Saturday, May 7, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_5

விழிகளால் என்னுள்
காதல் தீ வளர்த்தாய்.
காதலை வெளிப்படுத்தினால்
தவித்துப் புலம்புகிறாய்.

ஆழ அகழி தோண்டி
அதன் நடுவே
அரண்மனை கட்டி
முதலை வளர்த்தால்
மாற்றானை மட்டுமல்லாது
மன்னனையும் விழுங்குமடி அது!.


முந்தைய பகுதிகளுக்கு: இங்கே

“ஐ லவ் பிரவீணா” என்று சொல்லியபடியே கையை பிளேடால் அறுத்தான் மதன். 

ரத்தம் பீறிட்டு அடித்தது.

பதறிப் போய் நானும் பழனியும் ப்ளேடைப் பிடுங்கிப் போட்டோம். பின்னர் நண்பர்களிடம் பேண்டேஜ் வாங்கி ஒட்டினோம். விஷ்யம் வெளியில் தெரியாமல் இருக்க படாத பாடு பட்டோம்.

இனியும் இந்த விஷயத்தில் நாம் விளையாட்டாக இருக்கலாகாது என்பதை உணர்ந்தோம். சிவாவிடம் நானும் வற்புறுத்த ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் சிவாவின் வகுப்பில் டூர் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது.

“டேய், அவன் எவ்வளவு சின்சியரா லவ் பண்றான்னு இப்பவாவது தெரியுதா? அந்தப் பொண்ணு கிட்ட நீ பேசு. நாம அவன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணனும். இது தான் சரியான சமயம். டூரில் அவ நல்ல மூடில் இருக்கும்போதே சொல்லி விடு” என்று நானும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

சிவாவும் சரி, சரி என்று தலையாட்டியவாறு டூருக்குக் கிளம்பினான். 

ஸ் கிளம்பியதும், பழனி என்னிடம், “மாப்ள, பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் வரை போக வேண்டியிருக்கு. வா” என்று அழைத்துச் சென்றான். 

அப்போது மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் மதுரையில் கிடையாது. மாடும் தாவணியும் தனித்தனியே இருந்த நேரம்! தென் மாவட்டங்களுக்குச் செல்ல பழங்காநத்தம் தான் பஸ் ஸ்டாண்ட்.

நாங்கள் போய் இறங்கியதும், பழனி ரிலாக்ஸாக ஒரு ஆப்பிள் ஜூஸ் குடித்தான். அப்போது ஒரு திருநெல்வேலி பஸ் எங்களைக் கடந்தது. அந்த பஸ்ஸை நோக்கி பழனி ஓட ஆரம்பித்தான். 

பஸ்ஸை நெருங்கிய உடன், கடைசி சீட்டில் இருந்தவரிடம் “இந்த பஸ் திர்நவேலி போகுமா?” என்று சத்தமாகக் கேட்டான்.

அவரும் “ போகும் தம்பி” என்று அவசரமாகப் பதில் சொன்னார்.
“சரி, போகட்டும்” என்று சொல்லி விட்டு நின்றுவிட்டான்.

அந்த கடைசி சீட் ஆசாமி “வாங்க தம்பி...கண்டக்டர், ஆள் வருது..ஆள் வருது” என்று கூவிக் கொண்டிருந்தார். பழனி திரும்பி வந்து ஜூஸ் குடிப்பதைத் தொடர்ந்தான்.

நான் அரண்டு போனேன்.”என்னடா பண்றே?”

“மாப்ளே, இது செம ஜாலியான விளையாட்டுடா. கடைசி சீட்ல எவனாவது மாக்கான் இருந்தான்னு வச்சுக்கோயேன்.இப்படித்தான் ஓடிப் போய் கேட்பேன். நான் என்ன கேட்டேன். ‘பஸ் 

திர்நவேலி போகுமான்னு’ அவன் போகும்னு சொன்னதோட முடிஞ்சது. என்னை எதுக்கு ஏறச் சொல்றான்..”

“அடப்பாவி. மாட்டுனா அடி பின்னிருவாங்கடா”
“அப்படில்லாம் மாட்ட மாட்டோம். ஏற்கனவே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்ல நிறையத் தடவை இதைப் பண்ணி இருக்கேன்” என்று பழனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகர்கோவில் பஸ் எங்களைக் கடந்தது. பழனி ஓட ஆரம்பித்தான்.

இந்த முறை கடைசி சீட்டில் தடிமனான ஆண்ட்டி!

“அக்கா, இந்த பஸ் நாகர்கோவில் போகுமா?” என்று ஓடியவாறே மூச்சிரைக்கக் கேட்டான் பழனி.

ஆண்ட்டி கத்த ஆரம்பித்தது.” கண்டக்டர் ஆள் வருது..நிப்பாட்டுங்க..தம்பி போகும் வாங்க..” பெண்களின் குரலுக்குத் தான் இங்கு தனி மதிப்பு உண்டே!  பஸ் திடீரென நின்றது.

பழனி திரும்பி ஓட ஆரம்பித்தான். நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன்.

மூன்று நாட்கள் கழித்து, சிவா டூர் முடிந்து வந்து சேர்ந்தான்.

“அவ என்னடா சொன்னா?” என்று மதன் ஆவலாய்க் கேட்டான். 
“ இல்லைடா, நான் இன்னும் சொல்லலை..சரியான சந்தர்ப்பம்...” என்று சிவா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து உருகிய மெழுகை தன் கை 

மேல் ஊற்றினான் மதன். தொடர்ந்து மெழுகுவர்த்தியை கைமேல் ஏற்றி அணைத்தான்.

சிவா பயந்து போனான். ஆனால் என்னை விடவும் கல்லுளி மங்கன் சிவா என்பது டூர் ஃபோட்டோஸ் வந்த போது தெரிந்தது.
எல்லா ஃபோட்டோவிலும் பிரவீணாவுக்கு அருகில் நெருங்கி நின்றுகொண்டு, சிரித்துக் கொண்டிருந்தான் சிவா. அவனும் பிரவீணாவை ரூட் விடுகிறானோ என்ற சந்தேகமே அப்போது தான் எங்களுக்கு வந்தது.

இன்றுவரை உண்மை தெரியவில்லை. ஆனால் மதன், பிரவீணாவை சிவா தட்டிச் சென்று விட்டதாகவே நினைத்து சிவாவை அடிக்கப் பாய்ந்தான்.

“வெறும் ஃப்ரண்ட்ஷிப் தான். வேற ஒன்னும் இல்லை. நான் நாளைக்குக் கேட்டிருதேன்” என்று சிவா சத்தியம் செய்தான்.

“நாளைக்கு மட்டும் கேட்கலை..மவனே செத்தே” என்றான் மதன்.

அடுத்த நாள் லேபில் இருக்கும்போது சிவா பிரவீணாவை நெருங்கினான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பிரவீணா, ஃப்ரீயா?” என்றான்.

”ஏ, சிவா..நான் உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..இந்த மதன் உன் ரூம் மேட் தானே? அவன்கிட்ட நான் சொன்னேன்னு ஒன்னு சொல்லணும், 

சொல்வியா?”

“சொல்லு”

“இனிமே அவனை என்கிட்டப் பேச வேண்டாம்னு சொல்லு. அதுமட்டுமில்ல, என்னைப் பத்தி யார்கிட்டவும் எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லு. இல்லைன்னா, நான் பிரின்சிபால்கிட்ட 

கம்ப்ளையிண்ட் பண்ண வேண்டி இருக்கும்!”

மதன் சொன்ன எதையுமே பிரவீணாவிடம் சொல்லாத சிவா, பிரவீணா சொன்ன இதை மட்டும் தெளிவாக மதனிடம் சொன்னான்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. In office...Will 'kummi' after some time...

  ReplyDelete
 2. hope Siva shall be there throughout the story

  ReplyDelete
 3. " ஃபோட்டோவிலும் பிரவீணாவுக்கு அருகில் நெருங்கி நின்றுகொண்டு, சிரித்துக் கொண்டிருந்தான் சிவா. அவனும் பிரவீணாவை ரூட் விடுகிறானோ என்ற சந்தேகமே அப்போது தான் எங்களுக்கு வந்தது.
  இன்றுவரை உண்மை தெரியவில்லை. "

  :)

  ReplyDelete
 4. அடப்பாவி. மாட்டுனா அடி பின்னிருவாங்கடா”
  “அப்படில்லாம் மாட்ட மாட்டோம். ஏற்கனவே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்ல நிறையத் தடவை இதைப் பண்ணி இருக்கேன்” என்று பழனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகர்கோவில் பஸ் எங்களைக் கடந்தது. பழனி ஓட ஆரம்பித்தான்.//

  ஆஹா...மேட்டர் இப்படிப் போகுதா...

  ReplyDelete
 5. பழனி திரும்பி ஓட ஆரம்பித்தான். நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன்.//

  ஓடும் போது, டவுசரைக் கையில் பிடிச்சுக் கொண்ட்டா ஓடினீங்க.

  ReplyDelete
 6. பழனி திரும்பி ஓட ஆரம்பித்தான். நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன்.//

  ஒரு சில நண்பர்களின் தவறான புரிதல்கள், வாழ்க்கையினையே திசை மாற்றி விடும் என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு.

  ReplyDelete
 7. //நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன்.// :-))

  ReplyDelete
 8. @டக்கால்டிவடை வாங்கிய டகால்ட்டிக்கு ஜே!

  ReplyDelete
 9. @வினையூக்கி//hope Siva shall be there throughout the story// may be...may not be!

  ReplyDelete
 10. @நிரூபன்//ஓடும் போது, டவுசரைக் கையில் பிடிச்சுக் கொண்ட்டா ஓடினீங்க.// காலேஜ் யூத்கிட்ட இப்படிக் கேட்கலாமா..

  ReplyDelete
 11. @middleclassmadhavi////நானும் பயந்து போய் ஜூஸ் கடையிலிருந்து வேறு பக்கம் ஓட ஆரம்பித்தேன்.// :-))// தம்பி ஓடுனதுல என்னா ஒரு சந்தோசம்..

  ReplyDelete
 12. "மதன் சொன்ன எதையுமே பிரவீணாவிடம் சொல்லாத சிவா, பிரவீணா சொன்ன இதை மட்டும் தெளிவாக மதனிடம் சொன்னான்!"

  >>>>>>>>>>>>

  நண்பன்டா ஹிஹி!

  ReplyDelete
 13. வழக்கம் போல அருமை....

  அந்த பெருந்துநிலையம் செம காமெடி...

  இதுபோல பலசை எல்லாம் நெனசி பாக்கும்போது எவளோ சந்தோஷமா இருக்கு இல்ல...

  அந்த பஸ் பத்தி படிக்கும்போது என்னோட ஃபிரண்ட்ஸ் ஞாபகம்/நினைவுகள் வந்து உற்சாகமூட்டியது...

  ReplyDelete
 14. பிரவீணா சினேகா மாதிரியா இருப்பாங்க....

  ReplyDelete
 15. @விக்கி உலகம்//நண்பன்டா ஹிஹி! // அப்படி ஒரு நண்பன் கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்.

  ReplyDelete
 16. @RK நண்பன்..தேவி தியேட்டர் ஞாபகம் வந்துச்சா ஆர்கே?

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோசிநேகால்லாம் சும்மா ஜுஜூபி பாஸ்!

  ReplyDelete
 18. சிவான்னு பேரு வச்ச பசங்க எல்லாமே பொண்ணுக மேட்டர்ல செம பார்ம்ல இருப்பாங்களாமே உண்மையா பாஸ்?

  ReplyDelete
 19. >>அவனும் பிரவீணாவை ரூட் விடுகிறானோ என்ற சந்தேகமே அப்போது தான் எங்களுக்கு வந்தது.

  அண்ணே.. ரூட் விடரதுன்னா என்ன? ஹி ஹி

  ReplyDelete
 20. @இரவு வானம்//சிவான்னு பேரு வச்ச பசங்க எல்லாமே பொண்ணுக மேட்டர்ல செம பார்ம்ல இருப்பாங்களாமே உண்மையா பாஸ்?// ஆமா நைட்டு, அதுவும் ராஜபாளையத்து ஆளுங்கன்னா ஃபுல் ஃபார்ம்ல இருப்பாங்க!

  ReplyDelete
 21. @சி.பி.செந்தில்குமார்//ரூட் விடரதுன்னா என்ன? ஹி ஹி// குருவே, சிஷ்யனை இப்படிச் சோதிக்கலாமா?

  ReplyDelete
 22. @செங்கோவி

  ஆமாங்க சொந்த ஊர்ல இருந்தாலும் தேவி தீயேட்டர் போனதே இல்ல, போஸ்டர் அக் கூட பயந்து பயந்து பார்ப்பேன்.. (யாரும் நம்ம பாக்குரத பாதுட கூடாதுள்ள)

  நீங்க போயி இருக்கேங்களா?

  ReplyDelete
 23. @RK நண்பன்..ச்சே..ச்சே..யாரைப் பாத்து என்ன கேள்வி...யாராவது சொந்த ஊருல சீன் படம் பார்ப்பாங்களா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.