Friday, April 29, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_3


தூரத்தே என்னைப்
பார்க்கையில் உன் விழிகள்
விரிந்து வரவேற்கும்.
என் கவிதையினை
கேட்கையில் உன் கண்கள்
அமைதியாய் அங்கீகரிக்கும்.
விரல்கள் எதிர்பாராது
தீண்டுகையில் உன் கண்கள்
வெட்கத்தால் மின்னும்.
என்னைப் பிடிக்கவில்லையென
சொன்னபோது மட்டும்
உன் கண்கள் உன்னுடன்
ஒத்துழைக்க மறுப்பதேனோ?

முந்தைய பகுதியில் இருந்து..

”பிரவீணா” என்றான் மதன்.

நாங்கள் மூவரும் திடுக்கிட்டோம். 

பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்!

அழகானவள். அழகு என்றால் ஜொள்ளு விட வைக்கும் அழகல்ல. அது ஒரு வகையான கம்பீரம் கலந்த அழகு. ஏதோவொரு வகையில் அவளிடமிருந்து தன்னம்பிக்கை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறுமனே ’பிக்அப்-ட்ராப்’ என்று யோசிக்க முடியாத அழகு அது. அந்தப் பெண்ணிடம் மதன் மனதைப் பறி கொடுத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை தான்.

“பிரவீணாவா என்னடா சொல்றே?” என்று பழனி கேட்டான்.

”ஆமாண்டா, நான் பிரவீணாவை லவ் பண்றேன். ஆனா அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லையாண்ணே தெரியலை. ஆனா என்கூட நல்லா பாசமாப் பழகுறாடா” என்றான் மதன். 

“அட லூசுப் பயலே, கூடப் படிக்கிறவனாச்சேன்னு அவ நல்லாப் பேசியிருப்பா. அதுக்காக லவ்வுன்னா எப்படிடா?” 
"அவ என்கிட்ட தான் ரொம்ப க்ளோஸா பழகுறா. என்னை ரொம்பக் கேர் எடுத்துப் பேசுறா. அவளும் எனக்கு இல்லேன்னு ஆயிடுச்சுன்னா, நான் செத்திடுவேன்” 
மூவரும் அதிர்ந்து போனோம்.

”அப்போ, சின்சியராத் தான் லவ் பண்றயா?” என்றேன்.
“ஆமாடா, எனக்கு அவ இன்னொரு அம்மா மாதிரிடா” என்றவாறு மீண்டும் அழ ஆரம்பித்தான்.
இந்த காதல் என்ற விஷயம் மிகவும் ஆச்சரியமான ஒன்று தான். எவ்வளவு பெரிய துக்கத்தையும் மறக்கடிக்கிற வல்லமை காலத்திற்கு உண்டு. ஆனால் காலத்தை விடவும் விரைவாக நம்மை மீட்கின்ற விஷயம் காதல். வாழ்க்கையில் கடும் தோல்வியைச் சந்தித்த பலரும் உத்வேகத்துடன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள காதல் உதவுகிறது.

தாயை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மதனுக்கு, வரப்பிரசாதமாய் இந்தக் காதல் வந்தது. எனக்கும் அது நிம்மதியைத் தந்தது. இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். 

“சிவா, பிரவீணாவும் நீயும் லேப்ல ஒரே செட் தானே?” என்று கேட்டான் பழனி.
“ஆமா” என்று தயங்கியவாறே சொன்னான் சிவா.

“டேய், அப்போ இவனையே அவகிட்ட தூது அனுப்பினா என்ன?”

ஒரு வாரத்திற்கு முன்பு இது நடந்திருந்தால், நானே இதற்கு ஒத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது...

டந்த வாரம் இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ எழுப்புவது போல் இருந்தது. கண் விழித்தால், சிவா!

“என்னடா?” என்றேன்.
“நண்பா, எனக்கு அவசரமா ஒன்னுக்கு வருதுடா” என்றான் சிவா!
நான் மிரண்டு போய் “அதுக்கு என்னை என்னடா செய்யச் சொல்றே?” என்றேன்.
“இல்லைடா, மணி பண்ணெண்டு ஆகுது. பாத் ரூம் போகப் பயமா இருக்கு. துணைக்கு வாயேன்” என்றான்.

எங்கள் ஹாஸ்டலில் பாத்ரூம் எல்லா ரூம்களுக்கும் பொதுவாக, அதே வராண்டாவிலேயே இருக்கும். ஐந்து ரூம் தள்ளிப் போக வேண்டும். பிரச்சினை அது அல்ல. பேய் நடமாட்டம் உள்ளதாக வதந்தி உண்டு. ஹாஸ்டலுக்குப் புதிதாக யார் சேர்ந்தாலும் வாட்ச்மென் அதைச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.

பழனியிடம் வாட்ச்மேன் அதைச் சொன்னபோது, பதிலுக்கு “வர்றது தான் வருது, நல்ல பொம்பளைப் பேயா வரட்டும்!” என்றான்.
அதன்பிறகு அந்த வாட்ச்மேன் அவனை எங்கு பார்த்தாலும் முறைப்பார்.

னவே சிவாவை இந்தக் காரியத்தில் இறக்குவது நல்லதல்ல என்று நினைத்தேன்.

ஆனால் மதன் சிவாவை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

 1. விரல்கள் எதிர்பாராது
  தீண்டுகையில் உன் கண்கள்
  வெட்கத்தால் மின்னும்//

  ஆஹா..ஆஹா..என்ன அருமையான காதல் ரசம்...

  ReplyDelete
 2. என்னைப் பிடிக்கவில்லையென
  சொன்னபோது மட்டும்
  உன் கண்கள் உன்னுடன்
  ஒத்துழைக்க மறுப்பதேனோ?//

  பள்ளிக் காலத்தில், படிப்போரையும் உருக வைக்கும் கவிதைகள் இயல்பாகவே ஊற்றெடுக்கும் என்பதற்கு இவை தான் சாட்சி

  ReplyDelete
 3. ஆஹா.மன்மதன் லீலைகளில் திடீர் திருப்பம். காதல் கலாட்டா முடிய முதல்..திகில் கலாட்டா ஆரம்பமாகிறதே.
  அடுத்த பகுதி கொஞ்சம் திரிலிங்கா இருகும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. என்னப்பா மன்மத லீலையோட தடம் மாறுது.. இதுவும் நல்லாத்தான் இருக்கு ..

  ReplyDelete
 5. மாப்ள போயிட்டே இரு வந்துட்டே இருக்கேன் ஹிஹி!

  ReplyDelete
 6. @நிரூபன்//பள்ளிக் காலத்தில், படிப்போரையும் உருக வைக்கும் கவிதைகள் இயல்பாகவே ஊற்றெடுக்கும் என்பதற்கு இவை தான் சாட்சி// நன்றி சகோ!

  ReplyDelete
 7. @!* வேடந்தாங்கல் - கருன் *!//என்னப்பா மன்மத லீலையோட தடம் மாறுது..// சரியான ரூட் தான் இது!

  ReplyDelete
 8. @விக்கி உலகம்ஒன்னும் அவசரம் இல்லை..மெதுவா வாங்க!

  ReplyDelete
 9. >என்னைப் பிடிக்கவில்லையென
  சொன்னபோது மட்டும்
  உன் கண்கள் உன்னுடன்
  ஒத்துழைக்க மறுப்பதேனோ?

  அண்ணன் ஒரு ஃபிகருக்கு ரூட் விட்டா பரவால்ல.பலது பலானது இருக்கும் போல.. அண்ணனை அன் ஃபாலோ பண்ணிட வேண்டியதுதான்.

  ReplyDelete
 10. கவிதை நல்லாருக்குண்ணே! ஆமா இது நீங்க, நீங்களே, உங்களுக்கே எழுதினதாண்ணே? :-)

  ReplyDelete
 11. நானும் வந்துட்டேன்....

  ReplyDelete
 12. ஏய்யா? உன் கிழிந்த டைரியில் இவ்வளவு விஷயம் இருந்திருக்கேயா?

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்//பலது பலானது இருக்கும் போல..// என்ன ஒரு நல்ல சிந்தனை! வாழ்க!

  ReplyDelete
 14. @ஜீ...//ஆமா இது நீங்க, நீங்களே, உங்களுக்கே எழுதினதாண்ணே? :-)// ஆமாம் தம்பி..’நீ வருவாய் என’ பார்த்திபன் மாதிரி நானே எழுதிக் கொண்டது!

  ReplyDelete
 15. @MANO நாஞ்சில் மனோ//நானும் வந்துட்டேன்// அடேங்கப்பா..பெரிய சாதனை தான்!

  ReplyDelete
 16. @ரஹீம் கஸாலிஇன்னும் நிறைய இருக்கு கஸாலி!

  ReplyDelete
 17. காதல் என்றாலே கவிதை அருவியாக் கொட்டுமோ?!

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. பிரவீனாவைப் போல தன்னம்பிக்கையும் கம்பீரமும் கலந்த அழகியை எல்லா ஆடவர்களுக்கும் பிடிப்பதில் வியப்பில்லை. உங்கள் நாயகி பிரவீனாவை உங்கள் எழுத்தின் மூலம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. மதனுக்கு இணையாக சிவா கதாபாத்திரத்தையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 20. கவிதைக்கு நன்றி நண்பரே..!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.