Thursday, June 23, 2011

கர்ப்பமான ஐஸும் கர்ஜித்து எழுந்த ரஜினியும் (நானா யோசிச்சேன்)

டிஸ்கி: சாரி, சூப்பர் ஸ்டார் ஸ்டில்லை இங்கு போடலை. ஏன்னா
 நாளைக்கு யாரும் என்னைப் பார்த்து ‘ஆம்பளைப் படம் போட்டு ஹிட்ஸ் வாங்குன பதிவர் தானே நீ’-ன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக்கூடாது பாருங்க..நமக்கு மானம் தாண்ணே முக்கியம்!

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஏ அடக் படக் டிமிக்கடிக்கிற
டோலு பையா டப்சா
உட்டாம் பாரு கப்சா
அப்ச கல்லு மாலியா
ஆத்துப் பக்கம் வாறியா?
லாலாக்கு டோல் டப்பிம்மா.....

பதிவர் சந்திப்பு:

எனக்கு பதிவர்னாலே பயம்ணே..அதுவும் பதிவர் சந்திப்புன்னா ரொம்ப ரொம்ப பயம்ணே..வீரம் விளைஞ்ச மண்ணான திருநெல்வேலில பதிவர் சந்திப்புங்கவும் எத்தனை தலை உருளப்போகுதோ, ஆன்லைன்ல பார்ப்போம்னு ஆர்வமா இருந்தேன். பயபுள்ளைக நாம எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னுமே பண்ணலியே..
’மூக்கு முட்டச் சாப்பிட்டோம்’ங்கிறதுல என்னய்யா சுவாரஸ்யம் இருக்கு? ’மூக்குல குத்திட்டான்’ன்னா எப்படி சூப்பரா இருந்திருக்கும்..ரெண்டு வீச்சருவா வாங்குனோம், நாலு பேரைப் போட்டுத் தள்ளுனோம்னு இல்லாம சவசவன்னுல்லே சந்திச்சிருக்காங்க..அடி தூள் பறந்திருக்க வேண்டாமா? ‘சண்டை முடியும்வரை கொண்டை போட மாட்டேன் - பெண் பதிவர் பாஞ்சாலியின் சபதம்’னு ஒரு ’பதிவர் சந்திப்பு பதிவு’ போட்டா, எப்படி இருந்திருக்கும்? நல்ல சான்சை வேஸ்ட் ஆக்கிட்டாங்களே..

இதுக்கு சிறப்பா ஏற்பாடு பண்ண எங்க பண்ணையார் ஐயா மேல ஒரே ஒரு வருத்தம் தான்..வந்திருந்த பச்சப்புள்ளைங்க கிளம்பும்போது ஆளுக்கொரு பால்புட்டி பரிசாக் கொடுக்காம அம்போன்னு விட்டுட்டாரே...!

சிங்கம் ஒன்று..:

’சூப்பர் ஸ்டார் ஜூலை முதல் வாரம் இந்தியா திரும்புறார்’ங்கிற செய்தியைப் படிச்சதுமே நம்மோட பிரார்த்தனை எதுவும் வீண் போகலை, ஆண்டவன் தமிழகத்தை மட்டுமில்லை ரஜினியையும் காப்பாத்திட்டான், எல்லாம் அவன் செயல்னு ரொம்ப சீரியஸா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். 

ஆனா ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்னு தெரிஞ்ச அப்புறம் தான் எனக்கு மேட்டரே உறைச்சது.(மேட்டர் என்ன மிளகாயான்னு குதர்க்கமா பின்னூட்டாதீங்கப்பா) தலைவர் எப்போ வருவாரு, எப்படி வருவாருன்னு யாருக்குமே முதல்ல தெரியலை, அப்போ தான் இந்த ஐஸ் கர்ப்பமான நல்ல செய்தியை யாரோ புண்ணியவான் தலைவர்கிட்ட சொல்லி இருக்காங்க. உடனே ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ன்னு தலைவர் குளுக்கோஸ் ட்ரிப்ல ஆரம்பிச்சு ஜிப் வரைக்கும் எல்லாத்தையும் ஆவேசமா கழட்டி எறிஞ்சுட்டு எந்திரிச்சுட்டாரு..எதுக்கா?
அட, என்னாங்க நீங்க..ஐஸ்க்கு எப்படியும் ஐஸ் மாதிரியே அழகான பெண் குழந்தை தான் பிறக்கும். அது கூடவும் தலைவர் டூயட் பாட வேண்டாமா? தன்னோட நீண்டநாள் ஆசையான ஐஸு உடன் எந்திரன் நடிச்சப்புறம், அவரோட உள்மனசுல இனியும் நாம சாதிக்க வேண்டியது என்ன இருக்குன்னு ஒரு நினைப்பு வந்திருச்சு போல..அதான் படுத்துட்டாரு.

இப்போ ஒரு டார்கெட் கிடைச்சாச்சுல்ல..தலைவா விட்றாதே..ஐஸ் பொண்ணுகூட நீ அலுங்காம குலுங்காம ஆடணும். அதை இப்போ ஒரு வயசு ஆகிற என் மகனோட மகன் வந்து ரசிக்கணும்..அதுவரைக்கும் விடமாட்டோம் உன்னை!

தங்க டிக்கி:

எங்க ஊர்ல ஒரு ரவுசான பாட்டி இருக்கு. என் பையன் ’பின்பக்கத்துல’ உம்மா கொடுத்துக்கிட்டே ‘தங்கக்...’ன்னு கொஞ்சி செம ரகளை பண்ணும். ஆனா இப்போ திருச்சி ஏர்போர்ட்ல உண்மையிலேயே ஒரு தங்க டிக்கி மாட்டியிருக்காரு.
இலங்கையில இருந்து ஒரு ஆளு..பதிவரான்னு தெரியலை..பயங்கரமா யோசிச்சு தங்கம் கடத்திக்கிட்டு வந்திருக்காரு. எங்க வச்சுங்கிறீங்க? ஆசன வாய்ல.(எங்க ஆசானோட வாய் இல்லைய்யா..)  அந்தாளைப் பிடிச்சு பின்னால டெஸ்ட் பண்ணப்போ ஒரு கிலோ தேறும்னு தெரிஞ்சிருக்கு. என்னதா..நாசமாப் போச்சு,தங்கம் தான்யா! அப்புறம் என்ன ஐயாவுக்கு ராஜ வரவேற்பு கொடுத்து உள்ள தூக்கி வச்சுட்டாங்க.

இதுமாதிரி எத்தனை தடவை ’அங்க’ வச்சு தங்கம் கொண்டுவந்தாரோ தெரியலை..ஆமா, அதுல செஞ்ச நகையைவா நம்மூரு லேடீஸ் கழுத்துல காதுல போட்டுகிட்டுத் திரியறாங்க? கர்மம்..கர்மம்!

பதிவர் வேண்டுகோள்:

தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு..அவருக்காக மீண்டும்:

மன்ற நடவடிக்கை:

பெரிசுகள்லாம் மன்னிக்கணும்..பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..அதனால..


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

62 comments:

 1. ஹிஹி வெற்றி வெற்றி...தமிழ்வாசி இப்போ இங்கிலீசு வாசிக்க போயிட்டாரோ??

  ReplyDelete
 2. பத்மினிய போட்டோமா பம்மிட்டு இருந்தமான்னு இல்லாம...
  சங்கத்து ஆள அனுப்பட்டா??

  ReplyDelete
 3. போச்சு.... வடை போச்சு...

  ReplyDelete
 4. @மைந்தன் சிவா ஏன் ஹன்சி படம் போட்டேன்னு பதிவுல சொல்லி இருக்கேன்..பாருங்கய்யா.

  ReplyDelete
 5. வடையை மிஸ் பண்ணி பல்பு வாங்கிய தமிழ்வாசியே வருக.

  ReplyDelete
 6. சரி.... ஜஸ்ட் மிஸ்.... மெது வடை வாங்கிடோம்ல

  ReplyDelete
 7. ‘ஆம்பளைப் படம் போட்டு ஹிட்ஸ் வாங்குன பதிவர் தானே நீ’-ன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக்கூடாது பாருங்க..>>>>>

  டிஸ்கியில ஹிட் வாங்குராங்கப்பா...

  ReplyDelete
 8. ஏ அடக் படக் டிமிக்கடிக்கிற
  டோலு பையா டப்சா>>>>>>

  நெசமாவே நெஞ்ச தொட்ட வரிகள்...

  ReplyDelete
 9. சண்டை முடியும்வரை கொண்டை போட மாட்டேன் - பெண் பதிவர் பாஞ்சாலியின் சபதம்’னு ஒரு ’பதிவர் சந்திப்பு பதிவு’ போட்டா, எப்படி இருந்திருக்கும்? நல்ல சான்சை வேஸ்ட் ஆக்கிட்டாங்களே..>>>>

  ஆசை... தோசை...அப்பளம்....வடை...

  ReplyDelete
 10. அது கூடவும் தலைவர் டூயட் பாட வேண்டாமா? >>>>>

  எலேய்... எம்புட்டு பெரிய ஆசை உனக்கு...

  ReplyDelete
 11. @தமிழ்வாசி - Prakash //ஆசை... தோசை...அப்பளம்....வடை...// உங்களைக் குப்புறப் போட்டு கும்மியிருக்கணும்..ஜஸ்ட் மிஸ்.

  ReplyDelete
 12. தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர்,>>>>>

  யாருல அந்த நல்ல பதிவர்....? நம்ம விக்கி...? இல்ல கருண்...? யாருல?

  ReplyDelete
 13. பெரிசுகள்லாம் மன்னிக்கணும்..பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..>>>>>

  நீயும் பெரிசு தானய்யா..... ஏதோ... யாரோ கேட்டாங்கன்னு ஹன்சிகா படத்தை போட்டு இலவட்டம்னு காட்டுரீரு.....

  ReplyDelete
 14. @தமிழ்வாசி - Prakash //யாருல அந்த நல்ல பதிவர்....? நம்ம விக்கி...? இல்ல கருண்...?// சொல்ல மாட்டேனே!

  ReplyDelete
 15. @தமிழ்வாசி - Prakash //நீயும் பெரிசு தானய்யா..// யாம் பெருசுக்கெல்லாம் பெருசு..சிறுசுக்கெல்லாம் சிறுசு.

  ReplyDelete
 16. எந்த நடிகையும் எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் மைனஸ் வோட்டுப் போடாம மன்னிச்சு விட்டுறேன் .. :)


  **************************

  ஒரு டாலர் திருடினால் தப்பா ?

  ReplyDelete
 17. @இக்பால் செல்வன் //எந்த நடிகையும் எனக்குப் பிடிக்கவில்லை.// என்னய்யா டேஸ்ட் உங்களுக்கு...ரொம்பக் கஷ்டம்.

  ReplyDelete
 18. @இக்பால் செல்வன் //இருந்தாலும் மைனஸ் வோட்டுப் போடாம மன்னிச்சு விட்டுறேன் .. :)// உங்களால எனக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி லாபம்ணே!

  ReplyDelete
 19. பாஸ்!நெஞ்சைத் தொட்ட வரிகளுக்கு கோனார் நோட்ஸ் கொடுக்க முடியுமா:)

  ReplyDelete
 20. @ராஜ நடராஜன் //நெஞ்சைத் தொட்ட வரிகளுக்கு கோனார் நோட்ஸ் கொடுக்க முடியுமா:)// அதை வைச்சு பரிட்சையா பாஸ் எழுதப் போறீங்க..இதெல்லாம் அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு கமலானந்தா சொல்லி இருக்காரு.

  ReplyDelete
 21. (நானா யோசிச்சேன்)//

  வணக்கம் மாப்ளே,
  எல்லாப் பதிவையும் நீங்க தானே யோசித்து எழுதுறீங்க,
  ஆனால் நடிகைகள் பற்றி வாற மேட்டருக்கு மட்டும்,
  சாரி பதிவுக்கு மட்டும் ஏன் நானா யோசித்தேன் என்று போடுறீங்க...

  தப்பா நினைக்க வேணாம், சிம்மா தான் கேட்கிறேன்.
  ஹி.....ஹி....

  ReplyDelete
 22. ‘ஆம்பளைப் படம் போட்டு ஹிட்ஸ் வாங்குன பதிவர் தானே நீ’-ன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக்கூடாது பாருங்க..நமக்கு மானம் தாண்ணே முக்கியம்!//

  அடிங்,
  உள் குத்துப் பதிவு போடுறாராம்...
  ஹி...ஹி....

  ReplyDelete
 23. ஏ அடக் படக் டிமிக்கடிக்கிற
  டோலு பையா டப்சா
  உட்டாம் பாரு கப்சா
  அப்ச கல்லு மாலியா
  ஆத்துப் பக்கம் வாறியா?
  லாலாக்கு டோல் டப்பிம்மா..... //

  இடக்கு முடக்கான வரிகளில் தான் நெஞ்சைத் தொடுகின்ற ரசனை இருக்கிறது என்பதற்கு இவ் வரிகளே சாட்சி பாஸ்...

  ஹி......ஹி....

  ReplyDelete
 24. எத்தனை தலை உருளப்போகுதோ, ஆன்லைன்ல பார்ப்போம்னு ஆர்வமா இருந்தேன். பயபுள்ளைக நாம எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னுமே பண்ணலியே.//

  நீங்க, இந்ஹ மாதிரி நினைச்ச படியால் தான் இண்ட நெட்டே டவுண் ஆப் போச்சு....

  ReplyDelete
 25. இதுக்கு சிறப்பா ஏற்பாடு பண்ண எங்க பண்ணையார் ஐயா மேல ஒரே ஒரு வருத்தம் தான்..வந்திருந்த பச்சப்புள்ளைங்க கிளம்பும்போது ஆளுக்கொரு பால்புட்டி பரிசாக் கொடுக்காம அம்போன்னு விட்டுட்டாரே...//

  அட்ரா....அட்ரா...அட்ரா....
  என்ன ஒரு சிந்தனை,
  நீங்க CM ஆகுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன பாஸ்.

  ReplyDelete
 26. இப்போ ஒரு டார்கெட் கிடைச்சாச்சுல்ல..தலைவா விட்றாதே..ஐஸ் பொண்ணுகூட நீ அலுங்காம குலுங்காம ஆடணும். அதை இப்போ ஒரு வயசு ஆகிற என் மகனோட மகன் வந்து ரசிக்கணும்..அதுவரைக்கும் விடமாட்டோம் உன்னை!//

  ஐயோ...ஐயோ,,,,

  என்னம்மா காமெடி பண்ணுறீங்க பாஸ்.

  ReplyDelete
 27. இதுமாதிரி எத்தனை தடவை ’அங்க’ வச்சு தங்கம் கொண்டுவந்தாரோ தெரியலை..ஆமா, அதுல செஞ்ச நகையைவா நம்மூரு லேடீஸ் கழுத்துல காதுல போட்டுகிட்டுத் திரியறாங்க? கர்மம்..கர்மம்!//

  அப்பாடா,
  இந்த மாதிரி ஒரு உண்மையினை பத்திரிகையில போட்டால் நாட்டில நகை வாங்கிற பணத்தைப் பல ஆண்கள் சேமித்து வைப்பாங்க எல்லேய்...
  ஹி....ஹி....

  ReplyDelete
 28. பதிவர் வேண்டுகோள்://

  ஆமா இது அந்தப் பதிவரோட விருப்பமா?
  இல்லே உங்க விருப்பமா....
  ஹி....ஹி....

  ReplyDelete
 29. பெரிசுகள்லாம் மன்னிக்கணும்..பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..அதனால..//

  என்ன கொலை வெறி பாஸ்..

  பெரிசுங்களைக் கூட தூங்க விடுறேல்ல என்றொரு நோக்கமா..
  ஹி,....ஹி....

  ReplyDelete
 30. நானா யோசிச்சேன்,
  கலக்கலான நகைச்சுவை கலந்து வந்திருக்கிறது,

  ReplyDelete
 31. ரஜினி , ஐஸ்வர்யா பற்றிய செய்திகளுடன் கூடிய மசாலா மிக்ஸ் நகைச்சுவை அருமை.

  ReplyDelete
 32. மாப்ள...ஜொள் விடாத ஆளே இல்லன்னு சொல்லுப்புட்டீர் ஹிஹி!

  ReplyDelete
 33. @நிரூபன் //எல்லாப் பதிவையும் நீங்க தானே யோசித்து எழுதுறீங்க,// ஆமா நிரூ, மத்த பதிவெல்லாம் யோசிச்சு எழுதுறது..இது யோசிக்கிறதை அப்படியே எழுதுறது!

  ReplyDelete
 34. @நிரூபன் //இந்த மாதிரி ஒரு உண்மையினை பத்திரிகையில போட்டால் நாட்டில நகை வாங்கிற பணத்தைப் பல ஆண்கள் சேமித்து வைப்பாங்க எல்லேய்...// ஆமா..ஆமா!

  ReplyDelete
 35. @கடம்பவன குயில் //மசாலா மிக்ஸ் நகைச்சுவை அருமை.// நன்றி சகோ.

  ReplyDelete
 36. @விக்கியுலகம் //ஜொள் விடாத ஆளே இல்லன்னு சொல்லுப்புட்டீர் ஹிஹி!// நாம எப்பவும் உண்மையைத் தானே சொல்வோம்.

  ReplyDelete
 37. மெயில் அனுப்புனது விக்கி தக்காளீயா? ஜீவனா? சிவாவா>? அண்ணே?

  ReplyDelete
 38. @சி.பி.செந்தில்குமார் அந்தப் பதிவர் நேத்து மறுபடியும் ஒரு மெயில் அனுப்பி ‘என்ன பாஸ் இப்படிப் பண்ணீட்டீங்க’ன்னு கதறி இருக்கார்..பாவம், விட்ருங்க.

  ReplyDelete
 39. வம்பு செய்யக்கூடாதுன்னு ஸ்டாம்ப் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டுதான் நெல்லை பதிவர் சந்திப்பை நடத்தி இருக்காங்க. பாவம் 'அட்ரா சக்க', 'வம்ப வெலைக்கு வாங்குவோம்ல' போன்ற பதிவர்கள் கூட சைலண்டா இருந்துட்டு வந்துருக்காங்க. அடுத்த சந்திப்புக்கு நம்ம போவோம். பத்த வச்சிட்டு வேடிக்கை பார்க்கலாம்.

  ReplyDelete
 40. தமிழ் மணத்துல மைனஸ் ஓட்டு வேலை செய்யலை.(ஹன்சிகா பிடிக்காது...)

  ReplyDelete
 41. >> நாளைக்கு யாரும் என்னைப் பார்த்து ‘ஆம்பளைப் படம் போட்டு ஹிட்ஸ் வாங்குன பதிவர் தானே நீ’-ன்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிடக்கூடாது பாருங்க..நமக்கு மானம் தாண்ணே முக்கியம்!

  haa haa அண்னனுக்கு மைனஸ் ஓட்டு ஒண்ணூ விழுந்திருக்கு.. ரொம்ப கம்மியா இருக்கு.. ஹி ஹி

  ReplyDelete
 42. வெள்ளிகிழமை நெருங்குனாலே அண்ணனுக்கு வெறி ஏறுதே...

  ReplyDelete
 43. @சென்னை பித்தன் //சுவையான மிக்சர்!// ரசித்தர்கற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 44. @! சிவகுமார் ! //அடுத்த சந்திப்புக்கு நம்ம போவோம். பத்த வச்சிட்டு வேடிக்கை பார்க்கலாம்.// என் இனமே! வாழ்க..வாழ்க.

  ReplyDelete
 45. @! சிவகுமார் ! //.(ஹன்சிகா பிடிக்காது...)// பத்மினி தான் பிடிக்குமோ?

  ReplyDelete
 46. @!* வேடந்தாங்கல் - கருன் *! //நீங்களா யோசிச்சீங்களா?// பின்னே நமக்காக பக்கத்து வீட்டுக்காரனா யோசிப்பான்?

  ReplyDelete
 47. @சி.பி.செந்தில்குமார் //அண்னனுக்கு மைனஸ் ஓட்டு ஒண்ணூ விழுந்திருக்கு.// உள்ளதைச் சொன்னா கோவிச்சுக்கிறாங்க, என்ன செய்ய..

  ReplyDelete
 48. @இரவு வானம் //வெள்ளிகிழமை நெருங்குனாலே அண்ணனுக்கு வெறி ஏறுதே...// சும்மா இருந்தாலும் நீங்களே கிளப்பி விட்ருங்கய்யா.

  ReplyDelete
 49. //பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..அதனால.//
  என்ன கொடுமைடா சாமி!!

  ReplyDelete
 50. புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ? - இது தமிழ்நாட்டையே உலுக்கிகிட்டு இருந்த கேள்வி. அதே மாதிரி ஐசு கல்யாணம் முடிஞ்ச நாளில் இருந்து அகில இந்தியாவையும் உலுக்கிகிட்டு இருந்த கேள்வி- "ஐஸ்வர்யா கற்ப்பமாயிட்டாங்களா ?"- இப்போ எல்லோரும் நிம்மதியாயிருப்பாங்க. [கர்மம்.. கர்மம்... தேவையா இது... ஐயோ...ஐயோ...]. \\ஆமா, அதுல செஞ்ச நகையைவா நம்மூரு லேடீஸ் கழுத்துல காதுல போட்டுகிட்டுத் திரியறாங்க? \\ என்ன பண்ணினாலும் தங்கம் மாசடையாது செங்கோவி!

  ReplyDelete
 51. My friend JK referred your blog... and it is awesome humour letter after letter...Thanks for that!!!!

  ReplyDelete
 52. @ஜீ... //என்ன கொடுமைடா சாமி!!// தம்பி ரொம்ப ஃபீல் பண்றாரே..

  ReplyDelete
 53. @Jayadev Das //ஐஸ்வர்யா கற்ப்பமாயிட்டாங்களா ?// ஆமா சார், பாவம் அபிஷேக்..டென்சனோட இத்தனை நாள் இருந்திருப்பாரு.

  ReplyDelete
 54. @பாரதசாரி //My friend JK referred your blog... and it is awesome humour letter after letter..// இந்த மாதிரிப் பாராட்டு தான் என்னை உற்சாகமா எழுத வைக்குது பாரதசாரி..நன்றி. ரெஃபர் பண்ண ஜேகே-க்கும் ஸ்பெஷல் நன்றி.

  ReplyDelete
 55. பெரிசுகள்லாம் மன்னிக்கணும்..பத்மினி ரசிகர் மன்றத்தைக் கூட்டி ரொம்ப நாளாயிடுச்சு..அதனால..

  ReplyDelete
 56. @SURESH அதனால என்ன பாஸ்..பத்மினிகூட என்ன பிரச்சினை?

  ReplyDelete
 57. அண்ணே மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கிட்டீங்க? பெரியாளுண்ணே நீங்க! பத்மினி படத்த கொஞ்சம் பெருசா போடப்படாதா? சிபி சாட்ல வந்து சொல்ல சொன்னாருங்கோ.....!

  ReplyDelete
 58. @பன்னிக்குட்டி ராம்சாமி //அண்ணே மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கிட்டீங்க? பெரியாளுண்ணே நீங்க! // ஆயிரம் கைகள் மறைந்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை..சிபிகூடயா சேருதீங்க?

  ReplyDelete
 59. நண்பா..தங்கடிக்கி கு சரியான போட்டோ ....உங்களின் கற்பனைத்திறனை எண்ணி யாம் வியப்படைஹிறோம் ......

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.