Saturday, June 25, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_18

பாகம் : மூன்று --------------------அத்தியாயம் : ஒன்று

ஒரு பெண்ணுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடப்பது, செக்யூரிடி போல் பின்னாலேயே வீடு வரை போவது, ஹோட்டல் ஹோட்டலாய் கூட்டிப் போய் திங்க வைத்து பில் கட்டுவது போன்ற வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். 

நாம் என்னதான் சின்சியராக லவ் பண்ணினாலும், கடைசியில் கிடைப்பது பல்பு தான்’என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது மதனுக்கு. பிரவீணாவும் ஜெனிஃபரும் கொடுத்த பல்புகளை நினைவுச்சின்னமாக நெஞ்சில் சுமந்தபடி திரிந்தான்.

இனிமேலாவது ஒழுங்காய் வேலை பார்த்து லைஃபில் செட்டில் ஆவோம் என்று தீர்மானம் செய்து, ஒரு நல்ல இஞ்சினியராக உருவெடுத்தான். ஆஃபீஸில் அவனுக்கு நல்ல பெயரும் இருந்தது. அடிபட்டுத் தெளிந்தபின், யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. இனிமேல் தன் வாழ்வில் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் இடமே இல்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் தான் அவனது அலுவலகத்தின் அக்கவுண்ட் செக்சனுக்கு வந்து சேர்ந்தாள் ஜமீலா. 

’காதல் வருவதற்கான காரணங்கள் பிரபஞ்ச ரகசியத்திற்கு ஈடானவை’ என்றே மதனுக்குத் தோன்றியது. ஜமீலாவைப் பார்த்ததுமே காதல் கொண்டான். ‘ஏற்கனவே பட்டது போதாதா’ என்று உள்மனது எச்சரித்தாலும் ‘இவள் எனக்கெனப் பிறந்தவள்’ என்ற எண்ணம் மேலோங்கியது. ஏற்கனவே பிரவீணாவையும் ஜெனிஃபரையும் அப்படித் தானே நினைத்தோம் என்று அவன் யோசிக்கவில்லை.

’ஜமீலா கேரளத்தைச் சேர்ந்தவள். சென்னையில் உள்ள தன் அண்ணனின் வீட்டில் தங்கியபடி வேலைக்கு வருகின்றாள். பட்டப்படிப்பை முடித்தவள். நல்ல ஆங்கில அறிவு. யாரிடமும் கடிந்து பேசாத மென்மையான சுபாவம்’ என அவளைப் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாகத் திரட்டினான்.

அடிக்கடி அக்கவுண்ட் செக்சன் பக்கம் போவதும், ஜமீலா பேண்ட்ரி(Pantry) பக்கம் போனால் இவனும் ஓடிப்போய் ஒரு காஃபியை எடுத்து நின்றுகொள்வதுமாய் தன் வேலையை ஆரம்பித்தான்.

‘கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’ என்பதில் ஆரம்பித்து ’மலையாளப் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், ரொம்ப யதார்த்தமான வாழ்வைப் பிரதிபலிக்கும் படங்கள்’ என்பது வரை பேசியே அவளைத் தாக்கினான். மலையாள பிட்டுப் படங்களைத் தவிர வேறெதும் அவன் பார்த்ததில்லை என்பது வேறு விஷயம். ஜமீலா மதனை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டாள். எங்கு பார்த்தாலும் புன்னகைப்பதும், பேசுவதும் வழக்கமானது.

ஜமீலா சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டாதால், அடுத்த ஸ்டெப்புக்கு நகரலாம் என்ற தைரியம் மதனுக்கு வந்தது.

ஜாலியாகச் சிரித்துப் பேசும் பெண் என்றால் ஏதாவது எஸ் எம் எஸ் ஜோக் படித்துக்காட்டலாம். இடையிடையே ஏ ஜோக்கை அவிழ்த்து விட்டு ஆழம் பார்க்கலாம். கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக அட்டாக் செய்ய நினைத்தால் ஓஷோவை துணைக்கு அழைக்கலாம். ‘காமத்தில் ஆண் தேடுவது தான் என்ன?’ என்று புருவம் தூக்கிப் பேசலாம். தொடாமல், பேச்சிலேயே அவளை ஸ்பரிசிக்கலாம். ஆனால் ஜமீலா விஷயத்தில் இது எதுவும் வேலைக்காகாது என்று தெரிந்தது.

அவளுக்குள் ஒரு சிறிய பெண்ணியப் போராளி ஒளிந்திருப்பது போல் தோன்றியது. ஆண்களை நம்பாத ஒரு போக்கு அவளிடம் இருந்தது. ஆனாலும் அவளை அவன் விரும்பினான். தன்க்கு ஒரு நல்ல துணையாக, தாயாக அவள் இருப்பாள் என்று நம்பினான்.

ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் மதனின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டாள் ஜமீலா.

“நான், என் அப்பா அவ்வளவு தான். அவர் ஊருல இருக்காரு. நான் இங்க.” என்றான்.

“அம்மா?”

எவ்வளவு ஜாலியாகப் பேசும் நேரத்திலும் மதனிடம் நாங்கள் அம்மா பற்றிய பேச்சை எடுப்பதில்லை. அம்மா என்றதுமே உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்குவான். அது தெரியாமல், ஜமீலா கேட்டாள்.

“நான் டென்த் படிக்கும்போது, அம்மா இறந்துட்டாங்க’ என்றான். சொல்லும்போதே கண்ணில் நீர் முட்டியது. 

“ஓ..ஐ அம் சாரி” என்றாள்.

“பரவாயில்லை..அதான் இப்போ நீ வந்துட்டயே” என்றான் மதன்.

ஜமீலா திடுக்கிட்டாள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா, மதுரை குண்டு மல்லிடா

  ReplyDelete
 2. செங்கோவி மகனுக்கு வடை வேணுமாம். கேட்டு அழரானாம். இந்தா வடை

  ReplyDelete
 3. எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். >>>>>

  அண்ணே! இது தெரிஞ்சுக்க நாலு வருசமா ஆச்சு? பாவம் பய...

  ReplyDelete
 4. இருங்க செங்கோவி சார், படிச்சுட்டு வர்ரேன்!

  ReplyDelete
 5. ஒரு பெண்ணுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடப்பது, செக்யூரிடி போல் பின்னாலேயே வீடு வரை போவது, ஹோட்டல் ஹோட்டலாய் கூட்டிப் போய் திங்க வைத்து பில் கட்டுவது போன்ற வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். //////

  இத்தனை வருஷமாச்சு நமக்கு இன்னும் அந்தத் தெளிவு வர்லியே! அது ஏன்?

  ReplyDelete
 6. நாம் என்னதான் சின்சியராக லவ் பண்ணினாலும், கடைசியில் கிடைப்பது பல்பு தான்’என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது மதனுக்கு. பிரவீணாவும் ஜெனிஃபரும் கொடுத்த பல்புகளை நினைவுச்சின்னமாக நெஞ்சில் சுமந்தபடி திரிந்தான்.//////

  அண்ணே அது எத்தனை வால்டேஜ் பல்ப்! குண்டு பல்ப்பா? டி யூப் லைட் பல்ப்பா?

  ReplyDelete
 7. இனிமேல் தன் வாழ்வில் காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் இடமே இல்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான்.////

  ச்சே பிழைக்கத்தெரியாத மனுஷனா இருக்கானே

  ReplyDelete
 8. அந்த நேரத்தில் தான் அவனது அலுவலகத்தின் அக்கவுண்ட் செக்சனுக்கு வந்து சேர்ந்தாள் ஜமீலா>>>>>

  இவளும் ஏமாத்துவா (அ) ஏமாறுவா....
  முதல் லவ்வர் ஜெனிபர், இவ ஜமீலா...
  முதல் எழுத்து J யில ஆரம்பிக்குது...
  எப்படி நம்ம கண்டுபிடிப்பு.

  ReplyDelete
 9. ஜாலியாகச் சிரித்துப் பேசும் பெண் என்றால் ஏதாவது எஸ் எம் எஸ் ஜோக் படித்துக்காட்டலாம். இடையிடையே ஏ ஜோக்கை அவிழ்த்து விட்டு ஆழம் பார்க்கலாம். கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக அட்டாக் செய்ய நினைத்தால் ஓஷோவை துணைக்கு அழைக்கலாம். ‘காமத்தில் ஆண் தேடுவது தான் என்ன?’ என்று புருவம் தூக்கிப் பேசலாம். தொடாமல், பேச்சிலேயே அவளை ஸ்பரிசிக்கலாம்.//////

  அடடா இம்புட்டு வழிகள் இருக்கா? சொல்லவே இல்ல! ரொம்ப நன்றி செங்கோவி சார்!

  ReplyDelete
 10. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி //அண்ணே அது எத்தனை வால்டேஜ் பல்ப்! குண்டு பல்ப்பா? டி யூப் லைட் பல்ப்பா?// ஃப்யூஸ் போன பல்பு.

  ReplyDelete
 11. கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’>>>

  இதுல உள்குத்து இருக்கற மாதிரி தெரியுது?.... ஹா...ஹா...

  ReplyDelete
 12. ஜமீலா மதனை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டாள்.>>>>

  ஆரம்பத்துல அப்படிதான் வருவாளுக....

  ReplyDelete
 13. //அடடா இம்புட்டு வழிகள் இருக்கா? சொல்லவே இல்ல! ரொம்ப நன்றி செங்கோவி சார்!// அடப்பாவிகளா..லேடீஸும் இதைப் படிச்சு உஷார் ஆயிடுவாங்க..ஓஷோன்னு ஆரம்பிச்சா ஓடவிட்டு அடிப்பாங்க..ஜாக்ரதை.

  ReplyDelete
 14. “பரவாயில்லை..அதான் இப்போ நீ வந்துட்டயே” என்றான் மதன்.>>>>>

  போட்டான் பாரு பிட்டு....
  செங்கோவி, நீ எங்கேயோ போயிட்ட....

  ReplyDelete
 15. @தமிழ்வாசி - Prakash //இது தெரிஞ்சுக்க நாலு வருசமா ஆச்சு? பாவம் பய...// ஓட்டைவடைக்கு இன்னும் தெரியலைங்காரே..என்ன செய்ய?

  ReplyDelete
 16. @தமிழ்வாசி - Prakash //இவளும் ஏமாத்துவா (அ) ஏமாறுவா....
  முதல் லவ்வர் ஜெனிபர், இவ ஜமீலா...
  முதல் எழுத்து J யில ஆரம்பிக்குது...
  எப்படி நம்ம கண்டுபிடிப்பு.//

  பிரகாஷ், உண்மையைச் சொல்லுங்க..நீங்க சிபிஐல தானே வேலை பார்க்கீங்க?

  ReplyDelete
 17. ஓ..ஐ அம் சாரி” என்றாள்.

  “பரவாயில்லை..அதான் இப்போ நீ வந்துட்டயே” என்றான் மதன்.

  ஜமீலா திடுக்கிட்டாள்./////

  ம்.... நம்மட மனசும் கொஞ்சம் கனக்கிறது! மதனுக்காக! இருப்பினும் மதன் செண்டிமெண்டாகப் பேசி பெண்களை ஏமாற்றும் பேர்வழியா? என்று ஒரு சந்தேகமும் இருக்கு சார்!

  அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்......ஆவலுடன்!

  ReplyDelete
 18. @செங்கோவி
  பிரகாஷ், உண்மையைச் சொல்லுங்க..நீங்க சிபிஐல தானே வேலை பார்க்கீங்க?>>>>>

  ஹா....ஹா... என்கிட்டே தானே அவங்க வேலை பாக்கறாங்க? டவுட்டு

  ReplyDelete
 19. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  ம்.... நம்மட மனசும் கொஞ்சம் கனக்கிறது! மதனுக்காக! இருப்பினும் மதன் செண்டிமெண்டாகப் பேசி பெண்களை ஏமாற்றும் பேர்வழியா? என்று ஒரு சந்தேகமும் இருக்கு சார்!>>>

  எனக்கு செங்கோவி தான் மதனோ என சந்தேகம் இருக்கு ஓட்ட வடை....

  ReplyDelete
 20. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  //இருப்பினும் மதன் செண்டிமெண்டாகப் பேசி பெண்களை ஏமாற்றும் பேர்வழியா? என்று ஒரு சந்தேகமும் இருக்கு சார்! ---?

  அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்......ஆவலுடன்!//

  கேள்வியை நீங்களே கேட்டு, பதிலையும் நீங்களே சொல்லீட்டீங்களே..நன்றி.

  ReplyDelete
 21. @தமிழ்வாசி - Prakash //எனக்கு செங்கோவி தான் மதனோ என சந்தேகம் இருக்கு ஓட்ட வடை....// ஹும், அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்கிறதுல என்ன ஒரு ஆர்வம்!

  ReplyDelete
 22. ///ஒரு பெண்ணுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடப்பது, செக்யூரிடி போல் பின்னாலேயே வீடு வரை போவது, ஹோட்டல் ஹோட்டலாய் கூட்டிப் போய் திங்க வைத்து பில் கட்டுவது போன்ற வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்ற தெளிவுக்கு மதன் இந்த நான்கு வருடங்களில் வந்திருந்தான். ///டூ லேட் ))

  ReplyDelete
 23. ///ஜாலியாகச் சிரித்துப் பேசும் பெண் என்றால் ஏதாவது எஸ் எம் எஸ் ஜோக் படித்துக்காட்டலாம். இடையிடையே ஏ ஜோக்கை அவிழ்த்து விட்டு ஆழம் பார்க்கலாம். கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக அட்டாக் செய்ய நினைத்தால் ஓஷோவை துணைக்கு அழைக்கலாம். ‘காமத்தில் ஆண் தேடுவது தான் என்ன?’ என்று புருவம் தூக்கிப் பேசலாம். தொடாமல், பேச்சிலேயே அவளை ஸ்பரிசிக்கலாம்./// ஆகா இவ்வளவு விஷயம் இருக்கோ ..)

  ReplyDelete
 24. @கந்தசாமி. //ஆகா இவ்வளவு விஷயம் இருக்கோ ..) // எப்படி கந்து இப்படி ஒன்னுமே தெரியாத மாதிரிக் கேட்கீங்க..

  ReplyDelete
 25. பாஸ், தூக்கம் வருது பாஸ், அப்புறமா வருகிறேன்.

  ReplyDelete
 26. மாப்ள நல்லா போகுது தொடர்!

  ReplyDelete
 27. ஓஷோ, பொண்ணுங்களை கவுக்கிற டயலாக் மட்டும் எல்லாம் அண்ணனை பிரதிபளிக்குதோ? :-)

  ReplyDelete
 28. @விக்கியுலகம் //மாப்ள நல்லா போகுது தொடர்!// மாமூக்கே பிடிச்சிருக்கா..நன்றி.

  ReplyDelete
 29. //‘கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’ என்பதில் ஆரம்பித்து ’மலையாளப் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கு///
  எங்க போகுது ?????????????
  ம்ம் நடக்க்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 30. //கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’>>>

  இதுல உள்குத்து இருக்கற மாதிரி தெரியுது? //

  same

  ReplyDelete
 31. @THOPPITHOPPI //கேரளாவில் அரிசி பெருசு பெருசா இருக்குமாமே’>>>

  இதுல உள்குத்து இருக்கற மாதிரி தெரியுது?

  same//

  அடப்பாவிகளா..நான் நிஜமாவே அப்படி யோசிக்கலைய்யா..வேணும்னா டெலீட் பண்ணிடவா?

  ReplyDelete
 32. @ஜீ... //ஓஷோ, பொண்ணுங்களை கவுக்கிற டயலாக் மட்டும் எல்லாம் அண்ணனை பிரதிபளிக்குதோ? // தம்பி, இந்தக் கமெண்ட்டை படிக்கும்போது மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஏன்னா சிலபேர் மதனே நாந்தான்னு சொல்லி, தர்மபத்தினி அடி வாங்க வைக்காங்க..அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

  ReplyDelete
 33. அடுத்த அத்தியாயம் எப்போ? ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 34. நல்லாத்தான் இருக்கு ..
  கன்னித்தீவு மாதிரி தொடர்ந்தா என்ன செய்ய ?..

  ReplyDelete
 35. @குணசேகரன்... //அடுத்த அத்தியாயம் எப்போ? // இன்று இரவு குணா.

  ReplyDelete
 36. @curesure4u //கன்னித்தீவு மாதிரி தொடர்ந்தா என்ன செய்ய ?.. // இது உண்மைக்கதை என்பதால், நானே நினைத்தாலும் ரொம்ப இழுக்க முடியாது நண்பரே..மூன்று பாகங்கள் தான்..கவலை வேண்டாம்.

  ReplyDelete
 37. மதனுடைய அடுத்த காதல் முயற்சி நோக்கிய பார்வையோடு தொடர் நகர்கிறது..

  தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.