Thursday, June 30, 2011

அந்த அம்பிகா சிடி எனக்கு வேண்டாம் (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா!

பதிவர் கிசுகிசு:
ஒரு பதிவர் ஃபாரின்ல இருந்து இந்தியா வந்தாரு. அவரை பதிவர் சந்திப்புல சிபி பார்த்தாரு. உடனே ‘வாய்யா’ன்னு கூட்டிட்டுப் போயி குற்றாலத்துல குளிக்க வச்சு அனுப்புனாரு. நான் அதை முதல்ல சாதாரணமாத் தான் எடுத்துகிட்டேன். அப்புறம் அதே பதிவர் நாகர்கோயில் போயி பதிவர் கே.ஆர்.விஜயன் சாரைப் பார்த்தாரு. அவரும் ‘வாங்க தம்பி’ன்னு இழுத்துக்கிட்டுப் போய் திற்பரப்பு ஃபால்ஸ்ல குளிக்க வச்சு அனுப்பி இருக்காரு..

சம்திங் ராங்..ஏன்யா இப்படி அவரைப் பார்க்கிறவங்கள்லாம் கூட்டிட்டுப் போயி குளிப்பாட்டி விடுறீங்க? ஃபாரின்ல இருந்தவரைக்கும் அந்த மனுசன் குளிக்கவே இல்லையா? நேர்ல பார்த்தவங்க யாராவது சொல்லுங்கய்யா..அவரைக் குளிப்பாட்டுற செலவுக்கும் பதிவர் சந்திப்புல நிதிவசூல் பண்ணுனீங்களா, இல்லையா?

அம்பிகா சிடி :

நேத்து பதிவர் வினையூக்கி சாட்ல மெசேஜ் அனுப்பி இருந்தாரு. ‘ரொம்ப முக்கியமான விஷயம்- அம்பிகா சிடி’ன்னு. என் கல்லூரி நண்பர்ங்கிறதால இப்படிப் போட்டாத்தான் நான் ஆன்லைன்ல வருவேன்னு அவருக்குத் தெரியும். நானும் ஆர்வமாப் போய் ‘ஹாய்’ன்னு சொன்னேன்..அவ்வளவு தான்..’நீயெல்லாம் மனுசனா’ன்னு ஆரம்பிச்சு வசவு உரிச்சுட்டாரு. என்ன மேட்டர்னா..
கண் சிமிட்டும் நேரம் அம்பிகா சிடி அவசரமாத் தேவைன்னு ஒரு பதிவு போட்டிருந்தனா..அதுல ’ஏதாவது’ இருந்தா எனக்கு அனுப்புங்கன்னு கூடச் சொல்லி இருந்தேனே...ஒரு ஆளு அதுக்கு ஒருகோடி ரூவா கூடக் கேட்டாரே..ஞாபகம் வந்துடுச்சா..அதை வினையூக்கி ஆர்வமா நெட்ல தேடி யூடியூப்லயே முழுப்படத்தையும் எடுத்துட்டாராம். 

ரெண்டே கால் மணி நேரம் பொறுமையா சீன் வரும் வரும்னு பார்த்தா, அநியாயத்துக்கு படத்துல ஒன்னுமே இல்லாம அண்ணாத்தைக்கு சினம் வந்திடுச்சு. ‘ஒரு பதிவர்னா பொறுப்புணர்ச்சி வேண்டாமா..இப்படி தீர விசாரிக்காமலா ஒரு படத்தை ரெஃபர் பண்ணுவே’-ன்னு கேட்டு கிழிகிழின்னு கிழிச்சுட்டாரு. பாவம், ரொம்ப நொந்துட்டாரு போல..

அதனால நான் இந்தியா வரும்போது கொடுப்போம்னு எனக்காக யாராவது அந்த சிடியை வாங்கி வச்சிருந்தா(!), அதை தலையைச் சுத்தி தூரப் போடுங்க. எனக்கு அந்த அம்பிகா சிடி வேணாம். அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...

விகடனின் குசும்பு:

ஸ்பெக்ட்ரம் ஊழல்ல கனிமொழி கைதானதுல நம்ம எல்லாருக்குமே சந்தோசம் தான். அவங்க மேல எல்லாருமே கடுப்புல தான் இருந்தோம். அதனால தானே ஐயாவுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பி வச்சோம்..

ஆனா விகடன் இந்த வாரம் கனிமொழியோட முதல் கணவரைத் தேடிப் பிடிச்சு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கு. அந்தாளு பாவம், காவி கட்டிக்கிட்டு சிவனேன்னு இருக்காரு. அவர்கிட்டப் போய் கனிமொழியைப் பத்தி துருவித் துருவிக் கேட்டிருக்காங்க. எனக்கென்னமோ யாரையோ சந்தோசப்படுத்த விகடன், கனிமொழியின் இமேஜை டேமேஜ் பண்ணுதோன்னு தோணுது. .
விகடன் இதைப் பண்ணதுக்குப் பதிலா, ஸ்பெக்ட்ரம்ல தயாநிதியின் பங்கு என்னன்னு துருவி இருக்கலாம்..பழைய விகடனா இருந்தா செய்வாங்க..இப்போ?

மதுரன் பதிவு:
இந்த வாரம் ’மங்காத்தா - வேலாயுதம் - ஏழாவது அறிவு’ ஒரு பதிவு எழுதுனேன். அப்புறமா படிச்சா எனக்கு அந்தப் பதிவு திருப்தியா இல்லை..(அந்தப் பதிவு மட்டுமான்னு கேட்டு நோகடிக்கக் கூடாது). ஆச்சரியமா அதே கான்சப்ட்ல மதுரன்ங்கிற பதிவர் ஒருத்தர் ‘தலயா தளபதியா’ன்னு மங்காத்தா-வேலாயுதத்தைக் கம்பேர் பண்ணி ஒரு பதிவு அருமையா எழுதி இருந்தாரு. நல்ல முழுமையான தகவல்களோட இருந்துச்சு அந்தப் பதிவு. எனக்கே வெட்கமாப் போச்சு..அதனால அதைப் படிக்காதவங்க போய்ப் படிச்சிக்கோங்கன்னு கேட்டுக்கிறேன்..
இதே மாதிரி ’நானா யோசிச்சேனை’ விட பெட்டரா யாராவது எழுதுனா சொல்லுங்க மக்கா!...அதுக்காக www.அஸ்குபுஸ்குஆண்ட்டி.காம்னு லின்க் கொடுத்தீங்க பிச்சுப்புடுவேன் பிச்சு.

பயங்கரமா யோசிச்சது:

ஊர்ல இருந்து புதுச்சட்டை வந்திருந்துச்சு. நானும் ஆசையா ஆஃபீஸ்க்கு போட்டுட்டுப் போனா, சண்டாளங்க ஒருத்தன்கூட ‘சட்டை புதுசா சார்’னு கேட்கலை..அப்போ தான் எனக்கு அந்த கதை ஞாபகம் வந்துச்சு.

மாப்பு ஒருத்தன் புது மோதிரம் வாங்கிப் போட்டுட்டு, ஊர் முழுக்கச் சுத்தி வந்தான். நைட்டும் ஆயிடுச்சு. ஒரு பயகூட ‘என்னய்யா, மோதிரம் புதுசா’ன்னு கேட்கலை. மாப்புக்கு செம கடுப்பாயிடுச்சு. என்னடா இது, எவ்வளவு காசு போட்டு மோதிரம் வாங்கினோம். ஒருத்தன்கூட கவனிச்சுக் கேட்கலியேன்னு காண்டாகி, வக்கைப் படப்புக்கு(வைக்கோல் போர்) தீ வச்சுட்டான். ஊர்ல இருந்து எல்லாரும் தீயை அணைக்க தண்ணியோட ஓடி வந்தாங்க. 

நம்ம மாப்பும் நடுல நின்னுக்கிட்டு, ‘ஏ..இங்கிட்டு ஊத்துலே..நீ அங்கிட்டு ஊத்துலே’ன்னு கையை நீட்டி நீட்டி சொன்னான். தீ வெளிச்சத்துல மோதிரம் மின்னுச்சு. அப்போ அதைக் கவனிச்ச ஒருத்தன் கேட்டான்’ மாப்பு, மோதிரம் புதுசா’ன்னு. நம்மாலும் உணர்ச்சி வசப்பட்டு’ஆமாலே அறுதலி..இந்த எழவை காலைலயே கேட்டிருந்தா வக்கைப்படப்பாவது தப்பிச்சிருக்கும்ல’ன்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன..தர்ம அடி தான்.

நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

51 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா....

  ReplyDelete
 2. @தமிழ்வாசி - Prakash வந்துட்டாருய்யா..வந்துட்டாருய்யா.

  ReplyDelete
 3. பதிவர் கிசுகிசு:>>>>>

  என்னமோ ஏதோன்னு படிச்சா, போயும் போயும் ஒரு ஆணுக்கு கிசுகிசு போட்டிருக்காரே....

  ReplyDelete
 4. எனக்கு அந்த அம்பிகா சிடி வேணாம். அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...>>>>

  அய்யோ...அய்யோ.... கேவலமான டேஸ்டால இருக்கே...??

  ReplyDelete
 5. ////ஆனா விகடன் இந்த வாரம் கனிமொழியோட முதல் கணவரைத் தேடிப் பிடிச்சு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கு. அந்தாளு பாவம், காவி கட்டிக்கிட்டு சிவனேன்னு இருக்காரு. அவர்கிட்டப் போய் கனிமொழியைப் பத்தி துருவித் துருவிக் கேட்டிருக்காங்க. // என்னது கனி மொழிக்கு இரண்டு கணவரா அவ்வ்வ்வ் .......நெசமாவே இந்த தகவலை இப்ப தான் அறிகிறன் பாஸ் ...

  ReplyDelete
 6. //கேவலமான டேஸ்டால இருக்கே...??// நன்றி பிரகாஷ்..கேவலமான பொழப்புன்னு சொல்லாததுக்கு!

  ReplyDelete
 7. @கந்தசாமி. //நெசமாவே இந்த தகவலை இப்ப தான் அறிகிறன் பாஸ் .// அதுதானே விகடனின் விருப்பமும்..

  ReplyDelete
 8. நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?>>>

  ஒரு சட்டை மேட்டருல திரும்ப தமிழ்நாடு வந்திருவிங்க போல.... கொஞ்சம் டீப்பா யோசி...

  ReplyDelete
 9. //தமிழ்வாசி - Prakash said...ஒரு சட்டை மேட்டருல திரும்ப தமிழ்நாடு வந்திருவிங்க போல.// அதுனால தான் பொறுமையா இருக்கேன்..

  ReplyDelete
 10. //நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?//
  ஆபிசின் தென்கிழக்கு மூலையில் தீ வைக்கவும்.
  வாஸ்துபடி அதுதான் அக்னிமூலை.
  இதுவும் ஒர்க்கவுட் ஆகலைன்னா நித்தியானந்த சுவாமியை அணுகவும்.அவருதான் நெருப்புக்கு நடுவில வித்தை காட்டுவாரு.

  ReplyDelete
 11. நல்லா யோசிக்கிறிங்க.

  ReplyDelete
 12. தீ தீ தித்திக்கும் தீ...இந்த பதிவு முழுசும் ஹிஹி!

  ReplyDelete
 13. @வினையூக்கி பண்றதையும் பண்ணிட்டு என்னய்யா சிரிப்பு...

  ReplyDelete
 14. @உலக சினிமா ரசிகன் //ஆபிசின் தென்கிழக்கு மூலையில் தீ வைக்கவும்.
  வாஸ்துபடி அதுதான் அக்னிமூலை.// ஹா..ஹா..நல்ல அட்வைஸ் சார்..இதுக்குத் தான் பெரியவங்க வேணும்ங்கிறது..


  //இதுவும் ஒர்க்கவுட் ஆகலைன்னா நித்தியானந்த சுவாமியை அணுகவும்.அவருதான் நெருப்புக்கு நடுவில வித்தை காட்டுவாரு.// ரஞ்சிதா ஒரு நெருப்பு-ன்னா சொல்றீங்க....

  ReplyDelete
 15. அது என்ன சீதாவோட பொண்ணு பாக்க போறேன் சிடி? புதுசா இருக்கு

  ReplyDelete
 16. டமுக்கடிப்பா டீயாலோ
  தமுக்கடிப்பான் ஹாயாலோ
  டமுக்கடிப்பா டீயாலோ
  தமுக்கடிப்பான் ஹாயாலோ
  ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
  ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா!//

  அவ்...என்ன ஒரு ரசனை உள்ள மனுசன் நீங்க..

  என்ன மாதிரிப் பாட்டெல்லாம் தேடிப் பிடிச்சுக் கேட்கிறீங்க.

  ReplyDelete
 17. பதிவர் கிசுகிசு://

  யோ அந்தாளுக்கு அரபுத் தண்ணி ஒத்துக்கலையாம், ரொம்ப சூடா இருக்காம் என்று குளிக்காம, உள்ளூரில குளிக்கலாம் என்று வந்திருக்காரு.

  நீங்க வேறு, அவரைப் போய் அவரைக் கிண்டல் பண்ணுறீங்களே,
  உங்களுக்கு நம்ம ஆளைப் பற்றி நல்லாத் தெரியுமில்லே, கை வசம் ஒரு அருவா வச்சிருக்காரு.
  ஒரே போடாப் போட்டுத் தள்ளிடுவாரு. ஜாக்கிரதை.

  //அம்பிகா சிடி : நல்லா ஏமாத்துறாய் மச்சி, அம்பிகா சீடி படத்தை,
  உங்களின் பதிவைப் பார்த்துத் தான் யாரோ அப்லோட் பண்ணியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  youtube இல் இப்படி இருக்கிறது.
  Uploaded by dontech1111 on 24 Jun 2011

  இது வினையூக்கி தான் என்று நான் சொல்லலை..
  ஹி....ஹி...

  //அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...//
  அடப் பாவி, இன்னும் ஆர்வத்தை தூண்டி, அலைய வைக்கிற நோக்கமா.
  ஹி...

  //விகடனின் குசும்பு:// ஏன்யா, கனிமொழியோடை முதற் கணவரை மறுபடியும் திஹாரிலை சேர்த்து வைப்பம் என்று விகடன் யோசிக்கிறாங்களோ.

  //மதுரன் பதிவு://
  எனக்கே வெட்கமாப் போச்சு..// ஏன்யா...என்ன மேட்டரு...
  மதுரன் பதிவு நானும் படித்தேன்.

  //இதே மாதிரி ’நானா யோசிச்சேனை’ விட பெட்டரா யாராவது எழுதுனா சொல்லுங்க மக்கா!...அதுக்காக www.அஸ்குபுஸ்குஆண்ட்டி.காம்னு லின்க் கொடுத்தீங்க பிச்சுப்புடுவேன் பிச்சு.//

  நீங்க சைட் கப்பிலை என்னையைப் போட்டுத் தாக்குறீங்க.
  ஹி....

  //நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?//

  மச்சி, மோதிரம் மேட்டர்.....அது நீங்க தானே...

  ஆப்பிசுக்கு தீ வைச்சால் அரேபிய வெப்பம் காரணமாக, முழு ஏரியாவுமே பதிக்க வாய்ப்பிருக்கு.
  பார்த்தய்யா, பார்த்து, பேசமா ஒரு கப் டீ வாங்கி ஊத்துங்க, அப்போவாச்சும் உங்க புது சட்டையை, கண்டுக்குவாங்க என்று நினைக்கிறேன்.

  நானா யோசிச்சேன், செம காமெடி மச்சி.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. @இரவு வானம் //அது என்ன சீதாவோட பொண்ணு பாக்க போறேன் சிடி?// படத்தோட பேரு ‘பொண்ணு பார்க்கப் போறேன்’யா..உங்க ஜீகே ரொம்ப வீக்கா இருக்கே நைட்டு!

  ReplyDelete
 20. ஆமா அந்தப் புதுச்சட்டை பாக்கெட்லயும் ஆபீஸ்ல சுட்ட பேனாவ குத்திக்கிட்டா போனீங்க? :-)

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் . புதுமையான செய்திகளை பதிவிடும் எனது பிளாக்- http://tamilamazingnews.blogspot.com

  ReplyDelete
 22. உங்க வீட்ல ஒரு குடம் தண்ணீர் தலையில ஊத்தி அனுப்பிட்டாங்க போல இருக்கு..

  ReplyDelete
 23. ////சம்திங் ராங்..ஏன்யா இப்படி அவரைப் பார்க்கிறவங்கள்லாம் கூட்டிட்டுப் போயி குளிப்பாட்டி விடுறீங்க? ////////

  அப்போ அடுத்த லொகேசன் எங்கே?

  ReplyDelete
 24. ////எனக்கு அந்த அம்பிகா சிடி வேணாம். அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...//////

  ’வேற’ ஏதாவது சிடி இருந்தா சொல்லுங்கண்ணே....!

  ReplyDelete
 25. ////எனக்கே வெட்கமாப் போச்சு..அதனால அதைப் படிக்காதவங்க போய்ப் படிச்சிக்கோங்கன்னு கேட்டுக்கிறேன்../////

  உங்க நேர்மைய நெனச்சா கண்ணு மட்டுமில்ல, வயிறும் கலங்குதுங்கோ....!

  ReplyDelete
 26. ////அதுக்காக www.அஸ்குபுஸ்குஆண்ட்டி.காம்னு லின்க் கொடுத்தீங்க பிச்சுப்புடுவேன் பிச்சு./////

  அந்த ஆண்டி.காம் அட்ரசை சரியா போட்டாத்தான் என்ன?

  ReplyDelete
 27. ////நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?///////

  அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேணாம், சட்டை புதுசுன்னு ஒரு பேப்பர்ல எழுதி பாக்கெட்ல ஒட்டிட்டு போங்க.... போதும்.....!

  ReplyDelete
 28. ///////தமிழ்வாசி - Prakash said... [Reply]
  எனக்கு அந்த அம்பிகா சிடி வேணாம். அதுக்குப் பதிலா சீதாவோட ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்து சிடி கிடைச்சா...>>>>

  அய்யோ...அய்யோ.... கேவலமான டேஸ்டால இருக்கே...??////////

  வெளங்காத ஆளா இருப்பாரு போல இந்த தமிழ்வாசி...? இன்னும் உங்களுக்கு பயிற்சி பத்தல தம்பி....! சிபிகிட்ட புல் ட்ரைனிங் போங்க....!

  ReplyDelete
 29. ஆமா அந்த நமீதா போட்டோ எதுக்கு?

  ReplyDelete
 30. @நிரூபன் //உங்களின் பதிவைப் பார்த்துத் தான் யாரோ அப்லோட் பண்ணியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  youtube இல் இப்படி இருக்கிறது.
  Uploaded by dontech1111 on 24 Jun 2011

  இது வினையூக்கி தான் என்று நான் சொல்லலை..// அட, ஆமாம்..இது அந்தாளு வேலையா இருக்குமோ..பேரு வேறயா இருக்கே..விசாரிப்போம்..

  ReplyDelete
 31. @நிரூபன் //நீங்க சைட் கப்பிலை என்னையைப் போட்டுத் தாக்குறீங்க.// நீங்க சடு கேப்புல உங்க விளம்பரத்தைப் போட்டுத் தாக்குறீங்களே..

  ReplyDelete
 32. @நிரூபன் //மச்சி, மோதிரம் மேட்டர்.....அது நீங்க தானே...// அடப்பாவிகளா..அதுவொரு நாட்டுப்புறக் கதைய்யா..

  //பேசமா ஒரு கப் டீ வாங்கி ஊத்துங்க, அப்போவாச்சும் உங்க புது சட்டையை, கண்டுக்குவாங்க என்று நினைக்கிறேன்.// நான் ஆஃபீஸை ஒழிக்கலாம்னு பார்த்தா, நீங்க என் சட்டையை ஒழிக்கப் பார்க்கீங்களா..அப்போ சட்டை வாங்கிட்டு வந்த தங்கமணிக்கு யாரு பதில் சொல்றது..கல்யாணம் ஆகியிருந்தா இப்படியெல்லாம் யோசிக்க மாட்டீங்கய்யா..

  ReplyDelete
 33. @ஜீ... //ஆமா அந்தப் புதுச்சட்டை பாக்கெட்லயும் ஆபீஸ்ல சுட்ட பேனாவ குத்திக்கிட்டா போனீங்க?// ஹா..ஹா..ஏன் குத்துனா நிக்காதா?

  ReplyDelete
 34. @நாடோடி வாழ்த்துக்கு நன்றி நாடோடி.

  ReplyDelete
 35. @அமுதா கிருஷ்ணா //உங்க வீட்ல ஒரு குடம் தண்ணீர் தலையில ஊத்தி அனுப்பிட்டாங்க போல இருக்கு..// அதெல்லாம் கம்பெனி ரகசியம் ஆச்சே...எப்படித் தான் கண்டுபிடிக்காய்ங்கன்னு தெரியலையே.......

  ReplyDelete
 36. @பன்னிக்குட்டி ராம்சாமி

  //அப்போ அடுத்த லொகேசன் எங்கே?// மெரீனாக்கு கொண்டுபோயிடலாமா?


  //’வேற’ ஏதாவது சிடி இருந்தா சொல்லுங்கண்ணே....!// ஆபாசமா கமெண்ட் போடாதீங்கண்ணே.


  //உங்க நேர்மைய நெனச்சா கண்ணு மட்டுமில்ல, வயிறும் கலங்குதுங்கோ....!// உண்மையைச் சொன்னேன்..இது தப்பா?

  //அந்த ஆண்டி.காம் அட்ரசை சரியா போட்டாத்தான் என்ன?// அப்படில்லாம் இருக்கா..இருந்தா போடுங்கய்யா.

  //அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேணாம், சட்டை புதுசுன்னு ஒரு பேப்பர்ல எழுதி பாக்கெட்ல ஒட்டிட்டு போங்க.... போதும்.....!//

  ஆஹா..இது அல்லவோ தீர்ப்பு..சூப்பர்ணே!

  //வெளங்காத ஆளா இருப்பாரு போல இந்த தமிழ்வாசி...? இன்னும் உங்களுக்கு பயிற்சி பத்தல தம்பி....! சிபிகிட்ட புல் ட்ரைனிங் போங்க....!// சிபி இந்த சர்வீசும் பண்றாரா? நாம ஏன் டைரக்டா சீதா கிட்டயே அவரை அனுப்பக்கூடாது?

  //ஆமா அந்த நமீதா போட்டோ எதுக்கு?//

  என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க...நாம எல்லாரும் பார்க்கத் தானே அது.

  ReplyDelete
 37. //அவரைக் குளிப்பாட்டுற செலவுக்கும் பதிவர் சந்திப்புல நிதிவசூல் பண்ணுனீங்களா, இல்லையா?//
  இல்ல,இல்ல, சத்தியமா இல்ல!

  ReplyDelete
 38. //அதனால நான் இந்தியா வரும்போது கொடுப்போம்னு எனக்காக யாராவது அந்த சிடியை வாங்கி வச்சிருந்தா(!), அதை தலையைச் சுத்தி தூரப் போடுங்க//
  சிபி நோட் பண்ணிக்குங்க. உங்களத்தான் சொல்றாரு.

  ReplyDelete
 39. @FOOD//இல்ல,இல்ல, சத்தியமா இல்ல!// ஹா..ஹா..இவ்வளவு பண்ணீட்டு அதை விட்டுட்டீங்களே ஆஃபீசர் சார்..

  ReplyDelete
 40. பின்னூட்டம் போடனுமுன்னா பதிவு பூராவுக்கும் போடலாம்.அத்தனை துணுக்குச் செய்திகள்:)


  இப்போதைக்கு வக்கோலுக்கு இன்னொரு பேருக்குப் போட்டுக்கிறேன்.

  ReplyDelete
 41. \\ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வச்சா ‘சட்டை புதுசா’ன்னு கேட்பானுக?\\ ஒரு மாசத்துக்கு குப்பையில இருந்து எடுத்த மாதிரியான சட்டையாவே போட்டுக்கிட்டு ஆபீஸ் போங்க, திடீர்னு ஒரு நாள் புது சட்டையோட போங்க, ஒருத்தர் விடாம புது சட்டையான்னு கேட்கலைன்ன என்னைக் கேளுங்க.

  ReplyDelete
 42. \\விகடன், கனிமொழியின் இமேஜை டேமேஜ் பண்ணுதோன்னு தோணுது.\\ என்னது, டேமேஜ் பண்றதா? ஹா..ஹா..ஹா... நீ ஒன்னு புரிஞ்சிக்கோ "ராசா", ஆயிரத்தெட்டு தடவை டேமேஜான இமேஜை இன்னொரு தடவை டேமேஜ் பண்ணவே முடியாது. ஹா..ஹா..ஹா...

  ReplyDelete
 43. @ராஜ நடராஜன் //பின்னூட்டம் போடனுமுன்னா பதிவு பூராவுக்கும் போடலாம்.அத்தனை துணுக்குச் செய்திகள்:)// நேத்து நீங்க வந்தப்பவே இதைப் போட்டுட்டனே..இப்பதான் பார்த்தீங்களா..

  ReplyDelete
 44. @Jayadev Das //ஒரு மாசத்துக்கு குப்பையில இருந்து எடுத்த மாதிரியான சட்டையாவே போட்டுக்கிட்டு ஆபீஸ் போங்க, திடீர்னு ஒரு நாள் புது சட்டையோட போங்க,// சூப்பர் சார்..என்ன ஒரு அட்வைஸ்.

  // நீ ஒன்னு புரிஞ்சிக்கோ "ராசா", ஆயிரத்தெட்டு தடவை டேமேஜான இமேஜை இன்னொரு தடவை டேமேஜ் பண்ணவே முடியாது. ஹா..ஹா..ஹா.// ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...

  ReplyDelete
 45. //எனக்கென்னமோ யாரையோ சந்தோசப்படுத்த விகடன், கனிமொழியின் இமேஜை டேமேஜ் பண்ணுதோன்னு தோணுது. .//

  எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

  ReplyDelete
 46. //மதுரன் பதிவு:///

  ரொம்ப நன்றி சார்

  ReplyDelete
 47. @மதுரன் தம்பி, உண்மையைத் தானே சொன்னேன்..கொஞ்சம் அடிக்கடி எழுதுங்க..ரொம்ப கேப் விடுறீங்க..

  ReplyDelete
 48. நல்லா யோசிக்கிறிங்க.

  ReplyDelete
 49. @அம்பாளடியாள் நல்லாவா..ஓ, வஞ்சப் புகழ்ச்சியா...அப்போ சரி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.