Tuesday, November 4, 2014

பதிவர்க்கு அவசர உதவி தேவை-டிங்..டாங்..டிங்(நானா யோசிச்சேன்)

டிஸ்கி-1:  இது சீரியஸ் பதிவல்ல என்பதை உணர்த்தவே தலைப்பில் டிங்..டாங்..டிங்..

டிஸ்கி-2: வழக்கம்போல் குழந்தைகள், டென்சன் பார்ட்டிங்க & நல்லவங்க இந்தப் பதிவைத் தவிர்க்கவும். ஏன்னா ஒரு பதிவு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது. 

நெஞ்சைத் தொட்ட வரிகள்:
ஜகுஜகுஜகு ஜகுஜகுஜகு
ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு
ஜகுஜகுஜகு ஜகுஜகுஜகு
ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு

டண்டணக்கடி டக்குணக்கடி
டண்டணக்கடி டக்குணக்கடி
டண்டணக்கடி டக்குணக்கடி
டண்டணக்கடி டக்குணக்கடி

(ஒரிஜினல் மாப்பிள்ளை படத்திலிருந்து!)


பதிவர் புலம்பல்:
நான் சாஃப்ட்டாப் பேசுவேங்க..(சாப்பிட்டிட்டு இல்லீங்க..)..நம்ம வாசகத் தம்பி ஒருத்தர் விடாம விரட்டி என்னை சாட்ல பிடிச்சாரு..நான் பேசுறதைப் பாத்துட்டு ‘என்னங்க இப்படி சாஃப்ட்டாப் பேசுறீங்க. உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு, என்னென்னவோ நினைச்சேன்..இப்படி இருக்கீங்களே’ன்னு சொல்லிப்புட்டாரு..ச்சே..கேவலமாப் போச்சுங்க..பேசும்போது அப்பப்போ ‘மானே தேனே’ போட்டாத்தான் பதிவர்னே நம்புவாங்க போலிருக்கே...

மும்..மும்..மும்தாஜ்:

மும்தாஜோட இந்த ஸ்டில்லு கிடைச்சது. நல்லா இருந்துச்சா, அதான் இங்க போட்டுட்டேன். ஆனா மும்தாஜைப் பத்தி எழுதத் தான் ஒரு மேட்டரும் சிக்கலை..சரி, இப்போதைக்கு இந்த மும்தாஜ் ஸ்டில்லை வச்சுக்கோங்க..ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா பின்னால அதாவது அப்பாலிக்கா அப்டேட் பண்றேன். (அடுத்த வரி 18 ப்ளஸ்..குழந்தைகள் தவிர்க்கவும் )‘மும்தாஜே ஒரு மேட்டர்தானே..அதுக்கு எதுக்கு தனியா மேட்டர்’னு சிலபேரு பின்னூட்டம் போடத் துடிக்கிறது தெரியுது..(18 ப்ளஸ் முடிஞ்சிடுச்சு..இப்போ படிக்கலாம்) இது டீசண்டான பதிவு மக்கா..அப்படி எல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது, சரியா?


தேர்தல் ரிசல்ட்:
ஏதாவது சினிமா இந்தியால வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா, இங்க வியாழக்கிழமை நைட்டே ரிலீஸ் பண்ணிடறாங்க. அதே மாதிரி வர்ற வெள்ளிக்கிழமை வர்ற தேர்தல் ரிசல்ட்டையும் வியாழக்கிழமையே இங்க ரிலீஸ் பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்..இந்த தேர்தல் கமிசன் ஒன்னும் சரியில்லையே..

டீப்பா யோசிச்சது..

1991ம் வருசம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?..அந்த வருசம் தான் என் அத்தை பொண்ணு பெரிய மனுஷி ஆகி, என்னையும் பெரிய மனுசன் ஆக்குச்சு.

1991 ஆகஸ்ட் மாசம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?.. திருச்செந்தூருக்கு எங்க ஊர்ல இருந்து லாரி பிடிச்சுப் போனோம். குளிச்சு முடிச்சுத் திரும்பும்போது எங்க கூட வந்த யாரோ ஜட்டியை மறந்து நாழிக்கிணத்துக்கு வெளில உள்ள திண்டுல வச்சுட்டு வந்துட்டாங்க..நான் அதை யாருதுன்னு கேட்டுக் கொடுப்போம்னு பத்திரமா எடுத்து வச்சிருந்தேன். எங்க ஆட்க இருந்த ஏரியாக்கு வரமுன்ன என் மச்சான் ஒருத்தரு ‘என்ன அநியாயம் பாருங்கய்யா..ஜட்டியைத் திருடுதானுக..அயோக்கியப்பயலுக’ன்னு நாற வசவா வஞ்சுக்கிட்டு இருந்தாரு. சரி, இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!

சரி, 1991 ஆகஸ்ட் 9ம் தேதி என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?..தெரியலையே..ம்..எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா? அட, அன்னைக்குத் தாண்ணே நம்ம தங்கத்தலைவி, சக்கரவள்ளிக் கிழங்கு ‘ஹன்சிகா’ பொறந்த நாளு..அதான் அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...மன்றக் கண்மணிகளும் இதே மாதிரி யோசிச்சுப் பாருங்கப்பா...

பதிவர்க்கு அவசர உதவி தேவை.

நேத்து ஆஃபீஸ்ல என் ஜூனியர்கள் இருக்குற ஏரியாக்குப் போனேன். அப்போ அவனுக ரொம்ப இண்ட்ரஸ்ட்டா இப்படிப் பேசிக்கிட்டு இருந்தானுக:
“யூடுயூப்ல அம்பிகா சாங் ஒன்னு பாத்தேண்டா..ராதாரவிகூட..செம கலக்கல்!”
“அதெல்லாம் ஒரு சீனாடா, கண் சிமிட்டும் நேரம் படத்துல ஃபர்ஸ்ட் சீன்ல அம்பிகா மழைல நனைஞ்சுக்கிட்டு வரும். அப்போ..”-ன்னு சொல்லும்போது பாவி நானு படக்னு உள்ள போயிட்டேன்.
அவங்க உடனே ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் வந்துட்டாரேன்னு சின்சியரா வேலை செய்ற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

’அப்போ என்னாச்சு’ன்னு கேட்டா மதிப்பானுகளா? சரி, யூடுயூப்பும் கூகுளும் இருக்கேன்னு நம்பி திரும்பி வந்துட்டேன். அது தான் இப்போ தப்பாயிடுச்சு.

நானும் நெட் பூராத் தேடிப் பார்த்துட்டேன். அந்த சீன் கிடைக்கவேயில்லை. அவனுக உண்மையிலேயே சொன்னானுகளா, இல்லே நம்மளை சுத்தல்ல விடறதுக்குச் சொன்னனுகளான்னும் புரியலை. இப்போ என்ன செய்றதுன்னும் தெரியலை..இந்தியால இருந்தாக்கூட நேரா சிடி கடைக்குப் போய் வாங்கிடலாம். 

என்னடா செய்றதுன்னு யோசிச்சப்போ தான் உங்க எல்லார் ஞாபகமும் வந்துச்சுண்ணே..நீங்க தான் இந்த உதவியை உடனே பண்ணனும். இந்தியால இருக்குற யாராவது அந்த சிடியை வாங்கிப் பார்க்க முடியுமா..ஒருவேளை அவங்க சொன்னபடியே சீன் இருந்துச்சுன்னா, தயவுசெய்து எனக்கு அனுப்ப முடியுமா? மிக மிக அவசரம்!

இதுக்கு பொறுப்பேத்துக்கிற நல்ல மனுசன் சொந்தக்காசு போட்டு அந்த சிடியை வாங்க வேண்டாம். ‘அம்பிகா சிடி நிதி’ன்னு சக பதிவர்கள்கிட்ட வசூல் பண்ணிக்கலாம். மற்ற வாசக நண்பர்களும் உங்களால முடிஞ்சதை அவர்கிட்ட கொடுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்பவும்..வெரி வெரி அர்ஜெண்ட்.

மனிதம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபிக்க உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீர். நன்றி!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

 1. டிஸ்கி-1: இது சீரியஸ் பதிவல்ல என்பதை உணர்த்தவே தலைப்பில் டிங்..டாங்..டிங்.//

  மச்சி, சீரியஸ் பதிவு இல்லை என்று உணர்த்த உங்களுக்கு மணி கிலுக்கும் சத்தம் தான் தேவைப்படுதோ....அவ்.........

  ReplyDelete
 2. ஜகுஜகுஜகு ஜகுஜகுஜகு
  ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு
  ஜகுஜகுஜகு ஜகுஜகுஜகு
  ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு ஜஜக்கு

  டண்டணக்கடி டக்குணக்கடி
  டண்டணக்கடி டக்குணக்கடி
  டண்டணக்கடி டக்குணக்கடி
  டண்டணக்கடி டக்குணக்கடி//

  யோ, தெரியாமத்தான் கேட்கிறன், இதென்ன ஐயர் சொல்லுற மந்திரமா...
  மணி கிலுக்கினாப் பிறகு, மணி அடிச்சாப் பிறகு இப்படி வந்தா,
  இதுக்கு என்ன அர்த்தம்.

  ReplyDelete
 3. டிஸ்கி-2: வழக்கம்போல் குழந்தைகள், டென்சன் பார்ட்டிங்க & நல்லவங்க இந்தப் பதிவைத் தவிர்க்கவும். ஏன்னா ஒரு பதிவு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது.//

  ஆஹா..ஆஹா..வாசலிலையே முட் கம்பியை அல்லவா சகோ வைச்சிருக்கிறாரு. இதனைத் தாண்டி உள்ளே போயிப் பார்போம்

  ReplyDelete
 4. தமிழ் 10 இல் இணைக்காமல் தூங்கிட்டீங்களோ.

  ReplyDelete
 5. நான் சாஃப்ட்டாப் பேசுவேங்க..(சாப்பிட்டிட்டு இல்லீங்க..)..நம்ம வாசகத் தம்பி ஒருத்தர் விடாம விரட்டி என்னை சாட்ல பிடிச்சாரு..நான் பேசுறதைப் பாத்துட்டு ‘என்னங்க இப்படி சாஃப்ட்டாப் பேசுறீங்க. உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு, என்னென்னவோ நினைச்சேன்..இப்படி இருக்கீங்களே’ன்னு சொல்லிப்புட்டாரு..ச்சே..கேவலமாப் போச்சுங்க..பேசும்போது அப்பப்போ ‘மானே தேனே’ போட்டாத்தான் பதிவர்னே நம்புவாங்க போலிருக்கே...//

  ஏனய்யா இந்தக் கொலை வெறி!
  த்ங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தப் புண்ணியவான் யாரு?
  அவர் எங்கிருந்தாலும் இப்போது இங்கே வரவும்,

  ReplyDelete
 6. ஏதாவது சினிமா இந்தியால வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா, இங்க வியாழக்கிழமை நைட்டே ரிலீஸ் பண்ணிடறாங்க. அதே மாதிரி வர்ற வெள்ளிக்கிழமை வர்ற தேர்தல் ரிசல்ட்டையும் வியாழக்கிழமையே இங்க ரிலீஸ் பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்..இந்த தேர்தல் கமிசன் ஒன்னும் சரியில்லையே..//

  தேர்தல் கமிசன் வாசலில் சில பதிவர்கள் முடிவுகள் வெளியாகும் நாளன்று முண்டியடித்துக் கொண்டு நிற்கவுள்ளதாக தகவல்கள் பரவுகின்றனவே, தாங்கள் அறியலையா...
  ஹி....ஹி..

  ReplyDelete
 7. @நிரூபன்//தமிழ் 10 இல் இணைக்காமல் தூங்கிட்டீங்களோ.// இல்லை சகோ, மத்த பதிவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்..பகல்ல முடியலை.

  ReplyDelete
 8. @நிரூபன்//த்ங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தப் புண்ணியவான் யாரு?
  அவர் எங்கிருந்தாலும் இப்போது இங்கே வரவும்,// நாளைக்கு வருவாருன்னு நினைக்கேன்..நீங்க தான் என்னான்னு கேட்கணும்.

  ReplyDelete
 9. சரி, இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!//

  ஆஹா... ஐ லைக் திஸ்...
  சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்

  ReplyDelete
 10. @நிரூபன்//நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்// என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....

  ReplyDelete
 11. மனிதம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபிக்க உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நழுவ விடாதீர். நன்றி!//

  என்ன, அம்பிகா சீடி அல்லது அந்த ஹாட் சோங்ஸ் தந்தால்...
  நம்மளுக்கு நீங்க கோயில் கட்டுவீங்க..
  ஹி...ஹி...

  ReplyDelete
 12. @செங்கோவி

  @நிரூபன்//நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்// என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....//

  அடுத்தவனோடதைப் போட்டால் வருத்தம் வந்திடுமாம், தொத்து வியாதி வந்து தோல் எல்லாம் அவிஞ்சிடப் போகுது..
  இந்த ஆசையை இன்னையோடை விடுங்க சகா.

  ReplyDelete
 13. CD கிடச்சா சொல்லுங்கண்ணே! மறந்துடாதீங்க.

  ReplyDelete
 14. எனக்கு தேர்தல் சி.டி ஒன்னு வியாழக்கிழமை வேணுமே!எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
 15. //வெள்ளிக்கிழமை வர்ற தேர்தல் ரிசல்ட்டையும் வியாழக்கிழமையே இங்க ரிலீஸ் பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்.//

  வெள்ளிப்பரிசு வெள்ளி அன்றே வரட்டும்.COOL...

  ReplyDelete
 16. ambigavaa? ok nee vayasaana aalu thaan...

  vayasaanalum ileana iduppa patthi pesura annan si.bi enga? nee enga?

  un mela iruntha mariyathaiye pochuya..

  ReplyDelete
 17. sari naan pesuna kaduppula ambiga nadiccA antha paatu link kodukkaama vitraatheenga..he hee

  ReplyDelete
 18. எலேய் மாப்ள ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ சிடி கேக்குறியா ஹிஹி!

  ReplyDelete
 19. @நிரூபன்//இந்த ஆசையை இன்னையோடை விடுங்க சகா.// ஹா..ஹா..

  ReplyDelete
 20. @ராஜ நடராஜன்//எனக்கு தேர்தல் சி.டி ஒன்னு வியாழக்கிழமை வேணுமே!எங்கே கிடைக்கும்?// நீங்களும் அதுக்கு ஒரு பதிவு போடுங்க..

  ReplyDelete
 21. @ILA(@)இளா//CD கிடச்சா சொல்லுங்கண்ணே! மறந்துடாதீங்க.// வாங்கி அனுப்பச்சொன்னா, எங்கிட்டயே கேட்கீங்களா?

  ReplyDelete
 22. @டக்கால்டி//1991 ah? Yov nee avlo vayasaana aalaaa?// இல்லைண்ணே, பிஞ்சிலேயே பழுத்தது..

  ReplyDelete
 23. @விக்கி உலகம்//எலேய் மாப்ள ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ சிடி கேக்குறியா // பத்திக்கிட்டு எரியறதை அணைக்கத்தாண்ணே சிடி கேட்கேன்..

  ReplyDelete
 24. @டக்கால்டி//mbiga nadiccA antha paatu link kodukkaama vitraatheenga.// தேடிக் கண்டுபிடிங்கய்யா..

  ReplyDelete
 25. //‘என்னங்க இப்படி சாஃப்ட்டாப் பேசுறீங்க. உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு, என்னென்னவோ நினைச்சேன்..இப்படி இருக்கீங்களே’ன்னு சொல்லிப்புட்டாரு//
  நான் உங்க பதிவைப் படிச்சிட்டு இருப்பீங்கன்னுதான் நினைச்சிட்டிருக்கேன்! அவர் ஏன் மாத்தி யோசிச்சார்?

  ReplyDelete
 26. அம்பிகாவா..? நான் ரொம்பச் சின்னப்புள்ளையா இருக்கேக்க பாத்த ஆன்டி! :-)

  ஆமா உங்க ஜூனியர்ஸ் யாராவது உங்க பிலாக் படிக்கிறவங்களா இருந்து, உங்களையும் தெரிஞ்சிட்டா? :-)

  ReplyDelete
 27. >>இது டீசண்டான பதிவு மக்கா..அப்படி எல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது, சரியா?

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 28. >>..ச்சே..கேவலமாப் போச்சுங்க..பேசும்போது அப்பப்போ ‘மானே தேனே’ போட்டாத்தான் பதிவர்னே நம்புவாங்க போலிருக்கே...

  ஹா ஹா நீங்க லேடீஸ்ட்ட தானே அப்படி பேசுவீங்க?

  ReplyDelete
 29. அம்பிகா...அதுவும் இந்த 2011ல.... அப்ப உங்க வயசு என்ன?

  ReplyDelete
 30. //அதே மாதிரி வர்ற வெள்ளிக்கிழமை வர்ற தேர்தல் ரிசல்ட்டையும் வியாழக்கிழமையே இங்க ரிலீஸ் பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்.//
  ’சிறந்த சிந்தனையாளர்’ என்ற விருதைத் தம்பிக்கு வழங்குகிறேன்!

  ReplyDelete
 31. @ஜீ...//ஆமா உங்க ஜூனியர்ஸ் யாராவது உங்க பிலாக் படிக்கிறவங்களா இருந்து, உங்களையும் தெரிஞ்சிட்டா? :-) // அவங்களுக்கு ஆஃபீஸ்லயும் ரூம்லயும் நெட் கிடையாது..அந்த தைரியம் தான்..

  ReplyDelete
 32. @சி.பி.செந்தில்குமார்//நீங்க லேடீஸ்ட்ட தானே அப்படி பேசுவீங்க? // நான் நல்லா இருக்குறது பிடிக்கலையாய்யா?

  ReplyDelete
 33. @குடந்தை அன்புமணி//அம்பிகா...அதுவும் இந்த 2011ல.... அப்ப உங்க வயசு என்ன? // அம்பிகாக்கே இப்படிக் கேட்கீங்களே..நாங்க பத்மினி/கே.ஆர்.விஜயாவையே விட்டதில்லை, தெரியுமா?

  ReplyDelete
 34. @ஜீ...

  நானா யோசிச்சேன் ஜீ???

  இவர் எலுதுர அரசியல் பதிவு படிச்சி ஒரு பிம்பம் உண்டாச்சி அத வச்சி தாஞ இப்படி ஒரு கேள்வி கேட்டேன்...

  அதுக்கு இந்தா ஆளு என்னய்யா ஒப்பாரி வைக்க வச்சிட்டாப்லையே..... :-)

  ReplyDelete
 35. @சென்னை பித்தன்//’சிறந்த சிந்தனையாளர்’ என்ற விருதைத் தம்பிக்கு வழங்குகிறேன்! // ஐயா, விருது வழங்கி ஊக்குவிப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 36. @சி.பி.செந்தில்குமார்

  ஆமா வந்துட்டார்யா நம்ம தலைவர், சிபி உங்க கூடையும் பேசணும் ஷோ கொஞ்சம் எப்படி ரிப்ளை பண்ணணும்னு ப்ரிப்பேர் பண்ணிட்டு இருங்க

  ReplyDelete
 37. @RK நண்பன்..உங்களால ரெண்டு நாளா கதவைச் சாத்திக்கிட்டு பேசிப் பிராக்டிஸ் பண்றேன், தெரியுமா..என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டாங்களே..அவ்வ்வ்வ்!

  ReplyDelete
 38. ஜட்டிய கூட விட்டு வைக்கலாயா??

  உங்க கூட வெளிய போனா அருணக்கொடிய வச்சி ஜட்டிய நல்லா முடிச்சி போட்டு தான் வைக்கணும்...

  ReplyDelete
 39. @நிரூபன்

  அந்த புண்ணியவான் நானேதான் நண்பா...

  ஏங்க புதுசா மீட் பண்ணுனா என்ன கேக்குறதுணு தெரியாம திடீர்னு இப்படி பேசுன தாள கேட்டுபுட்டேன் அதுக்கு இப்படியா??

  ReplyDelete
 40. @RK நண்பன்..//உங்க கூட வெளிய போனா அருணக்கொடிய வச்சி ஜட்டிய நல்லா முடிச்சி போட்டு தான் வைக்கணும்..// தங்க அருணாக்கொடியா இருந்தா, அதுவும் சேர்த்து உருவப்படும்.

  ReplyDelete
 41. @sengovi

  எந்த கதவு செங்கோவி?? பேட் ரூம்லயா? இல்ல பாத் ரூம் குள்ள போயி பிராக்டிஸ் பன்றிங்களா?

  பரவா இல்ல நானும் ஒருத்தர 2 நாள் பொலம்ப வச்சத நெனைச்சா சந்தோஷமா இருக்கு...
  ஹீ ஹீ

  ReplyDelete
 42. @RK நண்பன்..//நானும் ஒருத்தர 2 நாள் பொலம்ப வச்சத நெனைச்சா சந்தோஷமா இருக்கு...// நல்ல மனசுய்யா உங்களுக்கு.

  ReplyDelete
 43. யோவ்...ஹன்சிகா வீடியோவை போட்டா லோட் ஆகுதுல....டக்குன்னு பாக்குற மாதிரி ஒரு ஸ்டில் போட்டிருக்கலாம்ல....இது நானா யோசிச்சேன்.

  ReplyDelete
 44. @தமிழ்வாசி - PRAKASH//டக்குன்னு பாக்குற மாதிரி ஒரு ஸ்டில் போட்டிருக்கலாம்ல..// நான் கேட்ட அம்பிகா சிடியைக் கொடுக்க ஒருத்தர்கூட ரெடியா இல்லை..நான் மட்டும் உங்களுக்காக ஹன்சி ஸ்டில்லு போடணுமா..என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
 45. ‘அம்பிகா சிடி நிதி’//-;))

  ReplyDelete
 46. 9/31 ஓட்டு விழுந்திருக்கு ஆனா கமெண்டே இல்லை..சார் என்ன தொழில் நுட்பம் இது..?சக பதிவர்க்கு உதவலாமே?

  ReplyDelete
 47. @ஆர்.கே.சதீஷ்குமார்அய்யய்யோ...இருந்துச்சு சதீஷ்..இப்போ கமெண்ட்டையெல்லாம் காணோம்..இன்னும் என்னென்ன காணமப் போயிருக்கோ தெரியலியே...இது தான் இவங்க பண்ண மெயிண்டனன்ஸா..அட ஆண்டவா..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.