Friday, March 18, 2011

சங்கவியின் செமயான ஸ்டில்லும் செங்கோவியின் கொழுப்பும் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

அக்கா அக்கா - நீ
அக்கா இல்லே
மாமா மாமா - நீ
மாமா இல்லே! - (ஏதோவொரு எஸ்.வி.சேகர் படத்திலிருந்து!)

வைராக்கிய யோசிப்பு :

இந்த வாரம் சில்க் படத்தைப் போட்டு தூள் ’பறந்தது’ல ''உள்ளே' இருந்தும் வெளியே இருந்தும் கடும் எதிர்ப்பு..அதனால முதல்ல அதுக்குப் பிராயச்சித்தமா கே.பி.சுந்தரம்பாளா நடிச்ச அவ்வையார் படத்தைப் போட்டு இந்த வீக் எண்ட் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கிறேன் :
உனக்கு நாந்தான் கிடைச்சனாப்பா!
சரி, இனிமே நல்ல படங்களை மட்டுமே போடறதுன்னு வைராக்கியமா முடிவு பண்ணுன அடுத்த நாளே நெட்ல செமயான சங்கவி ஸ்டில் ஒன்னு மாட்டிடுச்சு. எனக்கு சங்கவியை ரொம்பப் பிடிக்கும். நீங்க யாருமே கவனிக்காத சங்கவியின் நடையும் எனக்குப் பிடிக்கும். இப்போ அந்த ஸ்டில்லை இங்க போடலாமா வேணாமா..

இப்போ இதை நான் மட்டும் பார்த்துட்டு உங்களுக்குக் காட்டலைன்னா அது பாவம்..அதனால பாவி ஆயிடுவேன். பொதுவில் வச்சா ’பிரா’பல அயோக்கியன் ஆயிடுவேன்..என்ன செய்யலாம்னு குழம்புனேன்..சரி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு துணிஞ்சுட்டேன். அந்த ஸ்டில்லை பதிவுல யாருக்கும் தொந்தரவில்லாம கடைசில போட்டிருக்கேன்..என்ஜாய்!

ஆபீசில் உட்கார்ந்து யோசிச்சது:

ஒரு மாடல் அழகியோட சிலிக்கான் மார்பைக் கவ்வுன காமவெறி பிடிச்ச பாம்பு, சிலிக்கானை முழுங்கி செத்துடுச்சாம்..என்னய்யா இது..நல்லா விசாரிச்சீங்களா..செத்தது பாம்பு மட்டும் தானா..எதுக்கும் அந்தம்மா வூட்டு கொல்லைப்புறத்தை தோண்டிப் பாருங்கய்யா..ஆட்டோ சங்கர் மாதிரி ஆட்களை புதைச்சு வச்சிருக்கப் போவுது...வெளிநாடு வாழ் இந்திய நண்பர்கள்லாம் ஜாக்ரதையா இருந்துக்கோங்கய்யா..
ஆரம்பிச்சுட்டான்யா!
பயந்து போய் யோசிச்சது:
சாதிக் பாட்சா தற்கொலை-ன்னு செய்தி பார்த்ததுமே கடுப்பாகி உடனே அந்த பதிவைப் போட்டுட்டேன். போட்டுட்டு கூகுள்ல சாதிக் பாட்சான்னு தேடுனா தட்ஸ்தமிழுக்கு அடுத்து ரெண்டாவதா என்னோட பதிவு வந்து நிக்குது..பதிவுலகில் முதல்முதலா நான் தான் போட்டனா..அடடா! ’அண்ணன் எப்பச் சாவான்..பதிவை எப்பப் போடுவோம்’னு காத்திருந்த மாதிரி ஆயிடுச்சே..சிபிஐ வேற சாதிக் தற்கொலையைப் பத்தி விசாரிக்கப் போறாங்களாமே..அய்யய்யோ..ஒருவேளை செய்தியை முந்தித் தந்த நம்மளயும் விசாரிப்பாங்களோ...அண்ணன் ரொம்பப் பயந்தவன்பா..அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க!

இலக்கியவாதி ரேஞ்சுக்கு யோசிச்சது:
பாலாவின் அவன் இவனுக்கு அப்புறம் நான் எதிர்பார்ப்பது அஜித்தின் மங்காத்தா-வைத் தான். கதையைப்பற்றி அதிக செய்திகள் வராமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அஞ்சலிக்குட்டி வேறு நடிக்கிறது என்கிறார்கள். 

இந்தப் படம் தாதாக்களிடையே நடக்கும் கேங் வார் பற்றியது என்பதாகச் செய்திகள் வருகின்றன. பொதுவாக அஜீத் ஆண்ட்டி ஹீரோவாக நடித்த...ஆண்ட்டி ஹீரோ..ஆண்ட்டி..ஆஹா..பதிவுல ஆண்ட்டின்னு வார்த்தை வந்திருக்கே..அப்போ ஒரு ஆண்ட்டி படம் போடலாமே..இருங்க அட்டாச் பண்ணிட்டு வர்றேன்..(இதுக்குப் பேருதாங்க ஆட்டோ ஃபிக்‌ஷன்..பதிவு தன்னைத் தானே நிரப்பிக் கொள்தல்)
மொத்து வாங்கியும் திருந்தலியா!
என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்..ஆங்..ஆண்ட்டி..ஆண்ட்டி ஹீரோ..ஆஜீத் ஆண்ட்டி ஹீரோவா நடிச்ச படங்கள் நல்ல வெற்றி பெற்றிருக்கு. அதனால இந்தப் படமும் ஓடும்னு நினைக்கேன்..இதுலயாவது அவரை வெறுமனே கூலிங் க்ளாசோட நடக்க வைக்காம, நடிக்க வைங்கப்பா!

அடுத்து வருவது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சங்கவியின் செமயான ஸ்டில்லு..ஆகவே யோக்கிய சிகாமணிகள் இந்தக் கோட்டைத் தாண்டி வரக்கூடாது..பேச்சு பேச்சா இருக்கணும்..சொல்லீட்டேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------சங்கவியின் ஸ்டில்லு:
பதிவர் சங்கவி
மேலதிக விவரங்களுக்கு : http://www.sangkavi.com/


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

 1. //சங்கவியின் ஸ்டில்லு//


  ச‌ங்க‌வியின் ந‌டை ரொம்ப‌ உங்க‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்குமோ???

  இதோ இருங்க‌ ச‌ங்க‌வி வ‌ந்துகிட்டே இருக்கார்.

  ReplyDelete
 2. @jothi நான் சொன்னது சங்கவியோட எழுத்து நடையை..ஹி..ஹி!

  ReplyDelete
 3. //பாலாவின் அவன் இவனுக்கு அப்புறம் நான் எதிர்பார்ப்பது அஜித்தின் மங்காத்தா-வைத்தான். //

  நான் எதிர்பார்ப்பது 'அழகர்சாமியின் குதிரை' படத்தை.

  ReplyDelete
 4. நடக்கட்டும், நடக்கட்டும்....

  ReplyDelete
 5. மாப்ள நீங்க முதல்ல சொல்லும்போதே எனக்கு புரிஞ்சி போச்சி நீர் பதிவர் போட்டோ தான் போடுவீர்ன்னு ஹிஹி!

  ReplyDelete
 6. ஆட்டோ சங்கர் மாதிரி ஆட்களை புதைச்சு வச்சிருக்கப் போவுது...வெளிநாடு வாழ் இந்திய நண்பர்கள்லாம் ஜாக்ரதையா இருந்துக்கோங்கய்யா..//

  எச்..சூஸ் மீ? நீங்களும் வெளிநாட்ல இருக்கிறதா கேள்விப்பட்டேன்?

  ReplyDelete
 7. இதுக்கு பேர் தான் நக்கலா? இல்ல நாக்கலா?

  ReplyDelete
 8. ம்..ம்.. நடத்துங்க... நடத்துங்க..

  ReplyDelete
 9. //நடக்கட்டும், நடக்கட்டும்....//

  hehehe...........

  ReplyDelete
 10. //சங்கவியின் ஸ்டில்லு://

  சான்சே இல்ல கலக்கல்.

  சங்கவியின் பதில்தான் எனக்கு இன்னும் சிரிப்பை வரவைத்தது

  ReplyDelete
 11. @விக்கி உலகம்//நீங்க முதல்ல சொல்லும்போதே எனக்கு புரிஞ்சி போச்சி // விக்கி, உமக்கு உடம்பெல்லாம் மூளைய்யா!

  ReplyDelete
 12. @வைகை//நீங்களும் வெளிநாட்ல இருக்கிறதா கேள்விப்பட்டேன்?// ஹலோ, நாங்க பேச்சுல தான் அந்நியன்/ரெமோ..உண்மையில அம்பி!

  ReplyDelete
 13. @டக்கால்டிஅண்ணே..இது நாஆஆஆஆஆக்கல்ணே!

  ReplyDelete
 14. என்னைய பிரபலப்படுத்தியற்கு மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 15. @சங்கவி //என்னைய பிரபலப்படுத்தியற்கு மிக்க நன்றி நண்பரே// இது தான்யா உண்மையான நக்கல்!..யாரு யாரை பிரபலப்படுத்துறது!

  ReplyDelete
 16. @சங்கவி //என்னைய பிரபலப்படுத்தியற்கு மிக்க நன்றி நண்பரே// இது தான்யா உண்மையான நக்கல்!..யாரு யாரை பிரபலப்படுத்துறது!

  ReplyDelete
 17. @வேடந்தாங்கல் - கருன் வாத்யாரே சொல்லியாச்சு..நடத்திடுவோம்!

  ReplyDelete
 18. @middleclassmadhavi//:))// என்ன இது வெறும் சிரிப்பான் மட்டும் போட்டிருக்காங்க..ஒருவேளை ‘இதுவும் ஒரு பொழப்பா’ன்னு சிரிக்காங்களோ!

  ReplyDelete
 19. @THOPPITHOPPI//சங்கவியின் பதில்தான் எனக்கு இன்னும் சிரிப்பை வரவைத்தது// தொப்பி, சங்கவியிடம் அனுமதி வாங்கிவிட்டுத் தான் இதைப் போட்டேன்..ஜெயலைதாவைப் பற்றிக்கூட தைரியமாக எழுதி விடலாம்..நம்ம பதிவர்களைப் பத்தி எழுத முடியுமா..அது ரொம்ப ஆபத்தான விளையாட்டாச்சே! (சங்கவி நல்ல புள்ளை தான்..இருந்தாலும்...)

  ReplyDelete
 20. @ரஹீம் கஸாலி //SANGAVI STILL SUPER// அடுத்த வாரத்துல உங்க ஸ்டில்லு வரும்..

  ReplyDelete
 21. @ரஹீம் கஸாலி //SANGAVI STILL SUPER// அடுத்த வாரத்துல உங்க ஸ்டில்லு வரும்..

  ReplyDelete
 22. @சங்கவி//ஆகவே யோக்கிய சிகாமணிகள் இந்தக் கோட்டைத் தாண்டி வரக்கூடாது.// நாம இப்படித் தானே சொல்லியிருந்தோம்..ஆனா வந்த எல்லாருமே கோட்டைத் தாண்டி இருக்காங்களே..அப்படீன்னா...அய்யய்யோ, நான் ஒன்னும் சொல்லலைப்பா!

  ReplyDelete
 23. \\சங்கவியின் செமயான ஸ்டில்லும் செங்கோவியின் கொழுப்பும் \\ இந்த டைட்டிலைப் பார்த்ததும் சங்கவி பிளாக்கில் ஏதோ பலான படத்தைப் போட்டுள்ளார், அதைப் பற்றித்தான் எழுதப் போகிறீர்கள் என நினைத்தேன், உள்ளே வந்து பார்த்தால் அது பிளாக்கர் சங்கவி இல்லை, நடிகை சங்கவி யாக்கும் என்பது போல இருந்தது. அடடே பரவாயில்லை வந்த வரைக்கும் லாபம்னு கீழே போய்ப் பார்த்தால், அடங்கொப்புரானே............

  ReplyDelete
 24. கே.பி.சுந்தரம்பாளா நடிச்ச அவ்வையார் படத்தைப் போட்டு//

  என்னாச்சு செங்கோவி? மேட்டரையே மாத்திட்டீங்க?

  ReplyDelete
 25. நம்ம அண்ணன் செங்கோவி செகண்ட்ஸ்க்கு எல்லாம் ஆசைப்பட மாட்டாரே.. ஃபிரஸ் ஃபேஸ் தானே அவருக்கு பிடிக்கும்னு அப்பவே மைல்டா ஒரு டவுட் இருந்துச்சு.. ம் ம் செம ஐடியா தான்

  ReplyDelete
 26. >>>’பிரா’பல அயோக்கியன் ஆயிடுவேன்.

  யாராவது லீவ்ல போனா அவங்களை தாக்கவேண்டியது..ஏண்ணே இப்படி? ஹி ஹி

  ReplyDelete
 27. >>.பதிவுல ஆண்ட்டின்னு வார்த்தை வந்திருக்கே..அப்போ ஒரு ஆண்ட்டி படம் போடலாமே..இருங்க அட்டாச் பண்ணிட்டு வர்றேன்..(இதுக்குப் பேருதாங்க ஆட்டோ ஃபிக்‌ஷன்..பதிவு தன்னைத் தானே நிரப்பிக் கொள்தல்)


  இன்று முதல் பதிவுலக ஆண்ட்டி ஹீரோ அதாவது ஆண்ட்டிகளின் ஹீரோ என அழைக்கப்படுவீர்.. ஹி ஹி

  ReplyDelete
 28. மொக்கை செல்வாவையே மிஞ்சி விட்டீர்களே

  ReplyDelete
 29. @Jayadev Das//வந்த வரைக்கும் லாபம்னு கீழே போய்ப் பார்த்தால், அடங்கொப்புரானே.// நீங்களுமா..அடங்கொப்புரானே!

  ReplyDelete
 30. @Uma//என்னாச்சு செங்கோவி? மேட்டரையே மாத்திட்டீங்க?// ’நானா யோசிச்சா’ அப்படித்தான்..சகோதரிகள்லாம் நானா யோசிச்சேன் பகுதியை சீரியஸா எடுத்துக்காதீங்க...தேங்ஸ்!

  ReplyDelete
 31. @சி.பி.செந்தில்குமார்//நம்ம அண்ணன் செங்கோவி செகண்ட்ஸ்க்கு எல்லாம் ஆசைப்பட மாட்டாரே.// நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்கு நன்றி..நன்றி!

  ReplyDelete
 32. @சி.பி.செந்தில்குமார்//யாராவது லீவ்ல போனா அவங்களை தாக்கவேண்டியது.// என்னங்க சொல்றீங்க..நான் சும்மா தமிழ்-ல விளையாடுனா நீரு எங்கயாவது மாட்டி விட்றாதீரும்யா!

  ReplyDelete
 33. @சி.பி.செந்தில்குமார்//இன்று முதல் பதிவுலக ஆண்ட்டி ஹீரோ அதாவது ஆண்ட்டிகளின் ஹீரோ என அழைக்கப்படுவீர்.// எப்படியும் எனக்கு அடி வாங்கித் தராம போக மாட்டீங்க போல!

  ReplyDelete
 34. உம்ம பதிவுக்கு லிங்க கொடுத்துட்டு நாம்படுற பாடு இருக்கே... அய்யய்யய்யோ...

  ட்விட்டர்ல திணறத்திணர அடிக்கிறாங்க...

  அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 35. @காட்டுவாசிஅதனால தான் கூட்டம் இன்னைக்கு ஓவரா இருக்கா..நான்கூட பாராட்ட வந்த கூட்டம்னுல்ல நினைச்சேன்..சில்க்கோட பறக்கும் படத்துக்கு இதுல லின்க் இருக்கே..அது போதாதா...நன்றி நண்பரே!

  ReplyDelete
 36. பாவம் சங்கவி...! (எங்க டாகுடர் விஜய் மட்டும் இத பாத்தாருன்னா கொலவெறியாயிடுவாரு.....!)

  ReplyDelete
 37. @பன்னிக்குட்டி ராம்சாமி டாகுடருக்கு துரோகம் பண்ணக் கூடாதுன்னு தான் அவங்க படத்தைப் போடலை பாஸ்!

  ReplyDelete
 38. கே.பி.சுந்தரம்பாளா நடிச்ச அவ்வையார் படத்தைப் போட்டு//

  நான் சொன்னது அவ்வையாரா நடிச்ச கே. பி. சுந்தரம்பாள் ன்னு எழுதறதுக்குப் பதிலா மாத்தி எழுதிருக்கீங்கலேன்னு.

  ReplyDelete
 39. @Umaஅது சும்மா காமெடிக்காக எழுதியது சகோதரி..நீங்கள் அதற்கு சிரிக்காதது கூடப் பரவாயில்லை..இப்படி கையில் பிரம்புடன் விரட்டி விரட்டி விளக்கம் கேட்குறீங்களே..இது நியாயமா..நான் பாவம் இல்லையா...அவ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 40. அப்படின்னா சரி விட்டுடறேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.