Thursday, May 26, 2011

கோழையான பதிவரும் ஏழையான கலைஞரும் (நல்லா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

பதிவர் புலம்பல்:
புலம்பலா..ச்சே..ச்சே..யாருய்யா அப்படிச் சொன்னது..தங்கமணியும் பையனும் ஊரிலிருந்து வர்றாங்க..ஃப்ளைட் ஏறியாச்சு..அதனால் நாளை பதிவு கிடையாது. நல்லாப் படிங்கய்யா, நாளை மட்டும் தான் பதிவு கிடையாது. இனிமேப் பதிவே கிடையாதுன்னு நினைச்சு யாரும் பட்டாசு வெடிச்சுடாதீங்க. நாளைக்குப் பதிவு போடலியேன்னு யாரும் சோறு தண்ணி இல்லாமக் கிடக்க வேண்டாம்னு கேட்டுக்கிறேன். 

மேனி மின்ன:

உடம்பை வளர்த்தேன், உயிர் வள்ர்த்தேனேன்னு நம்ம ந......ச்சே,நம்ம திருமூலர் சொல்லி இருக்காரு. அப்படி உடம்பை வளர்த்தா மட்டும் போதாது, நல்லா பராமரிக்கணும்(!) இல்லியா. அதுக்கு என்ன செய்யணும்னு இன்னைக்குச் சொல்றேன். 

பாசிப்பயறை நல்லா அரை அரைன்னு அரைச்சுப் பொடி ஆக்கிக்கணும். அப்புறமா குளிக்கும்போது அதை மூஞ்சி முகரையெல்லாம் அப்பு அப்புன்னு அப்பிக்கிட்டு, தேய் தேய்னு தேய்ச்சுக் குளிச்சா, சருமம் மின்னும். மேனி பளபளக்கும். உடல் மினுமினுக்கும்.

ஏழைக் கலைஞர்:

இந்த வாரம் கலிஞரு ஒரு பெரிய்ய்ய அறிக்கை விட்டிருக்காரு..அறிக்கைன்னு சொல்ல முடியாது, வேணும்னா ஒப்பாரின்னு வச்சுக்கலாம். ’அதுல நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன்’னு பரிதாபமாப் புலம்பி இருக்காரு. இவரு தானே கொஞ்ச நாள் முன்னே ‘நான் ஒன்னும் பஞ்சப் பரதேசி அல்ல’ன்னு சொன்னாரு..நம்ம மக்கள்கூட நெஞ்சுக்கு நீதியைச் சாட்சியா வச்சுக் கும்முனாங்களே..

இப்போ எப்படி ஏழைன்னு சொல்தாரு..ஒருவேளை ஆட்சி பறிபோனதுல எழை ஆயிட்டாரோ..இவரு ஏன் இப்படி கேப்டன் மாதிரி மாத்தி மாத்திப் பேச ஆரம்புச்சுட்டாரு..3வது இடத்துல இருக்குறவங்கள்லாம் இப்படித் தான் பேசுவாங்களோ..அப்போ கேப்டன் இனிமேத் தெளிவாப் பேசுவாரோ..இந்த கர்மம் புடிச்ச அரசியலே நமக்குப் புரிய மாட்டேங்குதே..

கண் எரிச்சலுக்கு:

உங்கள்ல நிறையப் பேரு தொடர்ந்து கம்ப்யூட்டர் மானிட்டரையே பாக்குறவங்க தானே..அப்படி மானிட்டரையே ஒய்யாம உத்துப் பாக்குறவங்களுக்கு கண் எரிச்சல் வரும். நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது, அவிஞ்சு போகும்! அதனால அந்த மாதிரிப் பாவிகளைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம். நான் சொல்றது நம்மளை மாதிரி பூச்சிகளுக்கு!
அந்தக் கண்ணு எரிச்சலைத் தடுக்க வெள்ளரிக்காயை ரவுண்டாக் கட் பண்ணிக்கணும். பண்ணிட்டு, அதை எப்பவும்போல வாயில போடாம கண்ணு மேல கொஞ்ச நேரம் வைக்கணும். இதுல ரெண்டு கண்டிசன் இருக்கு. முத கண்டிசன்,  பழக்க தோசத்துல வெள்ளரிக்காயில மிளகாப்பொடியைத் தடவிடக் கூடாது. ரெண்டாவது, அப்படி வெள்ளரிக்காத் துண்டை வைக்கும்போது கண்ணு மூடி இருக்கணும். 

நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கும். எந்தளவுக்குக் குளிர்ச்சியா இருக்கும்னா...அய்யய்யோ, நம்ம வாய் வேற சும்மா இருக்க மாட்டேங்குதே..குளிர்ச்சியா இருக்கும்ங்க..அவ்வளவு தான். நீங்களே வைச்சுப் பாத்துக்கோங்க.

புதிர்:

நல்ல மாதிரி பல்சுவைப் பதிவு போட்டா விடுகதை/புதிர்/கணக்கு ஏதாவது போடணுமாமே. அதனால..

ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் கோடி மதிப்புள்ள பொருளை 10% ரேட்டுக்கு வித்ததுக்கு 30% கமிசன் கிடைச்சா, அதுல டெல்லிக்கு 3% மட்டும் கொடுத்துட்டு, அய்யாவோட பெரிய குடும்பத்துக்கு 5% கொடுத்துட்டு, அண்ணன்களுக்கு பட்டை நாமம் போட்டுட்டு வர்ற மீதில அவருக்கு 50% கொடுத்துட்டு, மீதி 50%ஐ தனக்குன்னு எடுத்தா, திகார் ஜெயிலைத் தவிர வேற என்ன கிடைக்கும்?

கொட்டாவி:

ஆவ்...என்னய்யா இது, எழுதுன எனக்கே இப்படி கொட்டாவி வருதே, படிக்கிற நீங்கள்லாம் என்ன செய்யப் போறீங்களோ..எப்படி நம்ம பங்காளிகள்லாம் சுத்த பத்தமா பல்சுவைப் பதிவு போடுறாய்ங்கன்னு தெரியலையே!

டிஸ்கி: இது ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு !
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

72 comments:

 1. அந்தக் கண்ணு எரிச்சலைத் தடுக்க வெள்ளரிக்காயை ரவுண்டாக் கட் பண்ணிக்கணும். பண்ணிட்டு, அதை எப்பவும்போல வாயில போடாம கண்ணு மேல கொஞ்ச நேரம் வைக்கணும். இதுல ரெண்டு கண்டிசன் இருக்கு. முத கண்டிசன், பழக்க தோசத்துல வெள்ளரிக்காயில மிளகாப்பொடியைத் தடவிடக் கூடாது. ரெண்டாவது, அப்படி வெள்ளரிக்காத் துண்டை வைக்கும்போது கண்ணு மூடி இருக்கணும்.  ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... டிப்ஸ் சொல்ற விதம் நல்லா இருக்குது.

  ReplyDelete
 2. Convey our regards to your family. :-)

  ReplyDelete
 3. @Chitra நன்றிக்கா..கண்டிப்பாச் சொல்றேன்!

  ReplyDelete
 4. சட்டி சுட்டதடா கை விட்டதடா
  புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
  நாலும் நடந்து முடிந்த பின்னால்
  நல்லது கெட்டது தெரிந்ததடா

  பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
  மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
  ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
  அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா//

  என்னய்யா, சோக இராகம் எல்லாம் பாடுறீங்க.. வெகு விரைவிலை இன்ர நெட்டுக்கு மூடு விழாவோ. அவ்...

  ReplyDelete
 5. நாளை மட்டும் தான் பதிவு கிடையாது. இனிமேப் பதிவே கிடையாதுன்னு நினைச்சு யாரும் பட்டாசு வெடிச்சுடாதீங்க.//

  ஆஹா.. அப்போ மன்மத லீலைகள் சண்டே ஆ வரும்...

  ReplyDelete
 6. post ku naduvula ennoda photova ennai ketkaama potta sengoviyai kandikkiren

  ReplyDelete
 7. vellarikkaai matter la comedy try panni irukkeenga thala...

  ReplyDelete
 8. குளிக்கும்போது அதை மூஞ்சி முகரையெல்லாம் அப்பு அப்புன்னு அப்பிக்கிட்டு, தேய் தேய்னு தேய்ச்சுக் குளிச்சா, சருமம் மின்னும். மேனி பளபளக்கும். உடல் மினுமினுக்கும்.//

  இதான் உங்க அழகின் ரகசியமா. சொல்லவே இல்லை

  ReplyDelete
 9. aarambame sogamaa irukke. but family ange varaangale.

  ReplyDelete
 10. அப்போ கேப்டன் இனிமேத் தெளிவாப் பேசுவாரோ..இந்த கர்மம் புடிச்ச அரசியலே நமக்குப் புரிய மாட்டேங்குதே.//

  ஏலவே குழம்பிப் போயிருக்கிறேன், நீங்க வேறை குட்டையை முழுசாக் குழப்புற நோக்கத்திலை இருக்கிறீங்களே.

  ReplyDelete
 11. நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது,//

  அனுபவசாலி சொல்லுறாரு, கேட்டுக்குங்க..
  அவ்.....

  ReplyDelete
 12. naalaikku mattum moodu vizha nadathraaraam. romba mukkiyam paarunga

  ReplyDelete
 13. @டக்கால்டி//puzzle super// நன்றி டகால்ட்டி.

  ReplyDelete
 14. @நிரூபன்//ஆஹா.. அப்போ மன்மத லீலைகள் சண்டே ஆ வரும்...// நமக்கு என்ன கவலை..இவருக்கு என்ன கவலைன்னு பாருங்க.

  ReplyDelete
 15. @டக்கால்டி//post ku naduvula ennoda photova ennai ketkaama potta sengoviyai kandikkiren// எது, அந்த திருட்டு முழி பாப்பாவா?

  ReplyDelete
 16. sengovi computer'la eppavume actress slide show ooditte irukkum. avangala paarthutte post ezhuthuvaaraam.

  ReplyDelete
 17. @டக்கால்டி//ellarikkaai matter la comedy try panni irukkeenga thala...// ட்ரை பண்ணி இருக்கனா? அப்போ சிரிப்பு வரலையா..யோவ், இதை அவசியம் கமெண்ட்ல சொல்லணுமா?

  ReplyDelete
 18. @நிரூபன்//இதான் உங்க அழகின் ரகசியமா. சொல்லவே இல்லை// நானும் தேய்ச்சுப் பாத்தேன் நிரூ..பாசிப்பயறு கருப்பாயிடுச்சு!

  ReplyDelete
 19. @தமிழ்வாசி - Prakash//arambame sogamaa irukke. but family ange varaangale.// சுக ராகம் சோகம் தானே?...பையன் வந்தப்புறம் யாருக்கும் வடை கிடையாது.

  ReplyDelete
 20. 1.76கோடி இனை பத்து வீதத்தால் பெருக்க வாற கமிசன் 30% ஆக இருக்கனுமாம்.
  அப்படீன்ன 1.76 இனை முப்பது வீதப் படி பார்த்தால்,
  வாற கமிசன்
  0.528 ஆக இருக்கும். இதன் படி
  528 கோடியில் 3% இனை....
  டெல்லிக்கு கொடுத்திரு க்காங்க.
  அந்த எமவுண்ட் எவ்ளோ என்றால்,
  158.4கோடி...

  ஐயாவோடை பெரிய குடும்பத்திற்கு
  26.4 இல்ட்சம் கோடி...

  அப்புறம்,
  வாற எமவுண்டிலை 50% என்னன்னு யாராச்சும் கணிச்சு சொல்லுங்கோ

  ReplyDelete
 21. @நிரூபன்//அனுபவசாலி சொல்லுறாரு, கேட்டுக்குங்க..// உஷ்!

  ReplyDelete
 22. டிஸ்கி: இது ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு !
  என்னய்யா, ஆளாளுக்கு புதுசு, புதுசா டிஸ்கி கண்டு பிடிக்கிறீங்க...
  வாழ்த்துக்கள் சகா. அப்புறம் எங்காச்சும் பிக்னிக் போய் ஜாலியாக இருந்திட்டு வாங்க.

  ReplyDelete
 23. @நிரூபன்//0.528 ஆக இருக்கும். இதன் படி
  528 கோடியில் 3% இனை....
  டெல்லிக்கு கொடுத்திரு க்காங்க.
  அந்த எமவுண்ட் எவ்ளோ என்றால்,
  158.4கோடி...

  ஐயாவோடை பெரிய குடும்பத்திற்கு
  26.4 இல்ட்சம் கோடி...
  // போச்சு..கணக்கு தப்பாப் போச்சு.

  ReplyDelete
 24. @நிரூபன்//வாழ்த்துக்கள் சகா. அப்புறம் எங்காச்சும் பிக்னிக் போய் ஜாலியாக இருந்திட்டு வாங்க.// நானே பயந்து போய்க் கிடக்கேன்..நக்கலைப் பாரு!

  ReplyDelete
 25. //வெள்ளரிக்காயை ரவுண்டாக் கட் பண்ணிக்கணும்//

  எதுக்கு ரவுண்டா கட் பண்ணனும். நேரா கட் பண்ணாலே ரவுண்டாதானே இருக்கும். (எப்பூடி..)

  ReplyDelete
 26. @! சிவகுமார் !//எதுக்கு ரவுண்டா கட் பண்ணனும். நேரா கட் பண்ணாலே ரவுண்டாதானே இருக்கும். (எப்பூடி..)// என்னம்மா யோசிக்காங்க.

  ReplyDelete
 27. அண்ணே நீங்க சொன்னா சரிங்கண்ணே!

  ReplyDelete
 28. //நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது, அவிஞ்சு போகும்! அதனால அந்த மாதிரிப் பாவிகளைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம்.//
  எங்க போனாலும் ஒரே சிபி புராணமா இருக்கே!

  ReplyDelete
 29. //அந்தக் கண்ணு எரிச்சலைத் தடுக்க வெள்ளரிக்காயை ரவுண்டாக் கட் பண்ணிக்கணும். பண்ணிட்டு, அதை எப்பவும்போல வாயில போடாம கண்ணு மேல கொஞ்ச நேரம் வைக்கணும். இதுல ரெண்டு கண்டிசன் இருக்கு. முத கண்டிசன், பழக்க தோசத்துல வெள்ளரிக்காயில மிளகாப்பொடியைத் தடவிடக் கூடாது. ரெண்டாவது, அப்படி வெள்ளரிக்காத் துண்டை வைக்கும்போது கண்ணு மூடி இருக்கணும். //
  டிப்ஸூம் சொல்றீங்க, அதுக்கு ஒரு முன்னெச்செரிக்கையும் கூட. சூப்பர்.

  ReplyDelete
 30. /நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது, அவிஞ்சு போகும்! அதனால அந்த மாதிரிப் பாவிகளைப் பத்தி நாம கவலைப்பட வேண்டாம். //
  ஜோவ் சங்கத்தால ஆக்சன் எடுக்கப்போறதா இருக்கோம்!!!

  ReplyDelete
 31. அய்யய்யோ இந்த Food தொல்லை தாங்க முடியலையே...ஹிஹி
  பிட்டு படம் பார்க்க ஆலோசனை குடுக்கிறார்!!!ஹிஹி

  ReplyDelete
 32. Pooravum nakaichuvai izhayodum pathivu.... Rasichup padichen!

  ReplyDelete
 33. @விக்கி உலகம்//அண்ணே நீங்க சொன்னா சரிங்கண்ணே!// ஒய் ப்ளட்..சேம் ப்ளட்!

  ReplyDelete
 34. @FOOD//எங்க போனாலும் ஒரே சிபி புராணமா இருக்கே!// ஹா..ஹா..

  ReplyDelete
 35. @FOOD//டிப்ஸூம் சொல்றீங்க, அதுக்கு ஒரு முன்னெச்செரிக்கையும் கூட. சூப்பர்.// எச்சரிக்கை பண்ணலேன்னா, கண்ணுல்ல போயிடும்!

  ReplyDelete
 36. @மைந்தன் சிவா//ஜோவ் சங்கத்தால ஆக்சன் எடுக்கப்போறதா இருக்கோம்!!!// ஜோவ் சங்கமா?..அப்படீன்னா? ஜொள்ளர்கள் சங்கமா?

  ReplyDelete
 37. @middleclassmadhaviபாராட்டுக்கு நன்றிக்கா.

  ReplyDelete
 38. >>அப்படி மானிட்டரையே ஒய்யாம உத்துப் பாக்குறவங்களுக்கு கண் எரிச்சல் வரும். நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது, அவிஞ்சு போகும்!

  அண்ணனுக்கு தான் மட்டும் தான் எல்லாத்தையும் பார்க்கனும்னு ஆசை

  ReplyDelete
 39. அண்ணே.. கலைஞர்க்கு தான் ஆட்சி போயிடுச்சில்லை.. ஏன் அவரை இன்னும் துவட்றிங்க? பாவம்

  ReplyDelete
 40. அப்போ கேப்டன் இனிமேத் தெளிவாப் பேசுவாரோ..இந்த கர்மம் புடிச்ச அரசியலே நமக்குப் புரிய மாட்டேங்குதே..//


  ஒன்னைய பார்த்தா படிச்ச புள்ள மாதிரி தெரியுது நைனா.. அதனாலதான் அரசியல் புரியமாட்டேன்கித்து.. படிச்சதெல்லாம் மறந்திட்டு பாரேன்.. நல்ல பிரியும்!

  ReplyDelete
 41. புதிருக்கு விடை,
  கூட தங்க கனிமொழி வருவாங்க....

  ReplyDelete
 42. அப்படி மானிட்டரையே ஒய்யாம உத்துப் பாக்குறவங்களுக்கு கண் எரிச்சல் வரும். நெட்ல நடிகைங்க படத்தைப் பாக்குறவங்களுக்கு கண்ணு எரியாது, அவிஞ்சு போகும்! =======================

  அண்ணே.....வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சாதீங்க..........நானும் ஒரு க ம்யூட்டரை உபயோகி்ப்பவன்

  ReplyDelete
 43. கணக்கின்னாலே பேஜாருதான் போல!

  புதிரோட பூஜ்யத்துக்கு போடா வெண்ணைன்னு ஜப்பான் கால்குலேட்டரே திட்டுதுங்க:)

  ReplyDelete
 44. //எந்தளவுக்குக் குளிர்ச்சியா இருக்கும்னா...//
  சொல்லிட வேண்டியதுதானே,சஸ்பெஸ் எதுக்கு?

  ReplyDelete
 45. //திகார் ஜெயிலைத் தவிர வேற என்ன கிடைக்கும்?//
  கணக்கின் விடை சூப்பர்!

  ReplyDelete
 46. க "லந்து" கட்டி அடித்து இருக்குறீர்கள்..

  ReplyDelete
 47. அய்யய்யோ அண்ணன் இனி காரசாரமா அரசியல் பதிவு, பக்திப்பதிவு கண்டிப்பா ந...ச்சே சுவாமி படங்களுடன் பதிவு போடப்போறாரே!
  வாழ்த்துக்கள்!! - உங்கள் குடும்பத்திற்கு!
  மாட்னீங்களா? - இது, வேற யாருக்கு? உங்களுக்குத்தான்!!

  ReplyDelete
 48. 176000 kodi uththesa izha(vu)ppu.unmaiyaana commission amount veliyila varala.su.samy statement-padi 60% so--siththikalukku idliyil settle seyyappattathaakavum,30 vellaiththundaarukkum,10% thaan ippa ulla.neenga ellaame thappu thappa sollureenga.

  ReplyDelete
 49. ///இந்த வாரம் கலிஞரு ஒரு பெரிய்ய்ய அறிக்கை விட்டிருக்காரு..அறிக்கைன்னு சொல்ல முடியாது, வேணும்னா ஒப்பாரின்னு வச்சுக்கலாம். ’அதுல நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன்’னு பரிதாபமாப் புலம்பி இருக்காரு. இவரு தானே கொஞ்ச நாள் முன்னே ‘நான் ஒன்னும் பஞ்சப் பரதேசி அல்ல’ன்னு சொன்னாரு..////

  நீதி - கலைஞருக்கு வயசு போயிட்டுது.... ஹிஹிஹி

  ReplyDelete
 50. /////////ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் கோடி மதிப்புள்ள பொருளை 10% ரேட்டுக்கு வித்ததுக்கு 30% கமிசன் கிடைச்சா, அதுல டெல்லிக்கு 3% மட்டும் கொடுத்துட்டு, அய்யாவோட பெரிய குடும்பத்துக்கு 5% கொடுத்துட்டு, அண்ணன்களுக்கு பட்டை நாமம் போட்டுட்டு வர்ற மீதில அவருக்கு 50% கொடுத்துட்டு, மீதி 50%ஐ தனக்குன்னு எடுத்தா, திகார் ஜெயிலைத் தவிர வேற என்ன கிடைக்கும்?/// அட நம்ம கனிமொழி அக்கா...

  ReplyDelete
 51. நல்ல பல்சுவை பதிவு,

  கண் எரிச்சலுக்கு டிப்ஸ் குடுத்துட்டு, மண்டை குடைச்சலுக்கு புதிர் போட்டு இருக்கீங்க பாஸ்,

  ReplyDelete
 52. பல சுவையையும் ச்சே பல்சுவையவும் கத்து வெச்சிருக்கீங்க போல

  ReplyDelete
 53. \\சட்டி சுட்டதடா கை விட்டதடா\\ இந்த மாதிரி பட்டு படுமளவுக்கு மஞ்சள் ... சாரி, வெள்ளைத் துண்டுக்கு என்ன ஆயிடிச்சு? கொள்ளையடிச்ச பணமெல்லாம் பத்திரமாத் தானே இருக்கு? அப்புறமென்ன? ஓஹோ... தேர்தலில் தோற்றது ஒரு அவமானம் என்றா? அதெல்லாம் மானம் மரியாதை இருக்கிரவைத்தான் பாதிக்கும், இவரை ஒன்னும் பண்ணாது.

  \\ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் கோடி மதிப்புள்ள பொருளை 10% ரேட்டுக்கு வித்ததுக்கு 30% கமிசன் கிடைச்சா, அதுல டெல்லிக்கு 3% மட்டும் கொடுத்துட்டு, அய்யாவோட பெரிய குடும்பத்துக்கு 5% கொடுத்துட்டு, அண்ணன்களுக்கு பட்டை நாமம் போட்டுட்டு வர்ற மீதில அவருக்கு 50% கொடுத்துட்டு, மீதி 50%ஐ தனக்குன்னு எடுத்தா, திகார் ஜெயிலைத் தவிர வேற என்ன கிடைக்கும்?\\ 1.76 லட்சம் கொடியை ராசா ஒருத்தனே திருடியிருக்க முடியுமா, அதை எப்படி மூட்டை கட்டி எடுத்திகிட்டு வந்திருப்பாரு, எங்கே புதைச்சு வச்சிருப்பாரு போன்ற அப்பிராணித் தனமான பதிவுகளிடையே, எவ்வளவு கொள்ளை, யாருக்கு எவ்வளவு என்பதை குத்து மதிப்பாக வெளியிட்ட செங்கோவிக்கு ஒரு ஓ...போடு...

  ReplyDelete
 54. \\Blogger ! சிவகுமார் ! said...
  எதுக்கு ரவுண்டா கட் பண்ணனும். நேரா கட் பண்ணாலே ரவுண்டாதானே இருக்கும். (எப்பூடி..)\\ ஹா.. ஹா...ஹா.. செங்கோவி ....!! அருமையான திருநெல்வேலி அல்வா!! செமத்தியா குடுத்திருக்கிறார் சிவக் குமார். [இதை வாங்கிகிட்டே, ஒண்ணுமே ஆகாத மாதிரியே மேயின்டீன் பண்றீயே செங்கோவி, எப்பூடி.....]

  ReplyDelete
 55. @சி.பி.செந்தில்குமார்//கலைஞர்க்கு தான் ஆட்சி போயிடுச்சில்லை.. ஏன் அவரை இன்னும் துவட்றிங்க? // முதல்ல அவரை நிறுத்தச் சொல்லுங்க..நான் நிறுத்துறேன்.

  ReplyDelete
 56. @வைகை//படிச்சதெல்லாம் மறந்திட்டு பாரேன்.. நல்ல பிரியும்!// எது காத்தா?

  ReplyDelete
 57. @த‌மிழ‌ன்//கூட தங்க கனிமொழி வருவாங்க....// அடப்பாவிகளா..

  ReplyDelete
 58. @rkajendran2//நானும் ஒரு க ம்யூட்டரை உபயோகி்ப்பவன்// எதுக்கு? அதுக்கா? அப்போ அவிஞ்சு தான் போகும், கன்ஃபார்ம்!

  ReplyDelete
 59. @ராஜ நடராஜன்//புதிரோட பூஜ்யத்துக்கு போடா வெண்ணைன்னு ஜப்பான் கால்குலேட்டரே திட்டுதுங்க:)// அதுவும் விடை தான் பாஸ்.

  ReplyDelete
 60. @NKS.ஹாஜா மைதீன்//க "லந்து" கட்டி அடித்து இருக்குறீர்கள்..// நன்றி ஹாஜா!

  ReplyDelete
 61. @ஜீ...//மாட்னீங்களா? - இது, வேற யாருக்கு? உங்களுக்குத்தான்!!// அதுல என்னய்யா உங்களுக்குச் சந்தோசம்.

  ReplyDelete
 62. @thamizhan//neenga ellaame thappu thappa sollureenga.// ஹா..ஹா..பாஸ், நீங்க ஏன் சிபிஐல ஜாயின் பண்ணக்கூடாது?

  ReplyDelete
 63. @கந்தசாமி.//அட நம்ம கனிமொழி அக்கா...// என்னய்யா சொல்றீங்க..இது தான் விடையா?

  ReplyDelete
 64. @இரவு வானம்//பல சுவையையும் ச்சே பல்சுவையவும் கத்து வெச்சிருக்கீங்க போல// பல சுவையும் பல்சுவையும் ஒன்னு தானே?..அப்படி இல்லையா?

  ReplyDelete
 65. @Jayadev Das//எவ்வளவு கொள்ளை, யாருக்கு எவ்வளவு என்பதை குத்து மதிப்பாக வெளியிட்ட செங்கோவிக்கு ஒரு ஓ...போடு...// அதோட விட்டுடுங்க சார்..’இவருகுத் தெர்யும்’னு சிபிஐகிட்ட என்னைக் கோர்த்து விட்றாதீங்க!

  ReplyDelete
 66. @Jayadev Das//இதை வாங்கிகிட்டே, ஒண்ணுமே ஆகாத மாதிரியே மேயின்டீன் பண்றீயே செங்கோவி, எப்பூடி.// உங்களுக்குத் தெரியாதா சார், நான் ஒரு குடும்பஸ்தன்னு..எல்லாம் அந்த அனுபவம் தான்.

  ReplyDelete
 67. @jothi சூப்பர் கமெண்ட் ஜோ!..வந்தாச்சா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.