Monday, May 16, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_9

டிஸ்கி: வீடு மாறுவதால், இன்று பதிவு எழுத நேரமில்லை. எனவே டிராஃப்ட்டில் இருந்த மன்மதன் லீலைகள் தொடர்ச்சி இன்று. சாரி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

உன்னை நான்
உற்றுப் பார்த்தேன்.

ஏன் இப்படியென
கோபமாய் கேட்டாய்.

எனக்கு ரோஜாவைப்
பிடிக்குமென்றேன்.

நான் ரோஜாவே
சூடுவதில்லை என்றாய்.

மலரை அல்லஉன்
முகத்தைச் சொன்னேன் என்றேன்.

வெட்கத்தால் வெள்ளை ரோஜா
சிவப்பு ரோஜா ஆனது.முந்தைய பகுதிகளுக்கு: இங்கே!

ஜெனிஃபர் அவனைத் திரும்பிப் பார்த்தாள். மதன் திரையை சின்சியராய் வெறித்தான்.

அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டால் ஜெனிஃபர்.


தன் மிதந்தே திரும்பி வந்தான்.

“டேய், கிஸ் பண்ணிட்டாடா” என்றான்.

“அடி தூளு..சொல்லு. சொல்லு..என்ன நடந்துச்சு?” என்றேன். டீடெய்லாக மதன் விவரித்தான்.

“எதுக்கும் தயாரா இருக்குற மாதிரி இருக்காடா..எனக்குத் தான் பயமா இருக்கு” என்றான்.
“அவளே துணிஞ்சிட்டா...உனக்கென்ன?” என்றேன்.

ல்லூரியில் கேண்டீனில் சந்திப்பதும், மாலை வெளியில் சந்திப்பதுமாக உல்லாசமாக மதன் பொழுதுபோக்கினான்.

முத்தம் சாதாரண விஷயம் ஆனது. 

புதன்கிழமை மதியம் முழுதும் அவளுக்கு என்.எஸ்.எஸ்(நாட்டு நலப்பணித் திட்டம்) பீரியட் தான். நாட்டுக்குச் சேவை செய்வதும், மதனுக்குச் சேவை செய்வதும் ஒன்றுதான் என்ற லட்சியத்துடன் ஒவ்வொரு வாரமும் மதனை வெளியே அழைத்துச் சென்றாள்.

மதனுக்கு, பாதி வர்ஜினாக அலைவது அவஸ்தையானது.

இனியும் பொறுக்காமல் கிளைமாக்ஸை நோக்கி நகர்வதென்று முடிவு செய்தான். அதற்கு என்ன செய்வதென்று விசாரிக்க ஆரம்பித்தோம். அதற்குச் சரியான ஆள் யாரென்று தேடியதில் ரமேஷ் (சிரிப்பு போலீஸ் அல்ல) மாட்டினான்.

ரமேஷ் எங்கள் வகுப்பு தான். நல்ல அனுபவசாலி. மதுரைக்குப் பக்கம் தான் அவன் ஊர். அப்போது ஒரு லேடியை மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டாரத்தில் ஹீரோவாகப் பார்க்கப்பட்டான். ஏனென்றால் அந்த லேடி அவங்க ஊர் சப்-இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி!

கல்லூரிக்கே தெரிந்த மதனின் விஷயம் அவனுக்கு தெரிந்திருந்தது. அதனால் கேஷுவலாக அட்வைஸ் செய்ய ஆரம்பித்தான்.

“நீ ஏன் இன்னும் அவளை விட்டு வச்சிருக்கிறே? அவளுக்கெல்லாம் ஒரு வாரம் போதும்டா”
“எங்க போறதுன்னு தெரியலைடா”
“கழுதை கெட்டா குட்டிச்சுவரு. கொடைக்கானலுக்குப் போ”
“கொடைக்கானலுக்கா?”
“ஆமா, மாப்ள. அங்க **** லாட்ஜுக்கு போ. ரூம் போடு. மேட்டரை முடி. அவ்வளவு தான்”
“லாட்ஜா? போலீஸ் ரெய்டு வராதா?” பயந்து போய் மதன் கேட்டான்.
“ரூம் வாடகை ரெண்டு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம். அது மாமூலுக்கும் சேர்த்துத் தான். தைரியமாப் போ..நான் அப்பவும் ’அவங்களை’ அங்க தான் கூட்டிப் போவேன்” என்றான் ரமேஷ்.

ஒருவழியாக இடத்தைக் கண்டுபிடித்தாயிற்று. அடுத்த பிரச்சினை அவளை எப்படி அங்கு அழைப்பது?

”கடுப்பாயிட்டான்னா என்னடா செய்ய?..எப்படிடா ஒரு பொண்ணு லாட்ஜுக்கு வர ஒத்துக்கும்?” மீண்டும் ஆலோசனை தொடங்கியது.

“நீ முதல்ல கொடைக்கானலுக்குக் கூப்பிடு. அங்க போனப்புறம், மதியம் சாப்பிட்டிட்டு வெளில சுத்தாம கொஞ்ச நேரம் லாட்ஜ்ல ரெஸ்ட் எடுப்போம்னு சொல்லு. ஒத்துக்கிட்டா, மேட்டர் ஓவர். இல்லேன்னா கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் இல்லாமலேயே படம் ஓட்டு” என்றேன்.

றுநாள் கேண்டீனில் வழக்க்ம்போல் மதன் ஜெனிஃபரைச் சந்தித்தான். பிட்டைப் போடத் தொடங்கினான்.

“இந்த வருசம் ரொம்ப வெயிலு, இல்லே?”
“ஆமாப்பா”
“எங்கயாவது காஷ்மீர் மாதிரி ஊருக்குப் போனா சூப்பரா இருக்கும்ல”
“நாமெல்லாம் காஷ்மீர் எப்படிப் போறது..நமக்கு விதிச்சது ஊட்டியும் கொடைக்கானலும் தானே” பழம் நழுவியது.
“ஆமா, கொடைக்கானல் நமக்கு ரொம்பப் பக்கம்ல?”
“ம்”
“நாம ஒரு நாளைக்கு, அங்க வேணாப் போலாமா?”
பதில் இல்லை.

“இல்லே, காலைல போயிட்டு, சாயந்திரம் வந்திரலாம்”

“சரி” என்றாள். 

நழுவிய பழம் பாலில் விழுந்தது.

(தொடர்ச்சி வெள்ளி இரவு........ கொடைக்கானலில் சந்திப்போம்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

 1. @வினையூக்கிஇப்போ எது நடக்கணும்னு சொல்றீங்க?

  ReplyDelete
 2. எனக்கு அந்த கவிதை மிகவும் பிடித்துள்ளது! அதன் முடிவும் நன்றாக உள்ளது!

  ReplyDelete
 3. வலைச்சரத்திலிருந்து வந்துட்டோமில்ல...
  இனி கலக்கல் பின்னூட்டம் போடுவோமில்ல ...

  ReplyDelete
 4. “நீ முதல்ல கொடைக்கானலுக்குக் கூப்பிடு. அங்க போனப்புறம், மதியம் சாப்பிட்டிட்டு வெளில சுத்தாம கொஞ்ச நேரம் லாட்ஜ்ல ரெஸ்ட் எடுப்போம்னு சொல்லு. ஒத்துக்கிட்டா, மேட்டர் ஓவர். இல்லேன்னா கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் இல்லாமலேயே படம் ஓட்டு” என்றேன்.

  //
  என்ன ஒரு வில்லத்தனம்..?

  ReplyDelete
 5. கவிதை சூப்பர் அடுத்த பாகம் எப்போ?கொடைக்கானல் கிளம்பியாச்சா

  ReplyDelete
 6. அண்ணனோட சொந்தக்கதையை தான் ஃபிரண்டோட கதை மாதிரி சொல்றாரு. ஹி ஹி ( தனி மெயில்ல உண்மையை ஒத்துக்கிட்டாரு.. இமேஜ் பார்க்கறாராம்.. )

  ReplyDelete
 7. வந்துட்டேன்! :-)

  ReplyDelete
 8. //“நீ முதல்ல கொடைக்கானலுக்குக் கூப்பிடு. அங்க போனப்புறம், மதியம் சாப்பிட்டிட்டு வெளில சுத்தாம கொஞ்ச நேரம் லாட்ஜ்ல ரெஸ்ட் எடுப்போம்னு சொல்லு. ஒத்துக்கிட்டா, மேட்டர் ஓவர். இல்லேன்னா கடைசி வரைக்கும் கிளைமாக்ஸ் இல்லாமலேயே படம் ஓட்டு” என்றேன்//

  எப்புடீண்ணே? இதெல்லாம் சும்மா வராது...!

  என்னா ஐடியாக்கள்!

  அண்ணன் பெண்களைக் கேவலப்படுத்திட்டீங்க! - இப்பிடி யாரும் சொல்லிடுவாங்க! ஏற்கனவே பதிவர் பெண்களை கேவலமாகப்பார்ப்பவர் அப்பிடீன்னு யாரோ சொன்னாங்களே! அதான் ஹி ஹி! :-)

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் said... [Reply]

  அண்ணனோட சொந்தக்கதையை தான் ஃபிரண்டோட கதை மாதிரி சொல்றாரு. ஹி ஹி ( தனி மெயில்ல உண்மையை ஒத்துக்கிட்டாரு.. இமேஜ் பார்க்கறாராம்.. )////

  தனி மெயில் சொல்வதையெல்லாம் போட்டு உடைப்பதே அண்ணனுக்கு வேலையா போச்சு

  ReplyDelete
 10. @!* வேடந்தாங்கல் - கருன் *!//இனி கலக்கல் பின்னூட்டம் போடுவோமில்ல ...// அந்த கலக்கல் பின்னூட்டதை எங்கே?

  ReplyDelete
 11. @ஆர்.கே.சதீஷ்குமார்//கவிதை சூப்பர் அடுத்த பாகம் எப்போ?கொடைக்கானல் கிளம்பியாச்சா// எல்லாருமாச் சேர்ந்தே போகலாம்ணே.

  ReplyDelete
 12. @சி.பி.செந்தில்குமார்// தனி மெயில்ல உண்மையை ஒத்துக்கிட்டாரு.. இமேஜ் பார்க்கறாராம்.. // அய்யய்யோ...சிபி, விளையாட்டுக்குப் பேசுறேன்னு என்னை பெர்மனெண்ட்டா பிரம்மச்சாரி ஆக்கிடாதீங்கய்யா...

  ReplyDelete
 13. @ஜீ...//எப்புடீண்ணே? இதெல்லாம் சும்மா வராது...!// ஆமா ஜீ, அவன் எனக்கு கொத்துபுரோட்டா வாங்கிக் கொடுத்தப்புறம் தான் இந்த ஐடியால்லாம் கொடுத்தேன்..அது பதிவுல விட்டுப் போச்சு.

  //அண்ணன் பெண்களைக் கேவலப்படுத்திட்டீங்க! - இப்பிடி யாரும் சொல்லிடுவாங்க! // ஏன்யா, அவங்க சும்மா இருந்தாலும் நீங்க விட மாட்டீங்க போலிருக்கே..அப்புறம் பின்னூட்டத்துக்கு பதில் போட்டே நாக்குத் தள்ளிடும்.

  ReplyDelete
 14. @ரஹீம் கஸாலி//தனி மெயில் சொல்வதையெல்லாம் போட்டு உடைப்பதே அண்ணனுக்கு வேலையா போச்சு// நான் அப்படில்லாம் சொல்லலைய்யா......அய்யோ, புலம்ப விட்டுட்டாங்களே..

  ReplyDelete
 15. haiyaa. mobile'la irunthu comment pottutten. thanks sengovi

  ReplyDelete
 16. aduththa pathivula varra place sema kuliraa irukkum. but pathivu sema hot'aa irukkum pola. wait and see

  ReplyDelete
 17. வடையை கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத் தர்றீங்களே!விகடன்,குங்குமம் தொடர்கதை படிக்கிற மாதிரி இருக்குது:)

  ReplyDelete
 18. //அண்ணன் பெண்களைக் கேவலப்படுத்திட்டீங்க! - இப்பிடி யாரும் சொல்லிடுவாங்க! ஏற்கனவே பதிவர் பெண்களை கேவலமாகப்பார்ப்பவர் அப்பிடீன்னு யாரோ சொன்னாங்களே! அதான் ஹி ஹி! :-)//

  படிச்சிட்டு வந்து திட்டுறாங்களா?சொல்லவேயில்ல:)

  ReplyDelete
 19. @ராஜ நடராஜன்//வடையை கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத் தர்றீங்களே!// முதல்ல வர்றவங்களுக்கு முழு வடை உண்டே.

  ReplyDelete
 20. மலரை அல்ல – உன்
  முகத்தைச் சொன்னேன் என்றேன்.//

  சகோ...கவிதையினால் கொன்னுட்டீங்களே...

  அருமையாக எழுதியிருக்கிறீங்க..

  இதை, உங்க கம்பஸ் பெண் ஒருத்தி படித்தால் அவளின் மன நிலை எப்படியிருக்கும் என நினைத்துப் பார்த்தேன். சிரித்தேன்.

  ReplyDelete
 21. இனியும் பொறுக்காமல் கிளைமாக்ஸை நோக்கி நகர்வதென்று முடிவு செய்தான். அதற்கு என்ன செய்வதென்று விசாரிக்க ஆரம்பித்தோம். அதற்குச் சரியான ஆள் யாரென்று தேடியதில் ரமேஷ் (சிரிப்பு போலீஸ் அல்ல) மாட்டினான்.//

  அவ்..................

  ReplyDelete
 22. ரமேஷ் எங்கள் வகுப்பு தான். நல்ல அனுபவசாலி. மதுரைக்குப் பக்கம் தான் அவன் ஊர். அப்போது ஒரு லேடியை மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டாரத்தில் ஹீரோவாகப் பார்க்கப்பட்டான். ஏனென்றால் அந்த லேடி அவங்க ஊர் சப்-இன்ஸ்பெக்டர் பொண்டாட்டி!//

  அம்மாடி, பெரிய இடத்துல எல்லாம் கை வைச்சிட்டாங்களா.

  ReplyDelete
 23. நழுவிய பழம் பாலில் விழுந்தது.//

  ஆஹா..சுவாரசியமான இடத்தில் நிறுத்திட்டீங்களே சகோ.

  ReplyDelete
 24. @நிரூபன்//இதை, உங்க கம்பஸ் பெண் ஒருத்தி படித்தால் அவளின் மன நிலை எப்படியிருக்கும் என நினைத்துப் பார்த்தேன். சிரித்தேன்.// அந்த கவிதைக்கும் எங்க கம்பஸ் பொண்ணுக்கும் சம்பந்தமே இல்லைய்யா..

  ReplyDelete
 25. @நிரூபன்//ஆஹா..சுவாரசியமான இடத்தில் நிறுத்திட்டீங்களே சகோ.// இது வழக்கமா நாம பண்றது தானே சகோ..

  ReplyDelete
 26. @விக்கி உலகம்ஒருவேளை இது தான் அந்தக் கமெண்ட்டோ......

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.