Saturday, July 9, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_22

தனக்காக ஒரு பெண், தன் மீது மட்டுமே அன்பு செலுத்த ஒரு பெண் என்பது மதனுக்கு அளப்பரிய சந்தோசத்தை அளித்தது. பல வருடப் போராட்டம், பல பல்புகள் வாங்கியபின் கிடைத்த ஜமீலா ஒரு பொக்கிஷம் என்பதை மதன் உணர்ந்தான். எத்தனையோ நண்பர்கள் இருந்தும் விலகாத தனிமை, இப்போது அவனை விட்டு நீங்கியது.

மோசமான கடந்தகாலத்தைத் தாண்டி வந்த ஜமீலாவிற்கு, இந்த வாழ்க்கை மிகப்பெரிய சந்தோசத்தை அளித்தது. மதனை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாள். அவனுக்கு என்ன பிடிக்குமோ அதையே உண்டாள், உடுத்தினாள், செய்தாள்.

திருமணத்தின்போது சந்தோசமாக வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்கள், சில வருடங்களில் தங்கள் மலர்ச்சியைத் தொலைக்கின்றார்கள். அதற்குப் பெரும்பாலும் காரணமாய் இருப்பது சொந்தங்களின் தொல்லையே. காலப்போக்கில் வெள்ளை உள்ளத்துடன் புது வாழ்வைத் துவக்கிய பெண்ணையும் தங்களைப் போல் மாற்றுகின்ற வல்லமை இருவீட்டுப் பெண்களுக்கும் உண்டு. 

நமது கலாச்சாரத்தின் பெருமைக்குரிய விஷயமான குடும்ப அமைப்பில் உள்ள மிகப்பெரிய குறைபாடு நம்மிடம் இருக்கும் தமிழ்நண்டு மனப்பான்மை. தன்னைவிட நல்ல வாழ்வு வாழ்வோரைச் சகித்துக்கொள்ள சொந்தங்களால் முடிவதில்லை. உள்ளே புகுந்து குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கவும், கெடுக்கவும் அவர்கள் தயங்குவதும் இல்லை.

மதனும் ஜமீலாவும் சொந்தபந்தங்களை உதறிவிட்டு வாழ்வைத் தொடங்கியதால், வேறு யாராலும் அவர்களுக்கு தொந்தரவு என்பதே இல்லை என்றாகியது. தங்களைப் பற்றியே சிந்தித்தார்கள், தங்களுக்காகவே வாழ்ந்தார்கள். அடுத்து எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை பெற்றுக்கொள்வது, என்ன பெயர் வைக்கலாம், அவர்களை என்ன படிக்க வைக்கலாம்-என்று பல ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டினார்கள்.

மதன் தன் கல்லூரி நண்பர்களிடம் தான் நல்லதொரு துணையுடன் நலமாய் வாழ்வதைக் காட்ட விரும்பினான். பிரவீணா, ஜெனிஃபர் என தொடட்ந்து நண்பர்கள் முன் தோற்றுப் போனவனுக்கு, இறுதியாகத் தான் வென்றுவிட்ட செய்தியை உரக்கச் சொல்லத்தோன்றியது. தன் நண்பர்களைத் தேடத் துவங்கினான்.

பழனி சென்னையிலேயே ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்வதை அறிந்துகொண்டான். சிவா ஏதோவொரு ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதாகத் தகவல் கிடைத்தது. என்னைப் பற்றித் தான் எந்தச் செய்தியும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. 

பழனியை தன் வீட்டிற்கு அழைத்தான்.

“இவந்தான்மா பழனி. காலேஜ் மேட். ஹாஸ்டல்ல ரூம் மேட்” என்று அறிமுகப்படுத்தினான்.

”வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் ஜமீலா வணக்கம் சொன்னாள்.

அவனுக்காகவே சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. பிரியாணி செய்வதில் ஜமீலா எக்ஸ்பர்ட்டாக இருந்தாள். ஆளை மயக்கும் வாசத்துடன் பிரியாணி பரிமாறப்பட்டது.

“என்னடா இது..எல்லாரும் பிரியாணில கறி போடுவாங்க. நீங்க கறிமேல கொஞ்சம் பிரியாணி ரைஸ் தூவித் தர்றீங்க” என்று சொல்லியவாறு சந்தோசமாகச் சாப்பிட்டான் பழனி.

கிளம்பும்போது ஜமீலாவிடம் சொன்னான். ‘இவன் காலேஜ் டேஸ்ல பண்ண காரியத்தை எல்லாம் பார்த்துட்டு, இவன் எங்க உருப்படப் போறான்னு தான் நாங்க நினைச்சோம். டிகிரி முடிச்சதே பெரிய விசயம். இப்போ ஒரு நல்ல வேலைல. ஒரு குடும்பஸ்தனா அவனைப் பார்க்கும்போது சந்தோசமா இருக்கு. அவனை நல்லாப் பார்த்துக்கோங்க” என்றான்.

மதனும் தெரு வரை பழனியிடம் பேசியவாறே வந்தான்.


“பரவாயில்லைடா மதன்..நல்ல பொண்ணாத்தான் தெரியுது உன் வைய்ஃப். இனிமேலாவது ஒழுங்கா இரு”


“டேய், நீ இன்னும் பழைய மதனையே நினைச்சுகிட்டு இருக்கியா..அவளை நான் நல்லாக் கவனிச்சுக்கிறேண்டா. அவளைப் பேர் சொல்லிக்கூடக் கூப்பிடறதில்லை. அம்மான்னு தான் சொல்றேன். தெரியுமா?” என்றான் மதன்.


“சரிடா..நல்லா இருந்தாச் சந்தோசம் தான்”

“செங்கோவி இப்போ எங்கடா இருக்கான்?”

“அவனா..கோயம்புத்தூர்ல இருக்கிறதா கடைசியாப் பேசும்போது சொன்னான். அவன் நம்பர் இருக்கு. வேணும்னாப் பேசு”

”குடு..குடு” என்றவாறே நம்பரை வாங்கினான்.

எங்கள் காலேஜ் மதுரையில் இருந்தாலும், சென்னையின் அடையாளமான அந்த ஒத்தை வார்த்தை எங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பேச ஆரம்பிக்கும்போது பயபக்தியுடன் ஆத்தாவை நினைப்பது எங்கள் வழக்கம்.

மதனும்,  நான் ஃபோனை எடுத்ததும் அப்படியே ஆரம்பித்தான்.

“..........தா”

அப்போது நான் பதிவர் அல்ல. எனவே ஃபோனில் ஒருவர் கெட்டவார்த்தையில் திட்டுவது அதிர்ச்சியாக இருந்தது. 

“யாருங்க பேசுறீங்க?” என்றேன்.

 ...தா, நாந்தாண்டா மதன்.”

“டேய், எப்படிடா இருக்க. எத்தனை வருசமாச்சு”

”நல்லா இருக்கண்டா. இப்போ எங்க இருக்க?

“கோயம்புத்தூர்ல..ஆஃபீஸ்ல” என்றேன்.

”ஆஃபீஸ்லயா..ஹா..ஹா..அதான் ஆத்தா சொல்ல முடியலியா..நான் சொல்வனே.....தா..தா..தா..”

நான் என் பக்கத்தில் இருந்த மீராவைப் பார்த்தேன். “நான் கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்..டிராயிங்கை முடிச்சுட்டுக் கூப்பிடறேன். அப்புறம் வாங்க” என்றேன். அந்தப் பெண் கிளம்பியது.

“டேய், என்னடா சொன்னே..ஆஃபீஸ்ல இருந்தா சொல்ல முடியாதா? இப்போச் சொல்றேண்டா.....தா..தா..தா....தா..தா..தா....தா..தா..தா....தா..தா..தா....தா..தா..தா.” சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால், என் சேரின் பின்னே பேயறைந்தாற்போல் மீரா நின்றுகொண்டிருந்தாள்.

மீரா மிகவும் நல்ல பெண்.(பின்னூட்டர்கள் தயவு செய்து அதை விட்டு விடவும்). கொஞ்சம் விளையாட்டுப் புத்தி. நான் என்ன பேசுகிறேன் என்று கவனிக்க முடிவு செய்து, பின்னால் நின்றிருக்கிறாள்.

நான் இதற்கு எப்படி ரியாக்சன் கொடுப்பது என்று தெரியாமல் ப்ளாங்க்காக முழித்தேன்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

 1. as usual... interesting... waiting for the next ...

  ReplyDelete
 2. @வினையூக்கி நன்றி செல்வா..நாளை சந்திப்போம்.

  ReplyDelete
 3. @தமிழ்வாசி - Prakash வடையிழந்த தமிழ்வாசிக்கு அனுதாபங்கள்.

  ReplyDelete
 4. I missed some intermediate parts...Will read today...

  ReplyDelete
 5. @டக்கால்டி அடிக்கடி காணாமப் போயிடறீங்களே டகால்ட்டி..ஆணி அதிகமா?

  ReplyDelete
 6. வணக்கம் சகோ,

  //“என்னடா இது..எல்லாரும் பிரியாணில கறி போடுவாங்க. நீங்க கறிமேல கொஞ்சம் பிரியாணி ரைஸ் தூவித் தர்றீங்க” என்று சொல்லியவாறு சந்தோசமாகச் சாப்பிட்டான் பழனி.//

  ஹா...ஹா...மண் வாசனை, வட்டார மொழி வழக்கு, அத்தோடு எந்த இடத்திலும் தொய்ந்து போகாதபடி கதைய்னை ந்கர்த்திச் செல்லும் வல்லமை இவை தான் இந்தத் தொடரின் மெருகேற்றத்திற்கு காரணங்களாக இருக்கின்றன என நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. // நிரூபன் said...
  வணக்கம் சகோ,// வணக்கம் நிரூ.

  ReplyDelete
 8. இந்தப் பாகத்தில் கதையின் திருப்பு முனைக்கு காரணமாக,
  மீரா எனும் புதிய கதாபாத்திரம் அமைந்து கொள்கிறது.

  அடுத்த பாகத்தினைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. //ஹா...ஹா...மண் வாசனை, வட்டார மொழி வழக்கு, அத்தோடு எந்த இடத்திலும் தொய்ந்து போகாதபடி கதைய்னை ந்கர்த்திச் செல்லும் வல்லமை இவை தான் இந்தத் தொடரின் மெருகேற்றத்திற்கு காரணங்களாக இருக்கின்றன என நினைக்கிறேன்.// தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நிரூ.

  ReplyDelete
 10. // நிரூபன் said...
  இந்தப் பாகத்தில் கதையின் திருப்பு முனைக்கு காரணமாக,
  மீரா எனும் புதிய கதாபாத்திரம் அமைந்து கொள்கிறது.// அது பாவம்யா..சும்மா சைடு கேரக்டர்யா.

  ReplyDelete
 11. "ஆத்தா" மேட்டர் சூப்பரு ஹிஹி!

  ReplyDelete
 12. மீரா-மீரா-மீரா

  நான் விடலையே...........

  ReplyDelete
 13. மிகச் சிறப்பாகப் போகிறது. எளிய, இயல்பான நடையில் அருமையாக எழுதுகிறீர்கள்!

  ReplyDelete
 14. நல்ல தொடராக செல்கிறது.. கொண்டு செல்லும் விதம் அருமை
  என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

  ReplyDelete
 15. அய்யோ ஆத்தாவா???? மீராவா???????? ஜமீலாவா???????????மதனா??????????செங்கோவியா????????????

  ReplyDelete
 16. //விக்கியுலகம் said...
  "ஆத்தா" மேட்டர் சூப்பரு ஹிஹி! // நல்ல ரசனை உங்களுக்கு!

  ReplyDelete
 17. //THOPPITHOPPI said...
  மீரா-மீரா-மீரா

  நான் விடலையே...........// அய்யோ, உங்களை மாதிரி புரட்சியாளர்கள்லாம் இப்படிப் பண்ணலாமா தொப்பி?

  ReplyDelete
 18. //சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணனா? கண்ணனா?ஹி ஹி // ரைட்டு, இன்னைக்கு பங்குக்கு பத்த வச்சாச்சா?

  ReplyDelete
 19. //சென்னை பித்தன் said...
  மிகச் சிறப்பாகப் போகிறது. எளிய, இயல்பான நடையில் அருமையாக எழுதுகிறீர்கள்! // நன்றி ஐயா, தொடர்ந்து படிப்பதற்கு.

  ReplyDelete
 20. // குணசேகரன்... said...
  நல்ல தொடராக செல்கிறது.. கொண்டு செல்லும் விதம் அருமை
  என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க // நன்றி..வர்றேன் பாஸ்.

  ReplyDelete
 21. // இரவு வானம் said...
  அய்யோ ஆத்தாவா???? மீராவா???????? ஜமீலாவா???????????மதனா??????????செங்கோவியா????????????// ஆமா, இவரு பச்சப்புள்ளை..பதறுதாரு..ஏன்யா இப்படி?

  ReplyDelete
 22. ஆத்தா! மீரா அழகா இருக்குமா?

  ReplyDelete
 23. மிக இயல்பான எழுத்து நடை,இனியும் எப்போது வரும் என்று எங்களைக் காத்திருக்கச் செய்யும்.

  ReplyDelete
 24. மிகச் சிறப்பாகப் போகிறது .. அருமை...
  என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க...

  ReplyDelete
 25. அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்! :-)

  ReplyDelete
 26. //தமிழ்வாசி - Prakash said...
  ஆத்தா! மீரா அழகா இருக்குமா?//

  யோவ், அதான் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல..அது அழகா இருந்தா என்ன..இல்லேன்னா என்ன?

  ReplyDelete
 27. //FOOD said...
  மிக இயல்பான எழுத்து நடை,இனியும் எப்போது வரும் என்று எங்களைக் காத்திருக்கச் செய்யும்.// நன்றி சார்..இன்று இரவே வரும்.

  ReplyDelete
 28. //Reverie said...
  மிகச் சிறப்பாகப் போகிறது .. அருமை...
  என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க...// அருமைன்னு வேற சொல்லீட்டீங்க..வராம இருப்பனா?

  ReplyDelete
 29. //ஜீ... said...
  அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்! :-)// ஜீ ஏன் சுரத்தே இல்லாம கமெண்ட் போடுதாரு?

  ReplyDelete
 30. sengovi ennoda blog ethulayum update akala, enna panrathunnu theriyuma ungalukku

  ReplyDelete
 31. நண்பா.. இந்த கிழிந்த டைரி கான்செப்ட் சூப்பர் ..

  ReplyDelete
 32. @இரவு வானம் மாப்பு, இப்போ கொஞ்ச நேரம் ப்லாக்கர் செர்வர் ப்ராப்ளம்னு ஓப்பன் ஆகலை. இப்போ ஆகுது. அதனால இருக்குமோ என்னவோ? கொஞ்சநேரம் வெயிட் பண்ணிப் பாருங்க.

  எனக்கு ரொம்ப டெக்னிகலாத் தெரியாதுய்யா..

  ஒருவேளை நீங்க ஷகீலா பத்தி பதிவு போட்டதால ஓவர்லோடு ஆயிடுச்சோ? நீங்களும் இப்படிப் போட்டா ப்லாக்கர் தாங்குமாய்யா?

  ReplyDelete
 33. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  நண்பா.. இந்த கிழிந்த டைரி கான்செப்ட் சூப்பர் //

  யோவ் வாத்தி, இதை 22 பகுதி எழுதுன அப்புறம்தான் கண்டுபிடிச்சீரா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.