Sunday, May 15, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_8

செவ்வான நிறத்தில்
மனம் மயங்குகிறது.
குளத்தில் இருமீன்களும்
துள்ளி அலைகின்றன.
இருபுறம் கனிந்திருக்கும்
ஆப்பிள் மீது வெண்பனி வேறு.
எங்கே என்கிறாய்உன்
முகத்தில் தானடி
இவையனைத்தும்!


முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

”ஜெனிஃபர், நாளைக்கு ஃப்ரீயா?” என்று கேட்டான் மதன்.
“ஃப்ரீ தான். ஏன்” தயங்கியவாறே பதில் வந்தது.
“நாளைக்கு படத்துக்குப் போகலாம்னு பார்த்தேன். அதான்..” என்று பம்மினான் மதன்.
“ஓ..போலாமே..என்ன படம்?” என்று ஜெனிஃபர் கேட்டாள்.
திடீரெனக் கேட்கவும் மதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சும்மா பிட்டைப் போட்டால், கிளி தானே வந்து சிக்குதே என்று மதன் அசந்து போனான்.

“ஏதாவது..” என்று மதன் இழுக்கும்போதே “ஓகே” என்று பதில் வந்த்து.

மதுரையில் உள்ள அந்தப் பெரிய தியேட்டர் காம்ப்ளக்ஸிற்குப் போனார்கள். ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்குத் தான் போகவேண்டுமென ஜெனிஃபர் அடம்பித்தாள். ’என்ன டேஸ்ட்டுடா இது, கர்மம்’ என்று மதன் நொந்த படியே டிக்கெட் வாங்கினான். கலர்ஃபுல்லாக படம் ஆரம்பித்தது.

காதலில் இறங்குவதை விடவும் கஷ்டமான காரியம் காமத்தில் இறங்குவது. எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். எனவே முதன்முதலாகக் காமத்தில் இறங்கும்போது உண்டாகும் தயக்கத்தால் தவிக்காதவர் எவருமில்லை. மதனும் தவித்தான். பெண்ணின் அருகாமையும் இருட்டான தியேட்டரும் மனதைச் சீண்டியது. ஆனால் தயக்கத்தைத் தாண்ட முடியவில்லை.

‘ச்சீ என்று விலகிவிட்டால், பளேரென்று கன்னத்தில் அடித்துவிட்டால்..அமைதியாக எழுந்து போய், கல்லூரி நண்பர்களிடம் சொல்லி அவமானப்படுத்தி விட்டால்...’ என்று பலவாறான யோசனையோடு நெளிந்தபடியே அமர்ந்திருந்தான். ஜெனிஃபரிடம் எந்தச் சலனமும் இல்லை.

படம் முடிந்து விரக்தியுடன் ரூம் வந்து சேர்ந்தான். 

நான் கடுப்பாகி “என்னடா நீ, நல்ல சான்ஸை கோட்டை விட்டுட்டு வந்திருக்கே. அதுசரி, வேற படமாடா கிடைக்கலை உங்களுக்கு” என்று கேட்டேன்.

அதுவரை சும்மா அமர்ந்திருந்த பழனி சிரிக்க ஆரம்பித்தான்.

“என்னடா இளிப்பு?”என்று மதன் கேட்டான்.

“அட கூமுட்டைகளா, கூட்டம் இல்லாத தியேட்டருக்குப் போகணும்னு தாண்டா அங்க கூட்டிட்டுப் போயிருக்கா. அவளுக்குத் தெரியாதா அங்க தான்  வசதியா இருக்கும்னு. இது புரியாம பேசுறானுக பேச்சு..நீங்கள்லாம் திட்டம் போட்டு ...மாதிரி தான்” என்றான்.

“அட, ஆமா!” என்று மதன் மல்ர்ந்தான். அடுத்த வாரமும் தியேட்டருக்குக் கூப்பிட்டான். அவளும் வந்தாள். வழக்கம்போல் தயக்கமும் வந்து சேர்ந்தது. 

’தொடவா, வேண்டாமா..சும்மா கை மேல் கை வைப்போமா’ என்று மதன் தீவிர யோசனையோடு திரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். படத்தில் நடப்பது எதுவும் மனதில் பதியவில்லை.

ஜெனிஃபர் அவனைத் திரும்பிப் பார்த்தாள். மதன் திரையை சின்சியராய் வெறித்தான்.

அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டால் ஜெனிஃபர்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

 1. தொடர் நல்லா போயிட்டு இருக்கு

  ReplyDelete
 2. விறு...விறு....சுறு....சுறு...வுக்கு குறைவே இல்லை.

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில நான் தான் மொத ஓட்டு.

  ReplyDelete
 4. சரி...சரி...என்ன எழுதி கிழிச்சிருக்கிங்கன்னு படிச்சுட்டு வர்றேன்.

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash//விறு...விறு....சுறு....சுறு...வுக்கு குறைவே இல்லை.// யோவ், இதைப் படிச்சிட்டுச் சொல்லும்யா.

  ReplyDelete
 6. அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டால் ஜெனிஃபர்.>>>>>
  வெரி ஹாட் மச்சி....

  ReplyDelete
 7. தொடவா, வேண்டாமா..சும்மா கை மேல் கை வைப்போமா’>>>>
  பயம் இருக்கும்ல...பிகர் மடியனுமுள்ள.

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash//வெரி ஹாட் மச்சி....// அடப்பாவிகளா..நிஜமா இது ஒரு சீரியஸ் தொடர்யா..ஏதோ நான் சீன் கதை எழுதுற மாதிரியே எஃபக்ட் கொடுக்காங்களே..

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//வெரி ஹாட் மச்சி....// அடப்பாவிகளா..நிஜமா இது ஒரு சீரியஸ் தொடர்யா..ஏதோ நான் சீன் கதை எழுதுற மாதிரியே எஃபக்ட் கொடுக்காங்களே..>>>>

  நீ ஏன் அப்படி நினைக்கிற... நச்சுன்னு பாராட்டுனா நண்பர் கோச்சிக்கிறாரு.

  ReplyDelete
 10. செவ்வான நிறத்தில்
  மனம் மயங்குகிறது.
  குளத்தில் இருமீன்களும்
  துள்ளி அலைகின்றன//

  அவள் மேனியில் உள்ள கயல் மீன்களில் அப்பீட் ஆகிட்டீங்க போல இருக்கே.

  ReplyDelete
 11. ஆப்பிள் மீது வெண்பனி வேறு.
  எங்கே என்கிறாய் – உன்
  முகத்தில் தானடி
  இவையனைத்தும்!//

  அவ்...................

  ஆப்பிள் மீது, வெண் பனி...

  என்ன திரை மூடி இருப்பதன் காரணத்தால் தானே.

  ReplyDelete
 12. காதலில் இறங்குவதை விடவும் கஷ்டமான காரியம் காமத்தில் இறங்குவது. எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். எனவே முதன்முதலாகக் காமத்தில் இறங்கும்போது உண்டாகும் தயக்கத்தால் தவிக்காதவர் எவருமில்லை. மதனும் தவித்தான். பெண்ணின் அருகாமையும் இருட்டான தியேட்டரும் மனதைச் சீண்டியது. ஆனால் தயக்கத்தைத் தாண்ட முடியவில்லை.//

  இவ் வரிகள் டைரியில் இருந்து வரும் உண்மையான உணர்வின் வரிகள் போல இருக்கே...
  ஹி...ஹி..

  அனுபவித்துப் பார்த்தால் தான் அருமை புலப்படும் என்பது போல,
  நம்ம சகோ தான், மதன் போல டபுள் ஆக்டிங் கொடுக்கிறாரோ.

  ReplyDelete
 13. @நிரூபன்//அவள் மேனியில் உள்ள கயல் மீன்களில் அப்பீட் ஆகிட்டீங்க போல இருக்கே.// நான் எங்கய்யா ஆனேன்?..மதன் ஆனான்..

  ReplyDelete
 14. @நிரூபன்//நம்ம சகோ தான், மதன் போல டபுள் ஆக்டிங் கொடுக்கிறாரோ.// இப்படியே பேசி குடும்பத்தைக் கெடுத்திடாதீங்கய்யா..

  ReplyDelete
 15. ‘ச்சீ என்று விலகிவிட்டால், பளேரென்று கன்னத்தில் அடித்துவிட்டால்..அமைதியாக எழுந்து போய், கல்லூரி நண்பர்களிடம் சொல்லி அவமானப்படுத்தி விட்டால்...’ என்று பலவாறான யோசனையோடு நெளிந்தபடியே அமர்ந்திருந்தான். ஜெனிஃபரிடம் எந்தச் சலனமும் இல்லை//

  இதுக்குத் தான், நான் முன்னாடி என் பதிவில் சொல்லியிருக்கேன், ஞாபகம் இல்லை-

  நம்ம ஊரில் முதலில் கடிதத்தில் எழுத்தித் தான் தூண்டில் போடுவோம்.

  ‘உன் இதழ் படாமலே காய்ந்து போயிருக்கிறது என் கன்னம்,

  உதடுகள் மட்டும் உன்னை உள் இழுக்கத் துடிக்கிறது...

  அதுக்கு மத்த கடிதத்தில்
  அவங்க எழுதினா.......


  வெட்கம் என்னைக் கொல்வதால், கொஞ்சம் வெளிப்படையாக முடியலை’

  இப்படி என்றால் ஆள் மடிஞ்சிட்டு என்று அர்த்தம்...

  இது எப்பூடி?

  ReplyDelete
 16. @நிரூபன்//இப்படி என்றால் ஆள் மடிஞ்சிட்டு என்று அர்த்தம்...

  இது எப்பூடி?// யோக்கியன் வர்றான், சொம்பெடுத்து உள்ளவை கதையால்ல இருக்கு சகோவைப் பார்த்தா!

  ReplyDelete
 17. “அட கூமுட்டைகளா, கூட்டம் இல்லாத தியேட்டருக்குப் போகணும்னு தாண்டா அங்க கூட்டிட்டுப் போயிருக்கா. அவளுக்குத் தெரியாதா அங்க தான் வசதியா இருக்கும்னு. இது புரியாம பேசுறானுக பேச்சு..நீங்கள்லாம் திட்டம் போட்டு ...மாதிரி தான்” என்றான்.//

  ஆஹா...இவா கொஞ்சம் மார்டன் பொண்ணா இருப்பா என்று நினைக்கிறேன்.

  கிராமத்து பொண்ணுங்க என்றால்....ரொம்ப கஸ்டப்பட்டு தான் மடக்க ட்ரை பண்ணனும்....

  ஹி....

  ReplyDelete
 18. @நிரூபன்//இவா கொஞ்சம் மார்டன் பொண்ணா இருப்பா என்று நினைக்கிறேன்.// சென்ற பகுதியைப் பாருங்கய்யா...

  ReplyDelete
 19. இந்த டைரி அப்படியே என் கம்பஸ் வாழ்க்கையை கண் முன் கொண்டு வருகுது...
  அவ்........

  ReplyDelete
 20. இறுதி வரியில் ஒரு விறு விறுப்பான கட்டத்தில் நிறுத்தி விட்டீர்களே...

  ReplyDelete
 21. @நிரூபன்//இந்த டைரி அப்படியே என் கம்பஸ் வாழ்க்கையை கண் முன் கொண்டு வருகுது...// உங்களுக்குள்ளயும் ஒரு மதன் இருக்கான்னு சொல்லவே இல்லையே நீங்க?

  ReplyDelete
 22. @நிரூபன்//இறுதி வரியில் ஒரு விறு விறுப்பான கட்டத்தில் நிறுத்தி விட்டீர்களே.// அப்படித் தான் நிப்பாட்டணும்னு பதிவுலகத்துல சொல்லிக்கிட்டாங்க..அதான்

  ReplyDelete
 23. பாஸ் அந்த கவிதை நல்லாய் இருக்கு .

  ReplyDelete
 24. /// எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். .// உண்மையான வார்த்தைகள்.

  ReplyDelete
 25. ///’தொடவா, வேண்டாமா..சும்மா கை மேல் கை வைப்போமா’ என்று மதன் தீவிர யோசனையோடு திரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். படத்தில் நடப்பது எதுவும் மனதில் பதியவில்லை.

  ஜெனிஃபர் அவனைத் திரும்பிப் பார்த்தாள். மதன் திரையை சின்சியராய் வெறித்தான்.

  அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டால் ஜெனிஃபர்.

  /// அவ்வ்வ் கொடுத்து வச்ச மதன் )) நம்மாளுங்க லவ்வுற பொண்ணோட தியேட்டருக்கு போனா எங்க படம் பார்ப்பாங்க..)

  ReplyDelete
 26. ஆர்வமாக உள்ளேன் தொடருங்கள் ...

  ReplyDelete
 27. எலேய் மாப்ள என்னய்யா இது குழந்தைங்க படம்னு வந்தேன்......எனக்கு இன்னும் அந்த வயசு வரல.....நான் கெளம்பறேன் ஹிஹி!

  ReplyDelete
 28. @கந்தசாமி.//பாஸ் அந்த கவிதை நல்லாய் இருக்கு .// நன்றி கந்தசாமி.

  ReplyDelete
 29. @விக்கி உலகம்//என்னய்யா இது குழந்தைங்க படம்னு வந்தேன்...// பேரைப் பார்த்தாலே தெரியலை?

  ReplyDelete
 30. நல்லாத்தாண்ணே இருக்கு! ம்ம்ம்...நமக்கு இந்த ஏரியால எல்லாம் பழக்கம் இல்லைங்கோ! ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது! அண்ணன் சொன்னா அதுல ஒரு உண்மை, நேர்மை, அனுபவம்...

  ReplyDelete
 31. @ஜீ...//அண்ணன் சொன்னா அதுல ஒரு உண்மை, நேர்மை, அனுபவம்...// ஸ்டாப்..ஸ்டாப்..ஸ்டாப்..

  ReplyDelete
 32. //காதலில் இறங்குவதை விடவும் கஷ்டமான காரியம் காமத்தில் இறங்குவது. எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். எனவே முதன்முதலாகக் காமத்தில் இறங்கும்போது உண்டாகும் தயக்கத்தால் தவிக்காதவர் எவருமில்லை//

  நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணே! உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு! புரிந்து கொள்ள முடிகிறது!

  பாலகுமாரன் கதைகளில் கதாபாத்திரங்களின் செயல்களுக்கு ஆசிரியர் தனது பார்வையில் கொடுக்கும் விளக்கம்/விபரிப்பு போலவே...!

  ReplyDelete
 33. @ஜீ...பாலகுமாரனைத் கடந்து வந்தவங்க தானே நாம..பாராட்டுக்கு நன்றி ஜீ!

  ReplyDelete
 34. >>
  காதலில் இறங்குவதை விடவும் கஷ்டமான காரியம் காமத்தில் இறங்குவது. எல்லாவித நாகரீக முகமூடிகளும் கழறும் இடம் காமம். எனவே முதன்முதலாகக் காமத்தில் இறங்கும்போது உண்டாகும் தயக்கத்தால் தவிக்காதவர் எவருமில்லை. மதனும் தவித்தான். பெண்ணின் அருகாமையும் இருட்டான தியேட்டரும் மனதைச் சீண்டியது.


  அக்மார்க் பாலகுமாரன் டச்.. வெல்டன் அண்ணே.. ஆனா நீங்க விவரமான ஆளுன்னு கேள்விப்பட்டேன்

  ReplyDelete
 35. @சி.பி.செந்தில்குமார்'வெல்டன் அண்ணே..’-யோட நிறுத்தக்கூடாதா?

  ReplyDelete
 36. மன்மத லீலை வென்றார் உண்டோ

  ReplyDelete
 37. //அவன் கன்னத்தில் முத்தமிட்டால் ஜெனிஃபர்.//
  தீப் பிடிச்சிடுச்சு!

  ’’ப்ளூ டைமண்ட் குளிர் இருட்டின் உன் உஷ்ண ஸ்பரிசங்கள்’’--
  (27-01-2011 தேதியிட்ட என் பதிவிலிருந்து)

  ReplyDelete
 38. @ஆர்.கே.சதீஷ்குமார்//மனம் மயக்கும் லீலை!......காதல் ரசம்...மன்மத லீலை வென்றார் உண்டோ// அண்ணன் ஏற்கனவே குஷில இருக்காரு..இப்போ இது வேறயா...

  ReplyDelete
 39. @ஆர்.கே.சதீஷ்குமார்//ஓட்டு போட்டாச்சி// உஷ்....ரகசியம்..என்னாங்க நீங்க, ரஜினியை விடவும் மோசமா இருப்பீங்க போலிருக்கே!

  ReplyDelete
 40. @சென்னை பித்தன்//தீப் பிடிச்சிடுச்சு!// நான் என்னாத்தச் சொல்ல..................!

  ReplyDelete
 41. @சென்னை பித்தன்//’’ப்ளூ டைமண்ட் குளிர் இருட்டின் உன் உஷ்ண ஸ்பரிசங்கள்’’--
  (27-01-2011 தேதியிட்ட என் பதிவிலிருந்து// நைட்டு பாக்குறேன் சார்!

  ReplyDelete
 42. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...

  ReplyDelete
 43. @MANO நாஞ்சில் மனோஅண்ணன் ஏன் சுதி இறங்கி அலையுதாரு?

  ReplyDelete
 44. @ரஹீம் கஸாலி50வது கமெண்ட் போட்ட அண்ணன் கஸாலி வாழ்க!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.