Sunday, July 3, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_21


இன்னொரு திருமணம் என்பது பற்றிச் சிந்திக்கவே பயமாக இருந்தது ஜமீலவிற்கு. ஏற்கனவே பட்ட காயமே ஆறாத நிலையில் இதில் மீண்டும் தான் இறங்குவது அவசியம் தானா என்று தோன்றியது. ஆனால் இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண் தனியே வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அதை எதிர்கொள்ளும் தைரியமும் அவளிடம் இல்லை. 

மதன் அவளை விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தான். ‘நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். பழசை நினைத்துப் பயப்பட வேண்டாம்’ என்று அவளுக்கு நம்பிக்கை ஊட்டினான். அடி மேல் அடி அடித்தால் அம்மியே நகர்வது போல், ஜமீலாவின் மனதும் சிறிது அசைந்தது.

“நான் ஒரு முஸ்லிம். டைவர்ஸி வேறு. உன் வீட்டில் எப்படி ஒத்துக்கொள்வார்கள்? நீயோ இந்து. என் வீட்டில் நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த விசயத்தை இத்தோடு விட்டு விடுவதே நல்லது” என்றாள் ஜமீலா.

“என் அப்பா என் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டார். ஆனால் நீ ஒரு டைவர்ஸிங்கிற விசயத்தை மட்டும் அவர்கிட்ட சொல்ல வேண்டாம். அவர் அந்தக்காலத்து ஆளு. அவர்கிட்ட மட்டும் இல்லை. யார்கிட்டயும் நாம சொல்லிக்க வேண்டாம். ஏன் சொல்லணும்? இது உன்னோட பெர்சனல் விசயம். அதை அடுததவங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நீ  உன் வீட்ல பேசு” என்றான்.

ஆனால் அவன் அப்பாவிடம் விசயத்தைச் சொன்னபோது, அவர் கேட்ட முதல் கேள்வி “பொண்ணு என்ன ஜாதி?”.

”அவ முஸ்லிம்” என்றான்.

“இங்க சொந்தக்காரங்க மத்தில என்னைத் தலைகுனிய வைக்கணும்னே இதைப் பண்றியா? இதுக்கு ஒருக்காலும் நான் சம்மதிக்க முடியாது.” 

மதனுக்கு அவர் சம்மதம் தேவையாய் இல்லை. ஒரு இஞ்சினியராக ஐந்திலக்கச் சம்பளம் வாங்குபவனுக்கு அப்பாவின் தேவை என்று ஏதும் இல்லை. எனவே இனியும் இவரிடம் பேசுவது வீண் என்று புரிந்து கொண்டான்.

ஏற்கனவே ஜமீலாவிற்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். வருகின்ற வரன் எல்லாம் இரண்டாம் தாரமாகவே வந்து கொண்டிருந்தது. சில வரன்களுக்கு குழந்தையும் இருந்தது. ஜமீலா தன் அம்மாவிடம் விசயத்தைச் சொன்னாள். அவருக்கு அது கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தன் மதத்திலேயே வேறு ஒருவனைக் கட்டிகொண்டாலும் இது ஒரு உறுத்தலான விசயமாகவே இருக்கும் என்பதையும் ஜமீலாஎடுத்துச் சொன்னாள். இப்படிச் செய்ய வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டார். தாங்களே வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைப்பதாகவும் சொன்னார். மதன் தன்னைப் பற்றிய எல்லா விசயமும் தெரிந்தும் தன்னைக் காதலிப்பதைச் சொன்னாள் ஜமீலா. 

இனியும் மகள் மனதை மாற்றுவது கஷ்டம் என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் தாய், ஆதரவும் தர முடியாமல் எதிர்ப்பும் சொல்ல முடியாமல் தவித்தார். 

மதன் ஜமீலாவிடம் தன் அப்பாவின் கோபத்தைச் சொன்னான். ஜமீலாவும் தன் வீட்டு எதிர்ப்பைச் சொன்னாள். ‘இனி யாரின் ஆதரவும் தேவையில்லை. நம்மை நாம் பார்த்துக் கொள்வோம்’ என்று முடிவு செய்தார்கள். அலுவலக நண்பர்களிடம் விசயத்தைச் சொன்னார்கள்.

ரிஜிஸ்டர் மேரேஜுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் தங்கள் இல்வாழ்க்கையில் நுழைந்தார்கள் ஜமீலாவும் மதனும்.


நண்பர்கள் சூழ மணமாலையுடன் நின்றபோது தான் மதனுக்கு என் ஞாபகம் வந்தது. ‘செங்கோவியும் இங்க இருந்திருக்கலாம்..எங்க போனான்..என்ன செய்றான்னே தெரியலையே..அடுத்து அவனைத் தேடிப் பிடிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான்.


எனது வருகை அவனது வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போடப்போவது அவனுக்குத் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணிற்கும் தெரியவில்லை.


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...

  ReplyDelete
 2. மன்மத லீலை இன்னைக்கு தமிழ்மனத்தோட களம் இறங்கியிருக்கு....

  ReplyDelete
 3. வணக்கம் மன்மதன்,
  அரபுக் கன்னிகளின் இன்முகன்
  அவர்களே!

  ReplyDelete
 4. நீங்க ஏன் அவர்கள் வாழ்க்கைகுள்ளே போனிங்க... சின்னஞ்சிறுசு சந்தோசமா இருக்கட்டுமே...

  ReplyDelete
 5. நிரூபன் said...
  வணக்கம் மன்மதன்,
  அரபுக் கன்னிகளின் இன்முகன்
  அவர்களே>>>>>

  ஆகா.... நிருபனின் வரவேற்பு அபாரம்...

  ReplyDelete
 6. @தமிழ்வாசி - Prakash //திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...// ஆனாலும் எனக்குப் பிடிச்சது மெதுவடை தான்.

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash //மன்மத லீலை இன்னைக்கு தமிழ்மனத்தோட களம் இறங்கியிருக்கு....// பின்னே தமன்னா மணத்தோடயா களம் இறங்கும்?

  ReplyDelete
 8. ஆனால் இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண் தனியே வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அதை எதிர்கொள்ளும் தைரியமும் அவளிடம் இல்லை. //

  பாஸ், சான்ஸே இல்லை,
  ஒரு கை தேர்ந்த நாவல் எழுதுவதற்குரிய பண்புகள், இலக்கியத் தொகுப்புக்கள் அனைத்தும் உங்களிடம் நிறைந்திருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடர் அமைகிறது பாஸ்.

  ReplyDelete
 9. @நிரூபன் //வணக்கம் மன்மதன்,
  அரபுக் கன்னிகளின் இன்முகன்
  அவர்களே!// யோவ், இலவச ’கட்’ கன்ஃபார்ம்!!

  ReplyDelete
 10. மன்மத லீலைகள் தொடரைச் செங்கோவி அவர்கள் நூலுருவில் வெளியிட வேண்டும்,
  இன்றைய கால கட்டத்தில் பல்கலைக் கழக கல்வியினைப் புறந்தள்ளி, பிரைவேட் தொழில் நுட்ப நிலையங்களை நாடிச் செல்லும் இளைஞர்கள் பல்கலைக் கழகத்திற்கும் வருவதற்கு இக் கதை எதிர்காலத்தில் தூண்டு கோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 11. @நிரூபன் //ஒரு கை தேர்ந்த நாவல் எழுதுவதற்குரிய பண்புகள், இலக்கியத் தொகுப்புக்கள் அனைத்தும் உங்களிடம் நிறைந்திருக்கின்றன // எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க..நானும் ரவுடி தான்..நானும் ரவுடி தான்.

  ReplyDelete
 12. @நிரூபன் //மன்மத லீலைகள் தொடரைச் செங்கோவி அவர்கள் நூலுருவில் வெளியிட வேண்டும்,// இன்னும் கொஞ்சம் செப்பனிட்டு, இது வெளிவரும் நிரூ.

  ReplyDelete
 13. எனது வருகை அவனது வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போடப்போவது அவனுக்குத் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணிற்கும் தெரியவில்லை.//

  இங்கே அடுத்த திடீர் திருப்பத்தைக் கதாசிரியர் முன் வைக்கிறார். அற்புதமான கல்லூரி வாழ்வினை மீண்டும் கண் முன்னே கொண்டு வரும் வகையில் கதையினை நகர்த்துகிறார்.

  இங்கே செங்கோவியின் வருகையில் பல சஸ்பென்ஸ்கள் மறைந்திருக்கிறது.

  இந்த மர்மங்கள் அடுத்த பாகத்தில் துலங்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. கதை ரொம்ப விறுவிறுப்பா போயிட்டுருக்கு, அடுத்த பாகம் எப்போ வரும்னு காத்திட்டுருக்கேன்,,

  ReplyDelete
 15. @நிரூபன் //இங்கே செங்கோவியின் வருகையில் பல சஸ்பென்ஸ்கள் மறைந்திருக்கிறது. //ஓவரா பில்டப் கொடுக்காதீங்க நிரூ..எனக்கே பயமா இருக்கு.

  ReplyDelete
 16. @Heart Rider //அடுத்த பாகம் எப்போ வரும்னு காத்திட்டுருக்கேன்,,// நன்றி இதய ஓட்டி(?).

  ReplyDelete
 17. மாப்ள நால்லாத்தான்யா ட்விஸ்ட் வைக்கிறே!

  ReplyDelete
 18. அப்ப அடுத்த பாகத்தில் ஹீரோ எண்ட்ரி!

  ReplyDelete
 19. //செங்கோவி said... [Reply]
  @தமிழ்வாசி - Prakash //திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...
  >>>
  ஆனாலும் எனக்குப் பிடிச்சது மெதுவடை தான்.//
  நெல்லை பதிவர் சந்திப்பிற்கு வந்து சென்றதிலிருந்து, தமிழ்வாசிட்ட ஒரே அல்வா மணம்தான்!

  ReplyDelete
 20. @விக்கியுலகம் ட்விஸ்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் விக்கி.

  ReplyDelete
 21. @FOOD //நெல்லை பதிவர் சந்திப்பிற்கு வந்து சென்றதிலிருந்து, தமிழ்வாசிட்ட ஒரே அல்வா மணம்தான்// நம்மூரு அல்வாவை மறக்க முடியுமா..

  ReplyDelete
 22. ரொம்ப நல்லா போகுது... தொடருங்கள்.

  ReplyDelete
 23. @சே.குமார் //ரொம்ப நல்லா போகுது... தொடருங்கள்.// நன்றி குமார்..தொடர்கிறேன்.

  ReplyDelete
 24. இந்த டைட்டிலை உள்லளேவைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் புது டைட்டில் வைப்பது நல்லது.. பலர் ஏற்கனவே படிச்ச்சதோ என யோசிக்க வாய்ப்பு உள்ளது

  ReplyDelete
 25. @சி.பி.செந்தில்குமார் நீங்கள் சொல்வதையே நானும் யோசித்தேன். ஆனால் ஒரு தொடர்கதைக்கு டெய்லி வேறுவேறு தலைப்பு என்றால் புதிதாக வருபவர் ஏமாறலாம். எனவே விட்டு விட்டேன்..வருகிற கூட்டம் போதும்.நன்றி சிபி.

  ReplyDelete
 26. சஸ்பென்ஸ் எப்ப உடையும்?

  ReplyDelete
 27. @இரவு வானம் //correcta first night pakkama porathu :-)// செம நக்கலுய்யா உமக்கு.

  ReplyDelete
 28. @middleclassmadhavi //சஸ்பென்ஸ் எப்ப உடையும்?// சீக்கிரம் உடைக்கிறேன்.

  ReplyDelete
 29. //எனது வருகை அவனது வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போடப்போவது அவனுக்குத் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை.//
  எதிர்பார்ப்பு எகிறுதே! அண்ணன் பெரிய வில்லன் போலிருக்கே! :-)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.