Thursday, March 10, 2011

திருமாவளவனும் விடுதலைச்சிறுத்தைகளும் (தேர்தல் ஸ்பெஷல்)

பொதுவாக ஜாதிக் கட்சிகளுக்கு எதிரான எண்ணமே நமக்கு உண்டு. ஆனாலும் தனக்கென தனித்த அரசியல் கட்சிக்கான தேவை தாழ்த்தப்பட்டோருக்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். தமிழகத்தில் தலித் அரசியல் வலுவாகக் காலூன்றி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆம், அரசு ஊழியராக இருந்த திருமாவளவன், தன்னை முழுமையாக பொதுவாழ்வில் ஈடுபத்த ஆரம்பித்தது 1990-ல்!

2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் திருமாவளவன். ஆனால் 2004ல் திமுகவுடன் ஏற்பட்ட கசப்பால் கூட்டணியிலிருந்து விலகினார். விலகிய உடன், உதயசூரியன் சின்னத்தால் கிடைத்த எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் மூலமே தலித் அல்லாத பிறரின் கவனத்தையும் கவர்ந்தார் திருமாவளவன். திருமணமே செய்து கொள்ளாமல் பொதுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தன்மை மேலும் அவருக்கு பெருமை சேர்த்தது.

ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து திருமாவின் நடவடிக்கைகள், அதுவரை அவர் சேர்த்து வைத்த பெயருக்கு சிறப்பூட்டுவதாக இல்லை என்பதே உண்மை. 1983-லிருந்தே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈடுபட்டு வருபவர் திருமாவளவன். ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன் மாபெரும் இன அழிப்பு நடந்த போதும், காங்கிரஸ் கூட்டணியிலேயே இருந்தார் திருமா.(இன்னும் இருக்கிறார்). இதன் மூலம் பலரின் நகைப்புக்கும் ஆளானார்.


எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது ராஜபக்சே உடனான திருமா-வின் சந்திப்பு. திருமா போன்ற இன உணர்வாளர்கள் இலங்கை சென்ற எம்.பி. குழுவில் இடம் பெற்றிருக்கவே கூடாது. ஆனாலும் கூட்டணி நிர்ப்பந்த்தால் போனார். அவமானப்பட்டார். ராஜபக்சே-வின் கேலிக்கு அங்கேயே பதில் சொல்லாமல் இந்தியா வந்து ‘முள்வலி’ எழுதினார். 

இடையில் எல்லோருக்கும் பெயர் மாற்றி, தமிழ் பெயர் வைக்கப் போவதாக மாநாடு கூட்டினார். ஆனால் அந்த கூட்டத்துக்கு வந்த மக்களின் ஆதரவு கிடைக்காமல் அத்திட்டம் தோல்வியைத் தழுவியது. 

இன்று அரசியல் என்பது பணமுதலைகளின் கூடாரமாகவும் ரவுடிகள் அடைக்கலம் புகும் இடமாகவும் ஆகி விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது சமீப காலமாக வரும் குற்றச்சாட்டு, கட்டப் பஞ்சாயத்து. தலித் அரசியலையே பிரதானமாகக் கொண்டு இயங்கும் இயக்கத்திற்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு போதும் நன்மை அளிக்காது. திருமா அத்தகைய ஆட்களை கட்சியின் பொறுப்பில் வைத்திருப்பது ஏன் என்றும் நமக்குப் புரிவதேயில்லை. 

திருமாவின் சமீபத்திய போக்கில் மிகவும் எரிச்சல் ஊட்டுவது ஃப்ளக்ஸ் போர்ட் கலாச்சாரம். அவரைப் பற்றிய மிதமிஞ்சிய புகழ்ச்சி உரைகளுடன் திருமா  அந்த போர்டுகளில் சிரித்துக் கொண்டே நிற்கிறார். இது ஜெயலலிதாவின் கட் அவுட் கலாச்சாரத்திலிருந்து எந்த வகையில் வேறுபடுகிறதோ புரியவில்லை.  திருமாவின் இத்தகைய போக்குக்கு காரணம் தேர்தல் அரசியல் தானோ. ஒருவர் மறைந்த உடன் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்துவர். பிறகு ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செலுத்துவர். ஆனால் திருமாவின் தந்தை மறைவிற்கு நூறாவது நாள் அஞ்சலி(!) போர்டை சென்னையில் பார்த்து மிரண்டு போனேன்.

ஆனாலும் செல்வப்பெருந்தகை போன்றோர் திருமாவிற்கு மாற்றாக வர முயன்று தோல்வி அடைவதில் இருந்தே நாம் திருமாவின் செல்வாக்கை உணர்ந்து கொள்ளலாம். டாக்டர் ராமதாஸிற்கு எதிராக அரசியல் செய்தால் தான் கட்சி மேலும் வளரும் என்ற நிலை இருந்தும், அதற்கு உடன்படாமல் ராமதாஸுடன் இணக்கமான போக்கை திருமா மேற்கொண்டு வருவது அவரது முதிர்ச்சியையே காட்டுகிறது. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை தலித்கள் தலைவிதி என ஏற்று வந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன் அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தலித்கள் தாக்கப்பட்டபொது, வேகமான எதிர்த்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த வன்முறை மூலமே நிலப் பிரபுத்துவக் காலம் முடிந்து விட்டதை ஆதிக்கம் செலுத்திய ஜாதிகள் உணர்ந்தன.

இப்போது தலித்களுக்கு எதிராக எங்கு வன்முறை மட்டுமல்ல சிறு அவமானம் நிகழ்ந்தாலும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின் மூலம் தன் வலுவான எதிர்ப்பை தலித்களும் தலித்திய கட்சிகளும் பதிவு செய்கின்றனர். அதில் விடுதலைச் சிறுத்தைகள் முண்ணனியில் உள்ளனர் என்றால் மிகையில்லை. அதற்காகவாவது திருமாவளவனை அவரது அத்தனை தவறுகளுடனும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.


இன்னும் காங்கிரஸுடன் ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்தித்தாலும், பாமகவும் இதே அணியில் இருப்பதால், இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போதைய நிலையைத் தக்க வைக்கும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

  1. ஆகா.. அரசியல் கட்டுரை அருமை...

    ReplyDelete
  2. அரசியல் பதிவில் ஸ்பெசலிஸ்ட் ஆகிட்டீங்க நண்பா....தொடர்ந்து கலக்குங்க....இன்றைய கூட்டணிகளை பற்றியும் விரைவில் அலசிடுங்களே

    ReplyDelete
  3. //அரசியல் பதிவில் ஸ்பெசலிஸ்ட் ஆகிட்டீங்க நண்பா...//

    ReplyDelete
  4. டம்மி பீஸ்களை வைத்தே ரம்மி சேர்த்த அண்னன் வாழ்க

    ReplyDelete
  5. @வேடந்தாங்கல் - கருன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வாத்யார்.

    ReplyDelete
  6. @ரஹீம் கஸாலி //இன்றைய கூட்டணிகளை பற்றியும் விரைவில் அலசிடுங்களே..// கூட்டணிக் குழப்பம்-சீட் பங்கீடு முடியட்டும்..ஒரே டஸ்ட்டா இருக்குறதால ஒன்னும் தெளிவாத் தெரியலை..

    ReplyDelete
  7. @THOPPITHOPPI என்ன தல..மாற்றுக்கருத்தே இல்லையா...

    ReplyDelete
  8. @சி.பி.செந்தில்குமார் //டம்மி பீஸ்களை வைத்தே ரம்மி சேர்த்த..// என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  9. நடத்துங்க நண்பா ஹி ஹி!

    ReplyDelete
  10. தொடர்ந்து கலக்குங்க....

    ReplyDelete
  11. அரசியல் பதிவா????? நல்லாருக்கு.. சீரியஸ்ஸாவே எழுதியிருக்கீங்க..:அஷ்வின் அரங்கம்:ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்

    ReplyDelete
  12. Very Nice Article about Thirumaa. But I feel, these people has come a long way now from the common public. Very difficult to survive in the forth coming election..

    http://anubhudhi.blospot.com/

    ReplyDelete
  13. @சே.குமார் உங்க ஆதரவுடன் தொடர்ந்து கலக்குவோம்..

    ReplyDelete
  14. @Ashwin-WIN ஆண் விடுதலையா..ஆமா, ஆண்கள் தினம் என்னைக்குங்க?

    ReplyDelete
  15. அரசியல் அலசல் கலக்கல்...

    ReplyDelete
  16. ஜாதி உணர்வு இல்லாம இருப்பவர்களை காண்பதே அரிது. தன்னுடைய சாதிக்காரன் என்றவுடன் இனந்தெரியாத பிரியத்தை நம்மாளுங்க காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். மாநில அளவில் இப்படின்னா, தேசிய அளவில பார்பனர்கள் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும் மொழி வித்தியாசம் பாராமல் ஒன்று கூடிக் கொள்கிறார்கள். ஜாதியைக் காட்டி வோட்டு வாங்குபவர்கள், அந்த இனத்துக்கு ஒன்றுமே செய்வதில்லை என்பதே உண்மை. [ராமதாஸ் வன்னியர்களுக்கு ஒன்னும் செய்வதில்லை, ஸ்பெக்ட்ரம் புகழ் "கனி" வான "மொழி" யில் பேசும் அண்ணன் ராசா தலித்துகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை விட, அவர்கள் நிலத்தை ஏமாற்றி அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி கேரளாக்கார தொழிலதிபர்களுக்கு விற்றுக்கிறார்.] இந்த விஷயத்தில் கட்சிக் காரன் எப்படி அடிமட்டத் தொண்டனுக்கு எதுவுமே செய்வதில்லையோ அதே மாதிரி, ஜாதி பேரைச் சொல்லி ஓட்டு வாங்குபவர்கள் ஜாதிக் காரனுக்கு எதுவும் செய்வதில்லை. இந்திய கிரிக்கெட் ஆட்டக் காரர்களால் இந்தியர்களுக்கு நன்மை எதுவுமில்லை என்று தெரிந்திருந்தும், அவர்கள் ஆடும் போது உற்ச்சாகம் கொண்டு கைதட்டும் இந்தியனைப் போல ஒவ்வொரு ஜாதிக் காரனும் ஓட்டுதான் போடுகிறான், எந்த பிரதிபலனும் இல்லாமல்!!

    ReplyDelete
  17. @Speed Master ஆ..ஆரசியல் தான் மாஸ்டர்!

    ReplyDelete
  18. @Jayadev Das //இந்திய கிரிக்கெட் ஆட்டக் காரர்களால் இந்தியர்களுக்கு நன்மை எதுவுமில்லை என்று தெரிந்திருந்தும், அவர்கள் ஆடும் போது உற்ச்சாகம் கொண்டு கைதட்டும் இந்தியனைப் போல..// சரியான கமெண்ட் சார்..வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  19. ஒரு விஷ‌ய‌த்தை நாம் ஒப்புக்கொள்ள‌ வேண்டும்,..

    வ‌றுமையில் பிற‌ந்து இன்றைக்கு இருக்கிற‌ சொந்த‌மாக‌ க‌ட்சி தொட‌ங்கி ந‌ட‌த்துகிற‌ த‌லைவ‌ர்க‌ளில் திருமாவ‌ள‌வ‌ன் முத‌லாம‌வ‌ர். அத‌ன் க‌ஷ்ட‌ம் க‌ட்சி துவ‌ங்கி ந‌ட‌த்துப‌வ‌ருக்கே தெரியும். இன்றைய‌ அர‌சிய‌லில் க‌க்க‌னை போல‌வோ, காம‌ராஜ‌ரைப் போல‌வோ வ‌ர‌ வேண்டும் யாரேனும்‌ நினைத்தால் அவ‌ர்க‌ள் காமெடியனாக‌த்தான் போவார்க‌ள்,.. ந‌ல்ல‌ ப‌திவு செங்கோவி

    ReplyDelete
  20. @jothi//இன்றைய‌ அர‌சிய‌லில் க‌க்க‌னை போல‌வோ, காம‌ராஜ‌ரைப் போல‌வோ வ‌ர‌ வேண்டும் யாரேனும்‌ நினைத்தால் அவ‌ர்க‌ள் காமெடியனாக‌த்தான் போவார்க‌ள்.// உண்மை தான் ஜோதி!

    ReplyDelete
  21. நல்ல முறையான அலசல். திருமாவளவனிடம் இருக்கும் சிறப்புகளையும், தேவையற்ற ஆர்பாட்ட விளம்பர த்தனங்கள் மற்றும் கட்ட பஞ்சாயத்து போன்ற இவரின் பெயரை, இமேஜை தகர்க்கும் காரணிகளையும் சொன்னீர்கள். ஒன்று மட்டும் உண்மை. ஜாதி கட்சிகள் ஆரம்பித்த எவரும் அந்த ஜாதி மக்களுக்கு என ஒரு துரும்பை கூட எடுத்து போட்டதில்லை . குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பிறகு அவர்கள் பிற கட்சிகளுடன் இணைந்து பேரம் பேசி தனக்கும் தன்னைசார்ந்துள்ள ஒரு கூட்டத்துக்கும் மட்டுமே பயன்படும் அவலம்தான் இன்றும் உள்ளது.

    ReplyDelete
  22. @கக்கு - மாணிக்கம்பாராட்டுக்கு நன்றி சார்..நீங்கள் சொல்வதை முழுக்க மறுக்க முடியவில்லை...

    ReplyDelete
  23. காலத்தின் கட்டாயத்தினால் தாழ்த்த பட்டவர்களை மற்றவர்கள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.மற்றபடி தாழ்த்த பட்டவர்களை அடிமைப் படுத்தும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தாழ்த்த பட்ட சமுதாயத்தின் தலைமையை[சிறப்பாக இருந்தாலும் கூட]ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இன்னும் உருவாகவில்லை.உதாரணத்திற்கு அம்பேத்கார் திரைப்பட வெளியீட்டை எடுத்துக்கொள்ளலாம்.எனவே திருமா அல்லது விடுதலை சிறுத்தை தம்மை நிலை நிறுத்திக் கொள்ள செய்யும் சில செயல்கள் தவிர்க்க முடியாததாகி போகிறது.

    ReplyDelete
  24. @சேக்காளி உண்மை தான் பாஸ்..தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததே!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.