Saturday, April 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_1

ஜெனிஃபர் அவனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது.

நாங்கள் மூவரும் ’ஆ’வென வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்த பலரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். திரும்பிப் பார்க்காமல் இருக்க, திருப்பரங்குன்றம் ஒன்றும் பெரிய நகரமல்ல. அங்கு உள்ளோருக்குத் தெரியும் நாங்கள் எந்தக் கல்லூரி மாணவர்கள் என!

அவன் தர்மா, எங்கள் சீனியர். ஜெனிஃபர் எங்களது காலேஜ் ஜூனியர். செம ஃபிகர் என்று நண்பர்களால் அழைக்கப்படுபவள். நான் அதை ஒத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவள் சிம்ரன் மாதிரி ஸ்லிம்மாக இருப்பாள்.

“நாம எப்படா இப்படிப் போறது” என்றேன்.

“நமக்கு அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுடா! நமக்கு விதிச்சதெல்லாம் இது தான்” என்றவாறு பழனி சுவரைக் காட்டினான்.

அங்கு ஷகீலாவின் ‘இளமை இதோ! இதோ!’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான் சிரித்தவாறே சிவாவைப் பார்த்தேன். பார்வையிலேயே அந்தப் படத்துக்குப் போவதென தீர்மானம் நிறைவேறியது. திரும்பி தியேட்டரைப் பார்த்து நடக்க ஆரம்பித்தோம். 

பழனி “டேய், மதனைக் கூட்டி வந்திடலாமா”- என்று கேட்டான்.
“அவன் வர மாட்டாண்டா. ஒருநாள் சீன் படச் சிடி பார்க்கக் கூப்பிட்டதுக்கே முகத்தைச் சுழிச்சான், அவன் தியேட்டருக்கா வரப் போறான்?” என்றான் சிவா. 

பேசியபடியே தியேட்டருக்குள் நுழைந்தோம். ஷகீலா படம் வழக்கம் போல் ‘இருக்கு..ஆனா இல்லை’ தான். பழனி தான் கடுப்பாகி விட்டான்.

“ச்சே, இனிமே இவ படத்துக்கு வரவே கூடாதுடா” என்றான்.
“போன தடவையும் இதே தான் சொன்னே” என்று நொந்து போன குரலில் சிவா பதில் சொன்னான்.
“எதுக்கு இப்படி அரைகுறையாக் காட்டணும், இதுக்கு ஒழுங்கா மூடிக்கிட்டே நடிக்கலாமே?” என்றான் பழனி.

நான் பொறுமையாக அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்:”அவ என்ன வேணும்னா அரைகுறையாக் காட்டுறா..பாவம், அவ்வளவு தான் மறைக்க முடியுது”

இனிமே ஷகீலா படத்துக்கே போவதில்லை என்று வழக்கம்போல் பிரசவ வைராக்கியத்துடன் முடிவு செய்தபடியே ஹாஸ்டலுக்குத் திரும்பினோம்.

அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம்.

அங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான். 

பழனியும் சிவாவும் அதிர்ந்தனர். 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

 1. அப்ப இன்னைக்கும் முதல் வடை எனக்கு தானா

  ReplyDelete
 2. தமிழ்மணத்தில் இனச்சுடேன்...உங்க ஓட்டை போடுங்க

  ReplyDelete
 3. @தமிழ்வாசி - Prakashநெட் திடீர்னு படுத்திடுச்சு..ஆஹா, தமிழ்மணம் போச்சோ-ன்னு நினைச்சென்..காப்பாத்திட்டீங்க..

  ReplyDelete
 4. ஏம்ப்பா...செங்கோவி.... இந்த மன்மதன் லீலைகள்ள வர்ற மன்மதன் உங்க ஊராமே...அப்படியா?

  ReplyDelete
 5. /// செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakashநெட் திடீர்னு படுத்திடுச்சு..ஆஹா, தமிழ்மணம் போச்சோ-ன்னு நினைச்சென்..காப்பாத்திட்டீங்க.///

  தோள் கொடுப்பான் நண்பன்..

  ReplyDelete
 6. //இந்த மன்மதன் லீலைகள்ள வர்ற மன்மதன் உங்க ஊராமே...அப்படியா?// மன்மதன் ஊரு மேலோகம்...அவர் சம்சாரம் பேரு கூட ரதி! கையில கரும்பெல்லாம் வச்சிருப்பாரு!

  ReplyDelete
 7. :) Good start Nanba. Waiting for the next episode.

  ReplyDelete
 8. En lifela nadantha sila coincidents ethirpaakiren...
  Mechnaical engineering rocks!!!

  ReplyDelete
 9. ஹேய் ஆராம்பமே தூக்கலா இருக்கேடா ஸ்டார்ட் மியூசிக் ஹிஹி!

  ReplyDelete
 10. >>
  அங்கு ஷகீலாவின் ‘இளமை இதோ! இதோ!’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

  அண்ணே.. ஒரு வரலாற்று உண்மையை திரித்து எழுதியதற்காக என் வன்மையான கண்டனங்கள்.. அது அண்ணி ஷகீலா நடித்த படம் இளமை இதோ! என்பதே .. ஹி ஹி

  ReplyDelete
 11. @விக்கி உலகம்//ஆராம்பமே தூக்கலா இருக்கேடா // அப்டியா?

  ReplyDelete
 12. @middleclassmadhavi//தொடருங்கள்.// சரிக்கா!

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்//அண்ணி ஷகீலா நடித்த படம் இளமை இதோ! என்பதே ..// இல்லைண்ணே, நாங்க பார்த்தது ரெண்டு ‘இதோ’ தான்..ஒருவேளை உங்க ஊருக்கு வரும்போது ஒரு இதோவை கட் பண்ணீட்டாங்களோ...

  ReplyDelete
 14. //இனிமே ஷகீலா படத்துக்கே போவதில்லை என்று வழக்கம்போல்

  "பிரசவ வைராக்கியத்துடன்" //

  அடேங்கப்பா!!

  ReplyDelete
 15. சுவாரஸ்யம்!இதெல்லாம் எழுதுவது கத்தி முனை மேல் நடப்பது போன்றது;கொஞ்சம் கவனம் தேவை!

  ReplyDelete
 16. ஹி ஹி நீங்களும் ஷகிலா ரசிகரா

  ReplyDelete
 17. தமிழ்மணம் ஓட்டு ஏழாவது என்னுது....

  ReplyDelete
 18. “நமக்கு அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுடா! நமக்கு விதிச்சதெல்லாம் இது தான்” என்றவாறு பழனி சுவரைக் காட்டினான்.

  அங்கு ஷகீலாவின் ‘இளமை இதோ! இதோ!’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான் சிரித்தவாறே சிவாவைப் பார்த்தேன். பார்வையிலேயே அந்தப் படத்துக்குப் போவதென தீர்மானம் நிறைவேறியது. திரும்பி தியேட்டரைப் பார்த்து நடக்க ஆரம்பித்தோம்.//

  ஹா..ஹா...
  இளமைக்கால கல்லூரி நாட்களின் ஞாபகங்களை இலகுவில் அழிக்க முடியாது...நினைக்க நினைக்க சுகம் தரும் நினைவுகள் அவை.
  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங் சகோ.

  ReplyDelete
 19. @! சிவகுமார் ! அடெங்கப்பாவிற்கு நன்றி சிவா!..கதையிலும் ஒரு சிவா வர்றார், கவனிச்சீங்களா..

  ReplyDelete
 20. @சென்னை பித்தன்//இதெல்லாம் எழுதுவது கத்தி முனை மேல் நடப்பது போன்றது;கொஞ்சம் கவனம் தேவை!// நீங்க சொல்றது சரி தான் சார்...ஓவ்வொரு எழுத்து எழுதும்போதும், தங்கமணி ஊர்ல இருக்குறதை ஞாபகம் வச்சுக்கணும்..கரெக்டா சார்?

  ReplyDelete
 21. @இரவு வானம்//நீங்களும் ஷகிலா ரசிகரா// இதுல ஒரு பெருமையா நைட்டு...

  ReplyDelete
 22. @நிரூபன்//அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங் சகோ.// வந்துக்கிட்டே இருக்கு சகோ!

  ReplyDelete
 23. அட கத இங்கேந்து ஆரம்பிக்குதா - அது சரி 13 - 12 படிச்சுட்டேன் - இப்ப 1 படிச்சாச்சு - இனிமே வரிசையா படிப்போம் - சரி சரி - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. @cheena (சீனா)ஐயாவின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 25. @cheena (சீனா)ஐயாவின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.