Saturday, May 7, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_6

கடலில் பிறந்த
மீன் குஞ்சுக்கு
கடலைக் காண ஆசை.
தாய் மீனும்
தண்ணீரைக் காட்டி
இதுவே கடல் என்றது.
இது தண்ணீர்
கடல் எங்கேயென
அடம்பிடித்தது மீன் குஞ்சு.

தாய் மீனும்
கரையில் நின்ற
உன்னைக் காட்டிச் சொன்னது:
அவளைச் சூழ்ந்திருக்கும்
அவனது காதலை
அவளால் உணரமுடியாதது போல
உன்னைச் சூழ்ந்தகடலை
உன்னால் உணரமுடியாது.”


முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

“இனிமே அவனை என்கிட்டப் பேச வேண்டாம்னு சொல்லு. அதுமட்டுமில்ல, என்னைப் பத்தி யார்கிட்டவும் எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லு. இல்லைன்னா, நான் பிரின்சிபால்கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ண வேண்டி இருக்கும்!”

மதன் சொன்ன எதையுமே பிரவீணாவிடம் சொல்லாத சிவா, பிரவீணா சொன்ன இதை மட்டும் தெளிவாக மதனிடம் சொன்னான்!

பிரவீணா அப்படிச் சொன்னது மதனுக்குத் தெரியும் முன்பே கல்லூரி முழுதும் பரவியிருந்தது. அதுவும் சிவாவின் கைங்கரியம் தானா என்பது எங்களுக்குப் புரியவில்லை. பிரவீணா மதனின் காத்லை ஏற்க மறுத்தது பலருக்கும் ஆச்சரியம் தந்தது.

‘ஒரு பொண்ணை மடக்குறது ரொம்ப ஈஸி. டெய்லி அவ போற பஸ்ல/பாதைல நீயும் பின்னாடியே போகணும். முதல்ல கவனிக்க மாட்டாளுக..தொடர்ந்து போனா, கொஞ்சநாள்ல அவளுகளுக்கு நாம ஃபாலோ பண்றது தெரியும். உடனே கடுப்பாயிருவாளுக. முறைக்குறது, சில நேரங்கள்ல திட்டுறதுன்னு ஏதாவது செய்வாளுக. பயந்திடக்கூடாது. மான ரோஷத்தையெல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு, விடாம கண்டினியூ பண்ணனும். அப்புறம் அவளுகளுக்கு ஒரு சலனம் வரும். அது தான் சமயம்..அந்த நேரம் கைல ப்ளேடால கிழிச்சுக்கணும்.. இல்லே நீ இல்லேன்னா செத்துடுவேன்னு மிரட்டணும்..ச்சே, நமக்காக இப்படி ஒருத்தன் உருகுறானேன்னு அப்போ தான் ஃபீல் பண்ணுவாளுக..அவ்வளவு தான்..ஆளு ஃப்ளாட்!’ - இது தான் ஆண்கள் மத்தியில் தொடர்ந்து ‘தலைமுறை தலைமுறையாக’ சொல்லப்பட்டு வரும் விஷயம்.

பல பெண்கள் இந்த முறையில் வீழ்த்தப்பட்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மதன் யாரும் சொல்லாமலேயே அதைச் செய்தான். பிரவீணா அவ்வளவு உறுதியாக நிற்பாள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நின்றாள்.

மதனின் காதல் தோல்வி என்பது தெளிவாக டிக்ளேர் செய்யப்பட்டது.

வேகமாகச் சைக்கிளில் செல்லும்போது தடுக்கி விழுந்தால், முதலில் நாம் கவனிப்பது ‘யாராவது நம்மைப் பார்த்து விட்டார்களா?’ என்பதையே. யாரும் கவனிக்கவில்லையென்றால், அடுத்த அரைமணி நேரத்தில் அதை நாம் மறந்திருப்போம். யாரோ சில ஆண்கள் பார்த்திருந்தால், சில நாட்களுக்கு அந்த வருத்தம் நீடிக்கும். அதே சமயம், யாராவது ஒரு பெண் பார்த்து விட்டால், வருத்ததில் மூழ்கிப் போவோம். நமது ஈகோ மிக மோசமாக அடிபடும்.

மதனின் காதல் தோல்வியிலும் அதுவே நடந்தது. யாருக்கும் தெரியாத, சொல்லப்படாத காதல்கள் மேகங்களைப் போல எந்தவொரு சுவடும் இல்லாமல் கலைந்து போகின்றன. ஒரு சிலருக்குத் தெரியவந்த காதல், சில மாதங்களுக்காவது வலியைக் கொடுக்கிறது. கல்லூரி முழுக்கத் தெரிந்த மதனின் காதல், அவனது ஈகோவை மிகவும் பாதித்தது. ஒரு பெண்ணிடம் தோல்வி என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தான் ஒரு ஹீரோ தான் என்று நிரூபிக்க விரும்பினான். முடியாமல் அழுதான், கோபம் கொண்டான். சிவாவைப் பார்க்கும்போதெல்லாம் அடிக்கப் பாய்ந்தான். 

ஒருநாள் சிவா ஊருக்குக் கிளம்பியவன், தன் பேக்கை செக் பண்ணிய போது, உள்ளே செக்ஸ் புக் இருந்தது. பதறிப் போய் ‘யார் இதை என் பேக்கில் வைத்தது?” என்றான்.

பதில் இல்லை. ஆனாலும் எல்லோருகும் தெரிந்தது மதன் தான் அதைச் செய்திருப்பான் என்று. அன்று மட்டும் செக் பண்ணாமல் சென்றிருந்தால், சிவா வீட்டில் நிச்சயம் அவமானப்பட்டிருப்பான்.

மதனின் நடவடிக்கைகள் எங்களுக்கு கவலையை உண்டாக்கியது.

தாயின் பிரிவு, காதலில் தோல்வி என அவனுக்குத் துன்பங்கள் தொடர்ந்தன. அவன் பிரவீணாவை எதுவும் செய்துவிடுவானோ என்று பழனி பயந்தான்.              

’அப்படியெல்லாம் நடக்காது, மதன் அந்தளவிற்குக் கெட்டவனும் இல்லை, தைரியசாலியும் இல்லை’ என்று சொன்னேன்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பர். முதல் காதலை மறக்கடிக்க, இரண்டாவது காதல் மதனைத் தேடி வந்தது.

ஒருநாள் முகமெல்லாம் சிரிப்பாக மதன் வந்தான்.

“என்னடா?”
“டேய், ஜெனிஃபர் என்கிட்ட பேசினாடா” என்றான்.
“எந்த ஜெனிஃபர்?..நம்ம சீனியர் ஒருத்தன்கூட சுத்துவாளே, அவளா?”
“ஆமாடா!”

புதிய காதல், பல புது அனுபவங்களை அவனுக்குக் கற்றுத் தர தயாராய் இருந்தது.
(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

 1. சுயசரிதை மெருகு கூடி உயரே பறக்குது ம்ம்ம்ம்....

  ReplyDelete
 2. யோவ் ராத்திரி பதினோரு மணிக்கு பதிவா...இன்னும் தூங்கலையா நீர்....???

  ReplyDelete
 3. @MANO நாஞ்சில் மனோவாங்கண்ணே..இங்க 9 மணி தாண்ணே!

  ReplyDelete
 4. ////“அவளைச் சூழ்ந்திருக்கும்
  அவனது காதலை
  அவளால் உணரமுடியாதது போல
  உன்னைச் சூழ்ந்த – கடலை
  உன்னால் உணரமுடியாது.”// என்ன ஒரு தத்துவம் கலக்கீட்டிங்க அண்ணே

  ReplyDelete
 5. @கந்தசாமி.தத்துவமா..யோவ், கவிதைய்யா அது!

  ReplyDelete
 6. பின்றேள் பின்றேள் ... அப்படியே சம்பவங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் நண்பா... ஜெனிபரின் காதல் எப்படி போகுது எனப்பார்க்க ஆவல் தூண்டுகிறது ... இந்த முறையாவது மதன் நேரிடையாக டீல் பண்ண வேண்டும்.

  ReplyDelete
 7. @வினையூக்கிஇனியும் மதன் அடுத்தவங்களை நம்புவானா..அதுவும் சிவாவை!

  ReplyDelete
 8. முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!//

  சகோ முன்னைய பகுதிக்கான இணைப்பு ஒர்க் ஆகலை.

  ReplyDelete
 9. மதன் சொன்ன எதையுமே பிரவீணாவிடம் சொல்லாத சிவா, பிரவீணா சொன்ன இதை மட்டும் தெளிவாக மதனிடம் சொன்னான்!//

  ஆஹா...சைட் கப்பில் கிளியைக் கொத்தலாம் என்று இந்த நண்பன் யோசித்திருப்பானோ..

  ஒரு சில நண்பர்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தாங்கள் எப்படி இந்தப் பொண்ணை மடக்கலாம் என்று தான் நினைப்பார்களே தவி, நண்பர்களின் வலிகளைச், உணர்வுகளைச் சொல்ல மாட்டார்கள்.

  ReplyDelete
 10. வேகமாகச் சைக்கிளில் செல்லும்போது தடுக்கி விழுந்தால், முதலில் நாம் கவனிப்பது ‘யாராவது நம்மைப் பார்த்து விட்டார்களா?’ என்பதையே. யாரும் கவனிக்கவில்லையென்றால், அடுத்த அரைமணி நேரத்தில் அதை நாம் மறந்திருப்போம்.//

  அஃதே....அஃதே.....
  இது மானப் பிரச்சினை என்று நாம நினைப்பது தான் காரணம் சகோ..
  ஹி...ஹி...

  ReplyDelete
 11. சுவாரசியமாக எழுதி இருக்கிறீங்க சகோ, இன்று மதியம் பின்னூட்டங்களோடு வருகிறேன்.

  ReplyDelete
 12. அவளைச் சூழ்ந்திருக்கும்
  அவனது காதலை
  அவளால் உணரமுடியாதது போல
  உன்னைச் சூழ்ந்த – கடலை
  உன்னால் உணரமுடியாது//
  சூப்பர் பாஸ்...

  ReplyDelete
 13. மன்மத லீலை கலக்கல் தொடர்..விறுவிறுப்பு,சுவை குறையவே இல்ல

  ReplyDelete
 14. யாரோ சில ஆண்கள் பார்த்திருந்தால், சில நாட்களுக்கு அந்த வருத்தம் நீடிக்கும்.//
  உண்மைதான்

  ReplyDelete
 15. என் ப்ளாக்கில் உங்கள் பிளாக்கை இணைத்துக்கொண்டேன்..இனி அப்டேட் பதிவுகளுக்கு மறக்காமல் வந்துவிடுவேன்

  ReplyDelete
 16. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பர். முதல் காதலை மறக்கடிக்க, இரண்டாவது காதல் மதனைத் தேடி வந்தது.//
  அனுபவம்..எல்லோருக்கும் உண்டு

  ReplyDelete
 17. @நிரூபன்//சகோ முன்னைய பகுதிக்கான இணைப்பு ஒர்க் ஆகலை.// சரி செய்துவிட்டேன், நன்றி சகோ!

  ReplyDelete
 18. @நிரூபன்//சுவாரசியமாக எழுதி இருக்கிறீங்க சகோ, இன்று மதியம் பின்னூட்டங்களோடு வருகிறேன்.// ஏதோ கடைக்குப் போய் பின்னூட்டம் வாங்கப்போற மாதிரி சொல்றாரே!

  ReplyDelete
 19. @ஆர்.கே.சதீஷ்குமார்//இனி அப்டேட் பதிவுகளுக்கு மறக்காமல் வந்துவிடுவேன்// நன்றி சதீஷ்!

  ReplyDelete
 20. @ஆர்.கே.சதீஷ்குமார்//யாரோ சில ஆண்கள் பார்த்திருந்தால், சில நாட்களுக்கு அந்த வருத்தம் நீடிக்கும்.//
  உண்மைதான்// அண்ணனும் நிறைய இடத்துல விழுந்திருப்பாரு போலிருக்கே!

  ReplyDelete
 21. @செங்கோவி
  கவிதையான்னே அது! போங்கண்ணே முதல்லயே சொல்லமாட்டிங்களா? :-)

  ReplyDelete
 22. @செங்கோவி
  கவிதையான்னே அது! போங்கண்ணே முதல்லயே சொல்லமாட்டிங்களா? :-)

  ReplyDelete
 23. அப்புறமா வாறன் பாஸ்! டைம் ஆகுது! :-)

  ReplyDelete
 24. @ரஹீம் கஸாலிஎன்னய்யா கமெண்ட் இது..வடை கமெண்ட்டே பரவாயில்லை போலிருக்கே..

  ReplyDelete
 25. @ஜீ...//கவிதையான்னே அது! போங்கண்ணே முதல்லயே சொல்லமாட்டிங்களா? :-)// கொஞ்சம் ஃபீல் பண்ண விட மாட்டேங்கிறாங்களே..

  ReplyDelete
 26. உங்க கதை விரைவில் திரைப்படமாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.. கலக்கல்

  ReplyDelete
 27. @பாரத்... பாரதி...பாராட்டுக்கு நன்றி பாரதி!

  ReplyDelete
 28. ஒருநாள் சிவா ஊருக்குக் கிளம்பியவன், தன் பேக்கை செக் பண்ணிய போது, உள்ளே செக்ஸ் புக் இருந்தது. பதறிப் போய் ‘யார் இதை என் பேக்கில் வைத்தது?” என்றான்//

  ஒரு சில நண்பர்கள் குள்ள நரி மூளையினைப் பாவித்து, இவ்வாறான செயல்களைச் செய்து விடுவார்கள். சிலர் பப்ப்ளிக் இல் வைத்து டவுசரைக் கூட பிளேட்டால் வெட்டி அவமானப்படுத்தி விட்டு, மச்சான் சும்மா ஜாலிக்காக செஞ்சேன் என்று சொல்லுவார்கள்.
  ஆனால் வேதனையும் வலியும் நொந்து நூலாகியவனுக்குத் தானே தெரியும்.

  ReplyDelete
 29. சுவாரசியமாக எழுதுகிறீர்கள். டைரியில் உள்ள குறிப்புக்களைக் கோர்வைகளாக்கி, ஆர்வத்தைக் கூட்டும் வண்ணம், ஒவ்வோர் அங்கத்திலும் சஸ்பென்ஸ் கூட்டி, எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 30. @நிரூபன்//ஒவ்வோர் அங்கத்திலும் சஸ்பென்ஸ் கூட்டி, எழுதுகிறீர்கள்.// நன்றி சகோ..அங்கம்னா அத்தியாயம் தானே?

  ReplyDelete
 31. நல்லா இருக்கு தல .... கமெண்ட்ஸ் அப்புறம்

  ReplyDelete
 32. nanba, aarambaththula antha kavithai ethukku? senior, jeni matter seitha story'ai sollaama poitingale.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.