Friday, June 10, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_14

முந்தைய பகுதிகள்: இங்கே

”ஜெனி” என்று கூப்பிட்டான் மதன். அவள் அவனைப் பார்த்ததும் சலனமே இல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

ஜெனிஃபர் அவனை இறுக்கி அணைத்திருந்தாள். வேகமாக வீசிய காற்று கூட அவர்களுக்கிடையே நுழைய முடியவில்லை. அவர்களது பைக் எங்களை வேகமாகக் கடந்தது.

மதனுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மதன் எதுவும் பேசாமல் கோபத்துடன் பஸ் ஏறினான்.

அதன்பிறகு 4 வருடங்களுக்கு மதனை நான் சந்திக்கவில்லை.

-------------------------- மன்மதன் லீலைகள் - முதல் பாகம் முற்றும் --------------------------

பாகம் - 2   :   அத்தியாயம்-1

”நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்காம், நல்ல பய. அவனுக்கு நம்ம கருப்பன் மவளைக் கேட்கலாமாண்ணே?” தயங்கியபடியே என் அப்பாவிடம் கேட்டார் குரங்காட்டிச் சித்தப்பா. 

சித்தப்பா சிரித்தால் குரங்கு போன்றே இருப்பார் என்பதால் அப்படி ஒரு பெயர்.

என் அப்பா யோசித்தார். “கருப்பன்கூட நமக்கு போக்குவரத்தே இல்லையேப்பா. செத்த பய நான் சொன்னா கேக்க மாட்டானே”

கருப்பன் என்னைப் பெற்ற தந்தை. பிறந்த அன்றே என் அப்பா-அம்மாவால் நான் தத்தெடுக்கப் பட்டேன். என் அப்பா என்னைப் பெற்ற தந்தைக்கு சித்தப்பா.(புரியுதுல்ல?) இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நின்று போயிருந்த நேரம் அது.

“நீ ஏண்ணே அங்க போற? நம்ம செங்கோவியை அனுப்புவோம். பய விவரமாப் பேசுவான். இவன்கிட்ட அவனும் ரொம்ப முறைக்க மாட்டான்ல” என்று சித்தப்பா என்னைப் பார்த்தார்.

“என்னலே, அவன்ட்ட போய்ப் பேசுதியா?”
“ம்” என்றேன் என் அப்பாவைப் பார்த்த படியே.

அவர் ஒன்றும் சொல்ல வில்லை. தத்துக் கொடுக்கப்பட்ட பின், எனது பிறந்து வீட்டிற்கும் எனக்குமான உறவு மிகவும் அஃபிசியலான ஒன்றாக ஆகியிருந்தது. ஏதாவது உறவினர் வீட்டுத் திருமணத்தில் சந்தித்துக் கொள்வதும், ‘என்னலே நல்லாருக்கியா’என்று குசலம் விசாரிப்பதுமாக எங்கள் உறவு தொடர்ந்தது. இரண்டு அக்காக்களும் ஒரு அண்ணனும் அங்கு உண்டு. நான் பிறந்த இடம் வசதியான இடம். நிறைய சொத்தும் வசதிகளுமாய் அவர்கள் இருந்தார்கள்.

என் அப்பா-அம்மா அன்றாடங்காய்ச்சிகள் தான். எனவே அவர்களுக்கு எங்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம் இருந்தது. என்னிடம் நன்றாகப் பேசினால், சொத்தில் ஒரு பங்கு குறையுமே என்ற கவலையும் இருந்தது. 

மூத்த அக்காவின் கல்யாணத்திற்குக் கூட ஏனோ தானோவென்ற முறையிலேயே அழைப்பு வந்தது. நான் மட்டுமே அதில் கலந்து கொண்டேன். என்னைப் பெற்றவரின் நடவடிக்கைகள் எதுவும் என் அப்பாவிற்குப் பிடித்தமானதாய் இல்லை. எனவே இருவரும் பேச்சைக் குறைத்துக் கொண்டனர். 

இதையெல்லாம் யோசித்தபடியே டவுனில் இருக்கும் அவர்களது வீட்டிற்குப் போனேன். ஏற இறங்கப் பார்த்தபடியே வரவேற்றனர்.

”குரங்காட்டிச் சித்தப்பாக்கு தெரிஞ்ச பையனுக்குப் பொண்ணு பாக்காங்களாம். அக்காவுக்கு அங்க பேசலாமான்னு கேட்டு வரச் சொன்னாங்க” என்றேன்.

“நாம ஏம்லே அவங்ககிட்டப் போய்ப் பேசணும்? பலாப்பழத்தைத் தேடித் தாம்லே ஈ வரணும். ஈயைத் தேடி பலாப்பழம் போனா அசிங்கம்ல” என்றார் என்னைப் பெற்றவர்.

அவரை நான் ஒரு நாளும் அப்பா என்று அழைத்ததில்லை. அதற்கான நடவடிக்கைகளும் அவரிடம் இல்லை. அவ்வாறு அழைப்பது என் அப்பா-அம்மாவை சங்கடப்படுத்தும் என்பதும் ஒரு முக்கியக் காரணம். எனவே உறவு சொல்லி அழைக்காமல் பொதுவாகப் பேசுவதே என் வழக்கம்.

“நாம ஒன்னும் போய்ப் பேச வேண்டாம். சித்தப்பாவே பேசுவார்” என்றேன். 

நீண்ட நேர ஆலோசனைக்குப் பின் “சரி, வரச் சொல்” என்றார்கள்.

குரங்காட்டிச் சித்தப்பா வேகமாகச் செயலில் இறங்கினார். குழைகின்ற விதத்தில் குழைந்து, இறுக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் இறுக்கமாகிப் பேசுவதில் வல்லவர் சித்தப்பா. பெரும்பாலான திருமணங்கள் அவர் போன்ற இடைப்பட்ட மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன.

“பொண்ணு தாயில்லாப் பிள்ளைம்மா. உன் பையனுக்கு முடிச்சேன்னு வச்சுக்கோயேன். உன்னையே அம்மா-அம்மான்னு சுத்தி வருவா. சொத்து வேற கிடக்கு. விரசா யோசிச்சு என்னைக்குப் பொண்ணு பாக்க வாரேன்னு சொல்லுத்தா. நல்ல காரியத்தைத் தள்ளிப் போடாம சட்டுப் புட்டுனு முடிச்சிடுவோம்” என்று பையனின் அம்மாவைப் பிடித்து நச்சரித்தார்.

அவர்களும் ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாய் ஒத்துக் கொண்டார்கள். நாங்கள் சந்தோசமாய் விடை பெற்றோம். எங்களை அனுப்பி விட்டு, பெண்ணின் குடும்பம் பற்றிய விசாரணையில் இறங்கினார்கள். விசாரித்த போது கிடைத்த தகவல்கள் திருப்திகரமாய் இல்லை. ஆனாலும் சித்தப்பாவைச் சமாளிக்க முடியாமல் பெண் பார்க்க வந்து சேர்ந்தார்கள்.

நமது சமூகத்தில் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று இந்தப் பெண் பார்க்கும் படலம். யாரோ ஒரு கும்பல் நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, பெண்ணை வரச்சொல் என்பதும், ஏதோ மாடு பிடிக்க வந்தவர்கள் போன்று பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை அளந்து பார்ப்பதும், ஒரு சில நிமிடப்பார்வையிலேயே பிடித்துள்ளது-பிடிக்கவில்லை என்று தீர்மானிப்பதும் எந்த வகையில் சரி என்று தோன்றவில்லை.

பெண் பார்க்க வரும் விஷயம் அக்கம் பக்கமெல்லாம் பரவி இருந்தது. பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால், அக்கம் பக்கத்திற்குப் பதில் சொல்லி முடியாதே என்ற பதட்டமும் எனக்கு இருந்தது. குரங்காட்டிச் சித்தப்பா எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. 

முதலில் மிக்சரும், ஸ்வீட்டும் கொடுக்கப் பட்டது. சாப்பிட்டவாறே மாப்பிள்ளை-பெண் பற்றிய விவரங்கள் பரிமாறப்பட்டன. 

“பொண்ணை வரச்சொல்லுங்கப்பா” என்று சித்தப்பா ஒரு அதட்டல் போட்டார்.

அக்கா வந்தாள். அவளுக்கு என்னைப் பெற்றவரிடம் நேராய் நின்று பேசினாலே நடுங்கும். இப்பொது இத்தனை கூட்டத்திற்கு நடுவே கைகால் உதற வந்து நின்றாள்.

எல்லாரும் ஒருமுறை அவளை ஏற இறங்கப் பார்த்தனர்.

“மாப்ளே, பொண்ணை நல்லாப் பாத்துக்கோரும். அப்புறம் சரியாப் பாக்கலேன்னு வெளில வந்து பொலம்பக்கூடாது” என்று சித்தப்பா அபத்தமாய் ஜோக் அடித்தார்.

அப்போது தான் பச்சரிசி வீட்டிற்குள் நுழைந்தார். அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் சித்தப்பா அதிர்ச்சி ஆனார்.

நடு ஹாலிற்கு வந்த பச்சரிசி “ வாங்க, வாங்க. எல்லாரும் எப்போ வந்தீங்க?” என்றார்.

பச்சரிசி என்னைப் பெற்றவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். 

உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் அவரின் வைப்பாட்டி!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

 1. ஐ ஆம் ஆஜர்.. வெயிட்...

  ReplyDelete
 2. முதல் பாகமா... முடிஞ்சு போச்சா?

  ReplyDelete
 3. ரெண்டாம் பாகம் ஆரம்பமா? இதுலயாவது எதிர்பாத்தது இருக்குமா?


  தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

  ReplyDelete
 4. பெண்பார்க்கும் படலம் சம்பாஷனைகள் நல்லா போயடிருகுது மாமு. பைனல்ல பச்சரிசி நல்ல டச்.. நல்ல உரை நடையில் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.
  ஓட்டுரிமை நிறைவேற்றியாச்சு. :)

  ReplyDelete
 5. நமது சமூகத்தில் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று இந்தப் பெண் பார்க்கும் படலம்.>>>

  நீங்க எப்படி பெண் பார்த்திங்க...??

  ReplyDelete
 6. @Ashwin-WIN//நல்ல உரை நடையில் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.// பாராட்டுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash//நீங்க எப்படி பெண் பார்த்திங்க...??// அது பெரிய போராட்டம் பிரகாஷ்...தனிப் பதிவாச் சொல்றேன்.

  ReplyDelete
 8. வந்துட்டீங்களா பாஸ்???வாங்க வாங்க

  ReplyDelete
 9. 7 வது ஓட்டு என்னுதுலே மாப்ள!

  ReplyDelete
 10. கிழிந்த டயரி தொடருகிறது...ம்ம்ம் தொடரட்டும்...மீண்டும் நாடு சாம பதிவுகள் எதிர்பார்க்கிறேன் ஹிஹி

  ReplyDelete
 11. மாப்பிளே கடந்த பாகங்களைப் படித்து வயிறு வலிக்கச் சிரித்தேன் ஆனால் அத்தியாயனம் 1 மனசை சோக முட்கள் கொண்டு குத்தி விட்டது. பாகம் 2 கம்பஸ் லைப்பிலிருந்து கொஞ்ச் விலகி- ஆழ் மனதைத் தொடும் வண்ணம் வாழ்வியலைப் பேசப் போகிறது என்பது உங்களின் எழுத்து நடை மூலம் தெரிகிறது.

  ReplyDelete
 12. Mappu, I'm bit bussy and also I'm at out sight. I won't be able to vote right now. I will vote & give you my review later.

  ReplyDelete
 13. அண்ணே செம விறுவிறுப்பா சொல்லுதீய!

  //ஏதோ மாடு பிடிக்க வந்தவர்கள் போன்று பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை அளந்து பார்ப்பதும், ஒரு சில நிமிடப்பார்வையிலேயே பிடித்துள்ளது-பிடிக்கவில்லை என்று தீர்மானிப்பதும் எந்த வகையில் சரி என்று தோன்றவில்லை.//

  அப்போ அண்ணன் லவ் மேரேஜோ?

  ReplyDelete
 14. >>ஜீ... said... [Reply]


  அப்போ அண்ணன் லவ் மேரேஜோ?

  இதற்கான பதிலை நான் சொன்னால் அண்ணன் பப்ளிஸ் பண்ணமாட்டார் எனவே .. ஹி ஜ்ஹி

  ReplyDelete
 15. @மைந்தன் சிவா //மீண்டும் நாடு சாம பதிவுகள் எதிர்பார்க்கிறேன்// ஒரு மனுசனை திருந்த விடமாட்டேங்கிறாங்களே..

  ReplyDelete
 16. @நிரூபன் //ஆழ் மனதைத் தொடும் வண்ணம் வாழ்வியலைப் பேசப் போகிறது என்பது உங்களின் எழுத்து நடை மூலம் தெரிகிறது.// மன்மதன் எங்கள் வாழ்வில் நடத்திய லீலைகளை உங்கள் முன் வைக்கின்றேன்..அது ஆழ் மனதைத் தொட்டால் சந்தோசமே!

  ReplyDelete
 17. @ஜீ... //அப்போ அண்ணன் லவ் மேரேஜோ?// அட இல்லைய்யா..நமக்கு ஏது அந்த அளவுக்குக் கூறு..’ஒரு வீட்டுக்குள்ள போய் உட்கார்ந்து பஜ்ஜி சொஜ்ஜி தின்னுட்டு பொண்ணு பிடிக்கலைன்னு சொல்றது பாவம், அதனால ஏதாவது கோயிலுக்கு குடும்பத்தோட நீங்க வாங்க, நாங்களும் வர்றோம். பிடிக்கலேன்னா ஒரு கும்பிடு போட்டு கலைவோம்’னு தான் சொன்னேன். அதுக்கே ‘புரட்சிக்காரன் நாகரீகக் கோமான்’ அது இதுன்னு சொல்லி பொண்ணு தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க..அடப்பாவிகளா உங்க நல்லதுக்குத் தான்யா சொன்னேன்னாலும் கேட்கலை..அப்புறம் என்ன, நான் புரட்சியாளன்லாம் இல்லை, சாமானியன் + மக்கு-ன்னு கஷ்டப்பட்டு புரூஃப் பண்ண வேண்டியதாப் போச்சு..நான் பதிவில் குறை சொன்னது பெண் வீட்டுக்காரங்களையும் சேர்த்துத் தான்.

  ReplyDelete
 18. @சி.பி.செந்தில்குமார் //இதற்கான பதிலை நான் சொன்னால் அண்ணன் பப்ளிஸ் பண்ணமாட்டார் எனவே .. // பப்ளிஷ் பண்ற மாதிரியாய்யா கமெண்ட் போடுறீங்க?

  ReplyDelete
 19. @விக்கி உலகம் //7 வது ஓட்டு என்னுதுலே மாப்ள!// அதுக்கு ஏன்யா இப்படி கூரை மேல ஏறி கூவுறீங்க?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.