Tuesday, March 22, 2011

உங்க கார்/பைக் ஓடுவது எப்படி? (அதிரி புதிரி டெக்னிகல் பதிவு)

டிஸ்கி: என்னை மதிச்சி யாரும் தொடர் பதிவுக்குக் கூட கூப்பிடறதில்லை. என் சுறுசுறுப்பு எல்லாருக்கும் தெரியும் போல! திடீர்னு பதிவர் பார்வையாளன், நான் பணிபுரியும் மெக்கானிகல் துறை சம்பந்தப்பட்ட டெக்னிகல் பதிவு ஒன்னு, நான் எழுதணும்னு நேயர் விருப்பம் கேட்டுட்டாரு. பரவாயில்லை, இவராவது கேட்டாரேன்னு சந்தோசம் தாங்கலை. நான் இருக்குற பைப்பிங் துறை பத்தி எழுதுனா யாருக்கும் புரியாது. அதனால எல்லோருக்கும் தெரிஞ்ச கார்/பைக் எஞ்சின் மெக்கானிசம் பத்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்..இந்த வாய்ப்பை நல்கிய பார்வையாளனுக்கு நன்றி சொல்லி பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

உங்க கார்/பைக் ஓடுவது எப்படி?

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு தான்!   ------------இதோட பதிவை முடிச்சா, நண்பர் பார்வையாளன் காண்டாயிடுவாரு! அதனால......

நீங்க ஒரு பைக்கோ காரோ வச்சிருப்பீங்க (அதை வச்சிருக்கலாம் தப்பில்லை!)..டெய்லி வண்டில ஏறி உட்கார்றீங்க..இஞ்சினை ஸ்டார்ட் பண்றீங்க..ஆக்ஸிலேட்டரை முறுக்கவும்/மிதிக்கவும் வண்டி ஓட ஆரம்பிக்குது. என்னைக்காவது அது எப்படி ஓடுதுன்னு யோசிச்சிருக்கீங்களா..அந்த எஞ்சின் எப்படி ஓடுதுன்னு விளக்கமாச் சொல்றேன் வாங்க! ஒரு மாதிரிக்கு 4 ஸ்ட்ரோக் எஞ்சினை எடுத்துப்போம்!

கார் எஞ்சின்ல உள்ள மெக்கானிசம் பத்தி தெரியணும்னா உங்களுக்கு ரெசிப்ரோகேட்டிங் மெக்கானிசம் பத்தி தெரிஞ்சிருக்கணும். ஏதோ புரோட்டா ரெசிப்பி மாதிரி சொல்றானேன்னு பயப்படாதீங்க. உங்க நாலேட்ஜை நாலா பக்கமும் வளர்த்து விடத்தானே நான் இருக்கேன்..தையல் மெசினைப் பார்த்திருக்கீங்களா..அதுல இருக்கு இந்த மெக்கானிசம்! தையல் மெசினைப் பாக்காதவங்க மட்டும் இந்தப் படத்தைப் பாருங்க!
படம்: ரதி நிர்வேதம் .....(டீடெய்ல் போதுமா!)
ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தையல் மெசின்ல வீல் இருக்குங்களா..அப்புறம் மிதிக்கிற பெடல்(?) ஒன்னு இருக்குதா..அதுக்கு மேல ரெண்டு காலு இருக்குங்களா..என்னது பாக்கலையா..அட, அதைப் பாத்தாத்தான் பாடம் புரியும். ஏதாவது பரிகாரம் பண்ணிக்கலாம், சும்மா பாருங்க. 

அம்மணி காலு மேல இருந்து கீழ பாத்து செங்குத்தா இருக்குதா..செங்குத்துன்னா வெர்டிகல்(Vertical)னு அர்த்தம்!..புரிஞ்சதா...ஆனா சக்கரத்தோட அச்சு கிடைமட்டமா (Harizontal) இருக்கு. அம்மணி மிதிக்கிறது மேலயும் கீழயும்.லினியர் மோஷன்!.ஆனா சக்கரம் மேலயும் கீழயும் போகலை..வட்டமாச் சுத்துது.ரோட்டரி மோஷன்....இப்படி லினியர் மோஷனை ரோட்டரியாவோ, ரோட்டரியை லினியராவோ மாத்துற மெக்கானிசத்துக்குப் பேருதாங்க ரெசிப்ரோகேட்டிங் மோஷன்! கீழே உள்ள நல்ல படத்தைப் பயப்படாம பாருங்க.


ஒரு அச்சினை மையமா வச்சு சுத்துற ஒரு வட்ட வடிவ சக்கரம்/உருளையின் சுற்றுவட்டத்துல ஒரு கம்பியை அட்டாச் பண்ணி, கம்பியோட மறுமுனையை பெடலோட/ஏதாவது பொருளோட இணைச்சுட்டா, சக்கரம் சுத்தும்போது பொருள் லினியரா மூவ் ஆகும்..பொருள் லினியரா மூவ் ஆகும் போது சக்கரம் வட்டமாச் சுத்தும்..இது ஒரு வட்டம்! இப்போ ஒரு பைக்/கார்ல உள்ள எஞ்சினோட படத்தைப் பாருங்க.

இதுல ரோட்டரி மோஷன்ல இருக்குற க்ராங்க் சேஃப்ட் தான் கார் வீலுடன் இணைக்கப்பட்டிருக்கும். க்ராங்க் ஷாப்ட் உடன் பிஸ்டன் ராடு (கனெக்டிங் ராடு) இணைக்கப்பட்டிருக்கா..அதோட மறுமுனையில அங்க பெடல் மாதிரியே இங்க பிஸ்டன் இணைச்சிருக்கா..மேல உள்ள சிவப்புக்கலர் வால்வு திறக்கும்போது பெட்ரோலும் காத்தும் உள்ள வரும் (கீழ் படம்:ஊதாப் புள்ளி)..கம்பஷன் சேம்பர்னு ஒரு இடம் இருக்கே..அங்க தான் பெட்ரோல் கம்பசன்(எரிதல்) ஆகும்..

அந்த கம்பஷன் சேம்பர்ல மேல இருந்து வந்த பெட்ரோல் நிரம்பி, அப்படியே சிலிண்டர் ஏரியாக்குள்ள நுழையும்..நுழைஞ்சு பிஸ்டன் மேல கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுக்கும். புது ஆளு வந்த உடனே பிஸ்டன் என்ன செய்யும்னா, வைகோ மாதிரி பின் வாங்கும். அது பின்னால மூவ் ஆனா என்னாகும்?..மறந்துடுச்சா..அப்போ மேல போய் அம்மணி காலைப் பாத்துட்டு வாங்க..ஆங்..அது லினியரா பின்னால போனா, க்ராங்க் ஷேஃப்ட் வட்டமாச் சுத்தும்..அரைவட்டமா மேல போய், கீழ இறங்கும்ப்போது, பிஸ்டனை முன்னோக்கி ..அதாவது சிலிண்டர் ஏரியாக்குள்ள தள்ளும்.
INTAKE STROKE
இப்போ அங்க இருக்குற பெட்ரோல் அழுத்தப்படும்..போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடங்கிற மாதிரி, கம்பஷன் சேம்பர்ல இருந்து சிலிண்டர் ஏரியாக்கு சும்மா போன பெட்ரோல், அதிக ப்ரஷரோட கம்பஷன் ஏரியாக்கே திரும்பும். இப்போ ஸ்பார்க் ப்ளக் ஆட்டோமேடிக்கா ஒரு தடவை கரண்ட்-ஐ பாஸ் பண்ணி ஸ்பார்க்கை உண்டாக்கும். அந்த சின்ன தீப்பொறி போதாதா பெட்ரோல் எரிய!

பெட்ரோல் எரியவும் நிறைய ஹீட் உண்டாகும்..அட, அந்த ’உண்டாகும்’ இல்லீங்க..வெப்பம் உருவாகும்..அந்த வெப்ப ஆற்றல் விரிவடையும் இயல்புள்ளதால பிஸ்டன் மேல தன் அழுத்தத்தைக் காட்டும். பிஸ்டன் இப்போ திரும்பவும் வைகோ மாதிரியே பின் வாங்கும். அது பின் வாங்குனா?...கரெக்ட், க்ராங்க் சேப்ட் சுத்தும்..அதனால வீலும் சுத்தும்..ஒரு சுத்து சுத்துனதும் பிஸ்டன் திரும்ப சிலிண்டர் ஏரியாக்குத் தானே வந்தாகணும்..இப்போ எரிஞ்சு புகையாக்கிடக்குற பெட்ரோல் புகையை கீழ இருக்குற ஊதா வால்வு வழியா வெளியேற்றும்.

இப்போ பெட்ரோல் திரும்ப உள்ள வரும்..மறுபடியும் அதே கதை..நாம இங்க மூணு பத்தில பாத்த கதை அங்க சில வினாடிகளில் முடிந்து விடும்..தொடர்ந்து பிஸ்டன் மூவ்மெண்டும், க்ராங்க் ஷாஃப்ட் ரொட்டேஷனும் நடந்துக்கிட்டே இருக்கும். நமக்காக உள்ள அந்த ரெண்டு ஜீவன் அல்லாடறதே தெரியாம நாம ஹீரோ/ஹீரோயின் மாதிரி வண்டில பறந்துக் கிட்டே இருப்போம்!

ஸ்ட்ரோக் என்பது பிஸ்டன் மூவ்மெண்ட்டைக் குறிக்கும். பிஸ்டன் ஒரு சர்ர்கிளை முடிக்க 4 தடவை மூவ் ஆனா அது 4 ஸ்ட்ரோக் எஞ்சின்..அந்த நாலு என்னன்னா Intake Stroke (பெட்ரோல் உள்ளே-பிஸ்டன் பின்னே), Compression Stroke(பெட்ரோல் சேம்பருக்கு-பிஸ்டன் முன்னே), Combustion or Power Sroke(பெட்ரோல் எரிதல்-பிஸ்டன் பின்னே), Exhaust Stroke (புகை வெளியே-பிஸ்டன் முன்னே)


என்ன மக்களே, பாடம் புரிந்ததா?..இப்போ சந்தோஷமா?..என்னது சந்தோஷம் இல்லையா..ஏன்..ஏன்?..ஓஹோ..பழைய மங்கலான படத்தைப் போட்டதாலயா..பரவாயில்லை மக்கா, வெள்ளிக்கிழமை சகோதரிகள்லாம் கோயிலுக்குப் போய்டுவாங்க..அன்னைக்கு வாங்க, 'நானா யோசிச்சேன்’ல புது மெசி..ச்சே..புது படமாப் போடுதேன்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

 1. பின்னி பெட‌லெடுத்திட்டீங்க‌

  ReplyDelete
 2. நண்பர்களே..இங்கு இணைய இணைப்பில் கொஞ்சம் கோளாறு. எனவே எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றியோ பதிலோ சொல்ல முடியாத சூழ்நிலை. எனவே பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த டெய்லர் அக்காவிடமே கேட்டுக் கொள்ளவும். ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நம்புகிறேன்..புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
 3. @டக்கால்டி ’வடை வாங்கி’ டகால்ட்டி வால்க..வால்க!

  ReplyDelete
 4. @jothi //பின்னி பெட‌லெடுத்திட்டீங்க‌// அந்த பெடலை நான் எடுக்கலைய்யா!

  ReplyDelete
 5. தலைவா...அப்படியே ஏழு வருஷம் பின்னோக்கி கூட்டிட்டு போயிட்டீங்க...சூப்பரு..அருமையா விளக்கி இருக்கீங்க...

  ReplyDelete
 6. ’வடை வாங்கி’ டகால்ட்டி வால்க..வால்க!//

  வடை மட்டுமா?பல ஆப்புக்களும் சேர்ந்து தான் வாங்கிட்டு இருக்கேன்...வாழ்க வாழ்கன்னு கோஷம் வாங்குறவங்களுக்கு எல்லாம் என் நிலைமை தான் போல...ஹி ஹி

  ReplyDelete
 7. @டக்கால்டி//அப்படியே ஏழு வருஷம் பின்னோக்கி கூட்டிட்டு போயிட்டீங்க...// அப்போ ஏழு வருசம் முன்னாடி தான் ரதி நிர்வேதனம் பாத்தீங்களா?..சரி, சரி!

  ReplyDelete
 8. "ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு"

  "வைகோ மாதிரி பின் வாங்கும்."

  ".அட, அந்த ’உண்டாகும்’ இல்லீங்க"

  "புது மெசி..ச்சே..புது படமாப் போடுதேன்!"

  ***********************

  மெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்றாலே ஒரு கரடு முரடான படிப்பு என நினப்பவர்கள் , இதை எல்லாம் படித்தால் கொஞ்சம் மனம் மாறுவார்கள் என நினைக்கிறேன்..

  நீங்கள் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பாடம் எடுத்து இருக்கிறீர்கள்..
  இது எனக்கு தெரியும் என்றாலும் விளக்கிய விதம் எனக்கு புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது...

  அடிக்கடி இது போல எழுதவும்...
  மெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 9. அண்ணே! ஒரு டவுட்டு?
  அந்த பழைய தையல் மிசினு ரொம்ப அடி வாங்கியிருக்கும் பொல தெரியுது. எப்படி அத வச்சு காலம் ஓட்டுரறீங்க.

  ReplyDelete
 10. நம்ம மூளைக்கு ஓரளவுதான் புரியும். அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நன்றி.

  ReplyDelete
 11. பயபுள்ள கிளாஸ் எடுக்குறேன்னு ஒரு பிட்டுக்கு போயிட்டு வந்தா மாறி ஆயிடுச்சி.........ஹிஹி நண்பா இருந்தாலும் பதிவு சூப்பரு!

  ReplyDelete
 12. அடிக்கடி இது போல எழுதவும்...
  மெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//

  ஆமாமா.. கானொளியுடன் எதிர்பார்க்கிறோம்! பாடத்ததான்..

  ReplyDelete
 13. நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்!
  மேஜர் சந்திரகாந்த்தில் நாகேஷ் கூட டைலராக வருவார்!!

  ReplyDelete
 14. கலக்குங்க...கலக்குங்க...

  ReplyDelete
 15. அருமை பாஸ்! ஆனா என்ன ஒரு பழைய ரொம்ப அடிபட்ட தையல் மெஷினை வைத்து விளக்கியதில் கொஞ்சம் வருத்தமே! :-)

  ReplyDelete
 16. //ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க//
  பாரதிராஜா யூஸ் பண்ணின மெஷின் இல்ல? :-)

  ReplyDelete
 17. >>(அதை வச்சிருக்கலாம் தப்பில்லை!)..

  hi hi ஹி ஹி

  ReplyDelete
 18. எனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்

  ReplyDelete
 19. அருமையா விளக்கி இருக்கீங்க...

  ReplyDelete
 20. பள்ளி பாடப் புத்தகங்களில் எஞ்சின் செயல்படும் விதத்தைப் பற்றி படித்த போது நம்பியதே இல்லை. இத்தனை விஷயமா அவ்வளவு வேகமா நடக்கும் என்று நினைப்பதுண்டு. கடைசி வரை அது கப்சாதான் என்றே நினைத்திருந்தோம். ஆனாலும் அது உண்மை. ஹா..ஹா.. ஹா... உங்கள் பாடம் எளிதாகப் புரிகிறது. அது சரி இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சினில் என்ன நடக்கிறது?? குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் என்பது போலத் தோன்றுகிறது. [அப்புறம் அந்தப் படம், ஹி... ஹி..ஹி.. கொல்லுரீங்கலேண்ணா!!]

  ReplyDelete
 21. \\நீங்க ஒரு பைக்கோ காரோ வச்சிருப்பீங்க (அதை வச்சிருக்கலாம் தப்பில்லை!)..\\சொப்பன சுந்தரியை வச்சிருக்கிறதுதான் தப்பு, சொப்பன சுந்தரியோட காரை வச்சிருக்கலாம்னு சொல்ல வரீங்க, புரியத், புரியுது..!!

  ReplyDelete
 22. நலமா
  வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
  நம்ம பதிவு

  பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
  ///////

  ReplyDelete
 23. @பார்வையாளன் //அடிக்கடி இது போல எழுதவும்..மெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//

  முயற்சி செய்கிறேன் நண்பரே..தாங்கள் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 24. @தமிழ்வாசி - பிரகாஷ் // எப்படி அத வச்சு காலம் ஓட்டுரறீங்க.// யோவ், நான் வச்சிருக்கேன்னு யாருய்யா சொன்னாங்க?

  ReplyDelete
 25. @! சிவகுமார் ! புரியலயா பரவாயில்லை நண்பரே!

  ReplyDelete
 26. @விக்கி உலகம்//பயபுள்ள கிளாஸ் எடுக்குறேன்னு ஒரு பிட்டுக்கு போயிட்டு வந்தா மாறி ஆயிடுச்சி.// பாராட்டுக்கு நன்றி விக்கி.

  ReplyDelete
 27. @வைகை//அடிக்கடி இது போல எழுதவும்...// உங்க ஆதரவு இருக்கும்வரை இது தொடரும்!

  ReplyDelete
 28. @வைகை//அடிக்கடி இது போல எழுதவும்...// உங்க ஆதரவு இருக்கும்வரை இது தொடரும்!

  ReplyDelete
 29. @middleclassmadhavi//மேஜர் சந்திரகாந்த்தில் நாகேஷ் கூட டைலராக வருவார்!!// இப்படியா என் காலை வாரி விடறது..வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி செந்தில்னு நிறைய டெய்லருங்க உண்டு..ஆனாலும் நேத்து எனக்கு ஞாபகம் வரலையே.....

  ReplyDelete
 30. @சங்கவி//வருகைக்கு நன்றி சங்கவி.

  ReplyDelete
 31. @ஜீ... //பழைய ரொம்ப அடிபட்ட தையல் மெஷினை வைத்து விளக்கியதில் கொஞ்சம் வருத்தமே// சீக்கிரமே வருத்தம் தீர்க்கப்படும் ஜீ.

  ReplyDelete
 32. நன்றி கருன் & குமார்!

  ReplyDelete
 33. @சி.பி.செந்தில்குமார்//எனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்// தலைவரே..அந்த விஷயத்தில் உங்களுக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகம்..மாத்தீட்டேன்..திலகம்னா சும்மாவா?

  ReplyDelete
 34. @Jayadev Das//இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சினில் என்ன நடக்கிறது?? குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் என்பது போலத் தோன்றுகிறது. // இல்லை சார்..ஒரே ஸ்ட்ரோக்கில் இரு வேலைகள் முடியும்படி எஞ்சின் வடிவம் இருக்கும்! எனவே 2 ஸ்ட்ரோக்கில் 4 வேலையும் முடிந்து விடும்.

  ReplyDelete
 35. ///////ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். ///////

  கொஞ்சம் இல்லன்னே, ரொம்பவே மங்கலா தெரியுது.....

  ReplyDelete
 36. ////// செங்கோவி said...
  நண்பர்களே..இங்கு இணைய இணைப்பில் கொஞ்சம் கோளாறு. எனவே எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றியோ பதிலோ சொல்ல முடியாத சூழ்நிலை. எனவே பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த டெய்லர் அக்காவிடமே கேட்டுக் கொள்ளவும். ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நம்புகிறேன்..புரிதலுக்கு நன்றி!
  /////////

  இல்லேன்னாலும் அங்கதானே கேப்போம்......!

  ReplyDelete
 37. ///////சி.பி.செந்தில்குமார் said...
  எனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்////////

  பிரிண்ட்டு ரொம்ப பழசோ?

  ReplyDelete
 38. @பன்னிக்குட்டி ராம்சாமி//கொஞ்சம் இல்லன்னே, ரொம்பவே மங்கலா தெரியுது.// முதல்ல அந்த கர்மம் புடிச்ச கூலிங் கிளாசைக் கழட்டுங்க பாஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.