Wednesday, May 11, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_7

காதலியின் கரம் தொட்டால்
பரவசம் ஊடுருவுமென்ற
கவிஞன் சொல் கேட்டு
தேடிவந்து தொட்டேன்.
யாதொரு உணர்ச்சியும்
என்னுள் எழவில்லை.
கவிதைக்குப் பொய்
அழகென அறிந்தேன்.

மொட்டை நிலவொளியில்
தனித்திருந்த வேளைதனில்
தற்செயலாய் கைகள் தீண்ட
இதுவரை கண்டிராத
பார்வையை உன் கண்கள்
வெளிப்படுத்தின.
என் உடல் சிலிர்த்து
உடலினுள் உயிர் அதிர்ந்தது.
ஏதோவொரு இன்ப உணர்ச்சி
உச்சிவரை ஏறிற்று.

தீண்டலுக்கு கைகள் மட்டுமல்ல
கண்களும் தேவையென
கவிஞன் சொல்லாதது ஏனோ?


முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

“டேய், ஜெனிஃபர் என்கிட்ட பேசினாடா” என்றான்.
“எந்த ஜெனிஃபர்?..நம்ம சீனியர் ஒருத்தன்கூட சுத்துவாளே, அவளா?”
“ஆமாடா!”

புதிய காதல்..பல புது அனுபவங்களை அவனுக்குக் கற்றுத் தர தயாராய் இருந்தது.

அடுத்து வந்த நாட்களிலும் தொடர்ந்து ஜெனிஃபர் மதனுடன் வலிய வந்து பேசினாள். அந்த சீனியர் என்ன ஆனான் என்று எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அதை அந்த சீனியரிடமே கேட்பதென்று முடிவு செய்தோம்.

அதற்குச் சரியான ஆள் பழனி தான் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால் பழனியும் அந்த சீனியரும் ராகிங்கால் நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள். நாங்கள் முதலாம் ஆண்டு படித்தபோது..


“உன் பேரு என்னடா”
“பழனி சார்”
“ம்..கெட்ட வார்த்தை பேசுவியா?”
“பேச மாட்டேன் சார்”
“பேசணும்..புரியுதா..எங்கே 5 கெட்ட வார்த்தை சொல்லு”
“5 போதுமா சார்?”
“ஏய், என்ன நக்கலா?..5 சொல்லு”
”(பல்லைக் கடிதுக்கொண்டே) ஓ...ல..தூ..கே...தே…”
“சொல்லச் சொன்னா, திட்டுறமாதிரியே சொல்றே?”
“இல்லை சார்”
“ம்..இங்க வா..வந்து என் மடியில் உட்காரு”
“வேணாம் சார்”
“உட்காருங்கிறேன்ல”. உட்கார்ந்தான்.
“எந்த ஊரு நீ..இரு இரு..ஏதோ வித்தியாசமா இருக்கே!..தம்பி, இந்த ஜட்டி ஜட்டின்னு ஒன்னு உண்டே..அது தெரியுமா உனக்கு?”
“பார்த்திருக்கேன் சார்”
“பார்த்திருக்கியா?..எங்க?
“ரூம் மேட்ஸ் கொடில காயப்போடும்போது!”
“ரூம் மேட்ஸ்ஸா? அப்போ நீ?
“சே..சே..எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை சார்”
“என்னடா கெட்ட பழக்கம் மாதிரி சொல்றே.. ச்சீ..தூரப்போ”

அதன்பிறகு அதிசயமாக அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்!

ழனியிடம் ஜெனிஃபர் விஷயத்தைச் சொன்னபோது, “சீனியர்கிட்ட என்ன கேட்குறது? எனக்கே என்ன நடந்துச்சுன்னு தெரியுமே” என்றான். 
அய்யோ..நடிகை படம்..
“என்ன நடந்துச்சு?” என்று மதனும் நானும் ஒரே குரலில் கேட்டோம்.
“அவன் மேட்டரை முடிச்சுட்டான். கழட்டி விட்டுட்டான்..அவ்வளவு தான்”

“நிஜமாவா?”
”அட, ஆமாடா..அவ கிளாஸ்ல டூர் போனப்போ நைஸா இவன்கூட ஒதுங்கிட்டா” என்றான் பழனி.

மதனுக்கு இருந்த முக்கியப் பிரச்சினை பிரவீணா காதல் விவகாரத்தில் ஈகோ அடி வாங்கியது. ’எனவே இன்னொரு பெண்ணைக் காதலித்து, கழற்றி விட வேண்டும் ‘ என்று தீர்மானம் செய்திருந்தான். கல்லூரியில் உள்ள எல்லோருக்கும் தான் ஒரு மாக்கான் அல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தான்.

எல்லோராலும் எப்போதும் பாராட்டப்பட வேண்டும், மற்றவர்களை விட தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க வேண்டும்’ என்ற வெறி அவனுக்குள் இருப்பதை நான் கண்டுகொண்டேன்.

அவன் அந்தக் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்தாலே போதும் என்று நண்பர்கள் அனைவரும் நினைத்தோம்.

“இப்போ என்ன செய்யப் போறே?” என்று கேட்டேன்.
“அவளை மடக்கப் போறேன். இவ ஈஸியா மடிஞ்சிடுவா”
“அப்புறம்?”
“நானும் மேட்டரை முடிச்சுட்டு, கழட்டி விட்டுடுவேன்”
“கழட்டி விட்டுடுவல்ல?..அப்புறம் பழையபடி சின்சியர் லவ்வுன்னு கிளம்பிட மாட்டயே?”
“ச்சே..ச்சே..அவளைப் போய் லவ் பண்ணுவனாடா?”

“அப்போ சரி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேட்டரை முடி!” என்றேன்.

மதன் களத்தில் இறங்கினான்.

அது களமல்ல, புதைகுழி என்று அப்போது தெரியவில்லை.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. Good turning point in Madhan's life. Will Siva come back to Madhan's life :P ?

  ReplyDelete
 2. @வினையூக்கிஅதை சிவா தான் சொல்ல வேண்டும்!

  ReplyDelete
 3. Please bring back Siva ... I have become a fan of him :))

  ReplyDelete
 4. மாப்ள நடத்துய்யா! ஊரே பத்திக்கிட்டு எரியுது மவனே புதைகுழி போட்டு கொல்றியா இருய்யா இரு ஹிஹி!

  ReplyDelete
 5. >>தீண்டலுக்கு கைகள் மட்டுமல்ல
  கண்களும் தேவையென
  கவிஞன் சொல்லாதது ஏனோ?

  அண்ணனுக்கு சொல்லியா குடுக்கனும். அண்ணனே டியூசன் செண்ட்டர் நடத்தற அளவு நாலெட்ஜ் உள்ளவர் ஆச்சே

  ReplyDelete
 6. நோ கம்மென்ட்ஸ்

  ReplyDelete
 7. காதலியின் கரம் தொட்டால்
  பரவசம் ஊடுருவுமென்ற
  கவிஞன் சொல் கேட்டு
  தேடிவந்து தொட்டேன்.
  யாதொரு உணர்ச்சியும்
  என்னுள் எழவில்லை.
  கவிதைக்குப் பொய்
  அழகென அறிந்தேன்.//

  அடிங் கொய்யாலா....இப்படியும் யோசிக்கலாமா...

  உண்மையில் எத்னையும் உய்தறியும் வரைக்கும் தான் அது பற்றிய ஆவ்ல் அதிகமாக இருக்குமாம், அறிந்த பின்னாடி...இந்த ஆவல் இல்லாது போய் விடுமாம்,

  ReplyDelete
 8. தீண்டலுக்கு கைகள் மட்டுமல்ல
  கண்களும் தேவையென
  கவிஞன் சொல்லாதது ஏனோ?//

  இது உணர்ச்சிகரமான வரிகளாக அல்லவா இருக்கிறது.
  காதல் எனும் கடலில் மூழ்கித் தெளிந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. “என்ன நடந்துச்சு?” என்று மதனும் நானும் ஒரே குரலில் கேட்டோம்.
  “அவன் மேட்டரை முடிச்சுட்டான். கழட்டி விட்டுட்டான்..அவ்வளவு தான்”//

  என் அனுபவத்திலும் கம்பஸ் காதல்களும்,கல்லூரிக் காதல்களும் மேட்டருக்காக என்று தான் இனங் கண்டு கொண்டேன், பலர் வாழ்க்கைக்காகவோ, இறுதி வரை இணைந்து வாழ்வேன் என்றோ காதல் செய்வதில்லை. ஆனால் ஆசைக்காகத் தான் காதல் செய்கிறார்கள்.

  ReplyDelete
 10. அப்போ சரி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேட்டரை முடி!” என்றேன்.

  மதன் களத்தில் இறங்கினான்.

  அது களமல்ல, புதைகுழி என்று அப்போது தெரியவில்லை.//


  ஆஹா...இங்க பாருங்க ஐடியா கொடுத்த ஆசாமி யார் என்று..
  நம்ம சகோ செங்கோவி இல்லே.

  நான் நினைக்கிறேன் மதன் களத்தில் இறங்கியதும் வசமாக மாட்டிக்கிட்டான் என்று நினைக்கிறேன். பிசின் போல ஒட்டிக் கிட்டான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. @விக்கி உலகம்//ஊரே பத்திக்கிட்டு எரியுது // அதை அணைக்கத்தான்யா இது..

  ReplyDelete
 12. @விக்கி உலகம்//ஊரே பத்திக்கிட்டு எரியுது // அதை அணைக்கத்தான்யா இது..

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்//அண்ணனே டியூசன் செண்ட்டர் நடத்தற அளவு நாலெட்ஜ் உள்ளவர் ஆச்சே// வாயைத் திறந்தாலே கலகம் தானா?

  ReplyDelete
 14. @நிரூபன்//இது உணர்ச்சிகரமான வரிகளாக அல்லவா இருக்கிறது.
  காதல் எனும் கடலில் மூழ்கித் தெளிந்திருக்கிறீர்கள்.// சும்மா இருங்கய்யா....பாராட்டுறேன்ற பேர்ல வம்புல மாட்டாதீங்க..

  ReplyDelete
 15. உங்கள மாதிரி ஊக்கம் கொடுக்கறதுக்கு எனக்கு நண்பர்கள் இல்லமே போச்சே ????????

  நீங்க தான் ஐடியா மணியா????

  ReplyDelete
 16. காதலியின் கரம் தொட்டால்
  பரவசம் ஊடுருவுமென்ற
  கவிஞன் சொல் கேட்டு
  தேடிவந்து தொட்டேன்.
  யாதொரு உணர்ச்சியும்
  என்னுள் எழவில்லை.
  கவிதைக்குப் பொய்
  அழகென அறிந்தேன்.///

  ஹா.....ஹா.....ஹா.... அவசரப்படக்கூடாது நண்பரே! பொறுமை பொறுமை!!

  ReplyDelete
 17. ”கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
  செம்பாகம் அன்று பெரிது”

  ReplyDelete
 18. காதலியின் கரம் தொட்டால்
  பரவசம் ஊடுருவுமென்ற
  கவிஞன் சொல் கேட்டு
  தேடிவந்து தொட்டேன்.
  யாதொரு உணர்ச்சியும்
  என்னுள் எழவில்லை.
  கவிதைக்குப் பொய்
  அழகென அறிந்தேன் ////
  கலக்கல் வரிகள்..
  எப்படி இப்படியெல்லாம் யோசனை..

  ReplyDelete
 19. ////தீண்டலுக்கு கைகள் மட்டுமல்ல
  கண்களும் தேவையென
  கவிஞன் சொல்லாதது ஏனோ?/// அதே அதே ....

  ReplyDelete
 20. தொடக்கத்தில் கவிதை அருமை... சீனியர், ஜெனிபர் மேட்டர ஒரு பதிவுல தனியா சொல்லலாமுள்ள?

  ReplyDelete
 21. @Carfire//உங்கள மாதிரி ஊக்கம் கொடுக்கறதுக்கு எனக்கு நண்பர்கள் இல்லமே போச்சே ??// அடுத்தவனை உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்குறது நமக்குப் புதுசா..

  ReplyDelete
 22. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //அவசரப்படக்கூடாது நண்பரே! பொறுமை பொறுமை!!// ஹா..ஹா..நீங்க சொல்றீங்களேன்னு விடுறேன் ஓனரே!

  ReplyDelete
 23. @சென்னை பித்தன்//கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
  செம்பாகம் அன்று பெரிது”// ஐயா ஏதோ திட்டுதாருன்னு தெரியுது..என்னன்னு தான் தெரியலை..

  ReplyDelete
 24. @சென்னை பித்தன்//கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
  செம்பாகம் அன்று பெரிது”// ஐயா ஏதோ திட்டுதாருன்னு தெரியுது..என்னன்னு தான் தெரியலை..

  ReplyDelete
 25. @!* வேடந்தாங்கல் - கருன் *!//எப்படி இப்படியெல்லாம் யோசனை..// உஷ்..ரகசியம்.

  ReplyDelete
 26. @கந்தசாமி.//அதே அதே// ஒய் குஷி..சேம் குஷி!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.