Thursday, April 28, 2011

மலைப்பாம்புடன் பிடிபட்ட நமீதா! (நானா யோசிச்சேன்!)

டிஸ்கி: இது ஒரு நாதாரித் தனமான பதிவு. நல்ல பதிவையே படித்துப் பழக்கப்பட்ட குழந்தைங்கல்லாம் ஒன் ஸ்டெப் பேக், ப்ளீஸ்!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
உன்னை நான் லவ் பண்ணுறேன் - உன் 
தங்கச்சியை லைக் பண்ணுறேன்.-உங்க 
அக்காவை ரூட்டு விடுரேன் - உன் வீட்டு 
வேலக்காரியை ஜூட்டு விடுரேன்

உன் தம்பி கூட வருவதை தள்ளி வை
உங்க அண்ணன் கிட்ட என்னைப் பத்திச் சொல்லி வை!

- (காதல் கிறுக்கனில் இருந்து..)

பதிவர் புலம்பல்:
செங்கோவி பெயர்ப் புராணம்னு ஒரு பதிவைப் போட்டாலும் போட்டேன், எல்லாரும் உன் சொந்தப் பேரு என்ன என்னன்னு கேட்டு கொலையாக் கொன்னுட்டாங்க..ஏன் இப்படி கேட்காங்கன்னே தெரியலை..சுஜாதாவை ரங்கராஜன்னா கூப்பிடுறீங்க..பாலகுமாரனை ஸ்ரீனிவாசன்னா கூப்பிடுறீங்க..இல்லே சூப்பர் ஸ்டாரைத் தான் சிவாஜி ராவ்னு கூப்பிடுறீங்களா..அப்புறம் பதிவரை மட்டும் ஏன் சொந்தப் பேரு சொல்லித் தான் கூப்பிடுவேன்னு அடம்புடிக்கீங்க...(ரொம்ப ஓவராப் போயிட்டமோ...எதுக்கும் இறங்கிடுவோம்...)

அண்ணே/அக்கா, எதுக்குச் சொல்றேன்னா...நாங்க மூளையைக் கண்டபடி கசக்கி, யோசிச்சு புனைப்பேரு வைக்கிறது எதுக்கு..நீங்கள்லாம் அன்பாக் கூப்பிடணும்னு தானே..அப்புறமும் சொந்தப் பேரு சொல்லிக் கூப்பிட்டா, நாங்க யோஓஓஒசிச்சு புனைப்பேரு வச்சு என்ன பிரயோஜனம் சொல்லுங்க..அதனால (போதும், நிறுத்துன்னு சொல்றது கேட்குது..ரைட்டு!)

சாயிபாபா :
பாவங்க இந்த மனுசன்!(மனுசன்னு சொல்லலாமா..பக்தர்கள் யாரும் செய்வினை வச்சுடாதீங்கப்பா!). இந்த மனுசன் மண்டையைப் போட்டாலும் போட்டாரு, பதிவுலகமே அதிரிபுதிரி ஆயிடுச்சு. எப்புடிச் சாவலாம்னு உலுப்பிக் கேட்காங்க..அல்பாயுசுல (86 தான்) போயிட்டயேன்னு ஒரு பக்கம் கூப்பாடு.நடுநிலை ஆளுங்க அழவும் முடியாம திட்டவும் முடியாம ‘அவரு நல்லவரு தான்..ஆனாலும்’னு ஒரு இழுவை-ன்னு ரணகளமாயிடுச்சு. அவரே ‘ஏண்டா செத்தோம்(!)’னு கண்டிப்பா ஃபீல் பண்ணியிருப்பாரு. 

எனக்கும் பாபாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாததால எனக்கு பெருசா ஒன்னும் தோணலை..பக்கத்து வீட்டு தாத்தா டிக்கெட் வாங்குனதும் ‘சட்டு புட்டுனு ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கப்பா’னு சொல்வோமே..அது தான் தோணுச்சு!

பியா..பியா:
பியா இந்த வாரம் ”நிறைய பாய் பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? இப்பொதைக்கு கல்யாணம் பத்தி எந்தப் பிளானும் கிடையாது, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம் தான்”-ன்னு முத்தா உதிர்த்திருக்கு. இதெல்லாம் தப்பா.. நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்குறது தப்பில்லைம்மா, அந்த பாய் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல என் பேரு இல்லாதது தான்மா தப்பு!

ஆனா ஒரு விஷயத்துக்கு பியாவைப் பாராட்டி ஆகணும்..கல்யாணம் பண்ணப்புறம் நமக்கு வந்த ஞானோதயம், இப்பவே பியாவுக்கு வந்திடுச்சே! சபாஷ்!

பரிகாரம்:
’நடிகை படம் போடும்போது பாத்துப் போடுங்க.(பாத்துட்டு இல்லே..), குறிப்பா போன வாரம் போட்ட நமீதா படம் கண் கூசுற மாதிரி இருந்துச்சு’-ன்னுஇந்த வாரம் ஒரு கம்ப்ளையிண்ட் வந்திடுச்சு. படிச்சதுமே பதறிப் போயி ஏதாவது செய்யணுமே-னு எந்திரிச்சு, கிழக்கால ஓடுனேன். சுவரு! திரும்பி மேக்கால ஓடுனேன், அநியாயத்துக்கு அங்கயும் சுவரு! சரி, கூகுள் ஆண்டவர் உதவியை நாடுவோம்னு உட்கார்ந்தேன். 
நல்லவேளையா இந்தப் படம் சிக்குச்சு. அப்பாடி..தங்கத் தலைவிக்கு கூலிங் கிளாஸ் மாட்டியாச்சு..இனிமே கண்ணு கூசாதுல்ல..எப்புடி?(ஹூம்..உன்னையும் மனுசனா மதிச்சுச் சொன்னா...)

எப்பிடி இருந்த நான்...

இப்படி ஆயிட்டேன்:

நன்றி மீண்டும் சந்திப்போம்! தொடர்ந்து வாருங்கள்.(ஹலோ, இது நான் சொன்னது..மந்த்ரா பின்னாடி போயிடாதீங்க!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

55 comments:

 1. சுஜாதாவை ரங்கராஜன்னா கூப்பிடுறீங்க..பாலகுமாரனை ஸ்ரீனிவாசன்னா கூப்பிடுறீங்க..இல்லே சூப்பர் ஸ்டாரைத் தான் சிவாஜி ராவ்னு கூப்பிடுறீங்களா..அப்புறம் பதிவரை மட்டும் ஏன் சொந்தப் பேரு சொல்லித் தான் கூப்பிடுவேன்னு அடம்புடிக்கீங்க.//// good பாயிண்ட்...)

  ReplyDelete
 2. நீர் நமிதா ரசிகரோ!!!

  ReplyDelete
 3. @கந்தசாமி.//good பாயிண்ட்..// நிஜமாவா சொல்லுறீங்க?

  ReplyDelete
 4. @ராஜகோபால்//நீர் நமிதா ரசிகரோ // எவ்வளவு நாளா சிபி தலைமையில அணிவகுத்து, நமீ மன்றத்தை நடத்திக்கிட்டு வர்றோம்..இப்போ வந்து இப்படிக் கேட்கீங்களே..ஜாயிண்ட் பண்றீங்களா?..அனுமதி இலவசம்!

  ReplyDelete
 5. ஹா...ஹா...ஹா... இப்படி யோசிக்க யார் சொல்லி கொடுத்தா?

  ReplyDelete
 6. @Manthra - மந்திரப் புன்னகை என்பது இது தானா?
  @Nameetha-
  நமீதாவுக்கு ஏற்ற மலைப் பாம்பு தான்...கரு நாகம் எல்லாம் அவங்க கிட்ட வேலைக்கே ஆகாது...ஹி ஹி..

  அப்புறம் யாருயா உன்னோட உண்மையான பேரை கேட்டது? நீ பாட்டுக்கு சும்மா அடிச்சுவிடு

  ReplyDelete
 7. மலைப்பாம்புடன் பிடிபட்ட நமீதா! (நானா யோசிச்சேன்!)//

  ஏன், இம்புட்டு நாளும் என்ன கம்பியூட்டரா யோசித்தது;-))

  ReplyDelete
 8. இது ஒரு நாதாரித் தனமான பதிவு. நல்ல பதிவையே படித்துப் பழக்கப்பட்ட குழந்தைங்கல்லாம் ஒன் ஸ்டெப் பேக், ப்ளீஸ்!//

  வாசலிலையே கடி நாய் நிற்கிறது என்பதை ஓப்பினாகவே சொல்லுறீங்க. நல்ல மனசு சகோ உங்களுக்கு!

  ReplyDelete
 9. என்ன பிரயோஜனம் சொல்லுங்க..அதனால (போதும், நிறுத்துன்னு சொல்றது கேட்குது..ரைட்டு!)//

  அன்புத் தொல்லை, தாங்க முடியவில்லைப் போல இருக்கே..
  ஹி...ஹி..

  ReplyDelete
 10. இந்த வார நமீதா கண்ணைக் குத்தல.. ஹி...ஹி..
  கண்ணைப் பறிக்கிறா..

  ReplyDelete
 11. நெறைய நாலு மீனிங் மேட்டரு போடுறியே நீ என்ன வெண்ணிற ஆடை மூர்த்திக்கு நண்பனா ஹிஹி!

  ReplyDelete
 12. ஆஹா.. ஆரம்பிச்சுட்டாங்கையா...
  ஆரம்பிச்சுட்டாங்கையா...

  ReplyDelete
 13. @தமிழ்வாசி - Prakash//இப்படி யோசிக்க யார் சொல்லி கொடுத்தா?// நானா யோசிச்சேன்!

  ReplyDelete
 14. @டக்கால்டி//இப்படி யோசிக்க யார் சொல்லி கொடுத்தா?// டகால்ட்டி, பேர் கேட்டு வ்ந்த 10001 மெயிலை விடுங்க...பெயர்ப்புராணம் பதிவுல போய்ப் பாருங்க!

  ReplyDelete
 15. @நிரூபன்//வாசலிலையே கடி நாய் நிற்கிறது என்பதை ஓப்பினாகவே சொல்லுறீங்க. நல்ல மனசு சகோ உங்களுக்கு!// நல்லவங்க யாரும் பாதிக்கப் படக்கூடாதுன்னு தான்!

  ReplyDelete
 16. @விக்கி உலகம்//நெறைய நாலு மீனிங் மேட்டரு போடுறியே // அப்படி எதுவும் இல்லீங்களே..

  ReplyDelete
 17. @!* வேடந்தாங்கல் - கருன் *!வாத்யார், இதப் பதிவுன்னா மட்டும் எஸ் ஆகிடுவாரு!

  ReplyDelete
 18. @நிரூபன்//ஏன், இம்புட்டு நாளும் என்ன கம்பியூட்டரா யோசித்தது;-))// ஆரம்புத்துல இருந்தே ‘நானா யோசிச்சேன்’ தானே!

  ReplyDelete
 19. //நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்குறது தப்பில்லைம்மா, அந்த பாய் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல என் பேரு இல்லாதது தான்மா தப்பு!//
  ஆமா அண்ணி இன்னும் வரலியாண்ணே? :-)

  ReplyDelete
 20. திருந்துற மாதிரி ப்ளானே இல்லையா??

  ReplyDelete
 21. உங்க உண்மையான பேரு எனக்கு தெரியும். நீங்களே சொல்லும் வரை பிறரிடம் சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
 22. @ஜீ...//ஆமா அண்ணி இன்னும் வரலியாண்ணே? :-) //ஹி..ஹி..இல்லை!

  ReplyDelete
 23. @அமுதா கிருஷ்ணா//திருந்துற மாதிரி ப்ளானே இல்லையா?? // அதுக்கெல்லாமா ப்ளான் பண்ணுவாங்க?

  ReplyDelete
 24. @! சிவகுமார் !//உங்க உண்மையான பேரு எனக்கு தெரியும்.// ராஜபாளையத்துக்காரங்க ரொம்ப நல்லவங்கன்னும் எனக்குத் தெரியும்!

  ReplyDelete
 25. புனைப்பெயருக்குள் இருப்பது தான் வசதி.. !!!

  ReplyDelete
 26. பாவம்யா அந்த பாம்பு.. இப்பிடி சிக்கி சின்னாபின்னப்படுதே?

  ReplyDelete
 27. நமீதா, காலேஜ் படிக்கும் போது [நிஜமா படிச்சாங்கலாமுங்க....!!] ஹீரோ ஹோண்டா பைக் ஓட்டுவாராம், கேங் லீடராம் [அதாவது, நாலஞ்சு பொம்பிளை பிள்ளகைளைக் கொண்ட கேங்கு!! பசங்களைக் கலைப்பது, எதாச்சும் எசக்கு பிசாக்காக பண்ண நினைத்தால் மூஞ்ச மேலே கொடுப்பது ... குத்துங்க, வேறெதுவும் நினைக்காதீங்க], ரொம்ப தைரியசாலியாம் என்றெல்லாம் கேள்விப் பட்டேன், இப்போ நம்பிட்டேன். [ பாம்பு படத்தை பாக்கும்போதே நடுங்குதே...].

  எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்..

  ஆனா என்ன இப்போ, நம்மாளுங்க இதை விட பெரிசா பண்ணி சைசுல அவிட நாட்டுக் காரி ஒருத்தியையே கவர்ச்சிப் பன்னி... சாரி கவர்ச்சிக் கன்னியாக்கி வச்சிருக்காங்களே!!

  ReplyDelete
 28. எப்படி இருந்த ஆளு இப்படி ஆயிட்டாரே?

  ReplyDelete
 29. அந்த மந்தரா படத்த பாத்துட்டு அதுக்கு பின்னாடி வேற போகனுமாக்கும்.....? இதெல்லாம் ஓவர் ஆமா...!

  ReplyDelete
 30. மலைப்பாம்பை தாங்குமா?

  ReplyDelete
 31. ஏம்பா ஒரு அம்மா சி.பி. பிளாக்குல யாரையோ தேடிகிட்டு இருக்காங்கப்பா, உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பன்னுங்கலேன்ப்பா!!

  \\திருமதி.பன்னிக்குட்டி said...

  அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.......

  April 28, 2011 11:02 AM\\

  http://adrasaka.blogspot.com/2011/04/vs_28.html

  ReplyDelete
 32. எப்பிடி இருந்தா நான் இப்பிடி ஆகிட்டேன் ஹா ஹா ஹா ஹா சூப்பர்....

  ReplyDelete
 33. பாவம்
  நா பாம்ப சொன்னேன்

  சந்தைக்கு புதுசு...


  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html

  ReplyDelete
 34. @middleclassmadhavi//புனைப்பெயருக்குள் இருப்பது தான் வசதி.. !!! // ஆமாக்கா, நீங்களும் நம்ம கட்சில்ல..

  ReplyDelete
 35. @வைகை//பாவம்யா அந்த பாம்பு// உங்க இரக்க மனதை பாராட்டுறேன் வைகை!

  ReplyDelete
 36. @Jayadev Dasசரோஜா தேவில இருந்து நமீதா வரைக்கும் டீடெய்ல்ஸை அள்ளி விடுறீங்களே..பெரிய ஆளு சார் நீங்க!

  ReplyDelete
 37. @பன்னிக்குட்டி ராம்சாமி//எப்படி இருந்த ஆளு இப்படி ஆயிட்டாரே?// இது என்னையா..மந்த்ராவையா? உங்களைக் காணோம்னு பதிவுலகே வலிவீசி தேடிக்கிட்டிருக்கு..எங்கய்யா போய்ட்டீங்க?

  ReplyDelete
 38. @ரஹீம் கஸாலிஅதான் தாங்கிடுச்சே..பாம்பு தாங்குமான்னு தெரியலை!

  ReplyDelete
 39. @MANO நாஞ்சில் மனோஉங்களுக்கு உங்க சைஸ்ல இருந்தாத் தான் பிடிக்குமோ?

  ReplyDelete
 40. @Speed Master//பாவம் நா பாம்ப சொன்னேன்// அக்கறைக்கு நன்றி மாஸ்டர்!

  ReplyDelete
 41. நான்தான் தெரியாத்தனமா என் உண்மைப் பெயரைச் சொல்லி விட்டேனோ?பரவாயில்லை;நான் உங்க அளவுக்கெல்லாம் பாப்புலர் இல்லை!no problem!

  ReplyDelete
 42. @சென்னை பித்தன்உங்களை மாதிரி நல்லவங்க சொல்லலாம் சார்..

  ReplyDelete
 43. சகோ, புதிய இடுகைகள் ஏதாவது கிடைக்குமா?

  ReplyDelete
 44. >>இது ஒரு நாதாரித் தனமான பதிவு. நல்ல பதிவையே படித்துப் பழக்கப்பட்ட குழந்தைங்கல்லாம் ஒன் ஸ்டெப் பேக், ப்ளீஸ்!


  hi hi ஹி ஹி அப்போ நான் உள்ளே வரவேணாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 45. ச்சே ச்சே அண்ணனை இத்தனை நாளா நல்லவர்னு நினைச்சு ஏமாந்துட்டேன் ஹி ஹி

  ReplyDelete
 46. @நிரூபன்//சகோ, புதிய இடுகைகள் ஏதாவது கிடைக்குமா?// கொஞ்சம் பிஸி..ஹி..ஹி!

  ReplyDelete
 47. @சி.பி.செந்தில்குமார்17 வயசுப் பொண்ணுக்கு அப்பா குழந்தையா?..உம்ம அட்டகாசம் தாங்கலியே..

  ReplyDelete
 48. ஏதாவது செய்யணுமே-னு எந்திரிச்சு, கிழக்கால ஓடுனேன். சுவரு! திரும்பி மேக்கால ஓடுனேன், அநியாயத்துக்கு அங்கயும் சுவரு! சரி, கூகுள் ஆண்டவர் உதவியை நாடுவோம்னு உட்கார்ந்தேன்//
  ஹஹஹ சூப்பர்

  ReplyDelete
 49. நமீதா வெச்சு ! சூப்பர் பதிவு

  ReplyDelete
 50. @ஆர்.கே.சதீஷ்குமார்ஹா..ஹா..பாராட்டுக்குநன்றி சதீஷ்!

  ReplyDelete
 51. செங்கோவி அண்ணா நம்ம தல சிபிகிட்ட சொல்லி என்னையும் நமீதா மன்றத்துல சேத்துக்க சொல்லுங்கோ....

  அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்... சொல்லிட்டேன்.

  ReplyDelete
 52. @Heart Rider//செங்கோவி அண்ணா நம்ம தல சிபிகிட்ட சொல்லி என்னையும் நமீதா மன்றத்துல சேத்துக்க சொல்லுங்கோ....// மன்றத்துல சேர அவர்கிட்டக் கேட்க வேண்டாம்யா..நமீதாகூடச் சேரணும்னாத்தான் அவர்கிட்டக் கேட்கணும்.

  ReplyDelete
 53. @Heart Rider//அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்..// இருக்குறது ஒரு தலைவி..அதுக்கு எல்லாரும் தலைவர் ஆகணும்னு நினைக்கலாமா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.