Sunday, May 29, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_13உன் வார்த்தைப்படியே

ஒருநாள் நானும்
காதல் மறந்திருப்பேன்.

அந்த நாளில்
உன்னைக் கண்டதும்என்
இதழ்கள் புன்னகைக்காது.

உன் கண்ணீரைத் துடைக்க
என் கைகளும் நீளாது.

உன் பெயர் சொல்ல
என் நாவும் எழாது.

என் உறவுக் கூட்டம்
உன்னை விலக்கி
என் உடலை எடுப்பார்கள்              
எரித்துப் புதையூட்ட!


"நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்பா. மதன் கேட்கிற மாதிரித் தெரியலை. இதுக்கு மேல அவன்கூடப் போராட எனக்கும் தெம்பில்லை” கசந்த உணர்வுடன் பேச ஆரம்பித்தார் மதனின் அப்பா.

“கட்டுனா அந்தப் பொண்ணைத் தான் கட்டுவேங்கிறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. மதனுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது, காலம்பூரா வாழப் போற பொண்டாடியை அவனால சரியா தேர்ந்தெடுக்க முடியுமா? இங்க என் சாதி சனமெல்லாம் ஏதாவது பிரச்சினைன்னா என் வீட்டுக்குத் தான் தேடி வர்றாங்க. நாந்தான் பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைக்கிறேன். நாளைக்கு என் மகன் அடுத்த சாதிப் பொண்ணைக் கட்டிக்கிட்டான்னு தெரிஞ்சா, என்னை மதிப்பாங்களா? அதான் எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு. நீ தான் அவனுக்கு நெருங்குன தோஸ்த் ஆச்சே..அதான் உன்கிட்ட மதனோட நிலை என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டேன்.  அந்தப் பொண்ணோட அம்மா வேற உங்க பையனால தான் என் பொண்ணு வாழ்க்கை போச்சுன்னு புலம்புது. அது வேற கஷ்டமா இருக்கு. பெண் பாவம் பொல்லாதது இல்லையா? மதன் அம்மா போனப்புறம் இந்த வீடும் களை இழந்து போச்சு. மதனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாத்தான் இங்க பழைய நிலைமை திரும்பும். அதனால மதன் விரும்புற பொண்ணையே கட்டி வச்சுடலாமான்னும் யோசனை.  என்ன செய்றதுன்னு தெரியலை.”

முழுக்க குழம்பிப் போய், மகனின் காதலுடன் போராடத் தெம்பின்றிப் புலம்பினார் மதனின் அப்பா. அம்மாவின் இடத்தில் ஜெனிஃபர் என்பது கேட்கவே நாராசமாய் இருந்தது எனக்கு.

“அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. மதன் சும்மா விளையாட்டாத் தான் அந்தப் பொண்ணு கூடப் பேச ஆரம்பிச்சான். அப்புறம் அந்தப் பொண்ணு அவனை விடாமப் பிடிச்சுக்கிச்சு. இப்பவும் அந்தப் பொண்ணு விட்டிடுச்சுன்னா, மதன் கொஞ்ச நாள்ல அவளை மறந்திடுவான்”

“இவனை மாதிரியே அந்தப் பொண்ணும் பிடிவாதக்காரியால்ல இருக்கா. இவன் இல்லைன்னா செத்திடுவாளாமே”

“இல்லைப்பா..அது வந்து..நான் என்ன சொல்றன்னா நம்ம வீட்டுக்கு வர்ற அளவுக்கு அது நல்ல பொண்ணு இல்லைப்பா”

“அப்படீன்னா?”

“வந்து..ஏற்கனவே எங்க சீனியர் ஒருத்தன்கூட சுத்துச்சு. அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையனோட பழக்கமாகி பிரச்சினை ஆயிடுச்சாம். நல்ல பொண்ணுன்னா நீங்க சொல்றபடி மதனுக்குக் கட்டி வைக்கலாம். ஆனால்...மதன் கட்டுனா எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சிரிப்பாங்க..அதான் நிலைமை”

“ம்” மீசையை முறுக்கியபடியே யோசிக்க ஆரம்பித்தார். முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“அப்போ என்ன தான் செய்யலாங்கிறே?”

“அந்தப் பொண்ணு மதனை விட்டு விலகணும். அது நடந்தாப் போதும், மதன் தானாத் திருந்திடுவான்”

“அப்படியா” என்ற படியே டெலிஃபோனை எடுத்தார்.

ஜெனிஃபரின் அம்மாவிற்கு டயல் செய்தார்.

“ஹலோ, யாரு பேசறது” ஜெனிஃபரின் அம்மாவின் குரல் கேட்டது.

“ம், உன் புருசன்” என்றார்.

“யாருங்க அது, மரியாதையாப் பேசுங்க”

”உனக்கென்னடி மரியாதை. மகளை ஊர் மேய விட்டுட்டுத் திரியிற நாயி. உன் பொண்ணு இப்போ மயக்கி வச்சிருக்காளே மதன். அவனோட அப்பா பேசிறேண்டி”

நான் வெலவெலத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இவர் இவ்வளவு ஆக்ரோசமாய்ப் பேசுவார் என்று எனக்குத் தெரிந்ததே இல்லை. வசவு தொடர்ந்தது.

“நான் யாரு தெரியுமாடி..இங்க வந்து என் பேரைச் சொல்லிக் கேட்டுப்பாருடி.. இங்க என் முன்னாடி நின்னு பேச ஆம்பிளைங்களே பயப்படுவாங்க. பொட்டக்கழுதை, நீ என்னை ஃபோன் பண்ணி மிரட்டுறே, இல்லே. என் மகன் ஆம்பிளைடி..அவன் பொண்ணு பின்னாடி சுத்தத்தான் செய்வான். உன் பிள்ளைக்கு எங்கடி போச்சு அறிவு? ஏற்கனவே பலபேரு கூட ஊர் மேஞ்சவ தானே உன் பொண்ணு..இப்போ அடுத்தவனைப் பார்த்துப் போக வேண்டியது தானே? என்ன ம..க்குடி என் பிள்ளையை விடாமப் பிடிச்சு தொங்குறீங்க..சொத்து கிடைக்கும்னா? இங்க பாரு, நாங்க யாரு, என்ன ஜாதி, எப்படிப் பட்டவங்கன்னு உன்  பொண்ணுக்குத் தெரியாம இருக்கலாம். உனக்குமாடி தெரியாது? மதுரையைத் தாண்டிக்க மாட்டா உன் பொண்ணு. கண்டந்துண்டமா வெட்டி எறிஞ்சுடுவோம். பொணம்கூடக் கிடைக்காது, பாத்துக்கோ. எங்க வந்து காட்டுறீங்க உங்க தே...த்தனத்தை? இனி ஒரு தடவை உன் பொண்ணு என் பையன்கூட சுத்துறான்னு தகவல் வந்துச்சு, அதோட உன் பொண்ணை மறந்துடு”

ஆவேசமாய்ப் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்தார். சிரிப்புடன் என் பக்கம் திரும்பினார்.

“சொல்லீட்டேன் தம்பி, இனிமே நம்ம பக்கம் வர மாட்டா. நான்கூட பொம்பளைப் பாவம் வந்துடக்கூடாதென்னு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். தே..கழுதைகளுக்கு என்ன மரியாதை சொல்லு”

நான் என்ன சொல்ல? ஒன்றும் சொல்லத் தெரியாமல் “ஆமாப்பா” என்றேன்.

“சரிங்க தம்பி, வாங்க ஏதாவது ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு, பஸ் ஏத்தி விடறேன்”

யோசனையோடே சாப்பிட்டு விட்டு, நல்லபடியாய் ஊர் வந்து சேர்ந்தேன்.

அப்போது மதன் சென்னையில் இருந்தான். அடுத்த இரு மாதங்கள் அவனை அப்பா மதுரைப் பக்கம் வரவிடவே இல்லை. மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகச் சான்றிதழ் பெற வருமாறு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. மதன் சந்தோசமானான்.

சான்றிதழ்களை வாங்கும் சாக்கில் ஜெனிஃபரைப் பார்த்து விடலாம் என்று சந்தோசத்துடன் வந்தான்.

“செங்கோவி, எப்படிடா இருக்கே? இன்னும் ஏண்டா ஊருலயே இருக்க..சென்னைக்கு வா. நாம சேர்ந்து வேலை தேடலாம்” ரொம்பக் குஷியுடன் பேசினான். ’சென்னை எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா’ எனப்து போன்ற பொது அறிவை மேம்படுத்தும் கேள்விகளைக் கேட்டான்.

எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது. கிளம்பும்போது “போலாமாடா?” என்றேன்.

“என்னடா கேணத்தனமாக் கேட்கே? இவ்வளவு தூரம் வந்திட்டு ஜெனிஃபரைப் பார்க்காமல் போனா அவ்வளவு தான். கொன்னே போடுவாள்” என்றான்.

அப்போது ஒரு பைக் எங்களை நோக்கி வந்தது.

ஜெனிஃபரின் கிளாஸ்மேட் அந்தப் பைக்கை ஓட்டி வந்தான். அவன் பின்னால் ஜெனிஃபர் அமர்ந்திருந்தாள்.

”ஜெனி” என்று கூப்பிட்டான் மதன். அவள் அவனைப் பார்த்ததும் சலனமே இல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

ஜெனிஃபர் புதுக் காதலனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது.மதனுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மதன் எதுவும் பேசாமல் கோபத்துடன் பஸ் ஏறினான்.

அதன்பிறகு 4 வருடங்களுக்கு மதனை நான் சந்திக்கவில்லை.

-------------------------- மன்மதன் லீலைகள் - முதல் பாகம் முற்றும் --------------------------

(தொடரும்..)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

 1. நான்தான் முதலு )

  ReplyDelete
 2. ////மதனுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது, காலம்பூரா வாழப் போற பொண்டாடியை அவனால சரியா தேர்ந்தெடுக்க முடியுமா? /// காதல்னா அநேக வீடுகளில் எழும் மொத வாக்குவாதம் இது தான் ,,,,

  நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு ...தொடருங்க பாஸ்...

  ReplyDelete
 3. நானு ரெண்டு நானு ரெண்டு நானு ரெண்டு

  ReplyDelete
 4. //”உனக்கென்னடி மரியாதை. மகளை ஊர் மேய விட்டுட்டுத் திரியிற நாயி. உன் பொண்ணு இப்போ மயக்கி வச்சிருக்காளே மதன். அவனோட அப்பா பேசிறேண்டி”
  //
  அடிக்கடி ஒலிக்கிறது காதில் ஹிஹி

  ReplyDelete
 5. போக விட்டிட்டு வானத்தை பாருங்க ஹிஹி

  ReplyDelete
 6. @கந்தசாமி. முதல் வருகைக்கு நன்றி கந்தரே.

  ReplyDelete
 7. @மைந்தன் சிவா//நானு ரெண்டு நானு ரெண்டு நானு ரெண்டு// சரிய்யா, இப்போ யாரு இல்லேன்னா?

  ReplyDelete
 8. @மைந்தன் சிவா//அடிக்கடி ஒலிக்கிறது காதில் ஹிஹி// அதை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்..புண்ணியும் கிட்டும்!

  ReplyDelete
 9. @தோழி பிரஷா( Tholi Pirasha) இது சொந்தக் கதை, சோகக் கதை ..தொடர்ந்தும் படியுங்கள் சகோதரி..உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 10. Interesting.... So who is next? When is the next episode/

  ReplyDelete
 11. @வினையூக்கி அடுத்த பகுதி, அடுத்த வாரம்!

  ReplyDelete
 12. /////வந்து..ஏற்கனவே எங்க சீனியர் ஒருத்தன்கூட சுத்துச்சு. அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையனோட பழக்கமாகி பிரச்சினை ஆயிடுச்சாம்//////

  உண்மை ஒரு பக்கம் அதை மெய்மையாக்கும் நம்மவர் ஒரு பக்கம்... தொடருங்கள் அப்பப்போ வந்தாலும் ரசனையோட படிக்க முடியுது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

  ReplyDelete
 13. ஆப்பு யாரும் வைக்க முடியாது கூட இருக்க நண்பன தவிர!...... என்று உணர்த்திய மாப்ளைக்கு நன்றி ஹிஹி!

  ReplyDelete
 14. என் உறவுக் கூட்டம்
  உன்னை விலக்கி
  என் உடலை எடுப்பார்கள்
  எரித்துப் புதையூட்ட!//

  ரொம்ப சோகமான முடிவாக இருக்கே சகோ. இது இக் காலத்திற்குச் சரிப்பட்டு வருமா.

  ReplyDelete
 15. கட்டுனா அந்தப் பொண்ணைத் தான் கட்டுவேங்கிறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. மதனுக்கு ஒரு நல்ல சட்டை எடுக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது, காலம்பூரா வாழப் போற பொண்டாடியை அவனால சரியா தேர்ந்தெடுக்க முடியுமா?//

  அதான் மதனுக்குப் பக்கத்தில் மாப்பிளை நீங்க இருக்கீங்களே, அட்வைஸ் சொல்லிக் கொடுக்க.

  ReplyDelete
 16. “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. மதன் சும்மா விளையாட்டாத் தான் அந்தப் பொண்ணு கூடப் பேச ஆரம்பிச்சான். அப்புறம் அந்தப் பொண்ணு அவனை விடாமப் பிடிச்சுக்கிச்சு. இப்பவும் அந்தப் பொண்ணு விட்டிடுச்சுன்னா, மதன் கொஞ்ச நாள்ல அவளை மறந்திடுவான்”//

  அதான் மாப்பு, ஒரு சில பெண்ணுங்க பிசின் மாதிரி, லேசிலை ஒட்டமாட்டாங்க, ஒட்டினாலும் விட மாட்டாங்க. அவ்.........

  ReplyDelete
 17. “வந்து..ஏற்கனவே எங்க சீனியர் ஒருத்தன்கூட சுத்துச்சு. அதுக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையனோட பழக்கமாகி பிரச்சினை ஆயிடுச்சாம். நல்ல பொண்ணுன்னா நீங்க சொல்றபடி மதனுக்குக் கட்டி வைக்கலாம். ஆனால்...மதன் கட்டுனா எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சிரிப்பாங்க..அதான் நிலைமை”//

  நான் ஏலவே நினைச்சேன், ஒரு நண்பனைக் காப்பாற்ற நீங்கள் இந்த அஸ்திரத்தைத் தான் இறுதியில் கையில் எடுப்பீங்க என்று.

  கரெக்டா இருக்கே தல.

  ReplyDelete
 18. ஆவேசமாய்ப் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்தார். சிரிப்புடன் என் பக்கம் திரும்பினார்.//

  அடடா, இடையிலை வில்லங்கமான வில்லத்தனம் நிரம்பியிருக்கே.

  ReplyDelete
 19. ஆவேசமாய்ப் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்தார். சிரிப்புடன் என் பக்கம் திரும்பினார்.//

  அடப் பாவி, இது எத்தினையாவது;-))

  ReplyDelete
 20. பொறுத்த கட்டதில் தொடரும் என்று போட்டு, கரண்டை கட்டாக்கிட்டீங்களே சகோ.

  ஊர் மொழி வழக்கு, அல்லது வட்டார வழக்கினைப் பொருத்தமான இடத்தில் கையாண்டு கதையினை மிக அழகாக நகர்த்திச் செல்கிறீர்கள்.

  ReplyDelete
 21. @middleclassmadhavi //Good twists...// நன்றி சகோதரி.

  ReplyDelete
 22. @♔ம.தி.சுதா♔ ’அப்பப்போ’ வருகைக்கு நன்றி சுதா.

  ReplyDelete
 23. @விக்கி உலகம்//ஆப்பு யாரும் வைக்க முடியாது கூட இருக்க நண்பன தவிர!......// இப்போ நீங்க நீதி சொல்லலைன்னு யாரு அழுதா?

  ReplyDelete
 24. @நிரூபன்//அதான் மாப்பு, ஒரு சில பெண்ணுங்க பிசின் மாதிரி, லேசிலை ஒட்டமாட்டாங்க, ஒட்டினாலும் விட மாட்டாங்க. அவ்......// அப்படியா சகோ...எனக்கு உங்க அளவுக்கு அனுபவம் இல்லைய்யா..

  ReplyDelete
 25. @நிரூபன்ரொம்ப சோகமான முடிவாக இருக்கே சகோ. இது இக் காலத்திற்குச் சரிப்பட்டு வருமா.// ஜெனிஃபரைப் பார்த்துமா இந்தச் சந்தேகம்?

  ReplyDelete
 26. @நிரூபன்//நான் ஏலவே நினைச்சேன், ஒரு நண்பனைக் காப்பாற்ற நீங்கள் இந்த அஸ்திரத்தைத் தான் இறுதியில் கையில் எடுப்பீங்க என்று.// ஹி..ஹி.

  ReplyDelete
 27. >>எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது.

  sari சரி அண்ணே.. தப்பு அதிகமா பண்ணூனா அப்படித்தான்

  ReplyDelete
 28. விக்கி உலகம் said... [Reply]

  ஆப்பு யாரும் வைக்க முடியாது கூட இருக்க நண்பன தவிர!...... என்று உணர்த்திய மாப்ளைக்கு நன்றி ஹிஹி!


  பதிவுலகில் பழக்கமான 90% பேரை மாப்ளை என்றே அழைக்கும் மச்சான் விக்கி தக்காளி வாழ்க.. ஹி ஹி

  ReplyDelete
 29. அண்ணன் வச்சான் பாரு ஆப்பு நச்சுன்னு! பின்னிடீங்க! என்னா ராஜதந்திரம்!

  உங்களை நினச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! - உபயம் எல்லா டீ.வி.சீரியல்களும்!

  அண்ணேன்டா!

  ReplyDelete
 30. @சி.பி.செந்தில்குமார்//சரி அண்ணே.. தப்பு அதிகமா பண்ணூனா அப்படித்தான்// சரிய்யா..விடுங்க..விடுங்க!

  ReplyDelete
 31. @ஜீ...//அண்ணன் வச்சான் பாரு ஆப்பு நச்சுன்னு! பின்னிடீங்க! என்னா ராஜதந்திரம்!// இது பாராட்டா திட்டான்னே தெரியலையே..

  ReplyDelete
 32. அவ்வ்வ்வ்வ் ஆப்பு.....

  ReplyDelete
 33. அப்பாவும் நண்பனுமாக,ஒரு வழி பண்ணிட்டீங்க!

  ReplyDelete
 34. அன்பின் செங்கோவி - கதை அருமையாகச் செல்கிறது. இயல்பான நடையில் இயல்பான சொற்கள். தொடரும் போட்டாச்சு - காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.