Monday, March 28, 2011

சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ஸ்பெஷல்)

வழக்கம் போல் இந்தத் தேர்தலின் போதும் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.

சோ, சுப்பிரமணியசாமி-திருமாவளவன், வைகோ போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட ஒன்றுபட்டுச் சொல்கின்ற ஒரே விஷயம் ஜெ. சசிகலாவின் பிடியில் இருக்கிறார் என்பதே. பல சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இப்போதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு தொகுதி போன்ற எல்லா விஷயங்களும் சசிகலா குரூப்பினால் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியலின் அடிப்படையான தேர்தல் செயல்பாடுகளைக் கூட சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையில் தான் ஜெ. இருக்கிறாரா? அப்படியென்றால், ஆட்சிக்கு வந்தபின் நம்மை ஆளும்போது மட்டும் சுதந்திரமான முடிவுகள் ஜெ.வால் எடுக்கப்படுமா அல்லது நம்மை ஆளப்போவதே சசிகலா தானா?

’160 பேர் லிஸ்ட் வெளியானதே தெரியாது, வைகோ வெளியேறுவார் என்பதே தெரியாது’ என்பது போன்ற பேச்சை ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காப்பவர், ஒரு மாநில முதல்வர் பதவியில் உட்காரப் போகிறவர் பேசலாமா? தேமுதிகவுடனும் கம்யூனிஸ்ட்டுகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து சசிகலா, டாக்டர் வெங்கடேஷ் போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன. யார் இவர்கள்? இவர்களுக்கும் எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் எடுப்பது தான் முடிவென்றால், ஜெ. வெறும் பொம்மை தானா?

நாம், நம்மை ஆள சசிகலா குரூப்பைத் தான் தேர்வு செய்துகொண்டிருக்கிறோமா? ஜெயலலிதாவின் பல முட்டாள்தனமான செயல்பாடுகள், அதிரடி எனப் புகழப்பட்டிருக்கின்றன. உண்மையில் அத்தகைய முடிவுகளை எடுப்பது ஜெ. தானா அல்லது சசிகலா குரூப்பா என்ற சந்தேகமே இப்போது எழுந்து உள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மத்திய-மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைஞரின் குடும்பம் தப்பித்து விடும் என்பது உண்மையே. சரி, ஜெ. ஜெயித்து காங்கிரஸுடன் ஐக்கியம் ஆனால் தற்பொழுது கர்நாடகாவில் நடைபெறும் ஜெ-சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்?
ஜெ.ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? உருப்படியான விஷயம் கலைஞரின் குடும்பத்தை உள்ளே தள்ளுவார். நமக்கு என்ன செய்வார்?

டாஸ்மாக் வியாபாரத்தை ஆரம்பித்தவரே ஜெ. தான் என்பதாலும், சரக்கு சப்ளையில் சசிகலாவின் மிடாஸ் தான் முக்கிய நிறுவனம் என்பதாலும் மது விலக்கு எதுவும் கொண்டுவரப்போவதில்லை.

இலவசங்களை அள்ளி வழங்கி மக்களைப் பிச்சைக்காரர்களாக்கும் திமுகவிற்கும் ஜெ. விற்கும் இப்போது வித்தியாசம் இல்லை என்றாகி விட்டது. 

பத்திரிக்கை சுதந்திரத்தைப் பொறுத்தவரை கலைஞர் யாருக்கும் தெரியாமல் மிரட்டுவார், சசிகலா குரூப் வெளிப்படையாகவே மிரட்டும்.

ஊழலில் கலைஞர் குடும்பத்திற்கு சசிகலா குடும்பம் கொஞ்சமும் சளைத்ததல்ல. ஏற்கனவே இரு தேர்தல்களைச் சந்தித்து கையில் உள்ள காசை எல்லாம் இழந்துள்ள நிலையில், அக்கவுண்ட் பேலன்ஸை ஏற்றுகிற வேலையே இந்த முறை நடக்கும்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெ. நேரடியான எதிரி. கலைஞர் துரோகி. ஜெ. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழின உணர்வாளர்களை கடும் துவேஷத்துடன் ஒடுக்குவது வழக்கம். ‘தமிழினத் தலைவர்’ எனத் தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கலைஞர் அதைத் தயங்கிச் செய்வார். உண்மையில் ஜெ. சென்ற முறை ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்போதும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பதன் மூலம் தான் யார் என்பதை ஜெ. உறுதி செய்கிறார்.

பொதுவாக கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள், நல்லவையாகவே இருந்தாலும் குப்பைத் தொட்டியில் வீசுவது ஜெ. வழக்கம். அந்த வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம்(இது அவருடையதல்ல என்றாலும்!) போன்றவற்றின் நிலை என்ன ஆகும்?

கலைஞரின் குடும்பத்தினர் ரியல் எஸ்டேட்டில் ஆரம்பித்து சினிமா வரை எல்லாத் தொழிலையும் கபளீகரம் செய்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு அந்தக் குடும்பங்களின் பிடியில் சிக்கி உள்ள நிலையில் அதற்கு ஒரு அணை தேவையே. ஆனால் அதற்கு மாற்று ஜெ. தான் என்பதை எம்போன்ற நடுநிலையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேறெதும் மாற்று இல்லாத நிலையிலேயே நாம் ஜெ.வை ஆதரிக்கிறோம். இருப்பினும் கொதிக்கும் கொப்பரைக்குப் பயந்து எரியும் நெருப்பில் விழுகிறோமோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது. 
இவர் ஊழல் செய்தால் அவர், அவர் ஊழல் செய்தால் இவர் என மாற்றி, மாற்றி ஓட்டுப்போட்டு இருவரையும் நலமாக வைத்திருக்கிறோம்.இந்தத் தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வாச் சாவா என்ற முடிவைத் தரப்போகும் தேர்தல். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு ஊழல் குரூப்பில் ஒன்றான ஜெ.-சசி குரூப் ஒழிவதால், நம் குடியா முழுகி விடும்? இந்தத் தேர்தலில் ‘கள்ளத் தொடர்பில் இருக்கும் காங்கிரஸையும், அதிமுகவையும் ஒருசேர நாம் தோற்கடிக்கும் சாத்தியம் நமக்கு இருக்கவே செய்கிறது. 

ஒரு ஊழல்வாதியை ஒழிக்க, இன்னொரு ஊழல்வாதிக்கு ஆவேசப்பட்டு ஆதரவளித்து,  நாம் நம் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வது அவசியம் தானா?

இவை ஒரு சாமானியனின் மனதில் எழும் சிந்தனைகளே. கலைஞர் குடும்பத்தின் மீதுள்ள ’நியாயமான’ கோபத்தில், நாம் மறுபக்கத்தைச் சரியாக எடை போடத் தவறுகிறோமோ என்ற எண்ணத்தின் தொடர்ச்சியே இந்தப் பதிவு. 

எம்மைத் தெளிவாக்கும் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

59 comments:

  1. @டக்கால்டி//No Comments....// என்ன தல, இப்படிச் சொல்லிட்டீங்க..

    ReplyDelete
  2. அ தி மு க வை விட தி மு க விற்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா என்ற பிரச்சனையை அதிகம். அடுத்த தேர்தல் வரை கருணாநிதி செயல்படும் நிலையில் இருப்பாரா என்பது பிரக்டிகல் பிரச்சனை. கருணாநிதி இல்லையேல் குடும்பம் சிதறிவிடும். தி மு க ஜெயித்தால் அது இன்னும் அசுர வளர்ச்சி அடையும். அது நல்லதல்ல. இருவருமே வராமல் இருப்பது தமிழ் நாட்டிற்கு நல்லது. அது நடக்க முடியாத பட்சத்தில், தி மு க கட்டாயம் வரக்கூடாது!

    ReplyDelete
  3. கருத்து பஞ்சம் மன்னிக்கவும் ஹிஹி!

    ReplyDelete
  4. @bandhu கலைஞருக்குப் பின் திமுக ஒருமுறை உடைந்து, பிறகு ஒட்டும் என்பது என் அனுமானம். ஜெ.தோல்வி அடைந்தால் கொடநாட்டுக்குப் போய்விடுவாரேயொழிய, நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செயல்படப் போவதில்லை,,நீங்கள் சொல்கிறபடி இருவருமே வராமல் இருப்பது நல்லது தான்..ஆனாலும் என்ன செய்வது..

    ReplyDelete
  5. @விக்கி உலகம்புரிஞ்சு போச்சு விக்கி!!!!

    ReplyDelete
  6. ஹா ஹா டைட்டில் செம கலக்கல்.. அண்னன்னா சும்மாவா?

    ReplyDelete
  7. >>ஜெ.ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? உருப்படியான விஷயம் கலைஞரின் குடும்பத்தை உள்ளே தள்ளுவார். நமக்கு என்ன செய்வார்?

    ஹா ஹா நமக்கு அதுவும் ஒரு உதவிதானே.. ஹி ஹி

    ReplyDelete
  8. >>
    எம்மைத் தெளிவாக்கும் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

    எங்கண்ணன் எல்லாமே கரெக்டாத்தான் சொல்லி இருக்கார்.. சோ நோ மாற்றுக்கருத்து

    ReplyDelete
  9. ஹூம்.. நாமெல்லாம் இண்ட்லில் 29 ஓட்டு வாங்குனாத்தான் ஹிட் ஆகுது.. அண்ணன் 16 ஓட்டு வாங்கினதும் ஹிட் ஆகிடுச்சே... என்ன மேட்டரு?

    ReplyDelete
  10. >>
    பொதுவாக கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள், நல்லவையாகவே இருந்தாலும் குப்பைத் தொட்டியில் வீசுவது ஜெ. வழக்கம்.

    ஹா ஹா உண்மைதான்.. ஆனா எப்போ அம்மா வை கோவை தூக்கி எறிஞ்சாரோ அப்பவே அவருக்கு சறுக்கல் ஆரம்பம்.. அதனால 2001ல சி எம் ஆகி ஊழல் பண்ணப்போறது கலைஞர் தான்..

    ReplyDelete
  11. போன கமெண்ட்ல 2001 என்பதை 2011 என திருத்தி வாசிக்கவும்

    ReplyDelete
  12. இலவசங்களை மக்களே இது தம் பணத்திலிருந்து தான் என்று புரிந்து கொண்டு நிராகரிக்க வேண்டும்,

    இலவசம் சொல்லாத கட்சியை ஆதரிக்கலாம் என்றால்...........?!

    ReplyDelete
  13. இருவருமே வராமல் இருப்பது நல்லது தான்...BUT?

    ReplyDelete
  14. DMK achievements in past 5 years is listed below, can anyone list what Jaya done in 2001-06,

    Part 1:

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த:
    1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோஅரிசி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு அதன்

    மூலமாக மாதந்தோறும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள்.

    2. குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா கோதுமை ரேஷன் கடைகள்

    மூலமாக வழங்கப்படுகின்றன.

    3. "மானிய விலையில் மளிகைப் பொருள்கள்''என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக

    வழங்கப்படுகின்றன.

    கூட்டுறவு கடன் தள்ளுபடி

    4. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.

    5. 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள்

    வழங்கப்பட்டுள்ளன.

    6. 2005 2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010 2011ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்;

    சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்;

    7. உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45

    உழவர் சந்தைகள் அமைப்பு;

    8. 2009 2010 ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு

    செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை

    வழங்கப்பட்டுள்ளது;

    9. கரும்பு விவசாயிகளுக்கு 2005 2006ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000

    வழங்கப்படுகிறது.

    10. மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி

    குண்டாறு இணைப்புத் திட்டம்; 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்

    திட்டம்;

    11. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294

    குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940

    குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

    இலவச கலர் டி.வி.

    12. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும்,

    சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்;

    மேலும், 2 லட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு

    வழங்கப்படுகிறது.

    13. 3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு

    இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து

    59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    14. 661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்

    வழங்கப்பட்டு உள்ளன;

    15. ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து

    12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்; 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்

    பட்டா.

    ReplyDelete
  15. Part 2:

    16. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5

    நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;

    17. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும்

    பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக்

    கட்டணங்களும் ரத்து.

    18. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின்

    படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010 2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

    19. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை

    வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில்

    திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;

    20. ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும்

    இலவச பஸ் பாஸ்; ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு

    வரை நீட்டிப்பு.

    21. தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

    22. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல்

    மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து;

    23. "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி'' கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை,

    பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

    24. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம்,

    திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக

    அரசு பொறியியல் கல்லூரிகள்.

    25. நூறாண்டு கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'' சென்னையில் அமைப்பு.

    26. நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1000

    ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    27. 4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள்

    நடத்தப்பட்டுள்ளன;

    28. அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக

    உயர்த்தப்பட்டு; 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி;

    29. ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612

    ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி;

    30. 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய்

    உதவித் தொகை;

    31. "வருமுன் காப்போம் திட்டம்'' மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே

    77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

    32. தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார

    நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால்,

    அங்கு 2005 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009 2010ல் 2 லட்சத்து 98

    ஆயிரத்து 853

    ReplyDelete
  16. Part 3:

    கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ வசதி

    33. குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு

    50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி

    வழங்கப்படுகிறது.

    34. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008ல் தொடங்கப் பட்ட பள்ளிச்

    சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம்

    ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள்

    செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

    35. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன "அவசர

    கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்''தமிழகம் முழுவதும் நடை முறை; 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்;

    36. அரசு ஊழியர்களுக்கு புதிய "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்'';

    37. "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்''; இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை

    மக்களுக்கு 667 கோடி ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

    வேலை வாய்ப்பு

    38. ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய்

    முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்;

    39. 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை

    12 தொழிற் சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

    40. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை

    வழங்கப்பட்டுள்ளது;

    41. ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள்

    வழங்கப்பட்டுள்ளன.

    42. ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 500 ரூபாய்

    என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை

    பெறுகின்றனர்.

    சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி

    43. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு

    வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய். 2006க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர்

    உறுப்பினரைக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு;

    44. 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு

    வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.

    45. 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155

    விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப் படுகின்றன.

    46. நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப்

    பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட

    அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

    ReplyDelete
  17. Part 4:

    சாலை மேம்பாடு

    47. 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப்

    பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன; 4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள்

    இருவழித்தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன;

    48. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில்

    கட்டப் பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4

    வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

    49. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

    50. அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

    51. சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு

    சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    52. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள 145 பெரியார் நினைவு

    சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச்

    சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவ புரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30

    சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

    புதிய சட்டமன்ற வளாகம்

    53. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "அண்ணா நூற்றாண்டு நினைவு

    நூலகம்'' திறப்பு;

    54. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை;

    55. 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா திட்டம்; மேம்பால

    56. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான

    "செம்மொழிப் பூங்கா''திறப்பு;

    குடிநீர் திட்டம்

    57. சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்''

    நிறைவேற்றப்பட்டு திறப்பு;

    58. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் "கடல்நீரைக்

    குடிநீராக்கும் திட்டம்;''

    59. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மெட்ரோ

    ரெயில் திட்ட'' அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;

    60. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;''630 கோடி ரூபாய்ச் செலவில், "ராமநாதபுரம்

    கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;''

    61. சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "பறக்கும் சாலைத் திட்டம்;''

    வேகமாக உருவாகி வருகிறது.

    62. மத சுதந்திரம் பேண "கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;''

    63. "மூன்றாவது காவல் ஆணையம்'' மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது

    வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை;

    64. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;

    அரசு ஊழியர்களுக்கு...

    65. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளைகள் மீண்டும்

    வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில்

    6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    66. ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில்

    ஒருநபர் குழு பரிந்துரை நடைமுறை;

    67. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம்

    ஆசிரியர்கள் பயன்.

    68. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத

    அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு

    மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை;

    குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடு

    69. 21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்''

    என்னும் புரட்சிகரமான திட்டம். மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன

    ReplyDelete
  18. /எம்மைத் தெளிவாக்கும் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!//

    எல்லாருமே கொழம்பி போய்தான் இருக்கோம். நமக்கு சோடா குடுத்து தெளிய வைக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் செஞ்சிருங்க..!!

    ReplyDelete
  19. மாற்றுக் கருத்து ஏதும் இல்லை!

    ReplyDelete
  20. சென்னையின் அடையாறு முழுவதும் திருமண மண்டபம் போல மாற்றி வளர்ப்பு மகன் கல்யாணம், கண்ணகி சிலையை பிடுங்கி எரிந்தது, சட்டசபையை அண்ணா பல்கலைகழகத்திற்கு சொந்தமான இடத்தை கபளீகாரம் செய்து அங்கே மாற்ற முயன்றது போல பல செயல்கள் எந்த லாஜிக்குமே இல்லாமல் வெறும் சசிக்கலாவுக்கு தெரிந்த ஜோசியக்கார பயல்கள் சொன்ன ஒரே காரணத்திற்க்காக ஜெ. செய்தவை, பார்ப்பவர்கள் எல்லோரும் இந்தச் செயல்களைப் பார்த்து காரித் துப்பினார்கள். இந்த லட்சணத்தில் இந்தம்மா தேசிய அளவில் பொறுப்பு வகிக்கத் தகுந்தவர் என்று எதை வைத்து ஜால்ரா சோ ராமசாமி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஜெ.வுக்கு மஞ்சள் துண்டே பரவாயில்லை என்றும், அதற்க்கப்புறம் ஐயையோ இந்தக் கொடுமைக்கு ஜெ.வே பரவாயில்லை என்று என்னும்படி தான் கேவலமாக ஆட்சி செய்கிறார்கள்.

    ReplyDelete
  21. \\ஜெ.ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? உருப்படியான விஷயம் கலைஞரின் குடும்பத்தை உள்ளே தள்ளுவார். \\ இது ஒரு பொது நடக்காது. வை.கோ. மாதிரி ஏமாந்தவர்களை உள்ளே தள்ளுவார்கள், கருணாநிதியோ ஜெ.வோ பேச்சுக்குத்தான் கைது செய்யப் படுவார்கள், ஒருபோதும் குற்றம் நிரூபிக்கப் படுதலோ, உள்ளே போவதோ நடக்கவே நடக்காது. அவர்கள் நிஜமாகவே சட்டப்படி தவறு செய்திருந்தாலும் இதே தான் நடக்கும்.

    ReplyDelete
  22. \\ஒரு ஊழல்வாதியை ஒழிக்க, இன்னொரு ஊழல்வாதிக்கு ஆவேசப்பட்டு ஆதரவளித்து, நாம் நம் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வது அவசியம் தானா?\\ ஜெ. வந்தால், கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ள ரவுடியிசம் குறையும், வெளியில் இருந்து இங்கு நுழைந்துள்ள தீய சக்திகள் வேரறுக்கப் படுவார்கள், கருணாநிதி குடும்பத்துடன் சிக்கியுள்ள கேபிள், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் பல துறைகள் விடுவிக்கப் பட்டு அவர்களின் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவு பிறக்கும்.

    ReplyDelete
  23. @சி.பி.செந்தில்குமார் //ஹூம்.. நாமெல்லாம் இண்ட்லில் 29 ஓட்டு வாங்குனாத்தான் ஹிட் ஆகுது.. அண்ணன் 16 ஓட்டு வாங்கினதும் ஹிட் ஆகிடுச்சே... என்ன மேட்டரு? // இந்தப் பதிவு ஊத்திக்கும்னு நினைச்சுத்தாண்ணே போட்டேன்..ஏன்னா அவ்வளவு குழப்பம்!..ஏன் இது ஹிட் ஆச்சுன்னே புரியலை!..அதுவும் 16 ஓட்டுல பிரபலமா..நமக்கு இதெல்லாம் புரியாதுண்ணே..பிரபல பதிவர்கள் தான் சொல்லணும்

    ReplyDelete
  24. @middleclassmadhavi //இலவசம் சொல்லாத கட்சியை ஆதரிக்கலாம் என்றால்...........?// பேசாம நீங்களே ஒரு கட்சி ஆரம்பிக்கக்கா..நாங்க அந்த அளவுக்கு வெறுத்துப் போயிருக்கோம்!

    ReplyDelete
  25. @சே.குமார் //இருவருமே வராமல் இருப்பது நல்லது தான்...// உண்மை தான்..மாற்றாக யாரும் வர முடியவில்லையே!

    ReplyDelete
  26. @Prakash ஜெ. ஆட்சியில் கட்சிக்காரங்க போலிஸ் ஸ்டேசனில் அராஜகம் பண்ண முடியாதுண்ணே..அம்மா டிபார்ட்மெண்ட்-னு பயப்படுவாங்க..அப்புறம் மழை நீர் சேகரிப்புத் திட்டம்..வேற ஒன்னும் ஞாபகம் வரலியே!

    ReplyDelete
  27. @Prakash கலைஞரின் சாதனை என்றால் மினி-பஸ் அறிமுகப்படுத்தியதும், தற்போதைய காப்பீட்டுத் திட்டமும், உழவர் சந்தையும்..உண்மையில் நல்ல திட்டங்கள் தான்.

    ReplyDelete
  28. @! சிவகுமார் ! யாரையும் பாராட்ட முடியலை..ஆதரிக்க முடியலை..ஒரே குழப்பமா இருக்கு..யாரவது நம்மைத் தெளிவாக்குவாங்கன்னு பார்த்தா, எல்லாருமே நம்ம நிலைமை தான் போல!

    ReplyDelete
  29. @தமிழ் 007 நன்றி தமிழ்..நீங்களும் நம்மளை மாதிரி தானா..ஓ.கே..ஓ.கே!

    ReplyDelete
  30. @Jayadev Das//ஜெ. வந்தால், கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ள ரவுடியிசம் குறையும், வெளியில் இருந்து இங்கு நுழைந்துள்ள தீய சக்திகள் வேரறுக்கப் படுவார்கள், கருணாநிதி குடும்பத்துடன் சிக்கியுள்ள கேபிள், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் பல துறைகள் விடுவிக்கப் பட்டு அவர்களின் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவு பிறக்கும்.// இதனால் தான் குழப்பமே..!

    ReplyDelete
  31. @Jayadev Das//ஜெ. வந்தால், கருணாநிதி கட்டவிழ்த்து விட்டுள்ள ரவுடியிசம் குறையும், வெளியில் இருந்து இங்கு நுழைந்துள்ள தீய சக்திகள் வேரறுக்கப் படுவார்கள், கருணாநிதி குடும்பத்துடன் சிக்கியுள்ள கேபிள், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் பல துறைகள் விடுவிக்கப் பட்டு அவர்களின் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவு பிறக்கும்.// Can you give any proven case of this nature, don't say it was mentioned in Dinamalar, Vikatan group etc. Without proven evidence, everything is just allegations made by opponents.

    ReplyDelete
  32. உங்கள் கருத்துக்களே எனதும்... சரியான வாதங்கள்...!

    ReplyDelete
  33. கருத்து சொல்லலாமென்றுதான் வந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் மட்டும் தலைகாட்டும்,அதுவும் தி.மு.கவின் பக்க சார்புடன் மட்டுமே பின்னூட்டமிடும் பிரகாஷ் முகமூடி போட்டுக்கொண்டு வருகிறாரா இல்லை இயற்பெயரேதானா?எப்படியோ கருத்துகளை விவாதிப்போம்.

    பட்டியல்கள் உண்மையானதாக இருந்தால் பாராட்டுக்கள் இல்லாமல் பதிவுகளில் ஏன் தி.மு.கவிற்கு எதிரான மனநிலை என்பதை விளக்குவீர்களா பிரகாஷ்?

    மேலும் பட்டியல்கள் உண்மையானதாகவே இருந்தால் இந்தியாவில் குஜராத் அல்ல தமிழகமே வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முதன்மை பெற்றதாக இருக்கும்.

    தி.மு.க வின் வளர்ச்சிக்கான அறிக்கைகள் வசீகரமாகத்தான் இருக்கின்றன.ஆனால் விளைச்சலுக்கான நெல் வீடு வந்து சேருவதில்லை என்பதை உணருங்கள் பிரகாஷ்!

    தேவை எந்தக் கட்சி என்பதல்ல.மக்களின் நலனுக்கு எது உகந்தது என்பது மட்டுமே.

    நடுநிலையோடு மக்கள் நலன் என்ற பார்வையில் மட்டுமே பின்னூட்டமிடுங்கள்.

    ReplyDelete
  34. சசிகலா தமிழகத்தின் சோனியாவா?

    இருவருமே ரிமோட் கண்ட்ரோலர்கள்.

    ReplyDelete
  35. இடம் விட்டு இடம் வேட்பாளர்கள் நிற்பதே தவறு எனக் கருதுகிறேன்.தான் வாழும் பகுதியென்ற நினைப்பிலாவது சில வளர்ச்சி திட்டங்கள் உருவாகும் சாத்தியங்கள் இருக்கும்.

    பஞ்சாயத்து தேர்தல்களை மாநில தேர்தலுக்கு நிகராக வலுப்படுத்தவும்,பிரபல படுத்துவதும் அதன் மூலம் மாநில தேர்தலுக்கு வேட்பாளர்களை உருவாக்குவது நல்லது.

    ReplyDelete
  36. கருத்து சொல்லலாம்ன்னு வந்தேன்.இங்கே பார்த்தா ஆளாளுக்கு பிரிச்சு மேஞ்சிருக்காங்க...அதனால கிளம்பறேன். வரட்டா....

    ReplyDelete
  37. @ ராஜ நடராஜன்

    மிக அருமையாக, எளிமையாக உண்மையை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள், சூப்பர்.

    ReplyDelete
  38. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9036.html ஒன்னுக்கு போகாம இருக்கலாம் - ஆனால் ஓட்டுப் போடாம இருக்கலாமா ?

    ReplyDelete
  39. @Prakash//Can you give any proven case of this nature// அவர் என்ன சொல்றாருன்னா, மிடில்கிளாஸ் மாதவன் ஒருத்தர் திமுககாரன்கிட்ட படுறபாட்டை உண்மைத்தமிழன் எழுதியிருந்தாரே..அதுவும் கருணாநிதி கட்டவிழ்த்த ரவுடியிசமாகவே சமூகத்தால் பார்க்கப்படும்!..அழகிரி தலையீட்டால் வெளியில் வந்த ரவுடிகள் லிஸ்ட் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா பிரகாஷ்..கலைஞரின் சாதனைகளாக நீங்கள் பட்டியலிட்டதில் மாற்றுக் கருத்து இல்லை!

    ReplyDelete
  40. @ராஜ நடராஜன்//எப்படியோ கருத்துகளை விவாதிப்போம்.// நல்லது..யாரோ சம்பாதிக்க, நமக்குள்ள சண்டை போடாதீங்கப்பா!..//தேவை எந்தக் கட்சி என்பதல்ல.மக்களின் நலனுக்கு எது உகந்தது என்பது மட்டுமே.// அப்படிச் சொல்லுங்க பாஸ்..அது எந்தக் கட்சின்னு தான் குழப்பமே!

    ReplyDelete
  41. @ராஜ நடராஜன் //பஞ்சாயத்து தேர்தல்களை மாநில தேர்தலுக்கு நிகராக வலுப்படுத்தவும்,பிரபல படுத்துவதும் அதன் மூலம் மாநில தேர்தலுக்கு வேட்பாளர்களை உருவாக்குவது நல்லது.// அருமையான கருத்து நண்பரே.

    ReplyDelete
  42. @ரஹீம் கஸாலி//அதனால கிளம்பறேன். வரட்டா....// ரைட்டு..பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்கே!

    ReplyDelete
  43. மோச‌ம் வேண்டுமா இல்லை ம‌கா மோச‌ம் வேண்டுமா?? அம்மா வ‌ந்துச்சுன்னா த‌மிழ் நாட்டுக்கு ஒரு க‌ம்பேனி வ‌ராது, எல்லாம் ஆந்திராவுக்கும், பெங்க‌ளூருக்கும் போகும்,..

    ReplyDelete
  44. //கலைஞர் குடும்பத்தின் மீதுள்ள ’நியாயமான’ கோபத்தில், நாம் மறுபக்கத்தைச் சரியாக எடை போடத் தவறுகிறோமோ//
    உண்மை தான் பாஸ்! ஜே. வந்தால் அது, ஆள் (கட்சி) மாற்றமே தவிர ஆட்சி (முறையில்) மாற்றம் கிடையாது
    பதிவு கலக்கல் பாஸ்!

    ReplyDelete
  45. Dear Raja Natrajan,

    I’m a regular reader of Blogs and Tamil News sites for about 3+ years and I don’t know Tamil Typing, not even trying too, that’s why whenever I want to share my views I’ doing English. Also, if I find some comments/info in tamil, I modify that (Just Edit) and share.

    Keeping this aside,

    1. All the achievements mentioned above are actual data and not election manifesto.
    2. The DMK opposition in virtual world is mainly due to Eelam Tamil issue and DMK’s alliance with Cong.
    3. Even I’m not supporting DMK on the above 2 points.
    4. DMK should be defeated by a True Tamil Party and not by any pseudo Dravidian parties or national parties which are acting on behest of Brahminical elements.
    5. Also DMK’s rule has NOT caused any major disturbance to common public, there might be few isolated incidents done by some of the party members, but this happens with all political party members.

    Many are saying Gujarat is growing fast, this is because,

    1. Highest industrialized state even before Independence days.
    2. Nearly 50% of population is economically and Socially Forward Community, not like rest of other states, where at least 85% shall be backward/SC communities.
    3. Focuses mainly on Commercial Crops (Cotton, Sugarcane etc).
    4. Most of the Population are from Business Communities/Society (Bhaniya etc) , hence they turn into entrepreneurs by default.
    5. Gujarathi businessman’s migrated to UK, US and Canada well before independence are supporting with their investments.

    A student who was getting 80%, now getting 90% is not a big thing; student who was getting 40%, now getting 80% is a big thing.

    ReplyDelete
  46. \\student who was getting 40%, now getting 80% is a big thing.\\நீங்களே சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நீங்க பத்து பக்கம் சாதனைகளைப் போட்டிருக்கீங்க. அது நிஜம்னா, இன்னமும் ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வோட்டு வாங்கும் ஈனத் தனமான வேலையை தி.மு.க செய்து வருகிறது?? ஒரு ரூபாய் அரிசியை நம்பி ஒன்னேமுக்கால் கோடி குடும்பம் நம்பியிருக்குதாம். குடும்பத்துக்கு மூணு பேருன்னு வச்சிகிட்டா கூட ஐந்து கோடி ஆச்சு, கிட்டத் தட்ட தி.மு.க வட்டம் , மாவட்டம் தவிர மற்ற எல்லோரும் போல இருக்கு. இதுதான் 80% தமிழகம் முன்னேறியதற்கு ஆதாரமா?80% தமிழகம் முன்னேறியது நிஜம்னா குஜராத் மாதிரியில்ல இருக்கணும்? ஆனா அங்கே ஓட்டு வாங்க இலவசம் இன்னமும் தேவைப் படவில்லையே, மாறாக காங்கிரஸ் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து குஜராத்தில் குடுக்கப் போயி, அவங்க போகடா, நீங்களும் உங்க இலவசமும்னு திருப்பியடிச்சாங்களே!! குஜராத்துக்கும், தமிழகத்துக்கும் நிறைய வேறுபாட்டை நீங்க சொல்லியிருக்கீங்க, ஒரு முக்கியமான வித்தியாசத்தை விட்டு விட்டீங்க, அது தமிழன் கருணாநிதி மாதிரி, அவன் பாக்கெட்டில் இருந்து நூறு ருபாயை எடுத்து, அவனுக்கே ஒரு ரூபாயை தானமா கொடுக்கும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியை நம்பிய முட்டாள், இதனால்தான் கருணாநிதியால் இங்கே குப்பை கொட்ட முடிகிறது, இந்த புத்தியுள்ள ஒருத்தன் குஜராத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாது.

    ReplyDelete
  47. @ Prakash
    நீங்க ஒரு typical DMK ஆதரவாளர் போலத்தான் கருத்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். ஒன்று நீங்கள் கட்சில் இருந்து ஆதாயம் பார்க்கும் ஆளாய் இருக்கலாம், அல்லது வேலையே செய்யாமல் சம்பளமும், கிம்பளமும் அமோகமாய்ப் பார்க்கும் அரசு ஊழியரை இருக்கலாம். உமக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான், சுயநலத்தைப் பார்க்காதீர், எல்லோருக்கும் எது நன்மையோ அதைப் பாருங்கள். பதவி, அதிகாரம், தனக்குப் பின் தன் பெண்டு பிள்ளைகளுக்குப் அதே சவுகரியம், இதற்காக மொத்தத் தமிழ் நாட்டையும் அடகு வைக்கத் தயாராய் இருக்கும் ஒரு தலைவர். இலவசம் என்ற கீழ்த்தரமான யுக்தியின் மூலம் வோட்டு வாங்குகிறார். இலவசம் யாருக்குத் தரலாம்? கண் தெரியாதவன், கை, கால் போனவர்கள், பிள்ளைகளால் கைவிடப் பட்ட முதியோர், கணவனால் கைவிடப் பட்ட பெண் ......... இப்படி ஆதரவற்ற, தன்னால் தன் தேவைகளை ஈட்ட முடியாதவர்களுக்குக் கொடுக்கலாம். அதை விடுத்து நாட்டில் அத்தனை பேருக்கும் இலவசம் எதற்கு? பிச்சை காரனைக் கூட கை கால் சரியாய் இருக்கிறதே, நீ ஏன் உழைத்துச் சாப்பிடக் கூடாதென்று கேட்கிறோமே?? மக்கள் அதை விடக் கேவலாமாகி விட்டார்களா? முதலில் மக்கள் அவர்கள் தேவைகளை அவர்களே சம்பாதிக்கும் படி செய்யுங்கள், அப்புறம் உங்கள் சாதனைகளைப் பட்டியலிடுங்கள்.

    ReplyDelete
  48. இலவசம் எங்கிருந்து வருது? சாராய விற்பனை. குடிக்கும் இளைஞன் எதிர் காலத்தில் உருப்படுவானா? குடித்துச் சாவதால் எத்தனை இளம் பெண்களின் தாளியருக்கப் படுகிறது? 80 வயதைத் தாண்டிய, மூணு பெண்டாட்டி, முப்பது பிள்ளைகள், மூந்நூறு பேரப் பிள்ளைகள் பெற்ற பெரிய மனுஷன், செய்யும் வேலையா இது? நாட்டில் ஓடும் ஆற்று மணல் எல்லாம் முப்பது அடி ஆழத்துக்கு தோண்டி பக்கத்து மாநிலத்துக்கு விற்க அனுமதித்தவர் மக்கள் நலனுக்குப் பாடு பட்டவரா? காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, உங்கள் தலைவர் என்னத்தை புடுங்கினார்? கருணாநிதி, அவர் பெண்டு பிள்ளைகள், அப்புறம் வட்டம், மாவட்டம், அவர்களது பிள்ளை குட்டிகள், இவர்கள் நலன்தான் உங்களுக்கு முக்கியம், மற்றபடி, மக்கள் கையில் திருவோடுதான் மிஞ்சும், "ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும்" இந்த கோஷத்தை உம்மைப் போன்ற அரசு ஊழியன் தன் சுய நலத்துக்காக போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தமிழ்க்காரன் போல பாவி வேறு எவனும் இருக்க மாட்டான்.

    ReplyDelete
  49. @jothi//அம்மா வ‌ந்துச்சுன்னா த‌மிழ் நாட்டுக்கு ஒரு க‌ம்பேனி வ‌ராது// கரெக்ட் ஜோதி..அந்த விஷயத்தில் திமுக பெட்டர் தான்.

    ReplyDelete
  50. @Jayadev Das//இலவசம் எங்கிருந்து வருது? சாராய விற்பனை. குடிக்கும் இளைஞன் எதிர் காலத்தில் உருப்படுவானா?// இது திமுக-வின் தவறு மட்டுமே இல்லை என்பது பதிவிலேயே வருகிறதே..திமுக ஆட்சி தொடர வேண்டிய ஆட்சி என்று நான் எண்ணவில்லை..ஆனால் அதற்கு மாற்றாக நாம் முன் வைக்கும் ஜெ. சரியான நபர்தானா என்பதே என் குழப்பம். அதற்கு பதில் யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்களே..கலைஞரைத் திட்டுறோம்..இல்லே, ஜெ.வைத் திட்டுறோம்..எப்படியோ இருவரும் மோசம்னு மட்டும் இன்னைக்கு தெளிவாயிடுச்சு. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. கடையைப் பூட்டிக்கலாமா?

    ReplyDelete
  51. ஜப்பான், அமேரிக்கா, பிரிட்டன், எல்லாமே ஜனநாயக நாடுகள்தான். அட அவ்வள ஏன், இந்தியாவில் குஜராத், கேரளம் கூட ஜனநாயகம் தான் நடக்கிறது. இங்கே ஆட்சி நன்றாக இருப்பதற்கான காரணம் என்ன? மக்கள் கேனைகள் அல்லர். தமிழர்கள் கேனைகள். இவர்கள் எப்படி கேனைகலானார்கள் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால், இங்கே நல்லாட்சி மலர வேண்டுமானால் ஒன்று இவர்கள் புத்தி தெளிய வேண்டும், அதைத் தெளிய விடாமல் கருணாநிதி மாதிரி ஆட்கள் செய்கிறார்கள், அல்லது காமராஜர் மாதிரி தன்னலமற்ற, மக்களுக்காகவே வாழும் திறமையான தலைவர் வர வேண்டும். அதுவரை தமிழகம் உருப்படப் போவதில்லை.

    ReplyDelete
  52. @Jayadev Das //அதைத் தெளிய விடாமல் கருணாநிதி மாதிரி ஆட்கள் செய்கிறார்கள், அல்லது காமராஜர் மாதிரி தன்னலமற்ற, மக்களுக்காகவே வாழும் திறமையான தலைவர் வர வேண்டும். அதுவரை தமிழகம் உருப்படப் போவதில்லை// உண்மை..உண்மை..உண்மை!

    ReplyDelete
  53. @Jeydev
    I’m neither a DMK party member nor a Govt. employee; I’m in a middle management role in one of Top 5 IT Company, so I’m not going to get any favor in supporting anybody. Just sharing my opinion based on both parties and their past record.

    If you oppose Free-bees, you should first oppose ADMK, because they are giving a laundry list of items as free when compared to DMK.

    Not all the items in DMK manifesto are free; most free-bees are given only to under privileged and economically poor families (Except Mixi/Grainder).

    Getting vote in Gujarat is not a big thing, don’t give Free-bees, just do ethnic cleansing, those people will vote you back to power.

    ReplyDelete
  54. ஒரு சாதரான வாக்காளனின் மன நிலையை எதிரொலிக்கும் பதிவு. எது எப்படியோ, காங்கிரசை கருவறுத்தால் போதும். கருணாநிதியா, ஜெயலலிதாவா என்றால், கருணாநிதி மேல். ஆனால் கொள்ளையில் இரண்டுமே சளைத்தவர்கள் அல்ல.

    என்னுடைய கணிப்புப்படி,
    தி.மு.க கூட்டணி: 130 லிருந்து 150 வரை (20 தொகுதிகள் உபயம் வை.கோ)
    அ.தி.மு.க கூட்டணி: 85 லிருந்து 105 வரை (வை.கோ.வால் ஆப்பு 20 தொகுதிகள்)

    அத்தனை இலவசங்கள் அள்ளிக்கொடுத்தும் ஏன் தி.மு.கவுக்கு சாதகமான நிலை இல்லை. உள்ளிருந்தே ஆப்படிக்கும் காங்கிரசாலா? அல்லது தனிமனித ஆதாயத்தைவிட பொதுப் பிரச்சனைகளை தமிழர்கள் கவனிக்கிறார்களா? அல்லது உள்ளுக்குள் மவுனப்ப்ரட்சி நடந்து தி.மு.க அள்ளப் போகிறதா?

    ----------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    ReplyDelete
  55. @tharuthalai //என்னுடைய கணிப்புப்படி,
    தி.மு.க கூட்டணி: 130 லிருந்து 150 வரை (20 தொகுதிகள் உபயம் வை.கோ)
    அ.தி.மு.க கூட்டணி: 85 லிருந்து 105 வரை (வை.கோ.வால் ஆப்பு 20 தொகுதிகள்)// தேர்தல் கமிசன் கெடுபிகள் தொடர்ந்தால், திமுக இன்னும் அடிவாங்கலாம் நண்பரே..தங்கள் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  56. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
    * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
    நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
    வங்கி கணக்கு
    2% * குறைந்த வட்டி விகிதம்
    * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
    * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
    *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
    நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
    அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
    உன்னிடமிருந்து.

    முறையான தொடர்பு மற்றும் உரிமம் தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரம்
    மற்ற நாடுகளுக்கு என்று நிதி உதவி.
    மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்பத்தை மூலம், கூட்டு வர்த்தக அமைக்க

    மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com

    ஐயா, எவா டிமிடிர்
    பொது இயக்குனர்
    CASHFIRM

    ReplyDelete
  57. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
    * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
    நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
    வங்கி கணக்கு
    2% * குறைந்த வட்டி விகிதம்
    * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
    * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
    *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
    நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
    அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
    உன்னிடமிருந்து.

    இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
    எல்லோரும் நிதி உதவி கொடுக்க
    மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

    மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
    சிறந்த அன்புடன்
    சர் ஜோயல் வில்லியம்ஸ்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.