Saturday, July 2, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_20


“அப்புறம்?”
“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.”

மதன்னுக்குப் பேயறைந்தது போல் ஆகியது. அதிர்ச்சிடன் ஜமீலாவையே பார்த்தபடி இருந்தான். அவள் தொடர்ந்தாள்.

“வீட்ல பார்த்துத் தான் கட்டி வச்சாங்க. கல்யாணம் வரைக்கும் அவனைப் பத்தி ஒன்னும் தெரியலை. அப்புறம் தான் தெரிஞ்சது குடிகாரன்னு. எப்பவும் போதை. வீட்டுக்கே வராம எங்கயாவது விழுந்து கிடப்பான். வீட்டுக்கு வந்தா அடி, உதை. எந்தவொரு வேலைக்கும் போறதில்லை. சொந்த பிஸினஸ்னு சொன்னாங்க. 

அதை அவன் வாப்பா தான் பார்த்துக்கிட்டு இருந்தாரு. அதனால எங்களுக்கு முன்னாடியே கண்டுபிடிக்க முடியலை. ஒவ்வொரு நாளும் அவன்கூட வாழ்றது நரகமாப் போச்சு. அடி, உதைங்கிறதுல இருந்து சூடு வைக்கறதுன்னு அவன் முன்னேறுனான். என்னால அதைத் தாங்க முடியலை. அப்புறம் என் வாப்பா வீட்டுக்கே நான் வந்துட்டேன்.”

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. துடைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தாள்.

“அப்புறம் டைவர்ஸ்க்காக பெரிய போராட்டம். ரெண்டு வீட்லயும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அவன் அப்பாவும் என் மேல ரொம்பப் பரிதாபப்பட்டாரு. எங்க வீட்டுக்கே என்னைத் தேடி வந்து அவன் ரகளை பண்ண ஆரம்பிச்சான். அதனால தான் என்னை இங்க சென்னைக்கு அனுப்பி வச்சுட்டாங்க. 

ஆறு மாசம் வீட்ல சும்மா தான் இருந்தேன். அண்ணன் தான் ஏதாவது வேலைக்குப் போ, நாலு பேருகூடப் பழகுனா ஆறுதலா இருக்கும். பழசை மறப்பே’ன்னு சொல்லி அனுப்பி வச்சாரு. இடையில அவன் டைவர்ஸ்க்கு ஒத்துக்கிட்டான். இப்போ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கோம்”

மதன் கலங்கிப் போனான். உண்மையில் மதனுக்கு கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாது. ஜமீலாவின் கதை அவனை மிகவும் பாதித்தது. பெண் என்றால் ’சைட் அடிக்க, லவ் பண்ண காமத்துக்கு உதவும் சதையால் செய்யப்பட்ட ஒரு வஸ்து’என்பதைத் தாண்டி அவன் சிந்தித்ததில்லை. 

அவனுக்குத் தெரிந்த பெண்களும் நல்ல வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணை அடிப்பது என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் செய்வார்களா..முத்தமிடலாம்..கட்டி அணைக்கலாம்..அதற்குத்தானே பெண்..ஏன் இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக அவன் நடந்துகொண்டான் என்பதே அவனுக்குப் புரியவில்லை.

“நான் பழசையெல்லாம் மறக்கணும்னு தான் இங்க வந்திருக்கேன். லவ்வு..அது இதுன்னு ஒரு ஆம்பிளையோட சுத்தி இன்னொரு தடவை நரகத்தை அனுபவிக்க நான் ரெடியா இல்லை. என்னை விட்டுடு. எனக்கு ஆதரவா ஃப்ரெண்டா பேச முடிஞ்சாப் பேசு. இல்லேன்னா அதுவும் வேண்டாம்...போலாமா? “என்று கேட்டவாறே எழுந்தாள் ஜமீலா.

மதனும் ஒன்றும் சொல்லாமல் எழுந்தான். அவளை பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் பீச்சுக்கே வந்தான்.

எவ்வளவு கஷ்டம் அந்தப் பொண்ணுக்கு..நாம் ஏதாவது செய்யவேண்டுமே..அவள் சொல்றான்னு ஏன் அவளை விட்டு விலகணும்? நாமே ஏன் அவளைக் கல்யாணம் செய்யக்கூடாது? நமக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. நம்ம மேல எந்தப் பொண்ணாவது அன்பா இருக்கான்னு தான் இத்தனை வருசமா அலைஞ்சிருக்கோம்..

ஒருதடவைகூட நாமளும் அவங்ககிட்ட அன்பா இருக்கணுமேன்னு யோசிச்சதில்லை. இப்போ இந்தப் பொண்ணுக்கு அன்பு தேவை. அவளோட வலிக்கு ஆறுதல் தேவை. நம்ம மேலயும் அன்பு காட்ட ஒரு ஆள் தேவை. ரெண்டு பேருக்குமே ஒரே தேவை தான். அப்போ நான் ஏன் ஜமீலாவைக் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?

வாழ்வில் முதல் தடவையாக கல்யாணத்தைப் பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான் மதன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...

  ReplyDelete
 2. வீட்டுக்கு வந்தா அடி, உதை. எந்தவொரு வேலைக்கும் போறதில்லை. சொந்த பிஸினஸ்னு சொன்னாங்க.>>>>

  ஏங்க செங்கோவி... அடித்தல், உதைத்தல் சொந்த பிசினஸா?

  ReplyDelete
 3. //ஏங்க செங்கோவி... அடித்தல், உதைத்தல் சொந்த பிசினஸா?// ஏன்யா இப்படில்லாம் யோசிக்கீங்க?

  ReplyDelete
 4. அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. துடைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தாள்>>>>\

  மதன் தொடச்சு விட்டிருந்தா ஒரு டச்சிங்கா இருந்திருக்குமே... ஜஸ்ட் மிஸிங்....

  ReplyDelete
 5. முத்தமிடலாம்..கட்டி அணைக்கலாம்..அதற்குத்தானே பெண்..ஏன் இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக அவன் நடந்துகொண்டான் என்பதே அவனுக்குப் புரியவில்லை>>>>

  மதன் பச்ச புள்ள ஒண்ணுமே தெரியாது பாரு?

  ReplyDelete
 6. வாழ்வில் முதல் தடவையாக கல்யாணத்தைப் பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான் மதன்>>>>

  பாருங்கப்பா... மத்னுக்குள்ளேயும் ஒரு மனசு இருக்கு.

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash //மதன் தொடச்சு விட்டிருந்தா ஒரு டச்சிங்கா இருந்திருக்குமே... // இங்க என்ன சினிமாவா நடக்கு?

  ReplyDelete
 8. //மதன் பச்ச புள்ள ஒண்ணுமே தெரியாது பாரு?// ஆமாம்யா..அடிதடி விசயத்துல அவன் பச்சப்புள்ளை தான்.

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//பாருங்கப்பா... மத்னுக்குள்ளேயும் ஒரு மனசு இருக்கு.// அவனும் மனுசன் தான்யா.

  ReplyDelete
 10. >>வாழ்வில் முதல் தடவையாக கல்யாணத்தைப் பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான் மதன்.

  மதனா? மன்மதன் எங்கண்ணனா?

  ReplyDelete
 11. பல பெண்களின் மணவாழ்க்கையில், பரிதாபப்பட வேண்டிய விஷயங்கள் மேலோங்கி நிற்கின்றன. அவர்கள் கண்ணீரைத் துடைத்திடும் கைகள் மட்டுமே தேவை.

  ReplyDelete
 12. @சி.பி.செந்தில்குமார் //மதனா? மன்மதன் எங்கண்ணனா?// எப்பவும் அதே நினைப்பு தானா?

  ReplyDelete
 13. @FOOD//பல பெண்களின் மணவாழ்க்கையில், பரிதாபப்பட வேண்டிய விஷயங்கள் மேலோங்கி நிற்கின்றன.// உண்மை தான் சார்.

  ReplyDelete
 14. நான் உணவை வழி மொழிகிறேன்..

  ReplyDelete
 15. என்ன செங் சீரியல் மாதிரி கொண்டு போயிட்டு இருக்கீங்க, ஆரம்பத்துல நீங்க குடுத்த பில்டப்ப பார்த்து பெண்ணியவாதிகள் ரவுண்டு கட்டி உங்கள கும்மற மாதிரி எழுதுவீங்கன்னு நினைச்சேன், எப்படி என் நல்லெண்ணம் :-))))

  ReplyDelete
 16. @இரவு வானம் //என்ன செங் சீரியல் மாதிரி கொண்டு போயிட்டு இருக்கீங்க, ஆரம்பத்துல நீங்க குடுத்த பில்டப்ப பார்த்து பெண்ணியவாதிகள் ரவுண்டு கட்டி உங்கள கும்மற மாதிரி எழுதுவீங்கன்னு நினைச்சேன்// யோவ், நான் என்ன பிட்டுப் படத்துக்கா கதை எழுதுறேன்..என் சொந்தக் கதைன்னு சொன்னேன்ல..உங்க நல்ல எண்ணம் வாழ்க.

  ReplyDelete
 17. என் மன வலி தீர ஒரு மருந்து சொல்லுங்க...........

  ReplyDelete
 18. கதை பயங்கரமா பிக்கப் ஆகிடுச்சே....! முக்கியமான கட்டம் வந்துடுச்சு போல?

  ReplyDelete
 19. மதன் இப்படி ஓர் முடிவை எடுப்பான் என நான் நினைக்கவே இல்லை பாஸ்,

  புதிய கனிகளைச் சுவைப்பதில் ஆவலாக இருந்த மதனை வைத்து, இப்படி ஒரு திருப்பு முனையினை இந்த அங்கத்தில் காட்டுவீங்க என்று நான் எதிர்பார்க்கவே இல்லை பாஸ்,

  வாழ்த்துக்கள் மச்சி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.