Tuesday, April 19, 2011

ரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி! (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: குழந்தைகளும் யோக்கியர்களும் இந்தப் பதிவைத் தவிர்க்கவும், முடிந்தால் பதிவுலகையே தவிர்க்கவும். நன்றி.

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
பம்ஜிக்கு பம்ஜிக்கு பம்ஜ பம்பம்ப
பம்ஜிக்கு பம்ஜிக்கு பம்ஜ பம்
பம்ஜிக்கு பம்ஜிக்கு பம்ச பம்பம்ப 
பம்ஜிக்கு பம்ஜிக்கு பம்ஜபம்

கககாகிகீகூகூ கககே குகுகுகு கேகே
கககாகிகீகூகூ கககே குகுகுகு கேகே
-(குஷ்பூவின் சிங்காரவேலனில் இருந்து..)

பதிவர் புலம்பல்:
சில ஆம்பிளைப் பதிவர்கள் ‘நீ ஏன் பொம்பளைப் படம் போடுறே’ன்னு மிரட்டுறாங்க. ஆனால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய 103 சகோதரிகள்(மூணு தான்..சும்மா பில்டப்புக்கு 100), நானா யோசிச்சேன் பகுதி நல்லா இருக்குன்னு பாராட்டி, இப்படியே தொடர்ந்து எழுதுன்னு சொல்றாங்க..ஏன் இப்படி எனக்கு எல்லாமே தலைகீழ நடக்குது..ஒருவேளை ஆம்பிளைங்க தான் பொம்பளைப் பேருல மெயில் அனுப்புறாங்களோ..ஒன்னும் புரியலியே..சரி, தங்கமணி ஊர்ல இருந்து வர்றவரைக்கும் இப்படியே தொடர்வோம்..அப்புறமா அவங்களே ‘தெளிவா’ புரியவைப்பாங்க!

ரஜினி :
வழக்கம்போல தலைவரு ‘இவர் தெரிஞ்சுதான் பேசுதாரா, இல்லே தெரியாமப் பேசிட்டாரா’ன்னு எல்லாரையும் குழம்ப வச்சிட்டாரு. ‘யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசியைக் குறைக்கணும், மக்கள் கஷ்டப்படுறாங்க’ன்னு சொல்லிப்புட்டாரு. அதுக்கு என்ன அர்த்தம்? கலைஞர் விலைவாசியைக் குறைக்கலை, திமுக ஆட்சில மக்கள் கஷ்டப்படுதாங்கன்னு தானே அர்த்தம் வருது..பண்றதையும் பண்ணிப்புட்டு, சாயந்தரமே ‘பொன்னர்-சங்கர்’ கலைஞர்கூட ஒக்காந்து பாத்திருக்காரு..என்னா ஒரு நெஞ்சழுத்தம் பாருங்க..அப்போ, சும்மா டங் ஸ்லிப் ஆகித்தான் அப்படிச் சொல்லிப்புட்டாரா? 
நல்லவேளை பொன்னர்-சங்கர் பாக்குறதுக்கு முன்ன பேட்டி எடுத்தாங்க..இல்லேன்னா படம் பார்த்த கடுப்புல என்னென்ன சொல்லி இருப்பாரோ..ஆனா அதுக்கு கலைஞரைப் பழிவாங்க, ரஜினிகிட்ட ஒரு ரகசியத் திட்டம் இருக்கு. ராணா படத்துக்கு தலைவரு தான் கதை எழுதுறாராமே..படம் ரிலீஸ் ஆகும்போது கலைஞர் மட்டும் ஆட்சில இருந்தாரு..செத்தாரு!

எனக்கென்னமோ ராணா பத்தின நியூஸ் படிக்கும்போதெல்லாம் ‘நாட்டுக்கொரு நல்லவன்’ தான் ஞாபகம் வருது. அந்தப் படம் விருதாக் குப்பை. ஆனா, குப்பையிலும் ஒரு மாணிக்கமா குஷ்பூவோட குளியல் சீன் உண்டு..அந்தப் படம் மாதிரியே பல மொழிகள்ல ராணாவை எடுக்குறதாச் சொல்றாங்க. இப்பவே நாம எதுக்கும் தயாரா இருந்துக்க வேண்டியது தான்!

ஹ..ஹ..ஹன்சிகா:
சமீபத்துல நம்ம ஹன்சிகா மன்றத்துக்குக் கிடைச்ச செய்தி நம்மளை ரொம்பவே கவலைப்பட வைக்குது. கூகுள்லயும் யூ டியூப்லயும் நிறையப்பேரு ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்..இப்படியாய்யா பண்ணுவீங்க..என்னய்யா அவசரம்..பாப்பா இப்ப தானே வந்திருக்கு..இனிமே தான் அவுட்டோர் சூட்டிங் போகணும். ஹோட்டல்ல தங்கணும்..குளிக்கணும். அப்புறம் தானே நீங்க எதிர்பார்க்குறது கிடைக்கும்..அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
பாய்ஞ்சு பிறாண்டிட்டாங்களோ!
ஹன்சி எங்க போயிடப்போகுது..மெதுவாத் தேடுங்கய்யா..பலாப்பழத்துல ஈ மொச்ச மாதிரி மொத்தமாப் போய் விழுந்தா பாப்பா பயந்துடாது..நமீதா மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி..அதனால மன்றக் கண்மணிகள் கட்டுப்பாடோட நடந்துக்கிட்டு, மன்றத்தோட மானத்தைக் காப்பாத்தணும்னு கேட்டுக்கிறேன்.

எப்படி..எப்படி:
நிறையப் பதிவருங்க கவிதையா எழுதித் தள்ளுறாங்க. நாமளும் படிச்சிட்டோ படிக்காமலோ கவிதை அருமைன்னு பின்னூட்டம் போடுறோம். இப்படி எத்தனை நாளைக்கு நாம அடுத்தவங்களையே அருமைன்னு சொல்றது..நம்மளையும் நாலு பேரு அருமை-ன்னு சொல்ல வேண்டாமா? அதனால நானா யோசிச்சு, ‘காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை எழுதுவது எப்படி’-ன்னு ஒரு பதிவு எழுதி இருக்கேன். 
வார்த்தைக்குள் அடக்க முடியாக் கவிதை நீ!
ஆனா அதுல ஒரு சிக்கல். வெள்ளிக்கிழமை எழுதுனதால பதிவு கொஞ்சம் ஏடாகூடமாயிடுச்சு. அதனால 18+ போட்டாகணும். நானோ 18+ பதிவு எழுதுனதே இல்லை(அடிங்..)..நான்லாம் எழுதலாமான்னும் தெரியலை..சரி, உங்களை நம்பி சீக்கிரமே போடுறேன். ‘வெந்நீர் வைப்பது எப்படி’ பதிவை ஹிட் ஆக்குன மாதிரி இதையும் ஆக்கிடுங்க மக்கா!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

 1. // முடிந்தால் பதிவுலகையே தவிர்க்கவும்.///

  Aga..

  ReplyDelete
 2. //எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய 103 சகோதரிகள்(மூணு தான்..சும்மா பில்டப்புக்கு 100),//

  இது தான் பதிவரசியலின் அடிப்படை தத்துவம். அய்யா செங்கோவி நீங்கள் தேறி விட்டீர்கள்..

  ReplyDelete
 3. அது ஏன் ரஜினி பெண் வேடத்தில் இருக்கும் படத்தை போட்டு இருக்கிறீர்கள்... ஆகா ... உள்குத்து..

  ReplyDelete
 4. @பாரத்... பாரதி...//இது தான் பதிவரசியலின் அடிப்படை தத்துவம். அய்யா செங்கோவி நீங்கள் தேறி விட்டீர்கள்.// எல்லாம் உங்க ஆசிர்வாதம்!

  ReplyDelete
 5. செங்கோவி...,உங்க கவிதை அருமை...

  கவிதையை பற்றி யோசிக்கும் போதே, கவிதை அருமை என பின்னூட்டம் போடுவோர் சங்கம்..

  ReplyDelete
 6. @பாரத்... பாரதி...//அது ஏன் ரஜினி பெண் வேடத்தில் இருக்கும் படத்தை போட்டு இருக்கிறீர்கள்... ஆகா ... உள்குத்து..// நானா யோசிச்சேன் பகுதியில் ஆம்பிளைப் படம் போட முடியாது..ஆனா தலைவர் படம் போட்டாகணும்...அதான் இப்படி..ஹி..ஹி!

  ReplyDelete
 7. @பாரத்... பாரதி...//கவிதையை பற்றி யோசிக்கும் போதே, கவிதை அருமை என பின்னூட்டம் போடுவோர் சங்கம்..// நீங்களுமா?

  ReplyDelete
 8. ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. எலேய் மாப்ள குசும்பு அதிகமா போச்சி! அது சரி கடைசில பகார்டி மாம்ஸ ஏன் கலாய்ச்சே!

  ReplyDelete
 11. அண்ணாத்தே..என்னம்மோ நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டிங்க...

  ReplyDelete
 12. @vanakkamradioவாழ்த்துக்கு நன்றி பாஸ்!

  ReplyDelete
 13. @விக்கி உலகம்//அது சரி கடைசில பகார்டி மாம்ஸ ஏன் கலாய்ச்சே!// அது யாருய்யா?

  ReplyDelete
 14. @தமிழ்வாசி - Prakash//என்னம்மோ நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டிங்க...// ஏன் இவரு இப்படி ஃபீல் பண்றாரு?

  ReplyDelete
 15. >>குழந்தைகளும் யோக்கியர்களும் இந்தப் பதிவைத் தவிர்க்கவும், முடிந்தால் பதிவுலகையே தவிர்க்கவும். நன்றி.

  அண்ணி ஊர்ல இல்ல போல.. அண்ணன் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு

  ReplyDelete
 16. >>எப்படி..எப்படி:
  நிறையப் பதிவருங்க கவிதையா எழுதித் தள்ளுறாங்க. நாமளும் படிச்சிட்டோ படிக்காமலோ கவிதை அருமைன்னு பின்னூட்டம் போடுறோம்.

  ஹி ஹி ஹி சவுந்தர் வருத்தப்படார்னா மைனஸ் ஓட்டு தான் ஹி ஹி

  ReplyDelete
 17. பதிவை ஹிட்டாக்கிடலாம். கவலைப்படாதீங்க சகோ

  ReplyDelete
 18. // முடிந்தால் பதிவுலகையே தவிர்க்கவும்.///

  கூடிய சீக்கிரம் நடந்தாலும் நடக்கும், அப்புறம் எதுக்கு ஹன்சிகா ஹாட்டுன்னு கஷ்ட்டபட்டு தேடறானுங்க, அதான் ஆல்ரெடி டூ பீஸ்ல நிக்கிற மாதிரி ஸ்டில்லு வந்துருச்சே, இருந்தாலும் தலைவர பத்தி நீங்களே போட்டு கொடுக்கலாமா நண்பா?

  ReplyDelete
 19. கவி-thigh அருமை.

  ---------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

  ReplyDelete
 20. அடப்பாவிகளா ... என்னதான் சொல்ல வர்ரீங்க?

  ReplyDelete
 21. அட்ரஸ் ப்ளீஸ்..தங்கமணிக்கு ஒரு அவசர தந்தி அனுப்பனும்.

  ReplyDelete
 22. \\சில ஆம்பிளைப் பதிவர்கள் ‘நீ ஏன் பொம்பளைப் படம் போடுறே’ன்னு மிரட்டுறாங்க.\\ இந்த ஊர்ப் புறங்களில் திருவிழாக்களில் கரகாட்டம் போடுவார்கள். அதில் அடிக்கும் ஜோக்குகள் எலாம் இரட்டை அர்த்தமுள்ள பச்சையான வசனங்கள். இதை ஆண் பெண் எல்லோருமே கூட்டமாக நின்று பார்ப்பார்கள். [ஒரு முறை நான் ஒரு பெண்ணின் முன்னே நின்று மறைக்கிறேன் என்று, "டேய் எனக்கு மறைக்குது கொஞ்சம் விலகி நின்னு பாரேன்டா" என்று விரட்டிய சம்பவமும் உண்டு!]. தான் ஒரு Gentleman என்று காட்டிக் கொள்ளும் பரிசுத்தமானவர்களும், "என்னப்பா இப்படி பேசுறாங்க, மோசம்பா" என்று சொல்லிக் கொண்டே பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள் போக மாட்டார்கள். ஆக ஆணோ, பெண்ணோ எல்லோருக்குமே இந்த மேட்டர் ரொம்ப பிடிச்சதுதான், அப்படியில்லாமல், யாரவது பிலிம் காட்டினால் அது போலி என்றுதான் அர்த்தம்.

  ReplyDelete
 23. \\ ‘யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசியைக் குறைக்கணும், மக்கள் கஷ்டப்படுறாங்க’ன்னு சொல்லிப்புட்டாரு.\\ இதைச் சொல்லவே தைரியம் வேண்டும். மேலும், அஜித் ஒரு விழாவில், நடிகர்களை கட்டாயப் படுத்தி விழாக்களுக்கு அழைக்கிறார்கள் என்று பேசிய போது, ரஜினி எழுந்து நின்றி கை தட்டினார், அதோடு பின்னை பத்திரிகையாளர்களிடம் பேசும் போதும் அஜித் பேசியதை தான் ஆதரிப்பதாகவும், அது உண்மை என்றும் சொன்னார். ரஜினியின் நிலை எப்படிஎன்றால் உண்மை இதுதான் என்று தேர்லிவாகத் தெரிகிறது, ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான். முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம், நாட்டில் ஊழல் மலிந்து போயுள்ளது, விலைவாசி உயர்வு உள்ளது, என்று பதவியில் இருக்கும்போதே பலமுறை மேடையில் பேசியுள்ளார், அதாவது நாட்டின் முதல் குடிமகனே இதையெல்லாம் ஒப்புக் கொள்கிறார், ஆனாலும் அவரால் பேசத்தான் முடியும் வேறொன்றும் செய்ய முடியாதே!

  ReplyDelete
 24. \\ஆனா, குப்பையிலும் ஒரு மாணிக்கமா குஷ்பூவோட குளியல் சீன் உண்டு..\\ ஆஹா... நமக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடும் உயர்ந்த கொள்கை கொண்ட செங்கோவிக்கு ஜெ!

  ReplyDelete
 25. \\டிஸ்கி: குழந்தைகளும் யோக்கியர்களும் இந்தப் பதிவைத் தவிர்க்கவும், முடிந்தால் பதிவுலகையே தவிர்க்கவும். நன்றி.\\இப்படி போட்டு எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி ஏமாற்றிய செங்கோவி ஒழிக!!

  ReplyDelete
 26. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு// உங்களை விடவா?

  ReplyDelete
 27. நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் இடம்பெற்ற குஷ்பூ குளியல் காட்சி படத்தை போடாத செங்கோவியை அகில உலக சி.பி.செந்தில்குமார் ஜொள்ளு சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 28. @ராஜி //பதிவை ஹிட்டாக்கிடலாம். கவலைப்படாதீங்க சகோ// அய்ய்ய்யோ..நீங்கள்லாம் அதைப் படிக்க்க் கூடாதுக்கா!

  ReplyDelete
 29. @இரவு வானம்உங்களை இந்தப் பதிவுல கடுமையா(!) தாக்கி எழுதி இருக்கேனே..கொஞ்சம்கூட காட்டிக்காம, ஒன்னும் தெரியாத பப்பா மாதிரிப் பேசுறீங்களே..

  ReplyDelete
 30. @tharuthalaiஉங்க பின்னூட்டம் மிக அருமை!

  ReplyDelete
 31. @!* வேடந்தாங்கல் - கருன் *! யாரு, என்ன சொல்லீட்டாங்க? ஏன் இப்படிப் பதறுதீங்க?

  ReplyDelete
 32. கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html

  ReplyDelete
 33. @அமுதா கிருஷ்ணா//அட்ரஸ் ப்ளீஸ்..தங்கமணிக்கு ஒரு அவசர தந்தி அனுப்பனும்.//ஆஹா..நிறையப் பேரு ஒரு முடிவோட்தான் இருக்காங்க போலிருக்கே..செங்கொவி, உஷாருடா..உஷாரு!

  ReplyDelete
 34. @Jayadev Das///ஆக ஆணோ, பெண்ணோ எல்லோருக்குமே இந்த மேட்டர் ரொம்ப பிடிச்சதுதான், அப்படியில்லாமல், யாரவது பிலிம் காட்டினால் அது போலி என்றுதான் அர்த்தம். // உங்களது மாரல் சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி சார்..அவரு நம்ம நண்பர் தான், உரிமையில சொன்னாரு..ரொம்பத் திட்டாதீங்க..பாவம்!!!!

  ReplyDelete
 35. @Jayadev Das//இப்படி போட்டு எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி ஏமாற்றிய செங்கோவி ஒழிக!! // என்ன சார் செய்ய, என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு பெரிசாத் தெரியிறது உங்களுக்கு ஒன்னுமில்லாத சின்ன மேட்டராத் தெரியுது!

  ReplyDelete
 36. யோவ் சொல்றதை தெளிவா சொல்லுய்யா....மப்பு கூடி போச்சா....

  ReplyDelete
 37. சிபி ரேஞ்சுக்கு படம் போட்டு நாரடிச்சாச்சி ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 38. ரஜினி கிடு கிடு'ன்னு நடுங்கி போயி கிடக்கார்ய்யா பாவம் விட்டுருங்க....

  ReplyDelete
 39. ரஜினி.... "நான் எப்ப பேசுவேன், எப்படி பேசுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா பேசக்கூடாத நேரத்துல கரெக்டா பேசிடுவேன்"

  ReplyDelete
 40. @ரஹீம் கஸாலி//நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் இடம்பெற்ற குஷ்பூ குளியல் காட்சி படத்தை போடாத செங்கோவியை// ஆபாசப் பின்னூட்டம் போட்ட கஸாலியை நான் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 41. @MANO நாஞ்சில் மனோ//மப்பு கூடி போச்சா..// அண்ணே, என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா..

  ReplyDelete
 42. @! சிவகுமார் ! சூப்பர் பஞ்ச் டயலாக் சிவா..ராணால வச்சிடலாம்!

  ReplyDelete
 43. ரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி! (நானா யோசிச்சேன்)//

  ஆகா... ஆகா.. சிங்கம் கிளம்பிடுச்சா.. கவிதை நடையில் அழகான தலைப்பு.

  ReplyDelete
 44. சில ஆம்பிளைப் பதிவர்கள் ‘நீ ஏன் பொம்பளைப் படம் போடுறே’ன்னு மிரட்டுறாங்க. ஆனால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய 103 சகோதரிகள்(மூணு தான்..சும்மா பில்டப்புக்கு 100), நானா யோசிச்சேன் பகுதி நல்லா இருக்குன்னு பாராட்டி, இப்படியே தொடர்ந்து எழுதுன்னு சொல்றாங்க..ஏன் இப்படி எனக்கு எல்லாமே தலைகீழ நடக்குது..ஒருவேளை ஆம்பிளைங்க தான் பொம்பளைப் பேருல மெயில் அனுப்புறாங்களோ..ஒன்னும் புரியலியே..சரி, தங்கமணி ஊர்ல இருந்து வர்றவரைக்கும் இப்படியே தொடர்வோம்..அப்புறமா அவங்களே ‘தெளிவா’ புரியவைப்பாங்க!//


  அவ்...........இப்பூடி டவுசர் கிளிப்பீங்க என்று எதிர்ப்பார்க்கலை...

  ReplyDelete
 45. ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்.//

  டைம்மிங் காமெடி அருமை..

  18+++ காமெடியும் கலக்கல்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.