Sunday, May 1, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_4

முந்தைய பகுதிகளுக்கு இங்கே!

தேவதை உயிர் காற்று
வான் மேகம் மழை
அன்பு அன்னை அழகு
தோழி காதலி தெய்வம்
என கண்ணன் புகழ்ந்தான்.

ஆயினும் ராதைதிருப்தி
பெறவில்லை. – நான்
உன் பெயர் சொல்லி
கண்ணனை அனுப்பினேன்.
சற்று நேரத்தில்
புல்லாங்குழல் ஓசை
கேட்டது.


சிவாவும் சாமானியப்பட்ட ஆளில்லை. கழுவுகிற தண்ணியில் நழுவுகிற மீன் அவன். மதன் அதன்பிறகு ஒரு மாதமாகத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்வான் சிவா.

’இன்னைக்கு அவ மூடே சரி இல்லைடா மாப்ள”
“இன்னைக்க்கு அவ ஃப்ரண்ட்ஸ்கூடவே இருந்தாங்கடா..ஒன்னும் பேச முடியலை”
”இன்னைக்கு அவ ஊருக்குப் போறாடா..”-என சளைக்காமல் சமாளித்துக் கொண்டு வந்தான் சிவா. 

ஒருநாள் மதன் பொறுமை இழந்தான்.

“என்னதாண்டா நினைச்சுக்கிட்டிருக்கே? எனக்கு ஹெல்ப் பண்ணுவியா? மாட்டியா?” என்று கோபமாகக் கேட்டான்.
“நான் என்ன செய்யட்டும்? அவசரப்பட்டுப் பேசி காரியம் கெட்டிடக் கூடாதுல்ல” என்று சிவா சமாளித்துக் கொண்டிருக்கும்போது, வேகமாக அறைக்குள்நுழைந்தான் பழனி.
”ஒரு முக்கியமான விசயம் பேசணும், எல்லாரும் உட்காருங்க!” என்றான். பழனி இவ்வளவு சீரியஸாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எனவே என்னவோ ஏதோ என்று பதறிப் போய் உட்கார்ந்தோம்.

கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை விரித்தான். அது மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தகப் பட்டியல். இப்போது பதிவர்களே வெந்நீர் வைப்பதில் இருந்து கம்ப்யூட்டர் அசெம்ப்ளி வரை எழுதி விடுகிறார்கள். இணையக் காலத்திற்கு முன் அவர்களது பல ‘எப்படி?’ புத்தகங்கள் மிகவும் பாப்புலர். அந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை விரித்துக் காட்டினான்.

“கொக்கோக முனிவரின் காம சாஸ்திரம் - விலை ரூ.30/-’ என்று போட்டிருந்தது. மதன் கடுப்பாகி விட்டான். 

”இதுக்கா உட்காரச் சொன்னே?” என்றான். 

“ஆமா, இதுவும் வாழ்க்கைக்கு முக்கியமான விசயம் தானடா. இப்போ நீ லவ் பண்றே. எதுக்கு? கல்யாணம் பண்ணத் தானே? கல்யாணம் எதுக்கு? இதுக்குத் தானே? அதனால எங்களை விட நீ தான் இதை முதல்ல படிக்கணும்’ என்றான். 
“பழனி சொல்றதும் சரிதான்” என்றேன் நான். 

“இப்போ இதுல ரெண்டு பிரச்சினை” என்றான் பழனி.
“என்ன பிரச்சினை?” என்று மதனிடம் இருந்து தப்பிய சந்தோசத்துடன் சிவா கேட்டான்.
“முதல்ல காசு. 30 ரூபாய்க்கு எங்க போறது?”
“மதன் எதுக்கு இருக்கான்? அவன் லவ்வுக்கெல்லாம் நாம ஹெல்ப் பண்றோம். நமக்கு இது பண்ண மாட்டானா?” என்றேன்.
“கரெக்ட்டு! மதன், நீ காசை எடு. நாங்க மணியார்டர் அனுப்பணும்” என்று பழனி மிரட்டலாகக் கேட்டான்.
மதன் எதுவும் சொல்லாமல் காசை எடுத்துக் கொடுத்தான்.

“இப்போ அடுத்த பிரச்சினை. இதை யார் பேருல அனுப்புறது?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் எல்லாருமே மிரண்டார்கள். ஏனென்றால் எங்கள் ஹாஸ்டலுக்கு வரும் எல்லாக் கடிதங்களும் வார்டன் ரூமிற்குப் போய்விட்டே வரும். பார்சல் என்றால், பெரும்பாலிம் பிரித்துப் பார்த்துவிட்டே கொடுப்பார்! எனவே எல்லோரும் பயந்த போது, நான் தைரியமாக “எம்பேர்ல அனுப்புங்கடா! நான் பார்த்துக் கிடுதேன்!” என்றேன்.

நண்பர்களுக்கு மகிழ்ச்சி. உடனே பழனியும் நானும் போஸ்ட் ஆஃபீஸ் போய், மணியார்டர் அனுப்பினோம். பழனியே உற்சாகமாக எல்லாவற்றையும் நிரப்பி அனுப்பினான்.

திரும்பி ரூமிற்கு வருகையில் கேட்டான். “எப்படிடா இவ்வளவு தைரியமா ஒத்துக்கிட்டே? வார்டன் பிரிச்சுப் பார்த்துட்டா என்ன பண்ணுவே?” என்றான்.
“அதை நான் அனுப்பலை சார். என்னைப் பிடிக்காத பாவிப்பய எவனோ அனுப்பி இருக்கான். சந்தேகம்னா நம்ம போஸ்ட் ஆஃபீஸ்ல போய் யார் மணியார்டன் அனுப்பியிருக்காங்கன்னு கையெழுத்தைச் செக் பண்ணுங்கன்னு சொல்லுவேன்!” என்றேன்.

பழனி அரண்டு போய் நடுரோட்டில் நடக்க மறந்து நின்றான்.
“வாடா மாப்ளை, வார்டன் என்ன பெரிய இவனா..பாத்துடுவோம்..வா!” என்றேன். அவன் செம கடுப்பாகி என்னை அடிக்க விரட்டினான். வேகமாக ரூமை நோக்கி ஓடினேன்.

ரூம் வாசலில் கூட்டம் இருந்தது. விலக்கி விட்டு உள்ளே நுழைந்தேன்.

கையில் பிளேடுடன் மதன் நின்றிருந்தான். எதிரே மிரண்டு போய் சிவா!

“ஐ லவ் பிரவீணா” என்று சொல்லியபடியே கையை பிளேடால் அறுத்தான் மதன். 

ரத்தம் பீறிட்டு அடித்தது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

 1. முஸ்தப்பா முஸ்தப்பா
  டோன் வெரி முஸ்தப்பா.....
  காலம் நம் தோழன் முஸ்தப்பா

  ReplyDelete
 2. மனசே மனசே மனசில் பாரம்
  நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

  ReplyDelete
 3. கல்லூரி நட்பிற்கு இல்லை முற்றுப் புள்ளியே

  ReplyDelete
 4. எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த
  எங்களை ஒன்றாக்கிய கல்லூரிக்கு நன்றி சொல்கிறோம்.........

  ReplyDelete
 5. க...க..கல்லூரி வாசல்.....

  ReplyDelete
 6. சைட் அடிப்போம், தம் அடிப்போம் தண்ணியைத் தான் கலந்தடிப்போம்...

  ReplyDelete
 7. மேற் கூறியவை எல்லாம் என்னன்னா,
  கல்லூரிப் பெருமைகளை பற்றி கூறும் கலக்கலான பாடல்கள்.

  ReplyDelete
 8. இனிய ”மே”தின வாழ்த்துகள்

  ReplyDelete
 9. வாக்குகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 10. @நிரூபன்அடப்பாவிகளா..இண்ட்லில சேர்த்துட்டு வரமுன்ன பாட்டுக்குப் பாட்டா..இங்கயுமா..நல்லா இருக்கு!

  ReplyDelete
 11. @பாரத்... பாரதி...தங்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகள்..அதற்கான பதிவு நாளை..இன்று ஞாயிறு என்பதால் போடவில்லை..ஹி..ஹி!

  ReplyDelete
 12. தேவதை உயிர் காற்று
  வான் மேகம் மழை
  அன்பு அன்னை அழகு
  தோழி காதலி தெய்வம்
  என கண்ணன் புகழ்ந்தான்.

  ஆயினும் ராதை – திருப்தி
  பெறவில்லை. – நான்
  உன் பெயர் சொல்லி
  கண்ணனை அனுப்பினேன்.
  சற்று நேரத்தில்
  புல்லாங்குழல் ஓசை
  கேட்டது.//

  அருமையான கவிதை...

  முதல் பந்தியில் வார்த்தைகள் ஒரு இலயம் கலந்த நயத்தோடு வந்திருக்கின்றன.

  ReplyDelete
 13. “கொக்கோக முனிவரின் காம சாஸ்திரம் - விலை ரூ.30/-’ என்று போட்டிருந்தது. மதன் கடுப்பாகி விட்டான்.

  ”இதுக்கா உட்காரச் சொன்னே?” என்றான்.//

  நமா எல்லாம் ஸ்கூலில் புத்தகத்தின் நடுவில் வைத்து இதெல்லாம் படிச்சிருகிறோம்.
  ஹி...ஹி..
  நீங்க காலேஜ்ஜில தான் இது படிச்சீங்களா...
  அவ்.....ரொம்ப லேட்டு

  ReplyDelete
 14. @நிரூபன்நான் ஒரு அப்பாவின்னு இப்பவாவது நம்புறீங்களா?

  ReplyDelete
 15. “ஐ லவ் பிரவீணா” என்று சொல்லியபடியே கையை பிளேடால் அறுத்தான் மதன்.

  ரத்தம் பீறிட்டு அடித்தது.//

  இப்பூடி நம்ம ஸ்கூலிலையும் பசங்க பண்ணியிருக்காங்க...
  ஹி..ஹி...
  காதலிக்கா விட்டால், இயக்கத்திற்கு போவேன் என்று வேறு மிரட்டுவாங்க பொண்ணுங்களை;-))

  ReplyDelete
 16. புத்தகத்திற்காக ரிஸ்க் எடுக்கிறீங்க...ஏன் பொட்டிக் கடைகளில் இதெல்லாம் விற்க மாட்டார்களா?

  ReplyDelete
 17. பாரத் பாரதி, செங்கோவி, மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. சுவாரசியமாக தொடரை நகர்த்துறீங்க சகோ.

  கல்லூரிக் கால குறும்புகளை தவற விடாது எல்லாவற்றையும் எழுதப் போகிறீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 19. @நிரூபன்//இப்பூடி நம்ம ஸ்கூலிலையும் பசங்க பண்ணியிருக்காங்க...// எல்லா இடங்களிலும் இந்தக் கூத்து உண்டு போலிருக்கே..

  ReplyDelete
 20. @நிரூபன்//ஏன் பொட்டிக் கடைகளில் இதெல்லாம் விற்க மாட்டார்களா?// ஹி..ஹி..அது வேற..இது வேற!

  ReplyDelete
 21. @நிரூபன்//கல்லூரிக் கால குறும்புகளை தவற விடாது எல்லாவற்றையும் எழுதப் போகிறீர்கள் என நினைக்கிறேன்.// அது சும்மா சைடு டிஷ் தான் சகோ!

  ReplyDelete
 22. மன்மதன் எப்போ களத்துல இறங்குவான்?

  ReplyDelete
 23. //நான் தைரியமாக “எம்பேர்ல அனுப்புங்கடா! நான் பார்த்துக் கிடுதேன்!” என்றேன்//
  அண்ணன் பெரிய தைரியசாலிதான்! :-)

  ReplyDelete
 24. //பழனி அரண்டு போய் நடுரோட்டில் நடக்க மறந்து நின்றான்.
  “வாடா மாப்ளை, வார்டன் என்ன பெரிய இவனா..பாத்துடுவோம்..வா!” என்றேன்//
  கொன்னுட்டீங்க! செம்ம! :-)

  ReplyDelete
 25. @தமிழ்வாசி - Prakash//மன்மதன் எப்போ களத்துல இறங்குவான்?// இப்படி படிக்காம பின்னூட்டம் போடறதை நிறுத்துற வரைக்கும் இறங்க மாட்டான்!

  ReplyDelete
 26. @ஜீ...//அண்ணன் பெரிய தைரியசாலிதான்! :-)// ஹி.ஹி!

  ReplyDelete
 27. நடத்துங்க நடத்துங்க, நல்லா இருக்கு....

  ReplyDelete
 28. சிவா ஜகஜாலக் கில்லாடியா இருப்பான் போல. நடக்கட்டும் நடக்கட்டும். சுவாரசியம் கூடிக்கொண்டேப்போகின்றது. மதன் நாயகனா எதிர் நாயகனா ,

  ReplyDelete
 29. @MANO நாஞ்சில் மனோபாராட்டுக்கு நன்றிண்ணே!

  ReplyDelete
 30. @வினையூக்கிசிவாவே பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கான்..மதன் நம்மளை மாதிரி தான்!

  ReplyDelete
 31. @!* வேடந்தாங்கல் - கருன் *!லேட் ஆயிடுச்சுன்னா, புது பதிவைப் படிக்க வேண்டியது தானே...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.