Thursday, May 19, 2011

மம்மி வந்தாச்சு!..கனி கைது என்னாச்சு?(நானா யோசிச்சேன்)

டிஸ்கி: இன்னுமா இதெல்லாம் தேவை?

தா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........


நெஞ்சைத் தொட்ட வரிகள்:
 சொன்னபடி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே!

(குஷ்பூவின் சிங்கார வேலனில் இருந்து!)

பதிவர் புலம்பல்:

எனக்கு உளுந்து வடைன்னா ரொம்பப் பிடிக்கும்ணே.. சில பேரு அதை மெதுவடைன்னும் சொல்வாங்கண்ணே.. இப்போ என் பையனும் அதைத் தான் விரும்பிச் சாப்பிடுதானாம். எப்படியும் அடுத்த மாசம் இங்க வந்துடுவான். அதனால ‘குவைத்ல உளுந்தை வடை கிடைக்குமா?’ன்னு தங்கமணி கேட்டுச்சு. நானும் கிடைக்கும்னு தெரியாமச் சொல்லிப்புட்டேன். ‘அப்போ நீங்க டெய்லி ஒரு உளுந்தவடை தம்பிக்கு வாங்கிட்டு வரணும்’னு சொல்லுச்சு பாருங்க..அவ்வளவு தான்..எனக்கு கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு..பேச்சு குழறி, ஏசிலயும் வேர்த்து, திரிசூலம் கே.ஆர்.விஜயா(ஸ்டில்லு வேணுமா?) மாதிரி கையில இருந்த ஃபோனைக் கீழ போட்டுட்டேண்ணே..

பின்னே, ஏற்கனவே பதிவர்கள் வடை, போண்டா வாங்குறதைக் கண்டிச்சு திக்கம் திக்கம் பதிவாப் போட்டு திட்டிக்கிட்டு இருக்காங்க..இப்போ நானு டெய்லி வடை வாங்கப்போற விசயம் மட்டும் வெளில தெரிஞ்சா, என் நிலைமை என்னாகுறதுண்ணே..நினைக்கவே பயங்கரமா இருக்கே...ச்சே, என்னண்ணே இது பதிவர் பொழைப்பு..புள்ளைக்கு வடை வாங்கித் தரக்கூட முடியலையே...

மம்மி வந்தாச்சு:

ஒரு வழியா தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றம் வந்தாச்சு. வரவேற்பு, எதிர்ப்புன்னு இந்த வாரம் ஒரே களேபரம்..’அம்மா ஆட்சிக்கு வந்தாச்சு. இனி தமிழ்நாட்டு ஃபுல்லா பாலாறும் தேனாரும் தான் ஓடப் போகுது. அதனால நடக்கும்போது வேட்டியைத் தூக்கிக்கிட்டு நடங்க.’ன்னு ஆரவாரம் ஒரு பக்கம். அதாவது பரவாயில்லைங்கிற மாதிரி, எதிர்பார்ட்டிங்க ‘அய்யய்யோ..வந்ததுமே ஆரம்பிச்சுட்டாங்க.போக்குவரத்தை நிறுத்திட்டாங்க..தலைமைச் செயலகத்தை மாத்தீட்டாங்க’ன்னு ஒரே புலம்பல். கூடவே நம்ம ஆளுங்க மம்மிக்கு லெட்டர் வேற. பதில் வந்துச்சான்னு தெரியலை..வரலேன்னா, அடுத்த லெட்டரை சசிகலாக்கு எழுதுங்கப்பா..விளக்கமாப் பதில் சொல்வாங்க!

சுனாமி வந்தாத் தான் நம்ம ஆளுக பதறுவாங்கன்னு பார்த்தா, மம்மி திரும்ப ஆட்சிக்கு வந்தாலும் பரபரப்பாப் பதறுதாங்களே..(யாருய்யா அது ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றது..சதீஷ்கிட்ட சொல்லிப் புடுவேன்!).

ஸ்லிம் சிண்ட்ரோம்:

யாரவது நல்லா இருந்தாத் தான் நம்மாளுகளுக்குப் பிடிக்காதே..போன வாரம் ஒரு நிருபர் நம்ம ஹன்ஸிகா கிட்ட ‘நீங்களும் ஸ்லிம் ஆவீங்களா?’ன்னு கேட்டிருக்காரு. ஏற்கனவே த்ரிஷா, ஸ்ரேயால்லாம் ஸ்லிம்மாகுறேன் பேர்வழின்னு நோய் வந்த கோழி மாதிரி ஆனது பத்தாதா?...இந்தக் கேள்வியைப் படிச்சதும் பதறிப் போயிட்டேன். பின்னே, தமிழ்நாட்டுல எவ்வளவுக்கெவ்வளவு உடம்பு பெருகுதோ, அவ்வளவுக்கவ்வளவு மன்றம் பெருகும்ல..இவங்க பாட்டுக்கு ஸ்லிம் ஆகி, நம்ம மன்றத்தைக் கலைக்க வேண்டி வந்திடுமோன்னு பயந்துட்டேன். 

ஆனா நம்ம தலைவி யாரு....’கவர்ச்சியா நடிக்க, இப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும். அதனால உடம்பைக் குறைக்க மாட்டேன்’ன்னு சொல்லி நம்ம வயித்துல பாலை வார்த்திடுச்சு..சின்னப் பொண்ணுன்னு பார்த்தா இவ்வளவு விவரமா இருக்கே..எப்படியோ மக்கா, பாப்பா சீக்கிரமே பீப்பா ஆனாச் சரி தான்!


கனி..இனி?

இந்த வார வருத்தம்னா கனி இன்னும் உள்ளே போகாதது தான். ஏன் இப்படிச் சவ்வு மாதிரி இழுக்காங்கன்னு தெரியலை..ஆனா விசாரணை கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கு.(அது இல்லைப்பா..)..கனிமொழி ஆடிட்டரைப் பிடிச்சு நோண்டி நொங்கெடுத்திருக்காங்க.

சோனியா வேற டீ பார்ட்டிக்கு ஜெ.வைக் கூப்பிட்டிருக்காங்களாம். அங்க மம்மியோட முதக் கோரிக்கையே கனியை உள்ள அனுப்புறதாத் தான இருக்கும்..எப்படியோ, சீக்கிரமா சட்டுப் புட்டுன்னு தூக்கி உள்ள வைங்கப்பா..பாவம்ல அவரு!

அதிர்ச்சிப் புலம்பல்:

போன வாரம் ’கண் சிமிட்டும் நேரம்’ அம்பிகா சிடி கேட்டதுக்கு ஒருத்தர்கூட உதவி செய்ய முன்வரலையேன்னு ரொம்ப வருத்தத்துல இருந்தேன். அப்போ ஒரு பதிவரு உதவி செய்ய முன்வந்தாரு. ‘தம்பி, சிடி வேணுமா’ன்னாரு. நானும் ’ஆமா, உடனே வேணும்’னேன்..அதுக்கு அவரு ‘சரி, ஒரு கோடி ரூவா எனக்கு அனுப்பு..நான் சிடியை அனுப்புறேன்’ன்னு சொன்னாரு பாருங்க, எனக்கு மயக்கமே வந்திடுச்சு..அடப்பாவிகளா....அம்பிகாக்கே அவ்வளவு ஆகாதே..ஹூம், இந்த மாதிரிப் பதிவருக இருக்கிறவரைக்கும் பதிவுலகம் எப்படி உருப்படும்..சொல்லுங்க..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

 1. எனக்கு உளுந்து வடைன்னா ரொம்பப் பிடிக்கும்ணே.. சில பேரு அதை மெதுவடைன்னும் சொல்வாங்கண்ணே..>>>>>

  சில பேரு ஓட்ட வடைன்னும் சொல்வாங்களே! ஓ... மாத்தியோசி காப்பி ரைட் வாங்கியிருகார்னு அப்படி போடவில்லையாக்கும்?

  ReplyDelete
 2. @தமிழ்வாசி - Prakashஇன்னைக்குமா..இந்த வாரம் தொடர்ந்து வடை வாங்கும் அண்ணன் பிரகாஷ் வாழ்க.

  ReplyDelete
 3. ச்சே, என்னண்ணே இது பதிவர் பொழைப்பு..புள்ளைக்கு வடை வாங்கித் தரக்கூட முடியலையே...>>>>

  @தமிழ்வாசி - Prakashஇன்னைக்குமா..இந்த வாரம் தொடர்ந்து வடை வாங்கும் அண்ணன் பிரகாஷ் வாழ்க.>>>>>>>

  இனிமே நான் வடை வாங்கல... உன் பையனுக்கே கொடு.

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash//மாத்தியோசி காப்பி ரைட் வாங்கியிருகார்னு அப்படி போடவில்லையாக்கும்?// ஆமாங்க, அவரு பெரியவரு..அவர்கிட்ட மோத முடியுமா..

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash//இனிமே நான் வடை வாங்கல... உன் பையனுக்கே கொடு.// உங்க நல்ல மனசு வாழ்க.

  ReplyDelete
 6. போன வாரம் ஒரு நிருபர் நம்ம ஹன்ஸிகா கிட்ட ‘நீங்களும் ஸ்லிம் ஆவீங்களா?’ன்னு கேட்டிருக்காரு.>>>>>

  அந்த நிருபர் ஹன்ஸிகாவை சரியா பார்த்திருக்க மாட்டார். அதான் அப்படி கேட்டுட்டார். மன்னிச்சு விட்ருங்க.

  ReplyDelete
 7. சின்னப் பொண்ணுன்னு பார்த்தா இவ்வளவு விவரமா இருக்கே..எப்படியோ மக்கா, பாப்பா சீக்கிரமே பீப்பா ஆனாச் சரி தான்!>>>>>>

  ஏப்பா செங்கோவி, எல்லா நடிகைகளையும் நமீ ரேஞ்சுக்கு யோசிக்காத (பீப்பா வை சொன்னேன்)

  ReplyDelete
 8. ‘தம்பி, சிடி வேணுமா’ன்னாரு. நானும் ’ஆமா, உடனே வேணும்’னேன்..அதுக்கு அவரு ‘சரி, ஒரு கோடி ரூவா எனக்கு அனுப்பு..நான் சிடியை அனுப்புறேன்’ன்னு சொன்னாரு >>>>>

  இன்னமுமா அம்பிகாவை கனவு கண்டுட்டு இருக்க? ஹா...ஹா... ஓசியில அம்பிகாவை பாக்கனும்னு நெனச்சா இப்படி தான் கேட்பாங்கய்யா.

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//ஏப்பா செங்கோவி, எல்லா நடிகைகளையும் நமீ ரேஞ்சுக்கு யோசிக்காத// எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?

  ReplyDelete
 10. // பாப்பா சீக்கிரமே பீப்பா //

  டி.ஆர். நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்துக்கு வசனம் நீங்கதானா?

  ReplyDelete
 11. >>எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்......

  hi hi ஹி ஹி அண்ணி கிட்டே சொல்லி முதல்ல அண்ணனை .. ஹி ஹி

  ReplyDelete
 12. >>அடப்பாவிகளா....அம்பிகாக்கே அவ்வளவு ஆகாதே.

  பெண் பதிவர்கள், கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் வந்து அண்ணனை கும்மவும்.. ஹி ஹி

  ReplyDelete
 13. எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........//

  நல்லாத் தானே போய்க் கிட்டிருக்குது...அவ்......

  ReplyDelete
 14. என்னண்ணே இது பதிவர் பொழைப்பு..புள்ளைக்கு வடை வாங்கித் தரக்கூட முடியலையே...//


  ஆய்...
  உள் குத்துப் பலமா இருக்கே.

  ReplyDelete
 15. கனி மொழி வடிவேலு ரேஞ்சுக்குப் போயிட்டாவா..

  பல் சுவை அலசல் அருமை.
  என் கிட்ட சீடி இருக்கு, ஆனால் சின்னப் பசங்களுக்கு கொடுக்க மாட்டேன்.

  ReplyDelete
 16. அம்பிகாப் பற்றி பேசாதே மாப்ள அப்புறம் வடிவேலு சண்டைக்கு வரப் போறாரு..

  ReplyDelete
 17. /////ஒரு கோடி ரூவா எனக்கு அனுப்பு..நான் சிடியை அனுப்புறேன்’ன்னு சொன்னாரு ////

  அடடா பாவமே அந்த காசுக்கு நீங்க சீடி என்ன அந்த படத்தின் றில்சையே வாங்கியிரக்கலாமே... ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

  ReplyDelete
 18. இன்னும் வீட்ல வரல போல ஹிஹி!

  ReplyDelete
 19. குஷ்பூவின் சிங்கார வேலனில் இருந்து!//
  செம நக்கல்யா உமக்கு!!

  ReplyDelete
 20. நமீதா இல்லாம பதிவே இல்ல போல

  ReplyDelete
 21. வேட்டை ஆரம்பிச்சிருச்சி

  ReplyDelete
 22. @! சிவகுமார் !//டி.ஆர். நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்துக்கு வசனம் நீங்கதானா?// ஹா..ஹா..ஏதாவது ஹன்சி படத்துக்குன்னா ஓகே!

  ReplyDelete
 23. @சி.பி.செந்தில்குமார்//hi hi ஹி ஹி அண்ணி கிட்டே சொல்லி முதல்ல அண்ணனை .//

  //பெண் பதிவர்கள், கலாச்சாரக்காவலர்கள் எல்லாம் வந்து அண்ணனை கும்மவும்.. ஹி ஹி// வாயில ஒன்னாவது நல்ல வார்த்தை வருதா..

  ReplyDelete
 24. @விக்கி உலகம்//இன்னும் வீட்ல வரல போல ஹிஹி!// உஷ்..கம்பெனி ரகசியத்தை வெளில சொல்லாதீரும்யா!

  ReplyDelete
 25. //அம்பிகாக்கே அவ்வளவு ஆகாதே..//

  :)))

  ReplyDelete
 26. அண்ணி வரப்போறாங்களா? அப்புறம் அண்ணன் சீரியஸ் பதிவா போட்டு.. அண்ணே இருக்கிற ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பதிவுல போடுங்கண்ணே!

  ReplyDelete
 27. கனிமொழிக்கு ஜெயலலிதா ஆப்படிக்க வேண்டியதில்லை. அந்த வேலையை மத்திய அரசே பார்த்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 28. கறுப்புப் பணத்தைக் கரைக்க ஒரு சூப்பர் ஐடியா! ஒரே ஒரு படம்!! ஒரு பெரிய்ய்ய ஆடம்பர பிளைட்...வாடகைக்கு பிடிக்கிறோம்.. அப்புறம் பாருங்க!!!

  ReplyDelete
 29. //இந்த வலைப்பூ மனதளவிலும் உடலளவிலும் 18 வயது நிரம்பியோருக்கானது! மற்றவர்கள் தவிர்க்கவும்.//


  18 வயசுக்கு கீழ இருக்குற புள்ளைங்க எத்தனை பேரு வலைப்பூவ படிக்கறாங்களா? அப்படியே இந்த அறிவிப்பை பாத்தாலும் அவங்க படிக்காம போய்டுவாங்களா?? ஹே..ஹே..

  ReplyDelete
 30. ஆஹா ரசகுல்லா மாதிரி நமீ படம்... எங்கேயிருந்துதான் புடிச்சிகிட்டு வர்றியோ தெரியலையே செங்கோவி!

  குஷ்பூ....ஒரு சுத்த நாறிப் போன பூ :(. ஏற்கனவே ஊர் கேட்டு கிடக்கு, இன்னும் கெடட்டும்னு, பேசுறவ, கல்யாணத்துக்கு முன்னவும், பின்னவும் நண்பர்கள் ஏராளம், இனிஷியல் பிரச்சினைக் வரக்கூடாதேன்னு ஒரு இளிச்ச வாயன். கண்றாவி, இவ பேரைப் பார்க்கும் போதே பத்திகிட்டு வருது.......

  \\ஆட்சி மாற்றம் வந்தாச்சு\\ பாலாரும் தென்னாரும் ஒரு போதும் எதிர் பார்க்க முடியாது செங்கோவி, திருடன், கொலைகாரன் இரண்டுபேரில் திருடனே மேல், ஏன்னா பொருள் தான் போகும், என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

  ஹன்ஸிகா வா..! முடிஞ்ச தங்கமணி இ-மெயில் ஐ.டி. குடுங்க, கொஞ்சம் உங்கள கவனிக்கச் சொல்லனும்!

  கனி, ராசா கைது எல்லாமே நாடகம் செங்கோவி, யாரோ ஒரு ராஜா கழுத்து மேல இருந்து ஈயை வாளால் ஒரே போடா போட்ட குரங்கு கதையாகி விடும். பங்கிட்டு தின்றது மஞ்சள் துண்டு, காங்கிரஸ் அப்புறம் அம்பானி மாதிரி பண முதலைகள், ராசா மாட்டும் என்ன ஏமாந்த சோனகிரியா?

  \\அம்பிகாக்கே அவ்வளவு ஆகாதே.\\ கரெக்டா சொன்னீங்க, வடிவேலுவைக் கெட்ட எவ்வளவுன்னு சரியாச் சொல்லிடுவாரே. [ஐயையோ தப்ப நினைக்காதீங்க, அவரோட ஒரு படத்துக்கு போலீஸ் வேடத்துல காமெடி நடிகையா நடிக்க எவ்வளவு கொடுத்தார்கள் என்று அவர் சொல்லிவிடுவார் என்று தான் சொன்னேன். ஹி..ஹி..ஹி..]

  ReplyDelete
 31. @ஆர்.கே.சதீஷ்குமார்//நமீதா இல்லாம பதிவே இல்ல போல// அண்ணே, நமீதா இல்லேன்னா வாழ்க்கையே இல்லேங்கிறோம்!!

  ReplyDelete
 32. @சங்கவி//அம்பிகாக்கே அவ்வளவு ஆகாதே..// :))) புரஃபைல்ல இருக்குற மாதிரியே சிரிக்கீங்களே..

  ReplyDelete
 33. @ஜீ...//அப்புறம் அண்ணன் சீரியஸ் பதிவா போட்டு.. // ச்சே..ச்சே...கையில கால்ல விழுந்தாவது கலக்குவோம்ஜி!

  //அண்ணே இருக்கிற ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பதிவுல போடுங்கண்ணே!// தம்பி, எதுவுமே ஓவர் டோஸ் ஆகிடக் கூடாது..போதும்.

  ReplyDelete
 34. @ரஹீம் கஸாலி//கனிமொழிக்கு ஜெயலலிதா ஆப்படிக்க வேண்டியதில்லை. அந்த வேலையை மத்திய அரசே // எப்ப்டியோ, ஆப்பு அடிச்சாச் சரிதான் கஸாலி.

  ReplyDelete
 35. @ஜீ...//கறுப்புப் பணத்தைக் கரைக்க ஒரு சூப்பர் ஐடியா! ஒரே ஒரு படம்!! ஒரு பெரிய்ய்ய ஆடம்பர பிளைட்...வாடகைக்கு பிடிக்கிறோம்.. அப்புறம் பாருங்க!!!// ஏற்கனவே ஒரு கப்பலைப் பிடிச்சே, கரைக்க முடியலையே!

  ReplyDelete
 36. @! சிவகுமார் !//18 வயசுக்கு கீழ இருக்குற புள்ளைங்க எத்தனை பேரு வலைப்பூவ படிக்கறாங்களா? அப்படியே இந்த அறிவிப்பை பாத்தாலும் அவங்க படிக்காம போய்டுவாங்களா??// ஹி..ஹி..எச்சரிக்கை பண்றது நம்ம கடமை(!)..அப்புறம் அவங்க பாடு.

  ReplyDelete
 37. @Jayadev Das //ஆஹா ரசகுல்லா மாதிரி நமீ படம்... எங்கேயிருந்துதான் புடிச்சிகிட்டு வர்றியோ// குஜராத்துல இருந்து சார்!

  //குஷ்பூ....ஒரு சுத்த நாறிப் போன பூ // திட்டாதீங்க சார்..எனக்கு வலிக்குது.

  //முடிஞ்சா தங்கமணி இ-மெயில் ஐ.டி. குடுங்க, கொஞ்சம் உங்கள கவனிக்கச் சொல்லனும்!// உங்களுக்கு எதுக்குச் சிரமம்..அடுத்த வாரம் அவங்களே வந்துடுவாங்க சார்!

  //ராசா மாட்டும் என்ன ஏமாந்த சோனகிரியா?// கோர்ட்டுக்கு அலைய ஒரு சோணகிரியாவது வேணும்ல!

  //வடிவேலுவைக் கெட்ட எவ்வளவுன்னு சரியாச் சொல்லிடுவாரே. ஐயையோ தப்ப நினைக்காதீங்க.// ச்சே..நல்ல தகவல்களாச் சொல்லி எங்க ஜீ.கேயை இம்ப்ரூவ் பண்றீங்க..உங்களைத் தப்பா நினைப்பேனா?

  ReplyDelete
 38. பயங்கரமா இருக்கே...ச்சே, என்னண்ணே இது பதிவர் பொழைப்பு..

  ReplyDelete
 39. லாஸ்டு வடை எனக்கே

  ReplyDelete
 40. இனியும் வேற யாராச்சும் இருக்கீங்கலா????

  ReplyDelete
 41. @இரவு வானம் லாஸ்ட்லயும் வடையா..முத வடைக்கே பஞ்சாயத்தாக் கிடக்கு..!

  ReplyDelete
 42. பாவம்ல அவரு!....

  sema ulkutthu...auto vanthurama boss... athusari avanukaley fuse poi irukangalo..!!

  ReplyDelete
 43. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

  ReplyDelete
 44. @RK நண்பன்..ஆர்கே, இவ்வளவு நுணுக்கமாவா பதிவைப் படிக்கிறது..நினைச்சது நடந்தாச்சு!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.