Sunday, May 22, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_11

தீராத பசிக்காக

தீவிர வேட்டை யில் இறங்கும்.

அனைத்தின் மீதும் அதன்

அதிகாரம் வெல்லும்.


எதிர்ப்பவனின் சிந்தனை

செயல்படாமல் முடங்கும்

எதிர்க்காதவனின் சக்தி

முழுதாக உறிஞ்சப்படும்.


பசித்திருக்கும் வேளையில்

பார்ப்போரை எல்லாம் குதறும்.

பசியாறிய வேளையில் 

பசுவெனச் சாதுவாய் இருக்கும்.

சிங்கம் போன்றது காமம்!

முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!


ந்திரித்து விட்ட ஆடு போல் வந்து சேர்ந்தான் மதன். 

“என்னடா முடிஞ்சுதா?” புலன்விசாரணையைத் தொடங்கினேன்.
“ம்”
“என்னடா, இண்டெரெஸ்ட்டே இல்லாமச் சொல்றே? ஊத்திக்கிச்சா?”
“இல்லைடா, முடிஞ்சிச்சு..அவ என்னை லவ் பண்றாளாம்டா”
“அதைத் தானே ஆரம்பத்துல இருந்தே சொல்றா..சரி, மேட்டர் முடிஞ்சிடுச்சில்ல, சீக்கிரம் கழட்டி விடுற வழியைப் பாரு”
“ம்”

டுத்த புதன்கிழமையும் லேப்புக்கு வராமல் ஜெனிஃபருடன் எங்கோ போனான் மதன்.
“இன்னும் ஏண்டா அவ கூடச் சுத்துறே?”
“நமக்கு காலேஜ் இன்னும் ஆறு மாசம்தானடா..அதுவரைக்கும் சுத்திக்கிறேண்டா..அப்புறம் யாரு இவளைத் திரும்பிப் பார்க்கப் போறாங்க?” என்றான் மதன்.

அதை அவன் உண்மையாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. தினமும் அவளுடன் வெளியே செல்லத் தொடங்கினான்.

கண்ணீரும் காமமுமாய் அவர்களின் பொழுது நகர்ந்தது. நான் அவளை விட்டு விலகும்படி அறிவுறுத்துவேன். சரி, சரியென்று சொல்வான்.

அடுத்த நாளே அவள் கூப்பிட்டவுடன் கிளம்பி விடுவான்.

அது காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் அந்த உறவு தொடர்ந்தது. 

அவள் அழுதாள். அவன் அவளின் கண்ணீர் துடைத்தான். ‘நீ இல்லாமல் எனக்கும் வாழ்வில்லை’ என்று சத்தியம் செய்தான். அவள் சந்தோசத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள். காமத்தின் வழியே தனது சந்தோசத்தை அவனுக்கும் பகிர்ந்தளித்தாள்.

“நீங்கள்லாம் வேணும்னே அவளைத் தப்பாப் பேசுறீங்க..அவள் அப்படி இல்லை. அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா” என்று எங்கள் மீதே பாய்ந்தான்.

’இந்த ஆண்கள் ஏன் இப்படிக் குரூரமாய் இருக்கின்றார்கள்? ஏன் இப்படிச் சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணைப் பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி வம்பு பேசுகிறார்கள்? தங்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேச நா எழுமா?’ தர்க்கரீதியாக விவாதிக்க முடியாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.

அவள் தினமும் ‘நீ இல்லேன்னாச் செத்துடுவேன்’ என்று அழுதாள். அழுது முடித்ததும் காமத்தில் அவனை மூழ்கடித்தாள். என்ன நடக்கிறதென்று புரியாத நிலைக்குப் போனான் மதன்.

வகுப்பறை நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் கல்லூரி வளாகத்தில் ஒன்றாகவே சுத்தினார்கள்.

பிரவீணாவின் முன் வெற்றிகரமான ஆண்மகனாய் நின்றான்.

கண்டிப்புக்குப் பெயர்போன எங்கள் கல்லூரி விழித்துக் கொண்டது. அவர்களின் வருகைப்பதிவேடுகள் ஆராயப்பட்டன. இருவரும் ஒரே நேரத்தில் வகுப்புகளை கட் அடித்ததை எளிதாகக் 

கண்டுபிடித்தார்கள். அவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பப் பட்டது.

“கல்லூரியின் நற்பெயரைக் கெடுக்கும்படி நடந்துகொண்ட உங்கள் மகன்/மகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? நேரில் வந்து விளக்கம் கொடுக்கவும்” என்றது அக்கடிதம்.

தனின் அப்பா வந்திறங்கினார். அவர்களது ஊரில் கௌரமான மனிதர் அவர். சொந்தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பவர். வட்டிக் கொடை 

வாங்கலும் உண்டு. அப்படி இருந்துவிட்டு என்கொயரிக்காக வந்ததை பெரிய அவமானமாக நினைத்தார்.

மதனிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசினார்.

“என்னப்பா இது? நீயாவது என்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாமே?”
“இல்லேப்பா..சும்மா தான் பழகுறேன்னு சொன்னான்”
“இது நல்லாவாப்பா இருக்கு..இப்போ நான் என்ன செய்யணும்? எதுக்கு வரச் சொல்லி இருக்காங்க?”
“இனிமே என் பையன் இப்படி நடந்துக்க மாட்டான்னு உறுதி கேட்பாங்க. ஒருவேளை லெட்டர் ஏதாவது எழுதித் தர வேண்டி இருக்கும். அவ்வளவு தான்”

“மன்னிப்புக் கடிதமா? இவன் ஊர் மேஞ்சதுக்கு நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் மன்னிப்புக் கேட்கணுமா?”

“அப்ப்டி இல்லைப்பா..சும்மா எழுதிக் கொடுத்தாப் போதும்”

‘யாரு அந்தப் பொண்ணு? என்ன ஜாதி அவ?”
“இப்போ இருக்குறது திர்நெவேலி. சொந்த ஊரு வடக்க ஏதோ. அவங்க ...ஜாதி”
“ஓஹோ..எங்க ஜாதியும் கிடையாதா? ம்”

கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று புரிந்து, எதுவும் பேசாமல் அமைதி ஆனோம்.

விசாரணை அறையின் வாசலில் காத்திருந்தேன்.

ஜெனிஃபரின் அம்மாவும் வந்திருந்தார்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. அவர்களது எல்லா ரிகார்டுகளும் அலசப்பட்டன. ’இனிமேல் ஒன்றாகக் கல்லூரி வளாகத்தில் சுற்றினாலோ, வகுப்புக்கு வராமல் போனாலோ கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர்’ என்ற அறிவிப்புடன் விசாரணை முடிந்தது.

வெளியில் வந்ததும் ‘இனிமேலாவது அவனை ஒழுங்கா இருக்கச் சொல்லுப்பா”என்றார்.

“இருப்பான்பா..என்னடா, நீயே சொல்லு”

மதன் பேசாமல் இருந்தான்.

“ஏன் துரை பேச மாட்டாரோ?” என்றார்.

“அவ தான் எனக்கு எல்லாம். அவ இல்லேன்னா இந்தப் படிப்பே எனக்குத் தேவை இல்லை.” என்றான் மதன்.

அதே நேரத்தில் ”அவன் இல்லேன்னா அடுத்த நிமிசமே நான் செத்திடுவேன்” என்று ஜெனிஃபர் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. இன்னைக்கும் வடை உங்க மகனுக்கு தான்... எனக்கு வேணாம்

  ReplyDelete
 2. சிங்கம் போன்றது காமம்!>>>>>

  ஆண் சிங்கத்துக்கும், பெண் சிங்கத்துக்கும் பொதுவானதா?

  ReplyDelete
 3. @தமிழ்வாசி - Prakash இந்த வடை வேண்டாமாம். மெதுவடை தான் வேணுமாம்.

  ReplyDelete
 4. “என்னடா முடிஞ்சுதா?” புலன்விசாரணையைத் தொடங்கினேன்.>>>

  அடுத்தவன் மேட்டர தெரிஞ்சுக்க எம்புட்டு ஆர்வம் பாருங்க நம்ம செங்கோவிக்கு... இது அடுக்குமா?

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash//ஆண் சிங்கத்துக்கும், பெண் சிங்கத்துக்கும் பொதுவானதா?// என்னை வம்புல மாட்டுறதுக்குன்னே கேட்காங்களே..தப்பிச்சிருடா செங்கோவி!

  ReplyDelete
 6. செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakash இந்த வடை வேண்டாமாம். மெதுவடை தான் வேணுமாம்.>>>>>

  மாத்தியோசி கிட்ட ஓட்ட வடை தான் இருக்கு... வாங்கி தரவா?

  ReplyDelete
 7. //அடுத்தவன் மேட்டர தெரிஞ்சுக்க எம்புட்டு ஆர்வம் பாருங்க நம்ம செங்கோவிக்கு... இது அடுக்குமா?// யோவ், அட்வைஸருக்கு இதைக் கேட்கக்கூட உரிமை இல்லையா?

  ReplyDelete
 8. “இன்னும் ஏண்டா அவ கூடச் சுத்துறே?”>>>

  இவிங்களா நண்பன்க? பொறாமைக்கார நண்பனுக.

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//மாத்தியோசி கிட்ட ஓட்ட வடை தான் இருக்கு... வாங்கி தரவா?// ஓட்டை வடை நாராயணன் இன்னைக்குப் பதிவுல உமக்கு ஒரு சூடு போட்டாரே..அப்படியும் திருந்தலியா நீரு?

  ReplyDelete
 10. மதனிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசினார்.>>>>

  எம்புட்டு நல்லவனா இருக்கான்யா இந்த பையன்

  ReplyDelete
 11. அதே நேரத்தில் ”அவன் இல்லேன்னா அடுத்த நிமிசமே நான் செத்திடுவேன்” என்று ஜெனிஃபர் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.>>>>

  ரெண்டு பெரும் அடிச்சாங்க பாருய்யா கடைசில டுவிஸ்ட்...

  ReplyDelete
 12. @சரியில்ல....... பேரு ’சரியில்லை’ன்னாலும் உங்க கமெண்ட் நல்லா இருக்கு பாஸ்!

  ReplyDelete
 13. I would have loved to study in such a disciplined college. :P

  ReplyDelete
 14. ஆமா என அவன் இல்லாட்டி அந்த நிமிசமே சாகிறாங்க??
  ஒரு நிமிஷம் வெயிட் பண்ணி சாகுறது!!

  ReplyDelete
 15. எழுத்து நடை பிரமாதம் பாஸ்!!

  ReplyDelete
 16. தமிழ்வாசி - Prakash said... [Reply]

  மதனிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசினார்.>>>>

  எம்புட்டு நல்லவனா இருக்கான்யா இந்த பையன்
  /// சொல்றது யாரு பாரு ..

  ReplyDelete
 17. @வினையூக்கிஉண்மையிலேயே நல்ல காலேஜ் தான் வினையூக்கி!

  ReplyDelete
 18. @மைந்தன் சிவா//ஒரு நிமிஷம் வெயிட் பண்ணி சாகுறது!!// ஹா..ஹா..அவங்க ஒரு முடிவு எடுத்துட்டா, இம்மீடியேட் இம்ப்ளிமெண்டேசன் தான்!

  ReplyDelete
 19. @!* வேடந்தாங்கல் - கருன் *!//எம்புட்டு நல்லவனா இருக்கான்யா இந்த பையன்
  /// சொல்றது யாரு பாரு ..// அப்ப்டிக் கேளுங்க கருன்.

  ReplyDelete
 20. தொடர்கதையா பாஸ்... ???
  இனி தொடர்ந்து படிக்கிறேன்...

  ReplyDelete
 21. மேலே என்ன செய்தார்கள் அந்தக் காதல் பைத்தியங்கள்!சொல்லுங்கள்!

  ReplyDelete
 22. மாப்ள முடியலய்யா......அப்படியே கைத்தாங்களா புடிச்சிக்க!

  ReplyDelete
 23. @பலே பிரபு//தொடர்கதையா பாஸ்... // தொடர்’கதை’ இல்லை பா|ஸ், தொடர் உண்மை! தொடர்வதற்கு நன்றி பிரபு.

  ReplyDelete
 24. @சென்னை பித்தன்//மேலே என்ன செய்தார்கள் அந்தக் காதல் பைத்தியங்கள்!சொல்லுங்கள்!//ஐயா அடிச்சுடாதீங்க..அடுத்த வாரம் கண்டிப்பாச் சொல்றேன்.

  ReplyDelete
 25. ////பசித்திருக்கும் வேளையில்

  பார்ப்போரை எல்லாம் குதறும்.

  பசியாறிய வேளையில்

  பசுவெனச் சாதுவாய் இருக்கும்.

  சிங்கம் போன்றது காமம்!// என்ன ஒரு அர்த்தமான கவிதை ...அருமை பாஸ்

  ReplyDelete
 26. கவிதைல பின்றீங்களே! :-)

  ReplyDelete
 27. எல்லா இடத்திலும் ஒரே மாதிரியே நிறைந்து காணப்படுகிறார்கள் ஜெனிஃபர்கள் - பெயர்மட்டும் மாறி! அதெப்படிண்ணே?

  எத்தனை பேர் பெண்களைக் கேவலபடுத்தீட்டீங்கன்னு கட்டம் கட்டி வச்சிருக்காங்களோ? மாட்டினீங்க....அவ்ளோதான்! சூதானமா இருங்கண்ணே!

  எனக்கும் நிறைய விஷயம் எழுத இருக்கு! எழுத ஆரம்பிச்சா பிலாக்கே நாறிடுங்கிரதால் விட்டுட்டேன்!

  ReplyDelete
 28. அடிக்கடி அண்ணன் தனி மெயில்ல என்னை மிரட்டறப்ப ஏய் நான் சிங்கம்ல.. அப்டீம்பாரு.. இதானா மேட்டரு? ஹி ஹி

  ReplyDelete
 29. @கந்தசாமி.//என்ன ஒரு அர்த்தமான கவிதை ...அருமை பாஸ்// நன்றி கந்தசாமி.

  ReplyDelete
 30. @ஜீ...//கவிதைல பின்றீங்களே! :-)// பின்னாடியே சிரிப்பான் எதுக்கு?

  //எத்தனை பேர் பெண்களைக் கேவலபடுத்தீட்டீங்கன்னு கட்டம் கட்டி வச்சிருக்காங்களோ? மாட்டினீங்க....அவ்ளோதான்! சூதானமா இருங்கண்ணே! // இந்தத் தொடரைக் கடைசிவரைக்கும் படிச்சா, அப்படி நினைக்க மாட்டாங்க தம்பி!

  ReplyDelete
 31. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் தனி மெயில்ல என்னை மிரட்டறப்ப ஏய் நான் சிங்கம்ல.. அப்டீம்பாரு.. // தலைவரை மிரட்ட முடியுமா?

  ReplyDelete
 32. தீராத பசிக்காக

  தீவிர வேட்டை யில் இறங்கும்.

  அனைத்தின் மீதும் அதன்

  அதிகாரம் வெல்லும்.//

  இதில் கவி நயமும், இரட்டை அர்த்தமும் தான் நிரம்பியிருக்கிறது.

  ReplyDelete
 33. பசித்திருக்கும் வேளையில்

  பார்ப்போரை எல்லாம் குதறும்.

  பசியாறிய வேளையில்

  பசுவெனச் சாதுவாய் இருக்கும்.

  சிங்கம் போன்றது காமம்!//

  உலகியல் தத்துவத்தினையே கவிதைக்குள் அடக்கி விட்டீர்களே. அருமை சகோ.

  ReplyDelete
 34. “என்னடா முடிஞ்சுதா?” புலன்விசாரணையைத் தொடங்கினேன்.//

  இங்க பாருங்க, அடுத்தவன் விசயத்தை கேட்டு அசடு வழியிறதுக்கென்றே ஒருத்தர் இருக்காரு,

  ReplyDelete
 35. இந்த ஆண்கள் ஏன் இப்படிக் குரூரமாய் இருக்கின்றார்கள்? ஏன் இப்படிச் சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணைப் பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி வம்பு பேசுகிறார்கள்? தங்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படிப் பேச நா எழுமா?’ தர்க்கரீதியாக விவாதிக்க முடியாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.//

  அப்போ மாப்பிளைக்கு காதல் முத்திப் போச்சு.

  ReplyDelete
 36. @நிரூபன்//உலகியல் தத்துவத்தினையே கவிதைக்குள் அடக்கி விட்டீர்களே. அருமை சகோ.// நன்றி சகோ.

  ReplyDelete
 37. இனிமேல் ஒன்றாகக் கல்லூரி வளாகத்தில் சுற்றினாலோ, வகுப்புக்கு வராமல் போனாலோ கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர்’ என்ற அறிவிப்புடன் விசாரணை முடிந்தது.//

  அதுக்குத் தானே ஈவினிங் டைம் இருக்கு. ஈவினிங்கில் ஊரைச் சுத்த வேண்டியது தானெ. சின்னப் பசங்க மாதிரிப் காலேஜ்ஜை கட் அடிச்சால் நோண்டி நொங்கெடுக்க மாட்டாங்கள்.

  ReplyDelete
 38. இந்தப் பகுதியில் முற்றிய காதலோடு, கலக்கலான நடையில் தொடரினைக் கொண்டு செல்லுகிறீர்கள்.

  ReplyDelete
 39. தீராத பசிக்காக

  தீவிர வேட்டை யில் இறங்கும்.

  அனைத்தின் மீதும் அதன்

  அதிகாரம் வெல்லும்.//

  அளவு கடந்த ஆசையினால் ஏற்படும் காமம் எனும் வேட்கையினை, பருவக் கிளர்ச்சியினைத் தணித்துக் கொள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது, அந்தப் பவர் தான் வெல்லும்.

  ReplyDelete
 40. எதிர்ப்பவனின் சிந்தனை

  செயல்படாமல் முடங்கும்

  எதிர்க்காதவனின் சக்தி

  முழுதாக உறிஞ்சப்படும்.//

  வலியவர் வெல்வார், மெலியவர் நசிவார் என்பதை எவ்வளவு அழகாக கவி நயத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 41. பசியாறிய வேளையில்

  பசுவெனச் சாதுவாய் இருக்கும்.

  சிங்கம் போன்றது காமம்!//

  பாஸ்...
  இதில் ஆண்களையும் பெண்களையும் இணைத்துக் காமத்தில் அவர்களின் குணவியல்புகள் எப்படி இருக்கும் என்பதையும், அதன் பின்னர் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 42. @நிரூபன்நீங்கள் என் கவிதையை அணுகும் விதம் பிரம்மிப்பூட்டுகிறது..உண்மையில் நீங்கள் என்ன சொல்வீர்கள் என இந்தக் கவிதைக்கு மட்டும் எதிர்பார்த்தேன்!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.