Friday, April 1, 2011

ஐஸ்வர்யா ராய் உலக அழகி இல்லையா? (நானா யோசிச்சேன்)

டிஸ்கி-1: லோ-ஸ்பீட் நெட் கனெக்சன் உள்ளவர்களும் லோ-கட்/சென்டர்-கட் ஜாக்கெட் பிடிக்காத யோக்கியர்களும் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்!

டிஸ்கி-2: இது ஏப்ரல் ஃபூல் பதிவு அல்ல. தேர்தல் பிரச்சார நேரத்தில் அதற்கான தனித் தேவையும் இல்லை. எனவே இநதப் பதிவைப் படித்தால் நீங்கள் ஏமாறாமல் முழு திருப்தியுடன் செல்வீர்கள் என உறுதி அளிக்கின்றேன்!


நாடே தேர்தல் ஜூரத்துல பத்திக்கிட்டுத் திரிஞ்சாலும் ‘கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில வை’ங்கிற கதையா, நாம நம்ம வீக் எண்ட் கொண்டாட்டத்தை ஆரம்பிப்போம்...வாங்க!


நெஞ்சைத் தொட்ட வரிகள்:
ஓ ரங்கா! ஸ்ரீரங்கா!
கொப்பரத் தேங்கா!
இங்க பாருங்க நாத்தங்கா
முத்துன மாங்கா!
ஒரு கரும்பே கரும்பு திங்குதே!
பதிவர் புலம்பல்:
நான் பதிவர்கள் 14 பேருக்கு தவறாமல் ஓட்டும் கமெண்ட்டும் போடுறேன். என்னால அவ்வளவு தான் முடியுது. அவங்க அத்தனை பேரும் பதிலுக்கு ஓட்டுப் போடாதது கூடப் பரவாயில்லை. ஆனா ஒரே நாள்ல 2 பதிவு, 3 பதிவுன்னு போடறாங்க. நானோ ஒன்னு தான் போடறேன். 

அப்போ தினம் 2 ஓட்டு எக்ஸ்ட்ரா நான் போடுதேன். வருஷத்துக்கு 730 ஓட்டு சும்மா போடுதேன். ஒரு தமிழனாப் பொறந்துட்டு, இப்படி ஓசில என் ஓட்டு போகுதேன்னு நினைக்கும்போது ஒரே குஷ்டமா இருக்கு..அதனால நான் இந்தியா வரும்போது, அந்த பதிவர்கள் வூட்ல புகுந்து மிக்ஸி/கிரண்டரைத் தூக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன், ஜாக்ரதை!

ஐஸ்வர்யா ராய்:
’ஐஸ் ஒன்னும் உலக அழகி கிடையாது’ ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன் பரபரப்புப் பேச்சு-ன்னு செய்தி படிச்சதும் கொதிச்சுப் போய்ட்டேன். எவ்ளோ தைரியம் இருந்தா நம்ம ஊருக்கே வந்து நம்ம ஐஸை உலக அழகி இல்லேன்னு சொல்வான்..எங்க ஐஸூ யாரு தெரியுமா?..

தமிழனுக்கு ஒரு பொண்ணு அழகா கிரைண்டர் மாதிரி இருந்தாத் தான் பிடிக்கும். அப்பேர்ப்பட்ட தமிழனையே மயக்குன ஸ்லிம் பாடி சிண்ட்ரெல்லா எங்க ஐஸூ. எங்க சூப்பர் ஸ்டாரே ஐஸு கிடைக்காம பல வருஷம் இமயமலைல தாடியோட திரிஞ்சாரு. அப்படியாப்பட்ட அழகியை ‘ஒலக அழகி இல்லே’ன்னு எப்படிச் சொல்லலாம்? இதுக்குத் தனியா ஒரு கண்டனப் பதிவு போடுவோம்(எப்படியும் 4 படம் தேறும்)-னு முடிவு பண்ணேன். சரி, முழுசா அந்த வெள்ளைக்கார துரை என்ன சொல்லியிருக்கான்னு பார்த்தா..
போதும்..கீழ படிங்க!
‘ஐஸ் அழகி தான். ஆனால் உலக அழகி கிடையாது. என் பொண்டாடி தான் எனக்குத் தெரிஞ்ச உலக அழகி’ன்னு பேசியிருக்கான். கல்யாணம் ஆனவனா நீயி!..அட, நம்ம பய!.. அப்போ சரி. உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் குடும்பஸ்தங்க எல்லாம் இப்படிக் கூசாம புளுகித் தான் சமாளிக்காங்க போலிருக்கே! ஒரு குடும்பஸ்தன் கஷ்டம் இன்னொரு குடும்பஸ்தனுக்குத் தானே தெரியும்..அதனால அவனை மன்னிச்சு விட்டுட்டேன்..போடா போடா, பொழச்சுப் போ!

தேர்தல் களம்:
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வாக்காளர்கள் ஜாதி, மதம், பணம் பாராமல், நல்லவர்கள் யார் என்று பார்த்து வாக்களிக்கவும். இப்போதைய தேவை விழிப்புணர்வு! (அப்பாடா..பதிவுல சமூக அக்கறையை நுழைச்சாச்சு!)
ஆமா, தேவை விழிப்புணர்வு!
பழைய நினைப்பு: 
நாங்க ஊர்ல கடை வச்சிருந்தோம்..கடைக்கு பொட்டலம் போட நெறய பொஸ்தகம் வாங்கொவோம்.பெரும்பாலும் ஜூ.வி, குமுதம், ஆ.வி வாங்குவோம். அப்படி வர்ர புக்கை வாசிச்சு, வாசிச்சுத் தான் நான் எழுதப் படிக்கவே கத்துக்கிட்டேன். நானு நாலாவதோ அஞ்சாவதோ படிக்கும்போது இது நடந்துச்சு. ஒரு நாளு குமுதம் டாக்டர் பதில்கள்ல ‘மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா’ன்னு கேள்வி கேட்டிருந்தாங்க. எனக்கு மாதவிடாய் காலம்னா என்னன்னு தெரியலை.ஒருவேளை வெயில் காலமா இருக்குமோன்னு டவுட்டு! 
வாரா வாரம் இப்படி இம்சை பண்றானே!

மறுநாள் ஸ்கூலுக்குப் போயி எங்க வாத்தியார் கிட்ட கேட்டேன் :

’மாதவிடாய்க் காலம்னா என்ன சார்?’ 
அவர் பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டாரு. “ஏம்லே இதைக் கேட்கே?”ன்னாரு. 
நானும் ‘ஒரு புக்ல போட்ருந்துச்சு’ன்னேன்.
“என்ன போட்ருந்துச்சு”ன்னு மிரட்டிக் கேட்டாரு. 
நானும் வெள்ளந்தியா “மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா-ன்னு போட்ருந்துச்சு சார்”-ன்னேன். 

அவ்வளவு தாங்க..பிரம்பை எடுத்து அடி பின்ன ஆரம்பிச்சுட்டாரு. நான் அய்யோ அம்மா கத்திக்கிட்டே ’தெரியலேங்கப் போய்த்தானே கேட்டேன். ஏன் சார் அடிக்கீங்க’ன்னேன். 

அதுக்கு அவர் சொன்னாரு : “மாதவிடாய் பத்தி தெரியாததுக்காக அடிக்கலைலே..உடலுறவுன்னா என்னன்னே இப்பவே தெரிஞ்சுருக்கே..அதுக்குத்தாம்லே அடிக்கேன்”

குட் பாய்-ன் குட் பை:
சரிங்க, இந்த வீக் எண்டை நல்லா எஞ்சாய் பண்ணுங்க..திரும்ப அடுத்த பதிவில் சந்திப்போம்..இருங்க..ஏதோ ஒன்னு இன்னைக்கு குறையிற மாதிரி இருக்கே...ஒருவேளை இதா இருக்குமோ:

மறந்துட்டியா மச்சான்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. அய்..ஐஸு...அழகி ஐஸு....

  ReplyDelete
 2. மாப்ள நீர் நேரிடையா சிபியத்தான் தாக்குரீருன்னே போட்டு இருக்கலாம்யா ஹிஹி!

  அது சரி ஸ்லிம் பிகர போட்டு கட்சீல தமிழ்நாட்டுக்கு பிடிக்கும்ங்கரத்துக்காக இலவசமா இம்மாம்பெரிய கிரண்டர போட்டு புண்ணியம் தேடிக்கற போல ஹிஹி!

  ReplyDelete
 3. மாப்ள நீர் நேரிடையா சிபியத்தான் தாக்குரீருன்னே போட்டு இருக்கலாம்யா ஹிஹி!

  அது சரி ஸ்லிம் பிகர போட்டு கட்சீல தமிழ்நாட்டுக்கு பிடிக்கும்ங்கரத்துக்காக இலவசமா இம்மாம்பெரிய கிரண்டர போட்டு புண்ணியம் தேடிக்கற போல ஹிஹி!

  ReplyDelete
 4. மாப்ள நீர் நேரிடையா சிபியத்தான் தாக்குரீருன்னே போட்டு இருக்கலாம்யா ஹிஹி!

  அது சரி ஸ்லிம் பிகர போட்டு கட்சீல தமிழ்நாட்டுக்கு பிடிக்கும்ங்கரத்துக்காக இலவசமா இம்மாம்பெரிய கிரண்டர போட்டு புண்ணியம் தேடிக்கற போல ஹிஹி!

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash வெறும் அழகியா..ஒலக அழகின்னு சொல்லுங்க பிரகாஷ்!

  ReplyDelete
 6. @vishal//மாப்ள நீர் நேரிடையா சிபியத்தான் தாக்குரீருன்னே போட்டு இருக்கலாம்யா !// ஹி..ஹி!

  ReplyDelete
 7. @விக்கி உலகம்/இம்மாம்பெரிய கிரண்டர போட்டு புண்ணியம் தேடிக்கற போல ஹிஹி!// எனக்காகவா போடுறேன்..உங்களுக்காகண்ணே!

  ReplyDelete
 8. இன்னுமாடா நீங்க ஐஸை வொலக அழகின்னு சொல்றீங்க. போங்கடா போய் உறுப்பட பாருங்கடா.

  ReplyDelete
 9. “மாதவிடாய் பத்தி தெரியாததுக்காக அடிக்கலைலே..உடலுறவுன்னா என்னன்னே இப்பவே தெரிஞ்சுருக்கே..அதுக்குத்தாம்லே அடிக்கேன்”

  இதை படித்தவுடன் சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று நண்பரே ....

  ReplyDelete
 10. @MANASAALI//இன்னுமாடா நீங்க ஐஸை வொலக அழகின்னு சொல்றீங்க.// அண்ணே, பழசை மறக்கக் கூடாதுல்லண்ணே!

  ReplyDelete
 11. @அசோக் குமார் //இதை படித்தவுடன் சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று // ஹா..ஹா..நன்றி பாஸ்!

  ReplyDelete
 12. கடைசி படத்துல அம்மனி போட்ருக்கிர பனியன் ரொம்ப டைட்டா இருக்கே, வங்கும் போது தெரியாம அளவு கம்மியா வாங்கிட்டாகளோ..( இல்லை இல்லியானாவோட பனியனை இரவல் வாங்கி போட்ருக்காகளா?)

  அப்பா சமுதாயத்துக்கு தேவையா ஒரு சந்தேகத்தை கேட்டாச்சு....

  ReplyDelete
 13. //"மறந்துட்டியா மச்சான்"...//

  நமீதா.... சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம் (யாருமே சொன்னதில்ல). செங்கோவி தங்களை மறக்க முடியுமா..அந்த 'க்ளப்' சம்பவம் இருக்கே...வேணாம். அவரே சொல்லுவாரு.

  ReplyDelete
 14. @Jey //கடைசி படத்துல அம்மனி போட்ருக்கிர பனியன் ரொம்ப டைட்டா இருக்கே..// அது அவர் ஸ்கூல்ல படிக்கும்போது வாங்கியது!

  ReplyDelete
 15. @Jey//அப்பா சமுதாயத்துக்கு தேவையா ஒரு சந்தேகத்தை கேட்டாச்சு..// அப்பா சமுதாயமா?..என்னதுய்யா அது..ஓஹோ, நம்மளை மாதிரி அப்பா ஆனவங்க சமுதாயமா?

  ReplyDelete
 16. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi//இது தேவையா!// அப்படி நல்லாக் கேளுங்க பாஸ்..அப்பவாவது இந்த செங்கோவி திருந்துறானான்னு பார்ப்போம்!

  ReplyDelete
 17. @! சிவகுமார் !//அந்த 'க்ளப்' சம்பவம் இருக்கே...வேணாம். அவரே சொல்லுவாரு.// அவரே-ன்னா யாரு, நமீதாவே சொல்வாரா?

  ReplyDelete
 18. @! சிவகுமார் !யோவ், முதல்ல புரஃபைல் ஃபோட்டோவை மாத்தும்யா, தலையில கை வசுக்கிட்டு..இதைப் பாத்தா பதிவு ஊத்திக்கிச்சோ-ன்னு பயமா இருக்கு!

  ReplyDelete
 19. எங்கேயிருந்துதான் உங்களுக்கு இந்தப் படமெல்லாம் கிடைக்குதோ தெரியலையே, இதைப் போட்டு எங்களையெல்லாம் இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சா, ஏழு கொண்டலவாடா என்னை காப்பாத்துடா...
  \\என் பொண்டாடி தான் எனக்குத் தெரிஞ்ச உலக அழகி’ன்னு பேசியிருக்கான். \\ பன்னிக்கும் அதோட கேர்ள் பிரன்ட் பண்ணிதான் பிகரா தெரியும், அதுகிட்ட ஐசு படத்தா காமிச்சா, ஐய.. என்ன இது... ன்னுதான் கேட்கும். ஐஸ் அழகிதான், ஆனாலும் ஐஸை விட தீப்ஸ் [என்ன முழிக்கிறீங்க, அதாங்க நம்ம தீபிகா படுகோனே ஹி..ஹி..ஹி..] தான் கியூட் கேர்ள், இல்லியா, ஹி..ஹி..ஹி..?

  ReplyDelete
 20. \\வாக்காளர்கள் ஜாதி, மதம், பணம் பாராமல், நல்லவர்கள் யார் என்று பார்த்து வாக்களிக்கவும். \\ ஓட்டுப் போடப் போவதீங்கன்னு நேராவே சொல்லலாமே, நல்லவனுக்கு நாங்க எங்க போறது, ஹா..ஹா..ஹா..!!

  ReplyDelete
 21. \\அப்படி வர்ர புக்கை வாசிச்சு, வாசிச்சுத் தான் நான் எழுதப் படிக்கவே கத்துக்கிட்டேன்.\\ எடிசன் கூட இந்த மாதிரி புக் பைண்டிங் கடையில வேலை பார்த்து அங்கு வரும் புத்தகங்களைப் படிச்சு தான் அறிவை வளர்த்துகிட்டு இருக்கார், அது தான் பின்னல் அவர் கண்டுபிடிப்புகளுக்கு அஸ்திவாரமா இருந்திருக்கு. நீங்களும் அந்த மாதிரி ஆகியிருக்க வேண்டிய ஆள் தான், ஆனா படிச்சது குமுதம் மாதிரி புத்தங்களை ஹா.ஹா.ஹா. ஆனாலும் நீங்க படிச்சது வீண் போகவில்லை, இப்ப பாருங்க, என்னா அசத்தலான படங்களைப் போட்டு எங்க மூச்சே நின்னு போற மாதிரி பண்றீங்க!!

  ReplyDelete
 22. \\வாத்தியார் கிட்ட கேட்டேன் :’மாதவிடாய்க் காலம்னா என்ன சார்?’ \\ உங்க கதை கிட்டத் தட்ட என் கதை மாதிரியே இருக்கே, செங்கோவி, நானும் மாலை முரசுல ஒரு ஜோக் படிச்சேன். [அப்போ நான் எட்டாப்பு!!]

  ஒருத்தி: ஏய் நேத்து என் காதலர் என் நெஞ்சைத் தொடும் படி ஒரு காரியம் செய்தார்டி!!
  இன்னொருத்தி: அப்படியா, என்ன செய்தாரு?
  முதலாமாவள்: எனக்கு ஒற்று பிரா வாங்கிக் கொடுத்தார்!!
  இதுல எனக்குத் தெரியாத வார்த்தை பிரா. ஹா..ஹா..ஹா.. இதைத் தெரியாமா இன்னொருத்தன் [வயசு முப்பத்தஞ்சு இருக்கும்] கிட்டப் போய் பிரா என்றால் என்னன்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். அவ்வளவுதான் அடுத்த நாலு வருஷம் எங்க ஊர்ல என்னை ஓட்டு ஓட்டு என்று ஒட்டித் தள்ளிவிட்டார்கள். மானமே போச்சு!! [இன்னைக்கு நினைச்சாலும் வெட்கமாய் இருக்கு!!]

  ReplyDelete
 23. @Jayadev Das//பன்னிக்கும் அதோட கேர்ள் பிரன்ட் பண்ணிதான் பிகரா தெரியும்// ஆஹா..என்னா ஒரு தத்துவம்..தீப்ஸ்கிட்ட அவ்வளவு திறமை இருக்கா...பார்த்தாத் தெரியலியே..

  ReplyDelete
 24. @Jayadev Das//நீங்களும் அந்த மாதிரி ஆகியிருக்க வேண்டிய ஆள் தான்// ஏன் இப்புடி...ஐன்ஸ்டீன் பாவம் இல்லையா..

  ReplyDelete
 25. @Jayadev Das//இதுல எனக்குத் தெரியாத வார்த்தை பிரா// அதுவும் எட்டாப்பு வரைக்கும் தெரியதா..ஜீ.கே-ல ரொம்ப வீக்கா இருந்திருப்பீங்க போலிருக்கே!

  ReplyDelete
 26. ம்ம்ம் வர வர நானா யோசிச்சேன் சென்சார் போர்டுல சர்டிபிகேட் வாங்கணும்கற அளவுக்கு போகுது, என்னாச்சு நண்பா? தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
 27. நீங்கதான்....நீங்கதான். சத்தியமா நீங்களேதான்.

  ReplyDelete
 28. @இரவு வானம் //வர வர நானா யோசிச்சேன் சென்சார் போர்டுல சர்டிபிகேட் வாங்கணும்கற அளவுக்கு போகுது// அப்படியா..மசாலா ஓவராயிடுச்சா..இனி குறைத்துக் கொள்கிறேன் நைட்..தவறைச் சுட்டிக் காட்டத் தானே நண்பர்கள், மன்னிப்பு எதற்கு..அப்படியே கேட்டாலும் நாந்தானே கேட்கணும்!

  ReplyDelete
 29. @! சிவகுமார் ! நானா..அய்யயொயோ..அது என்னதுய்யா அந்த 'க்ளப்' சம்பவம்?

  ReplyDelete
 30. வெயிலுக்கு சும்மா ஜில்லுன்னு இருக்கு....ஹி...ஹி...

  ReplyDelete
 31. //வாரா வாரம் இப்படி இம்சை பண்றானே!//
  ப்ரியாம‌ணிக்கும் உங்க‌ளுக்கும் என்ன‌ங்க‌ பிர‌ச்ச‌னை.?? வாரா வார‌ம் ஏன் இப்ப‌டி அவுங்க‌ள‌ இம்சை ப‌ண்ணுறீங்க‌. இது என‌க்கு சுத்த‌மா பிடிக்க‌ல‌

  தின‌மும் அவுங்க‌ளை இம்சை ப‌ண்ணினால் ந‌ல்லா இருக்கும்)

  ReplyDelete
 32. பதிவையும் போட்டு நடிகைகளின் படத்தையும் போட்டு தாகம் தீர்த்துட்டீங்க போல...

  ReplyDelete
 33. @ரஹீம் கஸாலி ஜில்.ஜில்..ஜில்..கஸாலி மனதில்!

  ReplyDelete
 34. @jothi //தின‌மும் அவுங்க‌ளை இம்சை ப‌ண்ணினால் ந‌ல்லா இருக்கும்// டெய்லி என் வலைப்பூவை நாசம் பண்ணலான்னு ஐடியாவா..ஆசை தோசை அப்பளம் வடை!

  ReplyDelete
 35. @MANO நாஞ்சில் மனோ உங்க தாகமும் தீர்ந்துச்சுல்லே?

  ReplyDelete
 36. >>ஆனா ஒரே நாள்ல 2 பதிவு, 3 பதிவுன்னு போடறாங்க. நானோ ஒன்னு தான் போடறேன்.  அண்ணனுக்கு என்னை தாக்கலைன்னா தூக்கம் வராது போல...

  ReplyDelete
 37. @சி.பி.செந்தில்குமார் //அண்ணனுக்கு என்னை தாக்கலைன்னா தூக்கம் வராது போல...// அது எங்க உரிமைண்ணே..உரிமைண்ணே!..

  ReplyDelete
 38. //ஒரு குடும்பஸ்தன் கஷ்டம் இன்னொரு குடும்பஸ்தனுக்குத் தானே தெரியும்..அதனால அவனை மன்னிச்சு விட்டுட்டேன்..போடா போடா, பொழச்சுப் போ!//
  அண்ணன் சொன்னா சரிதான் விட்டுடலாம்! :-)
  அதுவும் நம்ம ஆன்ஜியர் தானே சொன்னது!

  ReplyDelete
 39. @ஜீ... //அதுவும் நம்ம ஆன்ஜியர் தானே சொன்னது!// இன்னும் ஆன்சியரை விடவில்லையா நீங்க..

  ReplyDelete
 40. யோவ்.. உங்க அளும்பு பெரும் அளும்பா இருக்கே.. பதிவை ரசித்தேன்...

  ReplyDelete
 41. @சாமக்கோடங்கி ஆஹா, கமெண்ட் மழை பொழிஞ்சிருக்கீங்களே..நன்றி நண்பரே!

  ReplyDelete
 42. வெறும் அழகியா..ஒலக அழகின்னு சொல்லுங்க பிரகாஷ்மாதவிடாய் பத்தி தெரியாததுக்காக அடிக்கலைலே..உடலுறவுன்னா என்னன்னே இப்பவே தெரிஞ்சுருக்கே..அதுக்குத்தாம்லே அடிக்கேன்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.