Sunday, June 19, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_17

யார் அந்த மன்மதன்? என்ன தான் அவனுக்கு வேண்டும்?

ஆயிரம் ஆண்களின் உறவில் வராத சந்தோசத்தை ஏன் ஒரு பெண்ணின் உறவில் வைத்தான்?

பெண்கள் இல்லா உலகில் ஆணால் வாழ இயலாதா? பெண்ணிடன் ஆண் தேடுவது தான் என்ன? 

பெண்கள் மேல் பொங்கும் அன்பை எந்த விதத்தில் உருமாற்றம் செய்வது? ஒரு ஆண் தன் இறுதிக்காலம் வரை ஒரு பெண்ணின் மேல் மட்டுமே அன்பு கொள்வது சரிதானா? ஒருகட்டத்தில் அந்த அன்பானது பிள்ளகளின் மேலும் பாய வேண்டியது அவசியம் இல்லையா? மகனிடம் தந்தையையும் மகளிடம் தாயையும் காணும் வித்தை எல்லோருக்கும் அமையப் பெறாதா? 

ஒரு பெண்ணே உலகம் என எண்ணுவது பதின்ம வயது மனநிலை அல்லவா? அதன்பின்னும் ஆணுக்கு வளர்ச்சி இல்லையா? தேங்கி விட்ட குட்டையாய் மனம் சுருங்கிக் கொள்தல் சரி தானா? பச்சரிசியிடம் அவர் கண்டது என்ன? வெறும் காமமா? அது வேறு இடங்களிலும் கிடைக்கும் விஷயம் ஆயிற்றே? அல்லது அன்பா? அதைப் பிள்ளைகளிடம் பகிரவோ பெறவோ தடையாய் இருந்தது என்ன?


இங்கு எது சரி? எது தவறு? சரிக்குப் பின்னே தவறும் ஒளிந்திருக்கவில்லையா? தவறுக்குப் பின்னே சரியும் இல்லையா? இரண்டையும் முழுக்கப் பிரித்தறிதல் சாத்தியம் தானா?

மகளின் வாழ்வுக்காக ஒரு தந்தை தன் வாழ்வை மாற்றிக் கொள்ளக்கூடாதா? ஒரு பெண்மேல் குவிந்துவிட்ட மனதை வேறு பக்கம் திருப்பிவிட முடியாதா? 

தனிமையை வெல்ல இங்கு ஆயுதங்கள் கிடையாதா? என்னைப் பெற்றவரின் முடிவுக்கு யார் பொறுப்பு? இதில் நாங்கள் செய்த பிழை தான் என்ன?

திருத்திக் கொள்ள முடியாத தவறாக அந்தத் தற்கொலை நடந்தது. அதற்கு நானும் ஒரு காரணம் ஆனேன். அதனால் கடுமையான குற்றவுணர்ச்சிக்கு ஆளானேன்.

ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு மேல் அந்தக் கொடுமையான நிகழ்வு என்னைத் துன்புறுத்திக் கொண்டே இருந்தது. 

மெல்ல மெல்ல நான் அதிலிருந்து மீண்டு கொண்டிருந்தபோது, மதன் மூன்றாவது முறையாகக் காதலில் விழுந்து கொண்டிருந்தான்.

----- இரண்டாம் பாகம் முற்றும் -----

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

 1. வடை உன் மகனுக்கே......

  ReplyDelete
 2. அடுத்த வடை எனக்கே.... கொஞ்சமா...

  ReplyDelete
 3. அட பாவி பய தமிழ் வாசி...இன்னிக்கு தான் இந்தாள் பதிவு போடுற நேரம் முழிப்பா இருக்கேன்..அதையும் கேடுத்திட்டியேப்பா!!

  ReplyDelete
 4. பட்டை பட்டை பட்டை...

  ReplyDelete
 5. மைந்தன் சிவா said...
  அட பாவி பய தமிழ் வாசி...இன்னிக்கு தான் இந்தாள் பதிவு போடுற நேரம் முழிப்பா >>>>>

  நாங்க எப்பவுமே மொத ஆளா வருவோம்ல

  ReplyDelete
 6. செங்கோவி... தமிழ்மணம் ஓட்டு போடுயா

  ReplyDelete
 7. அதற்க்குளாக இரண்டாம் பாகம் முற்றும்?... என்னாச்சு செங்கோவிக்கு...

  ReplyDelete
 8. //தமிழ்வாசி - Prakash said... [Reply]
  மைந்தன் சிவா said...
  அட பாவி பய தமிழ் வாசி...இன்னிக்கு தான் இந்தாள் பதிவு போடுற நேரம் முழிப்பா >>>>>

  நாங்க எப்பவுமே மொத ஆளா வருவோம்ல///
  avvvvvvvvvvvvvv
  எல்லாத்துக்குமா பாஸ்???ஹிஹி

  ReplyDelete
 9. அடப்பாவிகளா..இண்ட்லில இணைக்கமுன்னயே 9 கமெண்ட்டா? வடைக்குச் சண்டை போடாதீங்கப்பா.

  ReplyDelete
 10. Second part is more touching than the First part.
  ---
  Eagerly awaiting for the third part.

  ReplyDelete
 11. @வினையூக்கி மூன்றாம் பாகம் தானே முக்கியமானது..அடுத்த வாரம் ஆரம்பிக்கிறேன்.

  ReplyDelete
 12. வாழ்க்கையில் நாம் காணும் விடயங்கள் தான் எமக்கான படிப்பினைகளாக இருக்கின்றது என்பதற்குச் சான்றாக இந்தத் தொடரினை நகர்த்துகிறீங்க மாப்ளே,
  சோகம், காதல், காமம், கல்லூரி வாழ்க்கை எனப் பல கோணங்களில் நகர்ந்து சென்ற கதையினை, அனுபவப் பகிர்வாக எங்களோடு,
  எங்களை உங்களின் பதிவினுள் உள் இழுத்துப் படிக்க வைக்கும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க,
  மிக்க நன்றி,

  அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 13. @நிரூபன் மூன்றாம் பாகத்தில் இன்னும் சில முக்கிய நிகழ்வுகள் மதனால் நடத்தப்பட்டது..அதுவே இந்தத் தொடரை நான் எழுதக் காரணம்..தொடர்ந்து வருவதற்கு நன்றி.

  ReplyDelete
 14. எல்லாத்தையும் படிச்சிட்டு வர்ரேன், உங்க பதிவுகளை எப்படியோ அடிக்கடி மிஸ் பண்ணிடறேன், டேஷ்போர்டுக்கு வரமாட்டேங்கிது.......!

  ReplyDelete
 15. @பன்னிக்குட்டி ராம்சாமி டேஷ்போர்டு பத்தி ஒன்னும் தெரியலையே பாஸ்..நாங்கூட நீங்க ரொம்ப பிஸின்னு நினைச்சுட்டேன்.

  ReplyDelete
 16. ///செங்கோவி said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி டேஷ்போர்டு பத்தி ஒன்னும் தெரியலையே பாஸ்..நாங்கூட நீங்க ரொம்ப பிஸின்னு நினைச்சுட்டேன்.//////

  யோவ் நானும் பிசிதான்யா........ (இனி என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்களே....?)

  ReplyDelete
 17. >>செங்கோவி said...

  அடப்பாவிகளா..இண்ட்லில இணைக்கமுன்னயே 9 கமெண்ட்டா? வடைக்குச் சண்டை போடாதீங்கப்பா.

  அண்னனுக்கு செம வாய்ஸ் போல.. நாம பதிவு போட்டா ஒரு பய உடனே வர்றதில்லை.. ஃபோன் போட்டு கூப்பிட வேண்டியதா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 18. பதிவுல மொத்தம் 27 கேள்விகள்.. ஏன் இந்த கொலை வெறி? ஹி ஹி ( இனி ஒரு பய நான் படிக்காம கமெண்ட் போடறதா சொல்ல முடியாது ஹா ஹா)

  ReplyDelete
 19. இரண்டாவது செம்ம கனமா இருக்குண்ணே! எதிர்பார்த்திருக்கிறேன் மூன்றாவதை!

  ReplyDelete
 20. naa mobilil comment poduvathaal virivaaga poda mudiyavillai maapla..

  ReplyDelete
 21. அண்னனுக்கு செம வாய்ஸ் போல.. நாம பதிவு போட்டா ஒரு பய உடனே வர்றதில்லை.. ஃபோன் போட்டு கூப்பிட வேண்டியதா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  நீ பண்ணுற அலப்பரைக்குதான் அளவே இல்லையே...?

  ReplyDelete
 22. ஒரு பெண்ணே உலகம் என எண்ணுவது பதின்ம வயது மனநிலை அல்லவா? அதன்பின்னும் ஆணுக்கு வளர்ச்சி இல்லையா? தேங்கி விட்ட குட்டையாய் மனம் சுருங்கிக் கொள்தல் சரி தானா? /////

  மிக அருமையான கேள்வி! இதற்கு நான் பதில் சொல்லலாம்! யாராவது கோபிப்பார்களோ தெரியாது!

  ReplyDelete
 23. கெணத்துல விழ வேண்டியது போல மாறி காதல் விழுந்துட்டாபுல ஹிஹி!

  ReplyDelete
 24. @சி.பி.செந்தில்குமார்
  //பதிவுல மொத்தம் 27 கேள்விகள்.// உட்கார்ந்து அத்தனையையும் எண்ணுனதுக்கு நன்றி.

  ReplyDelete
 25. @தமிழ்வாசி - Prakash //அதற்க்குளாக இரண்டாம் பாகம் முற்றும்?... என்னாச்சு செங்கோவிக்கு..// இதை ரொம்ப விலாவரியாக கொண்டு செல்ல விருப்பமில்லை பிரகாஷ்.

  ReplyDelete
 26. @ஜீ... //இரண்டாவது செம்ம கனமா இருக்குண்ணே! // மூன்றாவதில் லேசாகி விடுவோம்.

  ReplyDelete
 27. @MANO நாஞ்சில் மனோ திர்நெவேலி போயும் சிபி திருந்தலியேண்ணே..

  ReplyDelete
 28. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //இதற்கு நான் பதில் சொல்லலாம்! யாராவது கோபிப்பார்களோ தெரியாது! // ஐயா, உம்ம திருவாயைத் திறந்துடாதீங்க.

  ReplyDelete
 29. @விக்கியுலகம் //கெணத்துல விழ வேண்டியது போல மாறி காதல் விழுந்துட்டாபுல// கடையை விட்டு விரட்டியும் விக்கி கொழுப்பு அடங்கலியே..

  ReplyDelete
 30. //பெண்கள் மேல் பொங்கும் அன்பை எந்த விதத்தில் உருமாற்றம் செய்வது? ஒரு ஆண் தன் இறுதிக்காலம் வரை ஒரு பெண்ணின் மேல் மட்டுமே அன்பு கொள்வது சரிதானா? ஒருகட்டத்தில் அந்த அன்பானது பிள்ளகளின் மேலும் பாய வேண்டியது அவசியம் இல்லையா? மகனிடம் தந்தையையும் மகளிடம் தாயையும் காணும் வித்தை எல்லோருக்கும் அமையப் பெறாதா? //இந்த பதிவில் எந்த highlight pandrathunne theriyala..17vathu padhivu fulla solid karuthukkal... romba rachichen.... :).

  ReplyDelete
 31. @Gangaram பாராட்டுக்கு நன்றி கங்கா.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.