Saturday, June 11, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_15

பாகம் : 2                 அத்தியாயம்: 2

முந்தைய பகுதிகள்: இங்கே 

பச்சரிசியின் உண்மையான பெயர் எங்களுக்குத் தெரியாது. எதனால் அந்தப் பெயர் என்றும் தெரியாது. அண்ணன் - அக்காக்கள் குழந்தையாக இருந்தபோதே சிறு சிறு உதவிகள் செய்ய வீட்டிற்குள் நுழைந்தவர். பிறகு சமையல் பொறுப்பையும் ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக முழு வீட்டுப் பொறுப்பும் தன் வசம் ஆக்கிக் கொண்டவர்.

அவருக்கு தனியே ஒரு குடும்பம் உண்டு. அவரது கணவர் ஒரு வியாதியஸ்தர் என்று தகவல். குழந்தைகளும் உண்டு. 

இது சமூகத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. 

பச்சரிசி ஹால் நடுவே வந்து நின்று உரிமையாக ‘வாங்க’ என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்தனர். உடனே எழுந்தால் மரியாதையாக இருக்காதே என்று கொஞ்சநேரம் சம்பிராதயமாகப் பேசி விட்டு ”வீட்டிற்குப் போய் பேசி விட்டுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

பொதுவாக பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்பது பிடிக்கவில்லை என்றே பொருள் கொள்ளப்படும். இங்கும் அப்படியே.

சித்தப்பாவும் அவர்களைச் சமாதானப்படுத்த அவர்களுடன் கிளம்பினார். என்னைப் பெற்றவர் எதுவும் நடக்காதது போல் தனது அறைக்குள் போனார். பச்சரிசி சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

என் அக்கா அழ ஆரம்பித்தாள். “மூத்தவ கதி தான் எனக்குமா?” என்றவாறே அழுதாள்.

மூத்த அக்காவிற்கு சில வருடங்கள் முன்பு ஒரு பெரிய குடும்பத்தில் திருமணம் ஆகியிருந்தது. பெரிய குடும்பம் என்றால் ஏறக்குறைய 25 பேர் அங்கு கூட்டுக்குடும்பமாக இருந்தனர். என்னைப் பெற்ற தந்தையின் நடத்தையைப் பெரிதுபடுத்தாது சம்பந்தம் வைத்துக் கொண்டனர். அது ஏன் என்று திருமணத்திற்குப் பிறகுதான் புரிந்தது.

என் அக்கா கணவருக்கும் ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. முழுக்க அவளது கட்டுப்பாட்டில் இருந்தார். அவருக்குத் தேவை வீட்டில் உள்ள கூட்டத்திற்கு சமைக்க ஒரு ஆளும்,சமூகத்தில் தானும் கல்யாணமான குடும்பஸ்தன் என்ற பேருமே!

பிறந்ததில் இருந்தே தன் தந்தையின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் பயந்து அடி வாங்கியே வளர்ந்த என் மூத்த அக்கா, புகுந்த வீட்டிலாவது விடியல் வராதா என்று ஏங்கினாள். கொதிக்கும் எண்ணைக்க்குப் பயந்து ந்ருப்பில் விழுந்த கதையாயிற்று. அந்த வீட்டில் உள்ள எல்லோரும் அவள் மீது அதிகாரம் செலுத்தினர். எல்லோரைப் பார்த்தும் பயப்பட ஆரம்பித்தாள். முடிவில் அது வலிப்பு நோயில் கொண்டு விட்டது.

’இஷ்டப்பட்ட பெண்ணுடன் சேர், நினைத்தபடி வாழ்வைக் கொண்டாடு’ என்று நாகரீக போதனைகள் செய்யப்படுகின்றன. ஆண்களின் எல்லாக் கொண்டாட்டமும் விடிவது அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதே.

ஆனாலும் நமது சமூகம் நல்ல நடத்தை இல்லாத மனிதனை சமூகம் மதிப்பதில்லை. நல்லவர்களும் அவனை நெருங்குவதில்லை. இங்கும் சொந்தங்கள் நான் பிறந்த வீட்டைக் கை விட்டன. அவர்களுடன் உறவு கொள்வது மரியாதையான செய்கையாக கருதப் படவில்லை. ‘பணம் இருக்கிறது. எனவே யார் தயவும் தேவையில்லை. பச்சரிசியே போதும்’ என்ற மனநிலையுடன் வாழ்வைக் கொண்டாடினார். 

மனம் ஒரு குரங்கு. எல்லை மீறுவதில் மிகுந்த விருப்பம் உள்ளது அது. ஆனாலும் தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக என்று மனதைக் கட்டுப்படுத்தி வாழ்வோரே இங்கு அதிகம். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் வாழ்வோர் முன் ஒரு மனிதன் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் அடங்காமல் வாழ்வது கண்ணை உறுத்தியது. அவர்களின் கோபம் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் இறங்கியது. நல்லோரும் நல்லோர் போல் நடித்தோரும் ஒதுங்கினர்.

இவ்வளவு தெளிவான கருத்து ஏதும் என்னிடம் அப்போது இல்லை. எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் எங்களுக்குப் புரியவில்லை. ஏன் சொந்தங்கள் யாரும் அவர்களை அண்டவில்லை, அப்படியே வருவோரையும் ஏன் என்னைப் பெற்றவர் மதிப்பதில்லை என்று எதுவும் புரியவில்லை.

ஆனால் தன் வாழ்வும் நாசம் ஆகப் போகிறது என்பதை என் சின்னக்கா உணர்ந்து கொண்டாள். தாயில்லா வீட்டில் தறி கெட்டு ஆடிய தந்தையை கண்டிக்க பலமின்றி அழுதாள்.

எனக்குக் கோபம் பொங்கியது. 

“நீ என்னன்னு கேக்க வேண்டியதானே?” என்று அண்ணனைக் கேட்டேன்.
“நாம கேக்குற மாதிரியா இருக்கு நிலைமை?” என்றான் அண்ணன்.

நான் பேசுவது என்று முடிவு செய்தேன்.

ஒரு தந்தையும் மகனும் பேசக்கூடாத விஷயத்தை நாங்கள் பேசிக் கொள்ள வேண்டிய நிலைமை!

கடுமையான ஆத்திரத்துடன் அவர் அறை நோக்கிச் சென்றேன்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

 1. பாகம் இரண்டில் வடையை வாங்கிட்டோம்ல....

  ReplyDelete
 2. வணக்கம்ணே! :-)

  ReplyDelete
 3. பிறந்ததில் இருந்தே தன் தந்தையின் அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் பயந்து அடி வாங்கியே வளர்ந்த என் மூத்த அக்கா, புகுந்த வீட்டிலாவது விடியல் வராதா என்று ஏங்கினாள்.>>>

  அய்யோ பாவம் அக்கா...

  ReplyDelete
 4. நமது சமூகம் நல்ல நடத்தை இல்லாத மனிதனை சமூகம் மதிப்பதில்லை. நல்லவர்களும் அவனை நெருங்குவதில்லை.>>>>

  செங்கோவி அவர்களே... இரண்டாம் பாகத்தில் தத்துவம் அதிகமா தெரியுதே.... லீலைக்கு இது ஒத்து வராதே...

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash //வடை எனக்கே// இல்லை என் மக்னுக்கே வடை!

  ReplyDelete
 6. //மனம் ஒரு குரங்கு. எல்லை மீறுவதில் மிகுந்த விருப்பம் உள்ளது அது. ஆனாலும் தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக என்று மனதைக் கட்டுப்படுத்தி வாழ்வோரே இங்கு அதிகம்.//

  குரங்கு பற்றிய தகவல் அருமை! :-)
  ச்சே! மனம் பற்றி...அண்ணன் இன்னொரு பாலகுமாரன் போலவே எழுதுறாரு!

  ReplyDelete
 7. @ஜீ... என்ன தம்பி, திடீர் ராத்திரி விஜயம்..குரங்கு பற்றிய தகவல் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தானே..

  ReplyDelete
 8. அப்புறம் கேட்ட வார்த்தை எல்லாம் வந்தா மறைக்காம எழுதுங்க! அப்பத்தான் இலக்கியவாதி ஆகலாம் தெரியும்ல!

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//இரண்டாம் பாகத்தில் தத்துவம் அதிகமா தெரியுதே.... லீலைக்கு இது ஒத்து வராதே...// லீலையும் தத்துவமும் இரட்டைப் பிள்ளைகள் ஐயா!

  ReplyDelete
 10. @செங்கோவி//என்ன தம்பி, திடீர் ராத்திரி விஜயம்..//
  வீட்ல இருக்கேன்!
  ஆபீஸ்ல ஒரே ஆணி பாஸ்! சைட் வேற இனி போகனும்போல இருக்கு..! முடியல!

  ReplyDelete
 11. @ஜீ...//அப்பத்தான் இலக்கியவாதி ஆகலாம் தெரியும்ல!// பதிலுக்கு இலக்கியவாதியை கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாங்களே..அதை என்ன பண்றதாம்..

  ReplyDelete
 12. @செங்கோவி//பதிலுக்கு இலக்கியவாதியை கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாங்களே..அதை என்ன பண்றதாம்..//
  அதானே அங்கீகாரம்?! வேறென்ன கிடைக்கப்போகுது தமிழ்ல இலக்கியவாதியா இருக்கிறவங்களுக்கு? :-)
  அப்பிடியே கண்டுக்காம போயிட்டே...

  ReplyDelete
 13. கலக்கலா இருக்குண்ணே! புத்தகமாவே போடலாம்போல இருக்கு! அப்ப்றம் தமிழ் தெரியாத ரெண்டு நடிகைங்கள கூப்பிட்டு வெளியிடலாம்ல! :-)

  ReplyDelete
 14. //ஆண்களின் எல்லாக் கொண்டாட்டமும் விடிவது அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதே.//
  நிதர்சனமான உண்மை.

  ReplyDelete
 15. ஒரு தந்தையும் மகனும் பேசக்கூடாத விஷயத்தை நாங்கள் பேசிக் கொள்ள வேண்டிய நிலைமை!/// அடடா சஸ்பென்ஸ் அதிகமா இருக்கே?

  ReplyDelete
 16. ஆண்களின் எல்லாக் கொண்டாட்டமும் விடிவது அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதே.

  ReplyDelete
 17. நல்லா போயிட்டிருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. @ஜீ... //அப்ப்றம் தமிழ் தெரியாத ரெண்டு நடிகைங்கள கூப்பிட்டு வெளியிடலாம்ல! // தமிழ் தெரியாத..அதுவும் ரெண்டு நடிகைகளா..சரி தான், தம்பி ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..

  ReplyDelete
 19. @FOOD//நிதர்சனமான உண்மை.// ஆமாம் சார்!

  ReplyDelete
 20. @!* வேடந்தாங்கல் - கருன் *!//அடடா சஸ்பென்ஸ் அதிகமா இருக்கே?// நல்ல ஆளுய்யா நீரு!

  ReplyDelete
 21. @இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

  ReplyDelete
 22. @middleclassmadhavi //வாழ்த்துக்கள்!// நன்றிக்கா!

  ReplyDelete
 23. கதை சொன்னா சிரிக்கிறாங்கப்பா..ம்ம்ம்
  தொடருகிறோம் செங்கோவி!

  ReplyDelete
 24. கதை சொன்னா சிரிக்கிறாங்கப்பா..ம்ம்ம்
  தொடருகிறோம் செங்கோவி!

  ReplyDelete
 25. வாழ்வியலைப் பற்றியும், நீங்கள் கடந்து வந்த முட்கள் நிறைந்த கடந்த காலத்தைப் பற்றியும் உங்கள் பதிவு பேசுகிறது சகோ.

  ReplyDelete
 26. மன்மதன் லீலை இரண்டாம் பாகம் 1960, 1970 களில் வந்த தமிழ்படங்கள் போலிருக்கிறது. நம் நாட்டின் கிராமப்புறங்கள் இந்த விடயங்களில் இன்னும் வளர வேண்டியுள்ளது.

  முதல் பாகம் முடிவு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மதன் அதன் பிறகு என்ன ஆனான்? மதன் - ஜெனிஃபர் வாழ்க்கையில் இணைவது மாதிரி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் உண்மைக் கதை என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

  ReplyDelete
 27. @மைந்தன் சிவா //தொடருகிறோம் செங்கோவி!// நன்றி சிவா.

  ReplyDelete
 28. @நிரூபன் ரத்தினச் சுருக்கமான கருத்துக்கு நன்றி நிரூ!

  ReplyDelete
 29. @Jagannath //முதல் பாகம் முடிவு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மதன் அதன் பிறகு என்ன ஆனான்?// கவலை வேண்டாம் ஜகன்..மூன்றாம் பாகம் முழுக்க மதன் வருவான், ஜெனிஃபரும் வருவாள்!! இரண்டாம் பாகம் இடைப்பட்ட 4 வருடங்களை 4-5 பதிவில் சொல்லும்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.