Saturday, May 21, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_10

மயிலுக்கு தோகையும்
குயிலுக்கு குரலும்
அணிகலனாய் அளித்தஇறைவன்
என்னை தனியே அனுப்பினான்.

எனது அணிகலன்
எதுவென கேட்டபோது
உனது பெயர் சொல்லி
சந்தோசத்தில் ஆழ்த்தினான்!முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான். 

அதுவும் முதன்முதலாக காண்டம் வாங்குவதென்பது வீர சாகசம் தான். முதலில் அதிகக் கூட்டம் வராத கடையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆண்டவன் அருளால் அந்தக் கடையில் லேடீஸ் யாரும் வேலை செய்யக் கூடாது. நாம் போய் நிற்கும் நேரம், ஆண்கள்கூட அந்தக் கடைக்கு வந்துவிடக் கூடாது. இவ்வாறு தடை பல தாண்டி, காண்டம் வாங்க வேண்டி இருப்பதால் தானோ என்னவோ இந்திய மக்கள் தொகை எகிறிப் போய்க் கிடக்கிறது.

கொடைக்கானல் செல்வதென்று முடிவானதும் மதனும் காண்டம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

“அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்டான்னு தெரியலை. தெரிஞ்சாக்கூட தைரியமாக் காண்டம் இல்லாமப் போகலாம். இப்போ பயமா இருக்கு” என்று புலம்பியவாறே மதன் கடைக்குக் கிளம்பிப்போனான்.

கொஞ்சநேரத்தில் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து சேர்ந்தான்.

“ டேய், இது எதுக்குடா?” என்றேன்.
“அட ஏண்டா நீ வேற..காண்டம் வாங்கத் தாண்டா போனேன். நான் போய் அந்த மெடிக்கல்ல நின்னுக்குட்டு, எப்படிக் கேட்கன்னு திகைச்சுக்கிட்டே நின்னனா, அப்போ திடீர்னு ரெண்டு லேடீஸ் வந்துட்டாங்க. மெடிக்கல்காரன் ‘என்ன தம்பி வேணும்’னு நச்சரிச்சிட்டான். அப்புறம் என்ன செய்யற்து, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுன்னு வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இந்தாங்கடா நல்லாச் சாப்புடுங்க”

எங்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகியது.

மதன் அடித்த அட்டெம்ப்ட்டில் வெற்றி பெற்றான். நண்பர்கள் பைக் தந்து உதவ, ஜெனிஃபருடன் கொடைக்கானலுக்கு கடைசிக் கன்னி யாத்திரை கிளம்பினான்.


“ரூம் போட்டுட்டு வெளில சுத்தலாமா, இல்லே சுத்தீட்டு மதியம் வந்து ரூம் போட்டுக்கலாமா?” ஆர்வத்தை அடக்கியபடி இயல்பாகக் கேட்டான் மதன்.

“ரூமுக்கு முதல்ல போயிடுவோம். ரிஃப்ரெஷ் பண்ணீட்டு அப்புறம் வெளில போகலாம்” என்றால் ஜெனிஃபர்.

பைக்கை அந்த லாட்ஜுக்கு விட்டான்.

அந்த லாட்ஜில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட், மிகமிக இயல்பாக அவர்களிடம் பேசினான். புதிய கஸ்டமர் மிரண்டு விடக்கூடாது என்ற அக்கறை அவன் பேச்சில் தெரிந்தது.

“ஃபைவ் தவுசண்ட்ஸ் அட்வான்ஸ் கொடுங்க சார். செகண்ட் ஃப்ளோர்ல ரூம் போடறேன். அங்க வியூ நல்லா இருக்கும். எந்தத் தொந்தரவும் இருக்காது சார். பாய், சாருக்கு ரூமைக் காட்டு”

அந்த முப்பது தாண்டிய பாய், அவர்களை ரூமிற்கு அழைத்துச் சென்றான். இது மிகவும் சாதாரண விஷயம் என்பது போன்றே அவன் முகம் இருந்தது. லாட்ஜில் உள்ள எல்லோருமே கஸ்டமர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்ளப் பழகி இருந்தார்கள்.

ரூமைத் திறந்த படியே ”வேற எதுனா வேணும்னா ரிஷப்சனுக்குக் கூப்பிடுங்க சார். 9 டயல் பண்ணாப் போதும்” என்றான். சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமல் நடந்தான்.

ரூமிற்குள் ஜெனிஃபருடன் தயங்கியபடியே நின்றான் மதன்.

“அப்ப்ப்பா, பைக்ல இவ்வளவு தூரம் வந்தது டயர்ட் ஆகிடுச்சு” என்றபடியே அங்கிருந்த பெரிய கட்டிலில் சாய்ந்தாள் ஜெனிஃபர்.

“ம்..ஆமா, எனக்கும் தான்” என்றான் மதன். குரல் தொண்டையிலிருந்து வராமல் கிணற்றுக்குள்ளிருந்து வந்தது. 

“மதன்.. ஏன் நிக்கிறே?. உட்காரு... நான் உங்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?”

“என்ன?”

“என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

மதன் மிரண்டான்.

“நான்..நான் உன்னைப் பத்தி...ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அழகு..எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” தத்துப் பித்தென்று உளறுவது மதனுக்கே தெரிந்தது.

“பொய் சொல்லாத..நான் சொல்லட்டா?”

மதன் அவளையே பார்த்தபடி பேசாமல் இருந்தான்.

“நீ என்னை தே......ன்னு தானே நினைக்கே?”

மதன் முகம் பேயறைந்தது போல் ஆகியது.

”சினிமாக்கு வா-ன்னு கூப்பிட்டே, வந்தேன். பார்க்குக்குப் போவோம்னு கூப்பிட்டே, வந்தேன். இப்போ லாட்ஜுக்கே கூட்டி வந்துட்ட! எனக்குத் தெரியும், காலேஜ்ல உன் ஃப்ரண்ட்ஸ்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு. அந்த சீனியர்கூட நான் படுத்துட்டேன்னே சொல்றாங்க இல்லே? உண்மையில என்ன நடந்துச்சு தெரியுமா? எங்க கிளாஸ்ல டூர் போன அன்னைக்கு எங்கப்பா ஃபாரின் கிளம்பினார். அதனால அவரை வழியனுப்ப நான் திருவனந்தபுரம் போயிட்டேன். ஆனா அவன், நான் அவன்கூடத் தான் அன்னைக்குப் படுத்தேன்னு ஃப்ரண்ட்ஸ்க கிட்டச் சொல்லி இருக்கான். 

அவனுக்கும் எனக்கும் இடையில ஒன்னுமே இருந்ததில்லைன்னு நான் சொல்லலை. எங்க ரெண்டு பேருக்கு இடையில இன்ஃபாக்சுவேஷன் இருந்துச்சு. அவன் என்மேல உண்மையான அக்கறையோட இருக்கான்னு நான் நினைச்சேன். ஆனால், அவன் ஃப்ரண்ட்ஸ்ங்க கிட்ட என்னைப் பத்திக் கேவலமாப் பேசுறான்னு தெரிஞ்ச அந்த நிமிசமே அவனை நான் தூக்கி எறிஞ்சுட்டேன். அப்புறம் என்கிட்ட வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். நான் கண்டுக்கலை. அந்தக் கடுப்புல இன்னும் மோசமா என்னைப் பத்தி காலேஜ் முழுக்கப் பேசிகிட்டு இருக்கான்..

இந்த ஆம்பிளைங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்குப் புரியலை மதன். போறபோக்குல ஒரு பொண்ணைப் பத்தி ஏதாவது சொல்லிடுவீங்க. அது உண்மையான்னே உங்களுக்குத் தெரியாது, ஆனா அது பொய்யின்னு நிரூபிக்கறது மட்டும் எங்க பொறுப்பு இல்லையா?” 

ஜெனிஃபரின் கண்கள் கலங்கி, கண்ணீர் மதனை மறைத்தது. கண்ணீரைத் துடைத்தபடியே தொடர்ந்தாள்.

”நான் படிச்சது எல்லாமே ஹாஸ்டல்ல மதன். ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ல இருந்து இப்போ காலேஜ் வரைக்கும் ஹாஸ்டல் தான். என் அப்பா-அம்மாவே எனக்குக் கெஸ்ட் தான். என்னை வளர்த்தது சிரிக்கவே தெரியாத ஹாஸ்டல் வார்டன்ஸ் தான். அம்மா பாசமோ அப்பா பாசமோ எனக்குக் கிடைச்சதே இல்லை. எல்லா உறவுமே அஃபிஸியலாத் தான் எனக்கு அமைஞ்சது..அதனால தான் காலேஜ் வரவும் அந்த சீனியர் என்னை லவ் பண்றேன்னு சொன்னப்போ நான் ஏத்துக்கிட்டேன். என் மேலயும் அன்பு காட்ட ஒரு ஜீவன்னு எவ்வள்வு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? ஆனா அவனோட சுயரூபம் தெரிஞ்சப்போ, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடுச்சு மதன்.

அப்போ தான் பிரவீணாக்காக நீ கையை அறுத்துக்கிட்டது, அவளை உருகி உருகி காதலிக்கிறதெல்லாம் எனக்குத் தெரிய வந்துச்சு. இவ்வளவு சின்சியரா லவ் பண்ற ஒருத்தன் எனக்குக் கிடைச்சா, எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அதுக்கப்புறம் ஃபிரண்ட்ஸ்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சேன். நீ அம்மா இழந்த சோகத்தை என்கிட்டச் சொன்னாங்க.

உனக்குப் புரியுதா மதன்..நீயும் நானும் ஒன்னு. நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம். இப்போ ஆண்டவர் அருளால நீ எனக்குக் கிடைச்சிருக்கே. உனக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். உனக்கு எது சந்தோசமோ அதை நான் செய்வேன்” என்றபடியே கட்டியிருந்த சேலையின் மாராப்பை விலக்கினாள்.

”இதுக்காகத் தானே நீ என் பின்னால வந்தே? எடுத்துக்கோ..அதுக்கு அப்புறமும் உனக்கு என்மேல அன்பிருந்தா, நான் அதிர்ஷ்டசாலி. இல்லே, நான் உனக்கு புளிச்சுப் போயிட்டேன்னா, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுக்கிறேன். வா!”

குழம்பிய நிலையில் மதன் அவளை எடுத்துக் கொண்டான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

42 comments:

 1. வடை உங்கள் மகனுக்கு தர்றேன்...எனக்கு வேணாம்

  ReplyDelete
 2. இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான்>>>>>

  ஐயா...செங்கோவி... நெசமாவே மிகப் பெரிய சவாலா?

  ReplyDelete
 3. அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்டான்னு தெரியலை. தெரிஞ்சாக்கூட தைரியமாக் காம்டம் இல்லாமப் போகலாம். இப்போ பயமா இருக்கு” என்று புலம்பியவாறே மதன் கடிக்குக் கிளம்பிப்போனான்.>>>>>

  அடப்பாவிகளா? எப்படியெல்லாம் யோசிகறாங்க.

  ReplyDelete
 4. ஜெனிஃபரின் கண்கள் கலங்கி, கண்ணீர் மதனை மறைத்தது. கண்ணீரைத் துடைத்தபடியே தொடர்ந்தாள்.>>>>

  கிளிகிளுப்பா கதைய கொண்டு போவார்னு பாத்தா, செண்டிமெண்ட் ஆக்குறாரே...

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash//வடை உங்கள் மகனுக்கு தர்றேன்.//பிரகாஷ் மாமாவுக்கு நன்றி.

  ReplyDelete
 6. உனக்குப் புரியுதா மதன்..நீயும் நானும் ஒன்னு. நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம். இப்போ ஆண்டவர் அருளால நீ எனக்குக் கிடைச்சிருக்கே.>>>>>>

  எப்படியெல்லாம் மேட்டர நியாயமா மாத்தி பேசுறாங்க...???

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash//கிளிகிளுப்பா கதைய கொண்டு போவார்னு பாத்தா, செண்டிமெண்ட் ஆக்குறாரே...// யோவ், நான் என்ன மருதம்-விருந்து மாதிரி சீன் புக்கா நடத்துறேன்?

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash//எப்படியெல்லாம் மேட்டர நியாயமா மாத்தி பேசுறாங்க...???// அவங்கவங்க பண்றது, அவங்கவங்களுக்கு நியாயமாத் தான் தெரியும்..

  ReplyDelete
 9. This is the best episode of this series story

  ReplyDelete
 10. @வினையூக்கி//This is the best episode of this series story// நன்றி வினையூக்கி.

  ReplyDelete
 11. @செங்கோவி
  யோவ், நான் என்ன மருதம்-விருந்து மாதிரி சீன் புக்கா நடத்துறேன்?>>>>

  எனக்கு பொத்தாம் பொதுவா மஞ்ச புத்தகம்னு தான் தெரியும். ம்ம்ம்...நீங்க நிறைய பாதிருப்பிங்க போல...

  ReplyDelete
 12. @தமிழ்வாசி - Prakash//ம்ம்ம்...நீங்க நிறைய பாதிருப்பிங்க போல..// இப்படிப் பேசியே தர்ம அடி வாங்கிக் கொடுங்கய்யா..

  ReplyDelete
 13. எலேய் மாப்ள அடிச்ச பாரு ஒரு U Turn ஆடி போயிட்டேன் ஹிஹி!

  ReplyDelete
 14. @விக்கி உலகம் நான் எங்கய்யா யு டர்ன் அடிச்சேன்..நடந்ததைச் சொன்னேன்..

  ReplyDelete
 15. இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான்//
  முதல் வரியே அதிரடி

  ReplyDelete
 16. மன்மதன் அம்பு..மனதை கிழிக்கிறது

  ReplyDelete
 17. வழக்கமான உங்கள் பானியில் அசத்தல் பக்கங்கள்..

  ReplyDelete
 18. குழம்பிய நிலையில் மதன் அவளை எடுத்துக் கொண்டான்.//
  அப்பவும் சொதப்பாம எடுத்துகிட்டானே!!

  ReplyDelete
 19. @ஆர்.கே.சதீஷ்குமார்//அப்பவும் சொதப்பாம எடுத்துகிட்டானே!!// ஹா..ஹா..நன்றிண்ணே!

  ReplyDelete
 20. @!* வேடந்தாங்கல் - கருன் *!பாராட்டுக்கு நன்றி வாத்யாரே.

  ReplyDelete
 21. எங்கோ ஆரம்பித்து, எங்கோ முடித்திருக்கிறீர்கள்! மதன் ஜெனிபரை வேறுவிதமாக டீல் பண்ணியிருப்பான் என்று நினைத்தேன்!! இது ஓகே!

  ReplyDelete
 22. உங்கள் எழுத்து நன்றாய் இருப்பதாக பலர் ரெக்கமன்ட் பண்ணியதன் மூலம் இங்கு வந்தேன்...
  நன்றாக இருக்கிறது..தொடருவேன்...

  ReplyDelete
 23. //இந்திய சமூகத்தில் ஆண்கள் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால் கடைக்குப் போய்க் காண்டம் வாங்குவது தான்.


  அப்படியா!!!

  நான் சின்ன பையன்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
  http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html

  ReplyDelete
 24. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி//எங்கோ ஆரம்பித்து, எங்கோ முடித்திருக்கிறீர்கள்// நாராயணா..நாராயணா..நான் எங்க முடிச்சேன்..மதன் தானே முடிச்சான்! இது உண்மைக்கதை பாஸ், அதனால என்ன நடந்துச்சோ அதான் வரும்.

  ReplyDelete
 25. @மைந்தன் சிவா//உங்கள் எழுத்து நன்றாய் இருப்பதாக பலர் ரெக்கமன்ட் பண்ணியதன் மூலம் இங்கு வந்தேன்...// உங்களுக்கும் ரெகமண்ட் பண்ணவங்களுக்கும் நன்றி சிவா!

  ReplyDelete
 26. @Speed Master//நான் சின்ன பையன் // அப்படியாஆஆ!

  ReplyDelete
 27. >>நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம்.

  செண்ட்டிமெண்ட் டச்

  ReplyDelete
 28. @சி.பி.செந்தில்குமார்வாங்க நாரதரே...வாங்க.உங்க திருவாயைத் திறக்காமப் போங்க..

  ReplyDelete
 29. இன்னொரு பாக்யராஜ்
  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 30. அண்ணே முருங்கைக்காய் சூப் கிடைக்குமா அண்ணே....

  ReplyDelete
 31. நண்பரே...நெட் கடுமையான ஸ்லோவாக ஒருக்கு...அதான் அடிக்கடி வரமுடியவில்லை. மன்னிக்கவும்

  ReplyDelete
 32. எத்தன நாளுக்கு தான் கிழிஞ்ச டயரியில் இருந்தே எழுதுவீங்க!!
  டைரி ரொம்ப கிழிஞ்சிருக்கும் போல
  பாத்து பதமா டையரிய பஞ்சர் ஒட்டுங்க

  ReplyDelete
 33. @குணசேகரன்...//இன்னொரு பாக்யராஜ்// அப்ப்டில்லாம் இல்லை பாஸ்!

  ReplyDelete
 34. @MANO நாஞ்சில் மனோ//அண்ணே முருங்கைக்காய் சூப் கிடைக்குமா அண்ணே....// அண்ணே, நீங்களே இப்படிப் பேசலாமாண்ணே..

  ReplyDelete
 35. @ரஹீம் கஸாலி//நெட் கடுமையான ஸ்லோவாக ஒருக்கு...அதான் அடிக்கடி வரமுடியவில்லை. // பரவாயில்லை கஸாலி.

  ReplyDelete
 36. @Vincent//டைரி ரொம்ப கிழிஞ்சிருக்கும் போல// ஆமாம் நண்பரே..வேண்டாம் என்று கிழித்துப் போட்ட டைரி தான் இது..தொடர்ந்து படித்து வாருங்கள்..நான் சொல்வது புரியும்.

  ReplyDelete
 37. எனது அணிகலன்
  எதுவென கேட்டபோது
  உனது பெயர் சொல்லி
  சந்தோசத்தில் ஆழ்த்தினான்!//

  சகோ, கொன்னுட்டீங்களே. அருமையான வரிகள்.

  ReplyDelete
 38. வாங்க வேண்டி இருப்பதால் தானோ என்னவோ இந்திய மக்கள் தொகை எகிறிப் போய்க் கிடக்கிறது.//

  அனுபவசாலி அவுத்து வுடுறாரு, மக்களே கேளுங்க.

  ReplyDelete
 39. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுன்னு வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இந்தாங்கடா நல்லாச் சாப்புடுங்க”//

  அஃதே...அஃதே...அஃதே...
  கொடுமைடா சாமி.

  ReplyDelete
 40. பைவ் தவுசண்ட்ஸ் அட்வான்ஸ் கொடுங்க சார்//

  ஐஞ்சாயிரம் கொடுத்து, முடிக்கனுமா.
  அவ்.,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 41. உனக்குப் புரியுதா மதன்..நீயும் நானும் ஒன்னு. நமக்குத் தேவை அன்பு. அதைத் தான் நானும் நீயும் தப்பான இடத்துல தேடியிருக்கோம். இப்போ ஆண்டவர் அருளால நீ எனக்குக் கிடைச்சிருக்கே. உனக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். உனக்கு எது சந்தோசமோ அதை நான் செய்வேன்” என்றபடியே கட்டியிருந்த சேலையின் மாராப்பை விலக்கினாள்.//

  முதற் பந்தியில் சோகம் நிரம்பி வழிந்ததை, இறுதி வரியில் வரும் காமம்....வென்று விடுகிறது.

  ReplyDelete
 42. @நிரூபன்//அனுபவசாலி அவுத்து வுடுறாரு, மக்களே கேளுங்க// யாருய்யா அது பூட்டுன கடைக்குள்ள பூந்து ரகளை பண்றது..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.