Sunday, April 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2

முந்தியது ஏனோ - என்னைச்
சுமந்ததால் தானோ - நான்
பிந்தியதும் ஏனோ - சித்தம்
கலங்கிடத் தானோ?

முடிந்தது ஏனோ - வெறுமை
புரிந்ததால் தானோ - நான்
தொடர்வதும் ஏனோ - உன் அருமை
புரிந்திடத் தானோ!


அறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம்.

அங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான். 

பழனியும் சிவாவும் அதிர்ந்தனர்...

நான் அமைதியாக நின்றிருந்தேன். எனக்கு இது புதிதில்லை. மதன் ஏற்கனவே சில முறை அழுவதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் கேட்டால் அவன் சொல்வது இல்லை. 

ஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ மாலையுடன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார்.

“நீ தான் செங்கோவியா..நிறையத் தடவை உன்னைப் பத்திச் சொல்லி இருக்கான்..அதான் பார்ப்போம்னு உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். வா, உட்கார்”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தபடியே அமர்ந்தேன். 
“மதன், நீ கடைக்குப் போய் தம்பிக்கு ஏதாவது கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பி வைத்தார்.

மதன் வெளியேறியதும் “மதனுக்கு அம்மா இல்லையா?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

“ஆமாம் தம்பி, அதுக்காகத் தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்” என்றார். நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“மதன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திடீர்னு அவன் அம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துடுச்சு. அஞ்சே நிமிசம் தான்..எல்லாம் முடிஞ்சது. கட்ந்த ரெண்டு வருசத்துல நான் ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனால் மதன் தான்..” என்றவாறே கண் கலங்கினார்.

“அவன் கேட்கிற காசெல்லாம் தர்றேன். வேணும்ங்கிற பொருளெல்லாம் வாங்கித் தர்றேன். ஆனாலும் அவனுக்கு இன்னும் அம்மா இறந்த துக்கம் தீரலை. தீராது தான். இருந்தாலும் இனிமே தானே அவன் வாழ்க்கையே ஆரம்பிக்குது. அவன் நிறையப் பேருகூடப் பழகணும், துக்கத்தை மறக்கணும்னு தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தேன். இங்க வரும்போதெல்லாம் உன் பேரைச் சொல்லிக்கிட்டிருப்பான். அதான் உன்னை வரவழைச்சேன். நீ தான் அவனுக்கு ஒத்தாசையா இருக்கணும். அவனைக் கொஞ்சம் பார்த்துக்கிடுவியா?”

என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?

நான் பிறந்த சில நிமிடங்களிலேயே தாயை இழந்தவன். (பிறகு வேறொரு நல்ல உள்ளங்களால் தத்தெடுக்கப் பட்டேன்)

தந்தையை இழந்த குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. தாயை இழந்த குடும்பம் ஆன்மாவை இழக்கிறது. ஊமைக்காயத்தின் வலி போல் வெளித்தெரியாமல், தாயை இழந்த வீட்டில் இருள் இருந்து கொண்டே உள்ளது. எல்லாவித கொண்டாட்டங்களுக்குப் பின்னாலும் வெறுமை சிரித்துக் கொண்டு நிற்கிறது.

எனக்கு மதன் மேல் அன்பு பொங்கியது.
”நான் பாத்துக்கிறேன்ப்பா” என்றேன்.

”என்னடா? என்னாச்சு? ஏண்டா அழறே?” என்று மதனை பழனியும் சிவாவும் உழுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சுய நினைவுக்கு வந்தேன்.

மதன் கண்ணீரைத் துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டே இருந்தது.

“எதுக்குடா அழறே..எங்க கிட்ட சொல்லேண்டா” என்று சிவா அதட்டினான். 
“பிரவ்வ்வ்” என்றவாறே அழுதான் மதன்.
“ப்ரவ்னா என்னடா?” என்று பழனி கேட்டான்.
”பிரவீணா” என்றான் மதன்.

நாங்கள் மூவரும் திடுக்கிட்டோம். 

பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

 1. // பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள் // :)

  ReplyDelete
 2. Interesting , it is gearing up, cant wait for the next episode. Make it alteast 3 episodes in a week.

  ReplyDelete
 3. //என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?
  // Good line, will steal it from you.

  ReplyDelete
 4. @வினையூக்கி//செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள் // :)// என்ன சிரிப்பு?

  ReplyDelete
 5. @வினையூக்கிஉங்களுக்கு அந்த உரிமை இருக்கு செல்வா!

  ReplyDelete
 6. அடுத்த தொடர் எப்போ.... ஆவலை தூண்டுரிங்களே...

  ReplyDelete
 7. செங்கோவி!நினைவுகளை எப்படிக் கொண்டு போகப்போறீங்கன்னு தெரியலை.

  கல்லூரிக் காலத்தில் ராக்கிங்க்கு அழுது புரண்டவன் தற்கொலை செய்து கொள்வேன் என்ற அளவுக்கு கோழையாக இருந்தான்.நல்ல வேளை தப்பிச்சிட்டான்.

  ReplyDelete
 8. உங்கள் சுய கதைக்கு எனது ஆறுதல்கள்.

  ReplyDelete
 9. @ராஜ நடராஜன்//நினைவுகளை எப்படிக் கொண்டு போகப்போறீங்கன்னு தெரியலை.// தெரிஞ்சா படிக்க மாட்டீங்களே!

  ReplyDelete
 10. ஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ மாலையுடன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார்.//

  பாடசாலையில், கல்லூரியில் எங்களோடு நகைச்சுவையாக, கலாய்க்கும் ஒரு சில நண்பர்களின் வீடுகளிற்குச் செல்கையில் குடும்ப வறுமை, வீட்டின் சூழ்நிலை, இப்படியான எதிர்பாராத நிகழ்வுகளைப் பார்க்கையில்,
  எப்பூடி இவர்களால் மட்டும் இவற்றையெல்லாம் மறந்து விட்டு எங்களோடு இணைந்து சிரிக்க முடியும் என்று எண்ணுவதுண்டு.

  அந்த ஒரு உணர்வை... மீண்டும் உங்கள் பதிவில் பெற்றதாய்...
  கலங்கிய விழிகளுடன் தொடர்ந்து படிக்க்கிறேன்.

  ReplyDelete
 11. என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?//

  வழமையான கல்ல்லூரிக் கலாய்ப்பு லீலைகள் இப் பாகத்தில் இல்லை. சோகம் இழையோடிக் கண்களில் நீரை வர வைக்கிறது பதிவு.

  ReplyDelete
 12. பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!//

  சோகம் இழையோடிய காட்சித் திரை, சஸ்பென்சுடன் மூடப்படுகிறது, அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்..

  மிகவும் எளிமையான நடையில், இலாவகமாக கதை சொல்வது போன்ற பாணியில் வர்ணனையினை நகர்த்திச் செல்கிறீர்கள்.

  ReplyDelete
 13. @நிரூபன்//சோகம் இழையோடிக் கண்களில் நீரை வர வைக்கிறது பதிவு.// அடுத்து வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் இந்தப் பகுதியே அடிப்படை..ஆகவேட் தான்..

  ReplyDelete
 14. @நிரூபன்//மிகவும் எளிமையான நடையில், இலாவகமாக கதை சொல்வது போன்ற பாணியில் வர்ணனையினை நகர்த்திச் செல்கிறீர்கள்.// நன்றி சகோ!

  ReplyDelete
 15. மாப்ள சோகத்தின் ஊடே பயனிக்கிரீர்.........
  தொடரும்!

  ReplyDelete
 16. ?>>>பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

  ஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி

  ReplyDelete
 17. இடுகைகள் என்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ!தொடரை எதிர்பார்க்க வைக்கிறீர்கள்!

  ReplyDelete
 18. வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

  ReplyDelete
 19. //ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?//
  மேலே படிக்க முடியாமல் ஒரு நிமிடம் நிற்க வைத்த வரி.

  ReplyDelete
 20. இந்த பிரவீனா பேர் எனக்கும் ரொம்ப கேள்விபட்ட பெயர இருக்கு தல....

  விரு விருனு போகுது தொடர்.... முதல்ல செண்டிமெண்ட், அடுத்து ஜொள்ளு + ஜாலி னு வண்டி நல்லாவே வேகம் எடுக்குது செங்கோவி அண்ணா..

  நாளைக்கு திரும்ப ஷகிலா வா??

  ReplyDelete
 21. //சி.பி.செந்தில்குமார் said... [Reply]
  ?>>>பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

  ஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி//

  கொண்டேபுடுவேன் ஓடிபோயிறு....

  ReplyDelete
 22. பிரவீணா......
  ஹி ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 23. @விக்கி உலகம் //மாப்ள சோகத்தின் ஊடே பயனிக்கிரீர்// என்ன செய்ய விக்கி..வாழ்க்கைன்னா அப்படித் தானே?

  ReplyDelete
 24. @சி.பி.செந்தில்குமார்//ஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி// என்னை ஒருநாளாவது உள்ள வச்சுப் பார்ப்போம்னு நினைக்கிறீரா..நடக்காது!

  ReplyDelete
 25. @சென்னை பித்தன்//இடுகைகள் என்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ!// பெரிசா இருந்தா படிக்க மாட்டாங்களோன்னு பயம் தான்..அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிசாப் போடுறேன் சார்!

  ReplyDelete
 26. @middleclassmadhavi //மேலே படிக்க முடியாமல் ஒரு நிமிடம் நிற்க வைத்த வரி. // நன்றி சகோதரி!

  ReplyDelete
 27. @RK நண்பன்..//நாளைக்கு திரும்ப ஷகிலா வா?? // ஆர்.கே, முத கமெண்ட்டே இப்படியா..விளங்கிரும்!

  ReplyDelete
 28. @MANO நாஞ்சில் மனோ //பிரவீணா......ஹி ஹி ஹி ஹி ஹி..... // ஒரு பெரிய மனிசன் பண்ற காரியமாண்ணே இது?

  ReplyDelete
 29. அடுத்து அடுத்து...

  அண்ணே உங்க உண்மையான பேரே செங்கோவி'யா ? #டவுட்டு

  ReplyDelete
 30. உமக்கு தாய். எனக்கு தந்தை. நமக்கு நாம். நட்புள்ளவரை இழப்பேதுமில்லை.

  ReplyDelete
 31. @ஜில்தண்ணி//அண்ணே உங்க உண்மையான பேரே செங்கோவி'யா ? // மன்மதன் லீலை எழுதறவன்கிட்ட சொந்த்ப் பேரு கேட்கலாமா? அது நல்லதா?

  ReplyDelete
 32. நல்லா இருக்குண்ணே! ஆங்காங்கே செம டச்சிங்!
  //என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்?//
  சூப்பர்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.