idam koduthuttu thalaivaru padam podalaina eppadi nanba?

  ReplyDelete
 21. ரப்ப டோரி ரப்ப டோரிய..ஹிப்ப டோரி ஹிப்ப டோரியா ... ரப்ப டோரியா ..ஹிப்ப டோரியா ...சம்ப சம்ப சம்பா, கும்ப கும்ப கும்பா ...போன்ற கருத்துள்ள பாடல்களை சீக்கிரம் போடுங்கய்ய ... படிங்க என்னோட 18 பதிவ http://unmaikaga.blogspot.com/2011/03/blog-post.html

  ReplyDelete
 22. வீட்டம்மா'கிட்டே சோத்தாப்பை அடி வாங்காம தப்பிச்சதே பெரிய விஷயம்....

  ReplyDelete
 23. @Speed Master அட்டகாசமா..ராணாங்க!

  ReplyDelete
 24. @இரவு வானம் பத்மினிக்குள் எல்லாம் அடக்கம்..தலைவரும் அடக்கம்!

  ReplyDelete
 25. @IlayaDhasan ஒன்னொன்னா போடுவோம் பாஸ்!

  ReplyDelete
 26. @MANO நாஞ்சில் மனோ ஆமா சார்..பெரிய விஷயம் தான்!

  ReplyDelete
 27. //..கர்மம்..கர்மம்..கண்றாவிப் படமா வந்து நிக்குது..ச்சே..ஒரு பதிவுக்கு படம் போடணும்னா எப்படியும் 10 அஜால்குஜால் படத்தையாவது தாண்டி வர வேண்டியிருக்கு//

  set at strict safe search (Remove safe search off),.. ஹி ஹி

  ReplyDelete
 28. @jothi: சரியான சதிகாரரா இருப்பீங்க போலிருக்கே..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.