Thursday, May 5, 2011

வடை வாங்கி பதிவர்களும் கிராஃபிக்ஸ் ஆத்தாவும் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: போன வாரம் சொன்னது தான் இப்பவும்........நல்லவங்கள்லாம் கிளம்புங்க, காத்தோ ரஞ்சிதாவோ வரட்டும்!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
வெள்ளிக்கிழமை அடடா
தலைமுழுகி அடடா
மல்லிகைப்பூவை அடடட
தலையில் வச்சு
டண்டங்குடா!
(லிரிக்ஸ் உதவி: நண்பர் வினையூக்கி!)

பொறுப்போடு யோசிச்சது:
பதிவுலகம் மிகவும் புனிதமான இடம் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனாலும் சில பதிவர்களுக்கு இது புரியாமல் இருப்பது ஆச்சரியமே!  கவர்ச்சியாக பெண்களின் படத்தைப் போடுவதும், அதைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் அடிப்பதும் மிகவும் வேதனை அளிக்கிறது.உதாரணமாக பிரபல பதிவர் ஒருவர் இந்த வாரம் போட்டிருந்த படத்தைப் பாருங்கள்:
 கடந்த சில நாட்களாக இந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து ரத்தக்கன்ணீர் வடிக்கின்றேன். பதிவுலகம் என்பது கோயில் மாதிரி. நாமெல்லாம் ஒவ்வொரு பதிவைப் போடும்போதும் சூடம்-பத்தி கொளுத்தி பூஜை செய்து விட்டுத்தான் பப்ளிஷ் பட்டனையே அழுத்துகிறோம். ஆனால் சிலர் மட்டும் ஏன் இப்படிப் பதிவிடுகின்றனர் என்பதும் புரியவில்லை. 

ஏதோ அவர்களிடம் மட்டும் தான் இந்த மாதிரிப் படம் இருப்பது போல் பெருமை பேசுவதும் வேடிக்கையாக உள்ளது. நம்மிடம் மட்டும் இந்த மாதிரிப் படங்கள் இல்லையா என்ன..உதாரணமாக இந்தப் படத்தைப் பாருங்கள்.
கடந்த மூன்று வருடங்களாக இந்தப் படத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றேன். ஆனாலும் ஒருநாள் கூட இதை என் தளத்தில் போட்டதில்லை. இனியும் போடுவதாக எண்ணமும் இல்லை! 

ஏனென்றால் நான் ஒரு சமூகப் பொறுப்புணர்ச்சி உள்ள பதிவர்! இதே மாதிரியே எல்லாரும் பொறுப்போடு நடந்துகொண்டு, நாம் வெறும் வடைவாங்கிகள் மாத்திரம் அல்ல என்று இந்த சமூகத்திற்கு நிரூபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

கிராஃபிக்ஸ் ஆத்தா:
இந்த வாரம் டிவில சேனல் மாத்திக்கிட்டே வரும்போது, கே டிவில ரம்யாகிருஷ்ணன். உடனே பக்திப்பரவசமாகிப் பார்த்தா உண்மையிலேயே சாமிப்படம்..சரி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா-ன்னு பார்க்க ஆரம்பிச்சேன். ரம்ஸ் தான் ஆத்தா..ஒரு ஊருக்கு இறங்கி வருது.

வந்து, ஒரு பக்தை வீட்ல தங்கிக்கிட்டு, அந்த பக்தை கையில வேப்பிலைத் தண்ணியைக் கொடுத்து ஊர் பூராத் தெளிச்சுட்டு வா. நீ திரும்பி வர்றவரைக்கும் இங்கயே இருப்பேன்னு சத்தியம் பண்ணி அனுப்பி வைக்குது. அதுவும் கிளம்பிப் போகுது. அப்புறம் வழக்கம்போல சினிமால ‘ப்ளைட் புடிக்கப்போன பிசினஸ்மேன் திடீர்னு திரும்பி வந்து பொண்ட்டாட்டியோட கள்ளக்காதலனைப் புடிப்பானே’..அதே மாதிரி அந்தப் பக்தையும் திடீர்னு திரும்பி வந்து ஜன்னல் வழியே பார்த்தா....உள்ள கிராபிக்ஸ் ஆத்தா!
‘அடியாத்தீ..ஆத்தால்ல வந்திருக்கு..நாம திரும்பிப் போனா ஆத்தா ஊரை விட்டுப் போயிருமே’ன்னு நம்மளை மாதிரி இல்லாம நல்லா யோசிச்சு தொபுக்கடீர்னு கிணத்துல குதிச்சிருது..ஆத்தா உடனே அதிர்ச்சியாகி எந்திரிச்சு லெஃப்ட்ல பார்க்குது..ஃப்ளாஷ்..ப்ளாஷ்னு கிராபிக்ஸ் மின்னல்..அடுத்து ரைட்ல பார்க்குது ..ஃப்ளாஷ்..ஃப்ளாஷ்னு அங்கயும் கிராபிக்ஸ் மின்னல்!...........சரி, இதுல என்னப்பா பிரச்சினைன்னு கேட்கீங்களா..சொல்றேண்ணே..

சாமி-ன்னா முக்காலமும் அறிஞ்சது தானே..அந்தப் புள்ளை இப்படிப் பண்ணும்னு ஆத்தாக்குத் தெரியாதா? தெரியும்னா எதுக்கு லெஃப்ட்லயும் ரைட்லயும் திரும்பி ஷாக் ரியாக்சன் கொடுத்துச்சு..லாஜிக் ஒன்னுமே புரியலியே..ஒருவேளை அந்த மாதிரி சாமிப் படமாப் பார்த்துட்டு, திடீர்னு இந்த மாதிரிச் சாமிப்படம் பாக்கவும் தான் புரிய மாட்டேங்குதோ?..அந்த மாதிரில இருக்குற லாஜிக் கூட இந்த மாதிரில இல்லையேண்ணே...


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

 1. அப்படியே அந்த ஜனகராஜ் - டிஸ்கோ சாந்தி பாட்டோட வீடியோவையும் சேர்த்து விடுறதுதானே

  ReplyDelete
 2. நெஞ்சைத் தொட்ட வரிகள் அடங்கியப் பாடலை வாசகர்கள் இங்கு கண்டு இன்புறலாம் http://www.youtube.com/watch?v=-JYa-NaSYNQ

  ReplyDelete
 3. @வினையூக்கிச்சே..அது ஆபாசமுல்ல..பதிவோட தரம் என்னாகிறது?

  ReplyDelete
 4. திரு. செங்கோவி அவர்களே, அப்படி என்றால் பக்தி மணம் கமழும் அம்மன் படத்தின் இறுதிக்காட்சியையாவது இணைத்து இருக்கலாமே... எதுவாகினும் இதோ வாசகர்களுக்காக அந்த ஒளியோட்டமும் http://www.youtube.com/watch?v=lGS3dNsRAqw

  ReplyDelete
 5. @வினையூக்கிவீடியோவா அள்ளிவிடுறாரே..விக்கிலீக்ஸ்ல ஒர்க் பண்றாரோ...

  ReplyDelete
 6. அது நாம கேவில் கட்டிய குஷ்பூ தானே.........)

  ////கடந்த மூன்று வருடங்களாக இந்தப் படத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றேன். ஆனாலும் ஒருநாள் கூட இதை என் தளத்தில் போட்டதில்லை. இனியும் போடுவதாக எண்ணமும் இல்லை! /// அது தான் போட்டாச்சே ..)
  நல்லா தான் கலாய்கிறீங்க ..)

  ReplyDelete
 7. நயன் ஏன் கோபமாக இருக்காக. என்னா செஞ்சீக????

  ReplyDelete
 8. ரம்பம்பம் ஆரம்பம்.........பம்பம்பம் பேரின்பம்!

  ReplyDelete
 9. @கந்தசாமி.//நல்லா தான் கலாய்கிறீங்க ..)// நன்றி பாஸ்..

  ReplyDelete
 10. @! சிவகுமார் !//நயன் ஏன் கோபமாக இருக்காக. என்னா செஞ்சீக????// யோவ், பிரபுதேவாகிட்டப் போய் கேளுங்கய்யா..

  ReplyDelete
 11. >>>ஏனென்றால் நான் ஒரு சமூகப் பொறுப்புணர்ச்சி உள்ள பதிவர்!

  ஹா ஹா ஹா செம

  ReplyDelete
 12. >> கவர்ச்சியாக பெண்களின் படத்தைப் போடுவதும், அதைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் அடிப்பதும் மிகவும் வேதனை அளிக்கிறது.உதாரணமாக பிரபல பதிவர் ஒருவர் இந்த வாரம் போட்டிருந்த படத்தைப் பாருங்கள்:

  அண்ணே.. மன்னிச்சிடுங்கண்ணே.. ஹி ஹி

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்//உதாரணமாக பிரபல பதிவர் ஒருவர் இந்த வாரம் போட்டிருந்த படத்தைப் பாருங்கள்:// உங்களைத்தான் தலைவரே உரிமையாக் கலாய்க்க முடியும்..வேற யாரும்னா கும்மிர மாட்டாங்க!

  ReplyDelete
 14. ஆகா!உங்கள் சமூகப் பொறுப்புணர்ச்சி வியக்க வைக்கிறது!!

  ReplyDelete
 15. //சிலர் மட்டும் ஏன் இப்படிப் பதிவிடுகின்றனர் என்பதும் புரியவில்லை//
  உங்கள் வருத்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது!
  லூஸ்ல விடுங்க பாஸ்! :-)

  ReplyDelete
 16. //ஆனாலும் ஒருநாள் கூட இதை என் தளத்தில் போட்டதில்லை. இனியும் போடுவதாக எண்ணமும் இல்லை//
  இந்தக் கொள்கைதாண்ணே உங்க தனி அடையாளம்! இவ்வளவு துயரம் தோய்ந்த, மனக்குமுறலை வெளிபடுத்தும் இந்தப்பதிவிலகூட நீங்க போடலையே!

  ReplyDelete
 17. ஆமா ஏண்ணே நயன்தாரா மூஞ்சி, ராத்திரி பூரா கண்ணு முழிச்சு, தண்ணியடிச்ச மாதிரி இருக்கு?#டவுட்டு!

  ReplyDelete
 18. என்ன இன்னைக்கு பட்டென்று முடித்துவிட்டீர்கள்...இன்னும் நிறைய யோசித்திருக்கலாமே

  ReplyDelete
 19. நண்பா ரொம்ப வேலையா? பதிவு பட்டுனு முடிஞ்ச போல இருக்கு,

  ஆமா கண்டிப்பா அந்த மாதிரி படத்த உங்க பதிவுல போற்றாதீங்க... அப்டி போட்டா கூகிள் பிளாக்கே தற்கொலை பன்னிக்க போகுது, பின்ன என்ன ஒரு தொழில்/சமூக பக்தி....!!! :-)

  எனக்கு தெரிந்து ப்ளாகர் எரியாலயே ரொம்ப

  ReplyDelete
 20. எனக்கு தெரிந்து ப்ளாகர் எரியாலயே ரொம்ப இண்ட்ரெஸ்டிங்க் நா அது சிபி அண்ணாச்சி தான்... ஆவோரோட தொழில் பக்தி நெனச்சா புல்லரிக்கீது போங்க...

  இதுவரை அவர் பிளாக் ல கமெண்ட் போட்டதே இல்ல, முதன்முறை அவரை பற்றி உங்க பிளாக் ல கமெண்ட் போடுறேன்....

  ReplyDelete
 21. இப்பவலைப் பதிவாளர்கள் ஒருமார்க்கமாகத்தான் இருக்கிறாங்க போல வடையும் பஜ்ஜியும் கிளமர் படங்கள் போட்டு சூடேத்திராங்க !

  ReplyDelete
 22. சமூகப் பொறுப்புணர்ச்சியில உங்கள யாரும் அடிச்சிக்க முடியாது, அடிச்சிக்க முடியாது, சூப்பர், அருமை, பிரமாதம் :-)

  ReplyDelete
 23. சாமி படங்களுக்கு லாஜிக் பார்த்த ஒரே ஆள் நீங்க தான்

  ReplyDelete
 24. சாமி(ரம்யா) கண்ணை குத்திர போகுது....

  ReplyDelete
 25. @சென்னை பித்தன்எல்லாம் உங்களை மாதிரிப் பெரியவங்க ஆசிர்வாதம் தான் சார்!

  ReplyDelete
 26. @ஜீ...//இந்தக் கொள்கைதாண்ணே உங்க தனி அடையாளம்! // என்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட ஆளு நீங்க தான் தம்பி!

  ReplyDelete
 27. @ரஹீம் கஸாலி//என்ன இன்னைக்கு பட்டென்று முடித்துவிட்டீர்கள்...இன்னும் நிறைய யோசித்திருக்கலாமே// அப்படி எல்லாம் இல்லையே..ஒருவேளை நமீதா படம் போடாத்தால அப்படித் தோணுதோ?

  ReplyDelete
 28. @RK நண்பன்..//ரொம்ப வேலையா? பதிவு பட்டுனு முடிஞ்ச போல இருக்கு, // மூணு மேட்டரே பெருசாப் போயிடுச்சு நண்பரே..ம்ஹூம்...இனிமே நமீதா படம் இல்லாம பதிவு போடக்கூடாது!

  ReplyDelete
 29. @RK நண்பன்..சிபி ரொம்ப நல்லவர்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன் ராஜ்!

  ReplyDelete
 30. @Nesan//பஜ்ஜியும் கிளமர் படங்கள் போட்டு சூடேத்திராங்க // இது பாராட்டா..திட்டா..ஒன்னும் புரியமாட்டேங்குதே...

  ReplyDelete
 31. @இரவு வானம்//சமூகப் பொறுப்புணர்ச்சியில உங்கள யாரும் அடிச்சிக்க முடியாது, அடிச்சிக்க முடியாது, சூப்பர், அருமை, பிரமாதம்// போதும்..போதும்..ரொம்ப புகழ்ந்தா கல்ப்பு புடிச்சிக்கும்!

  ReplyDelete
 32. @Speed Masterநான் அந்தளவுக்கு அப்பாவி மாஸ்டர்!

  ReplyDelete
 33. @RK நண்பன்..ரம்ஸ் கண்ணைப் பறிக்கும்...குத்தாது!

  ReplyDelete
 34. போன வாரம் சொன்னது தான் இப்பவும்........நல்லவங்கள்லாம் கிளம்புங்க, காத்தோ ரஞ்சிதாவோ வரட்டும்!//

  வாசலிலை கடி நாயை, வைச்சுக்கிட்டு, வூட்டுக்கை வா என்று கூப்பிடுற மாதிரி எல்லே இருக்கு;-))

  ReplyDelete
 35. ஏனென்றால் நான் ஒரு சமூகப் பொறுப்புணர்ச்சி உள்ள பதிவர்! இதே மாதிரியே எல்லாரும் பொறுப்போடு நடந்துகொண்டு, நாம் வெறும் வடைவாங்கிகள் மாத்திரம் அல்ல என்று இந்த சமூகத்திற்கு நிரூபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!//

  சகோ, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.

  ReplyDelete
 36. கலாய்க்கிறது கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இது கொஞ்சம் புது மாதிரி எல்லே இருக்கு.
  அதுவும், செம ரகளையா, யாரை குத்தனுமோ...குத்திக் காட்டி, கலாய்த்திருக்கீங்க.

  ReplyDelete
 37. பொறுப்புணர்ச்சி என்றால்....எப்படி இருக்கனும்- அட பதிவைப் பாருங்க...நம்ம, சகோ எத்தினை பேரை வைச்சு கலாய்ச்சிருக்கிறார் என்பதே புரியும்,.

  ReplyDelete
 38. ஃஃஃஃ பதிவைப் போடும்போதும் சூடம்-பத்தி கொளுத்தி பூஜை செய்து விட்டுத்தான் பப்ளிஷ் பட்டனையே அழுத்துகிறோம். ஃஃஃஃஃ

  ஹ...ஹ.... இப்படியெல்லாம் பண்ணுவிங்களோ... எனக்கு எப்ப சிக்னல் அதிகமா வருதோ உடன தட்ட வேண்டியது தான்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

  ReplyDelete
 39. @நிரூபன்//உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.// கடமைன்னு வந்துட்டா நான் அளவெல்லாம் பாக்கிறதில்லை சகோ!

  ReplyDelete
 40. @நிரூபன்//நம்ம, சகோ எத்தினை பேரை வைச்சு கலாய்ச்சிருக்கிறார் என்பதே புரியும்,.// ஏன்யா இப்படிக் கோர்த்து விடுதீங்க..அவங்க சும்மா போனாலும் விட மாட்டீங்க போலிருக்கே!

  ReplyDelete
 41. @♔ம.தி.சுதா♔//எனக்கு எப்ப சிக்னல் அதிகமா வருதோ உடன தட்ட வேண்டியது தான்..// இவரு எந்த சிக்னலைச் சொல்லுதாரு..இண்டெர்னெட் சிக்னலையா....இல்லே,........

  ReplyDelete
 42. \\நல்லவங்கள்லாம் கிளம்புங்க\\ இதப் படிச்சதுக்கப்புறம் எங்கே போறது? முதல் இரண்டு நல்ல படத்தை போட்டுவிட்டு, மூனாவதா ஒரு நாரப் படத்தை போட்டுவிட்டு, அதை முன்னூறு வருஷமா காப்பாத்தி வச்சிருந்த பொக்கிஷம்னு டயலாக் வேறயா? உங்க ஹார் டிஸ்க் கரப்ட் ஆவதற்கு முன்னாடி இந்தப் கண்றாவியை டெலீட் பண்ணு செங்கோவி.

  ReplyDelete
 43. \\சாமி-ன்னா முக்காலமும் அறிஞ்சது தானே..\\ இது நிஜமான சாமிக்கு. தமிழ் சினிமாவில காமிக்கிற சாமிக்கு கணக்கே வேற. "வருவான் வடிவேலன்" படத்துல அப்பா குடிகாரன், அப்புறம் பொம்பிளை பொருக்கி. குடித்து விட்டு யாரிடம் சுகம் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே ஒதுக்கி வைத்திருந்த தனது மனைவியுடன் சுகம் காண்கிறார் [அந்தமா ஒரு தீவிர முருக பக்தி]. அப்புறமா அவருக்கு கொஞ்சம் தெளிஞ்சதுக்கப்புறம் தான் தெரியுது தப்பை தப்பா பண்ணிட்டோம்னு. அப்படிக் கருத்தரிச்சு பொறந்தவர் யாரு தெரியுமா? ஸாக்ஷாத் முருகனேதான்!! கடவுள் இந்த மாதிரி அப்பன் மூலமாவா அவதரிப்பாறு? தமிழ் சினிமாவில் தான் நடக்கும். சில தெலுங்கு டப்பிங் படங்களில் கொடுமையான வில்லன், கொலை கொள்ளை கற்பழிப்பு தான் தினசரித் தொழிலே. அவன்கிட்டத்தான் நம்மா ஆத்தா நேரிலேயே வந்து விவாதம் செய்வாள், திருத்துவதற்கு முயற்சிப்பாள், ஒரு எல்லையைத் தாண்டியவுடன், கோபத்தில் கொள்ளவும் போவாள், ஆனால் அந்த சமயத்தில் அவன் மனைவி [ஆத்தாவின் பக்தை] வந்து காலில் விழுந்து தாலிப் பிச்சை கேட்டு காப்பாற்றி விடுவாள், அவனும் திருந்தி விடுவான். தவமாய் தவமிருப்பவர்களுக்கே காட்சி கொடுக்காத சாமி, கிரிமினல்களிடம் நேரிடையாக தினமும் வந்து பக்கத்து வீட்டுக்காரி மாதிரி பேசிவிட்டுச் செல்லும் அதிசயம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும். ஹா...ஹா..ஹா...

  ReplyDelete
 44. @Jayadev Das//உங்க ஹார் டிஸ்க் கரப்ட் ஆவதற்கு முன்னாடி இந்தப் கண்றாவியை டெலீட் பண்ணு செங்கோவி.// கரப்ட் ஆகாமத் த்டுக்குற ஃபயர் வால் தான் அது!

  ReplyDelete
 45. @Jayadev Das//அதிசயம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும். // அதுவும் கிராஃபிக்ஸ்ங்கிற பேர்ல அவங்க பண்ற அட்டகாசம் இருக்கே...அப்பப்பா..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.