Friday, March 25, 2011

பவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்களும், இன்று கோயிலுக்குப் போகும் நல்ல ஆத்மாக்களும் இந்தப் பதிவில் உள்ள படங்களைத் தவிர்க்கவும்!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
கர கர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
கூ.. கூ..கூ..திரி திரி திரி திரி.. 
திரி திரி திரி திரி..
ஆ..!
ரெக்கார்ட்-டான்ஸ்:

நான் சின்னப்புள்ளயா இருந்தப்போ, எங்க ஊருல அடிக்கடி ரெக்கார்ட் டான்ஸ் போடுவாங்க. எங்கள் ஊர்ல சிவாஜி ரசிகர்கள் அதிகம். எனவே சிவாஜி பாட்டுக்கு ஆடினால் ஐந்து ரூபாய் நோட்டு குத்தி உற்சாகப் படுத்துவாங்க. நான் வேற சின்ன வயசுல கொழுக் மொழுக்னு இருப்பனா, அதனால என்னைத் தான் மேடைக்கு அனுப்பி ரூபாய் நோட்டைக் குத்த வைப்பார்கள். சிவாஜி ரசிகர் என்றாலும் ரூபாய் என்னவோ, கூட ஆடும் அம்மணிக்குத் தான். சிவாஜிக்கு வெறும் கை குலுக்கல் மட்டும் தான் கிடைக்கும்!

அப்படித் தான் ஒரு நாளு என் மாம்ஸ் ஒருத்தர் என்கிட்ட அஞ்சு ரூபாயைக் கொடுத்து மேடையேத்துனாரு. அந்த அம்மணி பாக்குறதுக்கு கே.ஆர்.விஜயா மாதிரி நல்லா அகலமா இருந்துச்சு. அப்பத் தானே நிறைய ரூபா குத்த ஸ்பேஸ் கிடைக்கும்!.நானும் போய் அதோட உரல் மாதிரி இருந்த கைப் பக்கம் குத்துனேன். 
திடீர்னு அந்தப் பொம்பளை என் கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளிடுச்சு. நான் அப்படியே ஷாக் ஆகி பேஸ்தடிச்சு நின்னுட்டேன்.அப்போ என் மாம்ஸ் கத்துனாரு ”மாப்ள, அஞ்சு ரூவாய்க்கு அவ்வளவு தான், இறங்கி வா!

கவிதை....கவிதை:

கவிதையைக் கற்பழிப்பு செஞ்சு எழுதாதவன் பதிவரே இல்லைன்னு....இருங்க, ஏதோ ரோலிங் ஆயிட்ட மாதிரி இருக்கே..ஆங்..கவிதையைக் கற்பனை செஞ்சு எழுதாதவன் பதிவரே இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க..அதனால என்னோட பழைய கவிதை ஒன்னு இங்கே:தெரியுங்க..கவிதைன்னாலே ஸ்க்ரோல் பண்ணி கீழே போயிடுவீங்கன்னு..அதான் இங்க வந்து பிடிச்சேன்..விட மாட்டேன்..நெஞ்சத் தொட்ட வரிகளையே படிச்சுட்டீங்க..இதைப் படிக்கக்கூடாதா:


அன்பெனும் அலைகள்

ஆர்ப்பரித்துப் பொங்கும்
அலைகடலாய் நீ.

வாழ்வெனும் சூரியன்
சுட்டெரித்துப் பொசுக்கும்
கரைமணலாய் நான்.

அன்பெனும் அலைகளாய்
எனைத் தீண்டி
அடிமனம்வரை குளிர்வித்தாய்.

அன்போடு என்னை
உள்ளிழுத்த அலைகள்
ஆவேசத்தோடு வெளித்தள்ளின.

என்னை அரவணைப்பதும்
பின்பு புறக்கணிப்பதும்
உனக்கு விளையாட்டானது.

என்னைச் சீராட்டுகின்றாயா
அல்லது சீரழிக்கின்றாயா 
என்பதே புரியாமல் போனது!பவானி ஐ.பி.எஸ்:


ஒரு வழியா சிநேகாவுக்காக இந்தப் படத்தைப் பார்த்துட்டேங்க..படம் சுமார் தான். சிநேகாவும் சிரிக்காம முறைச்சுக்கிட்டே வருது. அது தான் செம பேஜாராப் போச்சு எனக்கு. ஷாம் கூட அது நடிச்ச ’ஒரு காதல் வந்துச்சோ’ பாட்டுஃபுல்லா விரகதாபத்தை வெளிப்படுத்தி ஆடியிருக்கும். அதைப் பார்த்தா முறைக்கா, விறைக்கான்னே புரியாது..அப்படி ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கும்.

இந்தப் படத்திலயும் ஃபர்ஸ்ட் ஃபைட் சீன்ல கை முஷ்டியை முறுக்கிக்கிட்டே அடியாளைப் பார்த்து அதே மாதிரி எக்ஸ்பிரசனைக் கொடுத்துச்சு பாருங்க.  ’ஒருவேளை இது அவனை ரேப் பண்ணப் போவுதோ’ன்னு நான் பயந்தே போயிட்டேன். அந்த அடியாளும் அப்படித்தான் நினைச்சிருப்பான் போல. ஆசையா அம்மணியைப் பார்த்து ஓடி வந்தா..ஒரே மிதி..ச்சே வடை போச்சே!


எப்படி இருந்த நான்...


இப்படி ஆகிட்டேன்:
ஹேப்பி வீக் எண்ட்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

 1. Yov Officela un blog open panna kanikka papparapenu nikkuthu...ootla poyi padikkiren

  ReplyDelete
 2. @டக்கால்டி//Yov Officela un blog open panna kanikka papparapenu nikkuthu// ஹா..ஹா..டிஸ்கியைப் பாத்ததுமே க்ளோஸ் பண்ண வேண்டியது தானே..’நானா யோசிச்சா’ அப்படித்தான்.

  ReplyDelete
 3. / வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்களும்//

  எல்லா நாளும் மௌன விரதம் இருக்கும் பன்மோகன் சிங்க் கூடவா..

  ReplyDelete
 4. எங்கண்ணன் நல்லவர்தான்.. ஆனா...

  ReplyDelete
 5. மிட்நைட்ல அண்ணன் பதிவு போட்டிருக்காரு.. அதான் இப்படி.. யாரும் எதிர் பதிவு போட வேண்டாம்.. மைனஸ் ஓட்டும் போட வேண்டாம்.. ஹி ஹி

  ReplyDelete
 6. ஏதோ என்னை மாதிரி சின்ன பசங்க இந்த மாதிரி பதிவு போட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.. மன்னிச்சு விட்டுடுவாங்க.. ஆனா சீனியர் நீங்க.. இப்படி போடலாமா? ஹி ஹி ( பத்த வெச்சுட்டியே பரட்ட...)

  ReplyDelete
 7. கடைசில யாருய்யா கிழவி போட்டோவை போட்டது...சோம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல

  ReplyDelete
 8. மாப்ள இதுக்கு நீ ஏன் ++ பதிவுன்னு போடல்ல இத எதிர்த்து எல்லாத்துக்கும் தீக்குளிக்கும் சிபி திக்குளிப்பார்ன்னு சொல்லிக்கிறேன் ஹிஹி!

  ReplyDelete
 9. ஹி..ஹி...ஹி... கண்டிப்பா கருத்து சொல்லனுமா.... சீய்...நீ ரொம்ப மோசம.

  ReplyDelete
 10. என்ன தலைவா.. உங்கக்கிட்ட இருந்து இதுமாதிரி பதிவை எதிர்பார்க்கவில்லை..ஆனா பதிவு ஜூப்பரு...

  ReplyDelete
 11. \\அதனால என்னைத் தான் மேடைக்கு அனுப்பி ரூபாய் நோட்டைக் குத்த வைப்பார்கள்.\\எங்க ஊர்ல அவ்னுங்கலேதான் குத்துவானுங்க, கலைச் சேவை செய்யும் வாய்ப்பை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டங்க. ஹி...ஹி...ஹி...

  \\சீரழிக்கின்றாயா என்பதே புரியாமல் போனது!
  \\
  சீரழிக்கிறதுக்கு நீங்க என்ன சிவகாசி ஜெயலக்ஷ்மியா?

  சினேஹா, போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்காங்க....... ஹா....ஹா....ஹா....ஹா.... தமாசு.... தமாசு.....

  கோடையில குற்றால அருவி மாதிரி குளிர்ச்சியான படங்களுக்கு நன்றி. ஹி...ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 12. @! சிவகுமார் !//எல்லா நாளும் மௌன விரதம் இருக்கும் பன்மோகன் சிங்க் கூடவா..// அவர் கூடவா நம்மை பதிவைப் படிக்காரு..ச்சே..கமுக்கமா இருக்குற ஆட்களை நம்பவே கூடாதுப்பா!

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்//யாரும் எதிர் பதிவு போட வேண்டாம்.. மைனஸ் ஓட்டும் போட வேண்டாம்.. ஹி ஹி// யோவ், வீக் எண்ட்-ஐ நிம்மதியாக் கொண்டாட விட மாட்டீரா..

  ReplyDelete
 14. @டக்கால்டி//Kanika Sir...Nikkuthu Sir// ம்ம்..புரியுது..புரியுது.

  ReplyDelete
 15. @விக்கி உலகம்//மாப்ள இதுக்கு நீ ஏன் ++ பதிவுன்னு போடல்ல//..அவ்வளவு மோசமாவா இருக்கு?

  //இத எதிர்த்து எல்லாத்துக்கும் தீக்குளிக்கும் சிபி திக்குளிப்பார்ன்னு// அவரை முதல்ல குளிக்கச் சொல்லும்யா..பிறகு தீக்குளிக்கறதைப் பத்தி பேசலாம்.

  ReplyDelete
 16. @தமிழ்வாசி - Prakash//ஹி..ஹி...ஹி... கண்டிப்பா கருத்து சொல்லனுமா.// பின்னே, அணுஆயுத பரவல் தடைச் சட்டம் பத்தில்ல ஐ.நா சபைல பேசிக்கிட்டிருக்கோம்..நீங்க கருத்து சொல்லாமப் போனா எப்படி?

  ReplyDelete
 17. @!* வேடந்தாங்கல் - கருன் *!//உங்கக்கிட்ட இருந்து இதுமாதிரி பதிவை எதிர்பார்க்கவில்லை..ஆனா பதிவு ஜூப்பரு...// இவர் திட்டுதாரா..பாராட்டுதாரா..ஒன்னும் புரியலியே...

  ReplyDelete
 18. 5 ரூபாய்க்கு அவ்வளவுதானா

  ReplyDelete
 19. @Jayadev Das//கோடையில குற்றால அருவி மாதிரி குளிர்ச்சியான படங்களுக்கு நன்றி. ஹி...ஹி...ஹி...ஹி...// கே.ஆர்.விஜயா படத்துக்கும் சேர்த்துத் தானே?..உங்களுக்குப் பிடிக்குமேன்னு தான் அதைப் போட்டேன்.

  ReplyDelete
 20. @ஆர்.கே.சதீஷ்குமார்//5 ரூபாய்க்கு அவ்வளவுதானா..// அப்படித் தான் சொல்லீட்டாங்க பாஸ்.

  ReplyDelete
 21. அசின் போட்டோ அருமை ஹி...ஹி

  ReplyDelete
 22. நேத்துதான் கவர்ச்சி படத்துக்கு மன்னிப்பு கேட்டமாதிரி இருந்துச்சு...அதற்கிடையில் உன் வேலையை காட்டிட்டியே பங்காளி

  ReplyDelete
 23. @ரஹீம் கஸாலி//அதற்கிடையில் உன் வேலையை காட்டிட்டியே பங்காளி// ஹி..ஹி..

  ReplyDelete
 24. @நர்மதன் வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 25. அந்த கடேசி ஸ்டில்லு உண்மைதானுங்களா ,இல்ல மார்பிங்கா ,ம்ம்ம் அதுக்காகவே உங்க ப்ளோகில் இன.......................................ஞ்சுட்டேன்

  ReplyDelete
 26. @நா.மணிவண்ணன்//அந்த கடேசி ஸ்டில்லு உண்மைதானுங்களா ,இல்ல மார்பிங்கா// தொட்டா பாக்க முடியும்..உண்மைன்னு நம்ப வேண்டியது தான். இதுக்காகவா இணைஞ்சீங்க..அடப்பாவிகளா..(நன்றி மணி!)

  ReplyDelete
 27. நான் ரசித்து படித்தேன்/ பார்த்தேன்..

  ஆனால் இன்றைய நிலையில் நீங்கள் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே... அவற்றை எழுதலாமே என்றும் ஓர் எண்ணம் தோன்றியதை மறைக்க விரும்பவில்லை

  ReplyDelete
 28. @பார்வையாளன்//ஆனால் இன்றைய நிலையில் நீங்கள் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே// உண்மை தான் நண்பரே..ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது வெறுப்பு தான் வருகிறது..அதான்...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.