Saturday, May 28, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_12

என் இரவுத் தோட்டத்தில்
கண்ணீர்ப் பாசனத்தில்
கவிதைப் பூக்கள் மலர்கின்றன.

என் தோட்டமெல்லாம்
காதல் வாசம்.
அள்ளி முகரஉன்
வருகை எதிர்பார்க்கும்
வாடா மலர்கள் அவை.

உன் இரவுத்தோட்டத்தில்
மலர்ந்த மலர்களைக் காண
வாசல் வந்து பார்க்கின்றேன்வாசம்கூட
வெளிவரா வண்ணம்
இறுகத் தாழிட்டிருக்கிறாய்.

பூக்களின் முகம் காண
வாசலில் தவமிருக்கையில்
என் இரவுத்தோட்டத்தில் - மீண்டும்
பூக்கள் மலர்கின்றன.

சந்தோச வானில் பூத்தாலும்
சோக பூமியில் பூத்தாலும்
காதல் வாசம் மாறாத
கவிதைப் பூக்கள் அவை!மதனும் ஜெனிஃபரும் தங்கள் காதலில் உறுதியாக நின்றார்கள். பெற்றோரின் அறிவுரை வேண்டாத விஷ்யம் ஆயிற்று. உண்மையில் பெற்றோரே வேண்டாத உறவாகினர்.

ஜெனிஃபரின் வீட்டில் முதலில் இறங்கி வந்தனர். மகள் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கும்போது, நாம் வேறு என்ன தான் செய்வது?அவர்களின் காதலை ஏற்காவிட்டால், தன்னைப் பிணமாகத் தான் பார்க்க முடியும் என்பதைத் தெளிவாக ஜெனிஃபர் தன் பெற்றோரிடமும் மதனிடமும் சொல்லி விட்டாள்.

மதனுக்கும் இவ்வுலகம் ஏன் தன் காதலை இப்படிக் கண் மூடித்தனமாக எதிர்க்கின்றது என்பதே புரியவில்லை. காதல் என்பது என்ன? அது ஒருவகையான அன்புப் பரிமாற்றமே. அதில் இந்த உலகத்திற்கு என்ன தான் பிரச்சினை? ஏன் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவருமே தடை போடுகின்றார்கள்? இந்த சமூகத்தின் மீதே கடுமையான கோபம் வந்தது மதனுக்கு. என்னிடம் திட்டித் தீர்த்தான்.

இந்தக் காதல் எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியும் என்பதால் என்னால் இந்தக் காதலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

“டேய், நீ என்ன சொல்லி ஆரம்பிச்சே.? மேட்டர் முடியவும் அவளை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னே. அப்புறம் இருக்குற வரைக்கும் என் ஜாய் பண்ணிக்கிறேன்னு சொன்னே. இப்போ அவ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னா என்னடா அர்த்தம்?”

“அதெல்லாம் உனக்குப் புரியாதுடா. நீயும் காதலிச்சுப் பார். அப்போத் தெரியும் காதலின் வலி என்னன்னு. “ என்று மதனும் சளைக்காமல் சினிமா டயலாக் போன்று பேசினான்.

இனியும் இப்படியே விட்டால், இவன் படிப்பும் பாழாகி விடும் என்று புரிந்தது.

“சரி, இப்போதைக்கு அப்பாகிட்ட முறைச்சுக்காத. முதலில் படிப்பு முடியட்டும். அதுவரைக்கும் பிரின்ஸிபால் சொன்னதைக் கேளு. அப்புறம் நல்ல வேலையில செட்டில் ஆனப்புறம், அப்பா ஒத்துக்கலாம். இப்போதைக்கு அடக்கி வாசி”

மதனுக்கும் அது சரியென்றே பட்டது. வார இறுதியில் மட்டும் இருவரும் வெளியே சுற்றுவது என முடிவெடுத்தனர். 

மதனின் அப்பாவும் அதிக செல்லமும் அதிகக் காசுமே பையனைக் கெடுத்து விட்டதாக எண்ணினார். எனவே தேவையான அளவிற்கு மட்டுமே பணம் கொடுக்க ஆரம்பித்தார். அதை வைத்து கொடைக்கானல் செல்ல முடியாது என்றாகியது. வெளியூர் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறிச் செல்வதும், ‘அரைகுறையாக’ பயணத்தை முடிப்பதுமாக மதனின் கடைசிச் செமஸ்டர் சென்றது.

எங்கள் கல்லூரி வாழ்க்கை முடியும் நாளும் வந்தது. உண்மையான உலகம், பல பாடங்களுடன் எங்களுக்காகக் காத்திருந்தது. செமஸ்டர் முடிந்ததும், டிகிரி சர்ட்டிஃபிகேட் வாங்கும் முன்னரே மதன் சென்னை சென்று, வேலை தேடத் துவங்கினான். 

மதனின் அப்பாவின் மனதும் சற்று இரக்கப் பட்டது. தனக்கு இருப்பதோ ஒரே மகன், அவனது ஆசைக்குக் குறுக்கே தான் நிற்பது சரி தானா? மகனின் காதலா, குடும்ப கௌரவத்திற்காக மகனின் வாழ்க்கையில் தான் விளையாடுவது சரி தானா? என்று யோசிக்கத் தொடங்கினார். 

அதே நேரத்தில் ஜெனிஃபரின் அம்மாவும் மதனின் அப்பாவை நெருக்கத் தொடங்கினார்.

“சார், என்குயரி அது இதுன்னு எங்க பொண்ணு பேரு கெட்டுப் போச்சு. அதுக்குக் காரனம் உங்க பையன் தான். இப்போ நாங்க வேற பையனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்கலாம். ஆனாலும், பின்னாடி உண்மை தெரிஞ்சா, அவ வாழ்க்கை என்னாகிறது?” என்று ஃபோனில் அடிக்கடி பேசினார்.

மதனின் அப்பா அவர்களின் காதலுக்கு ஒத்துக் கொள்வதென்று முடிவெடுத்தார். 

ஆனாலும் விதி வலியது. 

கடைசி நேரத்தில் என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார். 

(தொடர்ச்சி நாளை..)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

 1. unga son anga vanthaachaa. ennoda vadaiyai avanukku kodunga.

  ReplyDelete
 2. enna sengovi leelai thodar mudiyaraapla theriyuthe. avvalavu thaanaa leelai

  ReplyDelete
 3. டேய், நீ என்ன சொல்லி ஆரம்பிச்சே.? மேட்டர் முடியவும் அவளை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னே. அப்புறம் இருக்குற வரைக்கும் என் ஜாய் பண்ணிக்கிறேன்னு சொன்னே. இப்போ அவ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னா என்னடா அர்த்தம்?”///

  அவ்.....மக்களே! நண்பர்களைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவது எப்படி என்பதனை நம்ம செங்கோவி அண்ணாச்சிகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க;-))

  ReplyDelete
 4. அருமையான எழுத்து நடையில் கதையினைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறீர்கள். மதனின் அப்பாவின் பேச்சு விடயங்களை அடுத்த அங்கத்தில் அறிய ஆவலாக உள்ளேன். தொடருங்கள் பாஸ்.

  ReplyDelete
 5. மாப்ள நல்லா இருக்கு தொடருங்கோ!

  ReplyDelete
 6. //பூக்களின் முகம் காண
  வாசலில் தவமிருக்கையில்
  என் இரவுத்தோட்டத்தில் - மீண்டும்
  பூக்கள் மலர்கின்றன.
  //

  ஹிஹி ம்ம்ம் நல்லா இருக்கு பாஸ்

  ReplyDelete
 7. என்னய்யா இப்பிடி ஒரு எதிர்பார்ப்போட முடிச்சிட்டீங்க???

  ReplyDelete
 8. வெயிட்டிங் போர் தா நேச்ட்டு பதிவு

  ReplyDelete
 9. அண்ணன் பதிவு செமய இருக்கு.. ஆனா கூட்டம் கம்மியா இருக்கே? சனி என்பதாலா?

  ReplyDelete
 10. கதை முடிவுக்கு வந்துருச்சே

  ReplyDelete
 11. கொடக்கானல் மேட்டரை இழுத்திருக்கலாம்

  ReplyDelete
 12. @தமிழ்வாசி - Prakash //unga son anga vanthaachaa. ennoda vadaiyai avanukku kodunga.// ஆமா..யாருய்யா அது என் கடை வடையை எடுத்து என் பையனுக்கு தானம் கொடுக்குறது.

  //enna sengovi leelai thodar mudiyaraapla theriyuthe. avvalavu thaanaa leelai// இல்லை, தொடரும்.

  ReplyDelete
 13. @நிரூபன்//அவ்.....மக்களே! நண்பர்களைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவது எப்படி என்பதனை நம்ம செங்கோவி அண்ணாச்சிகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க;-))// ஆமா, மதன் ஒன்னும் தெரியாத பாப்பா..நாந்தான் கெடுக்கணுமோக்கும்!!

  ReplyDelete
 14. @விக்கி உலகம்//மாப்ள நல்லா இருக்கு தொடருங்கோ!// நன்றி விக்கி.

  ReplyDelete
 15. @மைந்தன் சிவா//என்னய்யா இப்பிடி ஒரு எதிர்பார்ப்போட முடிச்சிட்டீங்க???// யோவ், முன்னப்பின்ன தொடரே படிச்சதில்லையா..அப்படித் தான்யா முடிக்கணும்.

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் பதிவு செமய இருக்கு.. ஆனா கூட்டம் கம்மியா இருக்கே? சனி என்பதாலா?// யாருக்குய்யா சனி?

  ReplyDelete
 17. @ஆர்.கே.சதீஷ்குமார்//கதை முடிவுக்கு வந்துருச்சே..// இல்லை பாஸ், இல்லை!

  //கொடக்கானல் மேட்டரை இழுத்திருக்கலாம்// இன்னும் நீங்க கொடைக்கானல் லாட்ஜை விட்டு வெளில வரலையா?

  ReplyDelete
 18. அருமையா போயிட்டு இருக்குது மக்கா...!!

  ReplyDelete
 19. @ஷர்புதீன்வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி பாஸ்!

  ReplyDelete
 20. @MANO நாஞ்சில் மனோ//அருமையா போயிட்டு இருக்குது மக்கா...!!// நன்றி மக்கா!

  ReplyDelete
 21. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஒரு சஸ்பென்ஸில் விட்டு விடுகிறீர்கள்! காத்திருத்தல் ஒரு சுகம் என்றா?

  ReplyDelete
 22. good story..way of writing..nice..

  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 23. எழுத்துநடை நல்லாய் இருக்கு பாஸ் தொடருங்கள் ...

  ReplyDelete
 24. @சென்னை பித்தன் //காத்திருத்தல் ஒரு சுகம் என்றா?// ’யாருக்காகவாவது’ காத்திருத்தல் சுகம் தான் சார்.

  ReplyDelete
 25. //ஆனாலும் விதி வலியது.

  கடைசி நேரத்தில் என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார்//

  பார்ரா!!!! - ஒரு பயங்கர வில்லனுக்கு கொடுக்கிற டெரர் எபெக்ட்?!

  ReplyDelete
 26. //“டேய், நீ என்ன சொல்லி ஆரம்பிச்சே.? மேட்டர் முடியவும் அவளை கழட்டி விட்டுடுவேன்னு சொன்னே. அப்புறம் இருக்குற வரைக்கும் என் ஜாய் பண்ணிக்கிறேன்னு சொன்னே. இப்போ அவ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னா என்னடா அர்த்தம்?//

  பதிவர் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கிறார்! கவலைப்படுத்திவிட்டார்! யாராவது இந்தக் கொடுமையைக் கேட்க மாட்டீங்களா? - நான் இப்பிடி ஒருநாளும் சொல்ல மாட்டேண்ணே!! :-)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.