Sunday, June 26, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_19


”மதன், என்ன பேசுறீங்க?” என்றாள்.

உணர்ச்சி வேகத்தில் உளறி விட்டோம் என்று மதனுக்குப் புரிந்தது. 

“இல்லே ஜமீலா, அம்மா போனப்புறம் என்மேல அன்பு காட்ட யாருமே இல்லை. உன்கூடப் பழகுனப்போ, நீ அந்தக் குறையைத் தீர்த்து வைப்பேன்னு தோணிச்சு. அதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன். என் அம்மாகூட இருக்கும்போது எப்படி செக்யூரா ஃபீல் பண்ணனோ, அதே ஃபீலிங் இப்போ உன்கூடப் பழகும்போதும். என்னைக் கேர் எடுத்துப் பார்த்துப்பேன்னு தோணிச்சு.”

நீ அழகாய் இருக்கிறாய், அதனால் காதலிக்கிறேன் என்று சொல்பவர்களை ஜமீலா பார்த்திருக்கிறாள். அறிவுக்காக, பணத்துக்காக காதலிக்கும் ஆண்களையும் அவள் பார்த்ததுண்டு. ஆனால் இருபத்தைந்து வயது ஆண், குழந்தையைப் போல் அழுதுகொண்டே காதலைச் சொன்னபோது கலங்கிப் போனாள். மென்மையான ஆண்களை அவள் தன் வாழ்வில் கண்டதில்லை. ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

தனுக்குப் பயமாய் இருந்தது. அவளது அடுத்த நகர்வு என்ன என்று புரியவில்லை. நாளை ஆஃபீஸில் கம்ப்ளைண்ட் செய்வாளோ, அண்ணனைக் கூட்டி வருவாளோ, பேச மாட்டோளோ’ என்று பலவாறு எண்ணித் தவித்தான். இரவு ஆமை வேகத்தில் நகர்ந்து, சித்ரவதை செய்தது.

மறுநாள் ஆஃபீஸில் ஜமீலாவைப் போய்ப் பார்த்தான். “சாரி, நான் ஏதும் தப்பாப் பேசிட்டனா?” என்றான்

அவள் “சாயந்திரம் மெரீனா போவோம், உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

சென்னைக்குப் புதிதாக வருபவர் எல்லோரும் சென்று சேரும் இடம் மெரீனா தான். சென்னை வந்துவிட்டு மெரீனாவைப் பார்க்காமல் போவது மிகப்பெரிய பாவமாகவே தமிழகத்தில் பர்க்கப்படும். ஒருவேளை கேரளத்திலும் அப்படித் தானோ? உண்மையில் மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர். மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர்.

வள்ளுவர் கோட்டம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கக்கூடாது. அவளை விட்டுவிடுவார்கள். ஆண்மகனுக்குத் தான் அங்கு நாலைந்து ஆப்பு ஏத்திக்கட்டிய லுங்கியுடன் ரெடியாக இருக்கும். ஃப்ரீ தான் தம்பின்னு வேற சொல்வாங்க. மனசுல பெரிய சிஎம்-னு நினைப்பு..ச்சே, காதலி பீச்சுக்கு அழைக்கையில் ஏன் இந்த கர்மாந்திரத்தை எல்லாம் நினைக்கிறோம் என்று தன்னையே திட்டிக் கொண்டான். 

மாலையில் அவளுடனே மெரீனா சென்று சேர்ந்தான். பலியாடு போல் அவள் பின்னாலேயே சென்றான்.

பையன்கள் பெண்களுடனும் ஆண்டிகள் அங்கிள்களுடனும் வெயிலில் ‘நிலா காயுது’ரேஞ்சில் செட்டில் ஆகியிருந்தார்கள். நேரம் கிடைக்கையில் இவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மதனுக்குத் தோன்றியது. தினமும் ஒரே ஆளுடன் தான் வருகிறார்களா, அனைவருமே காதலர்கள் தானா, ஆண்ட்டிகள் கணவனுடனா இப்படி குசுகுசுவெனப் பேசுகிறார்கள், இவர்கள் கடைசியில் என்ன ஆகிறார்கள் - என்பது பற்றி ஒரு தீஸிஸ் ரெடி பண்ணினால் என்ன என்று மதனுக்குத் தோன்றியது. 

“அங்கே உட்காரலாமா?” என்றாள் . அங்கே ஒரு ஜோடி படகு மறைவிலிருந்து எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தது.

“சரி” என்றான்.

அங்கே சென்றவுடன் சந்தேகத்துடன் சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்துவிட்டு திருப்தியாகி மதன் உட்கார்ந்தான்.

”சரி, சொல்லு” என்றாள்.

சொல்லா, இவ தானே பேசணும்னு கூட்டி வந்தாள்னு குழம்பியபடியே “என்ன சொல்ல?” என்றான்.

“ஏதோ சொன்னயே” என்றாள்.

“ம்....” என்று பம்மினான்.

“என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?” என்றாள்.

“நீ நல்ல பொண்ணு. ரொம்ப சாஃப்ட் நேச்சர். யார்கிட்டயும் கோபப்பட்டுப் பேசவே தெரியாது. எல்லார் மேலயும் அன்பா இருப்பே”

“நான் என்னைப் புகழந்து பேசச் சொல்லலை. என்னைப் பத்தி என்ன டீடெய்ல் தெரியும் உனக்கு?”

“கேரளா. இங்க அண்ணன் வீட்ல இருந்து வர்றே. அப்புறம் பி.காம்...ம், அவ்வளவு தான்”

“அவ்வளவு தானா? இந்த நாலு விஷயம் மட்டும் போதுமா ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கைத் துணைன்னு ஏத்துக்க?”

“அதுகூட எனக்கு வேண்டாம், உன்னைப் பார்த்தா உடனே..”

“போதும்..நான் சொல்லட்டா என்னைப் பத்தி?.....இந்த அண்ணன் என் சொந்த அண்ணன் இல்லை. வீட்டுக்கு ஒரே பொண்ணு. கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பம். அப்புறம்..”

“அப்புறம்?”

“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா..

  ReplyDelete
 2. @தமிழ்வாசி - Prakash இன்னைக்குமா..’சிறந்த வடை வாங்கி’ விருதை உங்களுக்கு வழங்குகிறேன் பிரகாஷ்.

  ReplyDelete
 3. ஃஃஃஃஃ மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர். மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர்ஃஃஃஃ

  குறிச்சு வச்சக்கிறேன் உந்தப் பக்கம் வந்தால் உதவும்.. ஹ..ஹ...

  ReplyDelete
 4. “நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”>>>>

  செம திருப்பம் யா....

  ReplyDelete
 5. வாங்க சுதா இந்நேரத்துல சுடு சோறா???

  ReplyDelete
 6. தல...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனுஞ்ச்சாமி!! இது உங்க கதை தானே!!!!!யாருகிட்ட கதை விடறீங்க!!!

  ReplyDelete
 7. எங்கையா தமிழ் மணம் மணக்கல...

  ReplyDelete
 8. இல்லே ஜமீலா, அம்மா போனப்புறம் என்மேல அன்பு காட்ட யாருமே இல்லை. உன்கூடப் பழகுனப்போ, நீ அந்தக் குறையைத் தீர்த்து வைப்பேன்னு தோணிச்சு.>>>>>

  செம சமாளிபிக்கேசன் பன்றான்யா

  ReplyDelete
 9. தமிழ்மணத்தை காக்கா தூக்கிட்டு போயிருச்சாம்.

  ReplyDelete
 10. தமிழ்வாசி - Prakash said...
  வாங்க சுதா இந்நேரத்துல சுடு சோறா??

  .................

  ஆமாப்பா வந்து கொம்புயுட்டரை போட்டால் சூடா வந்திருந்திச்சு....

  ReplyDelete
 11. @♔ம.தி.சுதா♔ //என்றாலும் சுடு சோறு எனக்குத் தான்...//சுதாவுக்கு இல்லாத சுடுசோறா..எடுத்துக்கோங்க.

  ReplyDelete
 12. சாரி, நான் ஏதும் தப்பாப் பேசிட்டனா?” >>>

  நீ எங்கே பேசுன.... பிட்டு தானே போட்ட.. பட்சி சிக்குமா? சரி, மேல படிப்போம்...

  ReplyDelete
 13. @RSM //தல...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனுஞ்ச்சாமி!! இது உங்க கதை தானே!!!!!// இப்படீல்லாம் நடுராத்திரில பீதியைக் கிளப்பக்கூடாதுய்யா.

  ReplyDelete
 14. தமிழ்வாசி - Prakash said...
  தமிழ்மணத்தை காக்கா தூக்கிட்டு போயிருச்சாம்.

  ..............

  ஹ...ஹ.. அப்படீன்னா இனி ப்ளொக்கில காக்க செட்டை கட்டுங்க காக்கா வராது....

  ReplyDelete
 15. //// இவர்கள் கடைசியில் என்ன ஆகிறார்கள் - என்பது பற்றி ஒரு தீஸிஸ் ரெடி /பண்ணினால் என்ன என்று மதனுக்குத் தோன்றியது/// இது கண்டிப்பாக செங்கோவி அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும்!!!!அடுத்த பதிவுக்கு கரு ரெடி செய்து விட்டார்!!!!

  ReplyDelete
 16. @♔ம.தி.சுதா♔ //எங்கையா தமிழ் மணம் மணக்கல...// அதைத்தான்யா நாங்களும் தேடிக்கிட்டு இருக்கோம்..

  ReplyDelete
 17. ஆண்மகனுக்குத் தான் அங்கு நாலைந்து ஆப்பு ஏத்திக்கட்டிய லுங்கியுடன் ரெடியாக இருக்கும். ஃப்ரீ தான் தம்பின்னு வேற சொல்வாங்க.>>>>>

  செங்கோவிக்கு ரொம்ப அனுபவம் இருக்கு போல....

  ReplyDelete
 18. நேரம் கிடைக்கையில் இவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மதனுக்குத் தோன்றியது.>>>>

  மதனுக்கு தோனல... நம்ம செங்கோவிக்கு அடுத்த பதிவுக்கு தீம் ரெடி...

  ReplyDelete
 19. @RSM //இது கண்டிப்பாக செங்கோவி அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும்!!!!அடுத்த பதிவுக்கு கரு ரெடி செய்து விட்டார்!!!!// அய்யா,கரு குழந்தைன்னு பேசி மாட்டி விட்றாதீங்கய்யா..சென்னைல இருந்தா நீங்களே எழுதுங்களேன்.

  ReplyDelete
 20. அங்கே ஒரு ஜோடி படகு மறைவிலிருந்து எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தது.>>>>>

  அதுங்க என்ன பன்னுச்சுன்னு மதன் பாக்கலியா? இல்லை உங்க கிட்ட சொல்லியா?

  ReplyDelete
 21. @தமிழ்வாசி - Prakash //ஃப்ரீ தான் தம்பின்னு வேற சொல்வாங்க.>>>>>

  செங்கோவிக்கு ரொம்ப அனுபவம் இருக்கு போல....// இவரு ஒருத்தரு கோனார் நோட்ஸ் மாதிரி.

  ReplyDelete
 22. (தொடரும்)>>>>>

  வேற வழி நாங்களும் தொடருறோம்...

  ReplyDelete
 23. @தமிழ்வாசி - Prakash //அதுங்க என்ன பன்னுச்சுன்னு மதன் பாக்கலியா? இல்லை உங்க கிட்ட சொல்லியா?// ஏன், உங்களுக்குத் தெரியாதா..

  ReplyDelete
 24. கலக்கோ கலக்கெண்டு கலக்குது

  ReplyDelete
 25. அடேய் பிரகாஷ் நீ தூங்கவே மாட்டியா?

  ReplyDelete
 26. கரெக்டா தொடரும் போடுறீங்களே, அண்ணே ஏதாவது டீவி கம்பேனி பக்கம் போனீங்கன்னா அப்படியே உங்களை கொத்திக்கிட்டு போய்டுவாய்ங்க.....

  ReplyDelete
 27. //உண்மையில் மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர்// நோட்டட்! :-)

  மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர்.// ஒதுங்குவது???!! பார்ரா!!:-)

  ReplyDelete
 28. nalla irukku... ippadi thodarum pottutingaley?

  ReplyDelete
 29. ஓ! கல்யாணமாகி...? விடோவா?
  தொடரும் போடுற இடத்தில சும்மா பின்றீங்கண்ணே!!!

  ReplyDelete
 30. ஏற்கனெவே கல்யாணம் ஆகிருச்சா? கிழிஞ்சது கிருஷ்ணகிரீஈஈ

  ReplyDelete
 31. >>“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”

  hi hi ஹி ஹி

  ReplyDelete
 32. @கவி அழகன் //கலக்கோ கலக்கெண்டு கலக்குது// நன்றி அழகரே.

  ReplyDelete
 33. @!* வேடந்தாங்கல் - கருன் *! //அடேய் பிரகாஷ் நீ தூங்கவே மாட்டியா?// அவர் தூங்குறது ஆஃபீஸ்ல மட்டும் தாங்க.

  ReplyDelete
 34. @பன்னிக்குட்டி ராம்சாமி //அண்ணே ஏதாவது டீவி கம்பேனி பக்கம் போனீங்கன்னா அப்படியே உங்களை கொத்திக்கிட்டு போய்டுவாய்ங்க.....// அப்போ இன்னொரு தொழிலு கைவசம் இருக்குன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 35. @ஜீ... //தொடரும் போடுற இடத்தில சும்மா பின்றீங்கண்ணே!!!// ஹி..ஹி.

  ReplyDelete
 36. @சே.குமார் //ippadi thodarum pottutingaley?// இப்போ தானே ஊர்ல இருந்து வந்தீங்க..நிதானமா பழைய பகுதிகளையும் நீங்க படிக்கணும்னு தான்..

  ReplyDelete
 37. @இரவு வானம் //கிழிஞ்சது கிருஷ்ணகிரீஈஈ// சும்மா இருங்க நைட்டு, யாராவது கிருஷ்ணகிரிக்காரங்க கோவிச்சுக்கப் போறாங்க.

  ReplyDelete
 38. @சி.பி.செந்தில்குமார் //“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”

  hi hi ஹி ஹி// அதுல உமக்கு என்ன ஹி..ஹி?

  ReplyDelete
 39. உண்மையில் மெரீனாவை விட பெசண்ட் நகர் பீச் பேசுவதற்குப் பெட்டர். மகாபலிபுரம் பக்கம் ஒதுங்குவது இன்னும் பெட்டர்.//

  நோட் பண்ணிக்கிறோம் பாஸ்,

  மக்களே அனுபவசாலி சொல்றார்.
  எல்லோரும் நோட் பண்ணிக்குங்க.

  ReplyDelete
 40. “அப்புறம்?”

  “நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”//

  அவ்....என்ன ஒரு டெரர் தனம்.....

  இப்பூடி பொறுத்த நேரத்தில ஸ்டாப் ஆக்கினா என்ன நியாயம் பாஸ்...

  அடுத்த பாகத்திற்காக வெயிற் பண்ணிக்கிட்டிருக்கேன்.

  ReplyDelete
 41. //நோட் பண்ணிக்கிறோம் பாஸ்,

  மக்களே அனுபவசாலி சொல்றார்.
  எல்லோரும் நோட் பண்ணிக்குங்க// இல்லேன்னா பச்சப்புள்ளைக்கு ஒன்னும் தெரியாது பாருங்க..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.