Sunday, July 10, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_23

எந்தவொரு கெட்டவார்த்தையும் பாவகாரியமும் அறியாத பாலகன் என்று நான் கஷ்டப்பட்டு மெயிண்டய்ன் செய்த இமேஜ் பணால் ஆனதுடன், மதனுடனான முதல் கால் முடிவுற்றது.

இந்த மாதிரி விஷயங்களில் விளக்கம் சொல்வதை விட, பேக்கு முழி முழித்துவிட்டு, விட்டுவிடுதல் நலம் என்பதால் அப்படியே செய்தேன்.

அந்தப் பெண் ஆஃபீஸில் யாரிடமும் கம்ப்ளைண்ட் செய்வதாலும் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் தவறு அந்தப் பெண்ணுடையது, மேலும் அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்திருந்தேன். எனவே நடவடிக்கை என்று ஒன்றும் எடுக்கமுடியாது.

எனது பாஸ் உடன் ரொம்ப முட்டிக்கொண்டதால், இனியும் இவங்கூட வேலை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அடுத்து வேறு வேலையும் கையில் இல்லை.

ஆனாலும் 'ப்ளாட்ஃபார்மில் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனேயொழிய இவனுக்கு வேலை செய்வதில்லை 'என்ற தீவிரமான முடிவுக்கு வந்திருந்தேன். அப்போது பேச்சிலர் என்பதால் வேலையை தூக்கி எறிவது பற்றி எந்தக் கவலையும் இல்லை.

அடுத்த சிலநாட்களில் ரிலீவ் ஆனபின், வேறுவேலை தேட ஆரம்பித்தேன். இரண்டு மாத அலைச்சலுக்குப் பின் சென்னையில் ஒரு வேலை கிடைத்தது.

கோயம்புத்தூரை விட்டுச் செல்வது தான் வருத்தமாக இருந்தது. கோவையின் முதல் சிறப்பு அந்த பாசமிக்க மக்கள் தான். நான் சென்னையை விட்டு அலறி அடித்து ஓடி வந்து, கோவையில் இறங்கியபோது கையில் 3 பெட்டியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றேன். ஒரு அரசு பஸ் வந்து நின்றது. நான் ஒரு பெட்டியை படியில் வைத்ததும் கண்டக்டர் அதை வாங்கி உள்ளே வைத்தார். பின் அவரும் இறங்கி என்னுடைய இன்னொரு பெட்டியை எடுத்துக்கொண்டு, “ஏனுங், ஏறுங்க போலாம்” என்றார்.

ஒரு ஊரில் மிகவும் மோசமான டென்சன் பார்ட்டிகள் யாரென்றால், இந்த கண்டக்டர்கள் தான். எனது அனுபவத்தில் நான் கோவை வரும்வரை நல்ல கண்டக்டர்களையே பார்த்ததில்லை. கோவையில் கண்டக்டரே இப்படி என்றால், மக்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்று புரிந்து போயிற்று.

என் சொந்த ஊரைவிட்டு, வேறு எங்காவது செட்டில் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நான் கோயம்புத்தூரையே தேர்ந்தெடுப்பேன். நான் வேலை பார்த்தது நார்த்-இண்டியன் ஹிந்திவாலாக்களிடம் என்பதாலேயேம் முட்டிக்கொண்டது.

கோவையின் ஒரே ஒரு குறை சம்பளம். 2000 ரூபாயே அதிகம் என்று எண்ணும் முதலாளிகளே அங்கு அதிகம். இப்போதும் பெரிய மாற்றம் இல்லைதான்.

மதனிடம் ஃபோன் செய்து சென்னை வருவதைச் சொன்னேன். அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அப்போது தான் அவனுக்கு அந்த யோசனை வந்தது.

”எப்படியோ சென்னை தான்னு ஆயிடுச்சு. அப்போ நீ ஏன் என் கம்பெனிலயே சேரக்கூடாது? நீ முதல்ல உன் ரெசூமை எனக்கு அனுப்பு” என்றான்.

அவன் அப்பொது பைப்பிங் எஞ்சினியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் முக்கியமான துறை அது. அதில் எப்படி நுழைவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது, மதனால் அந்த வாய்ப்பு வந்தது. 

அது என் வாழ்க்கையையே மாற்றியது. நண்பர்களின் அருமையை நான் உணர்ந்த நேரம் அது.

மறுநாள் மதன் ஃபோன் செய்தான். “..தா, கம்பெனில பேசிட்டேன். ஓகேன்னு சொல்லிட்டாங்க. நீ அடுத்த வாரம் மண்டே இங்க வந்திடு.” என்றான். பழனி தங்க இடம் கொடுக்க, மீண்டும் சென்னைக்கு பயணமானேன்.


திங்கட்கிழமை மதனின் ஆஃபீஸிலேயே அவனை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தேன்.

“என்னடா இப்படி பன்னி மாதிரி ஊதிட்டே?” என்றேன்.

“உஷ்..இங்க நாந்தான் சீனியர் எஞ்சினியர். மத்தவங்க முன்னாடி கேவலமாப் பேசாத. வா, என் சீட்டுக்குப் போகலாம்” என்று உள்ளே அழைத்த்ச் சென்றான்.

என்னை அவன் சீட்டில் உட்கார வைத்துவிட்டு, கம்பெனி டைரக்டரைப் பார்க்கச் சென்றான். திரும்பி வந்து “மாப்ளே, டைரக்டரு உன்னை இண்டர்வியூ பண்ணனுங்காரு. கூப்பிடுவாங்க. ரெடியா இரு” என்று குண்டைப் போட்டன்.

“டேய், வேலை ரெடியா இருக்குன்னுதானே சொன்னே? இப்போ இண்டர்வியூங்கிறே?” என்றேன்.

“அவர் கேட்குறது தெரிஞ்சா பதில் சொல்லு..ரிசல்ட் என்ன ஆனாலும் நான் பேசிக்கிறேன். கவலைப்படாதே” என்றான்.

எப்படிக் கவலைப்படாமல் இருப்பது? எனக்கு சென்னையில் வேலை கொடுத்த கம்பெனிக்கு சின்சியராக ஃபோன் செய்து “ஐயா, எனக்கு வேறு வேலை கிடைத்துவிட்ட காரணத்தால், என்னால் ஜாயிண்ட் செய்ய முடியாது” என்று சொல்லி இருந்தேன். இப்போது நம்ம நிலைமை ’உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா-ன்னு ஆயிடுமோனு பயம் வந்துவிட்டது.

“அப்புறம் முக்கியமான விஷயம்..சேலரி ரொம்ப டிமாண்ட் பண்ணாதே. என்ன தர்றாரோ, அதை ஒத்துக்கோ. நீ முதல்ல வேலை கத்துக்கணும். அது தான் முக்கியம். இங்க எனக்கே பதினைஞ்சாயிரம் தான். அதனால உனக்கு மேக்ஸிமம் பத்தாயிரம். ஏழாயிரம், எட்டாயிரம்னாலும் ஒத்துக்கோ” என்று அட்வைஸ் செய்தான் மதன்.

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். நம்மிடம் உள்ள நல்ல பழக்கம் ஒரு விஷயம் தெரியாது என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது.இண்டர்வியூவில் அவர் கேள்வி கேட்கக் கேட்க பெரும்பாலும் நான் ஒத்துக்கொண்டே வந்தேன்.

கடைசியில் ’சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்காதய்யா’என்பதை “எனக்கு பைப்பிங் பத்தி ஒன்னும் தெரியாது. சொல்லிக் கொடுத்தா கத்துக்குவேன்”- என்று டீசண்டாகச் சொன்னேன்.

“சரி, சேலரி என்ன எதிர்பார்க்குறீங்க?” என்றார் டைரக்டர்.

நண்பனின் அட்வைஸ் ஞாபகத்தில் நிற்க, “கம்பெனி ஸ்டேண்டர்டு என்னவோ அதுப்படி கொடுங்க சார். போதும்” என்றேன்.

“ஓகே.உங்க எக்ஸ்பீரியன்சுக்கு நீங்க எதிர்பார்க்குறதை எங்களால கொடுக்க முடியாது. இப்போதைக்கு பதினைஞ்சாயிரம் கொடுக்கிறேன். ஒரு வருசம் கழிச்சு உங்களை பெர்மனண்ட் ஆக்கும்போது, சேலரி இன்க்ரீஸ் பண்ணுறேன்”

பதினைஞ்சாயிரமா என்று அதிர்ச்சியாகி உட்கார்ந்திருந்தேன்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

 1. thirunelveli alvaadaa.... madurai manakkum mallida....

  ReplyDelete
 2. nanba.... leelai ezhutharthukku pathilaa unga puraanam paadringale.... side actor'kku thaniyaa oru pathivaa?

  ReplyDelete
 3. covai sallery visayathil innamum kanjaththanam thaan.

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash //side actor'kku thaniyaa oru pathivaa?// சைடு ஆக்டர் மீராவைப் பத்தி ஒரு பதிவு எழுதுனா இப்படிக் கேட்பீங்களாய்யா..ஆம்பிளைன்னா இளக்காரமா?

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash //covai sallery visayathil innamum kanjaththanam thaan.// அங்கு ஐ.டி.பார்க் வந்திடுச்சா? வந்தும் இவங்க மாறலியா?

  ReplyDelete
 6. 'ப்ளாட்ஃபார்மில் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனேயொழிய இவனுக்கு வேலை செய்வதில்லை 'என்ற தீவிரமான முடிவுக்கு வந்திருந்தேன். ////
  எப்படி மாப்ள இப்படியெல்லாம்..

  ReplyDelete
 7. //கோவையின் முதல் சிறப்பு அந்த பாசமிக்க மக்கள் தான்.//
  சந்தேகமின்றி!

  ReplyDelete
 8. கோவை-சென்னை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. ஹிந்தி வாலாக்களிடம் (கொழும்பில்) வேலை செய்து, வேலையை உதறிய அனுபவம் எனக்கும் உண்டு!

  ReplyDelete
 10. //நம்மிடம் உள்ள நல்ல பழக்கம் ஒரு விஷயம் தெரியாது என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது//
  நமக்கும்தான்! அண்ணேன்டா! :-)

  ReplyDelete
 11. தொடர்ந்து அசந்துங்கன்னோவ்....!!!!

  ReplyDelete
 12. //கோவையின் முதல் சிறப்பு அந்த பாசமிக்க மக்கள் தான். //
  அந்த மாவட்டமே அப்படித்தான்! இதைத் திருப்பூரில் உணர்ந்தி ருக்கிறேன்.
  தொடருங்கள்!காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 13. தொடர்ந்து அசந்துங்க.

  ReplyDelete
 14. சொக்கா 15 ஆயிரமா??

  கூப்டு போன சீனியர்(நண்பனுக்கே) ஆப்பா??

  ம் கலக்குரிங்க பாஸ்;;

  எனக்கும் கோவைல செட்டில் ஆகணும்னு ஆசை இருந்தது.. ஆனா இப்போ உள்ள சூல்நிலையில் வாய்ப்பே இல்ல தல...

  ReplyDelete
 15. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பார்ட் போடுங்க பாஸ்... டெய்லி வெயிட் பண்ண கஷ்டமா இருக்கு... :-)

  ReplyDelete
 16. பய்யனுக்கு ஊர் செட் ஆயிருச்சா?

  பொடி காத்து அடிக்கும்போது ஜாக்கிரதையா பாத்துக்கொங்க...

  ReplyDelete
 17. @!* வேடந்தாங்கல் - கருன் *! //'ப்ளாட்ஃபார்மில் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனேயொழிய இவனுக்கு வேலை செய்வதில்லை 'என்ற தீவிரமான முடிவுக்கு வந்திருந்தேன். ////
  எப்படி மாப்ள இப்படியெல்லாம்.. // வாலிப வயசுல அப்படித் தான்.

  ReplyDelete
 18. // FOOD said...
  கோவை-சென்னை வாழ்த்துக்கள்.// நன்றி சார்.

  ReplyDelete
 19. //ஜீ... said...
  ஹிந்தி வாலாக்களிடம் (கொழும்பில்) வேலை செய்து, வேலையை உதறிய அனுபவம் எனக்கும் உண்டு! // ஆமா ஜீ, ஏனோ தெரியலை..அவங்களுக்கும் நமக்கும் ஒத்துக்கறதே இல்லை.

  ReplyDelete
 20. // MANO நாஞ்சில் மனோ said...
  தொடர்ந்து அசந்துங்கன்னோவ்...// நீங்களும் தொடர்ந்து படிங்கண்ணோவ்.

  ReplyDelete
 21. //சென்னை பித்தன் said...
  //கோவையின் முதல் சிறப்பு அந்த பாசமிக்க மக்கள் தான். //
  அந்த மாவட்டமே அப்படித்தான்! இதைத் திருப்பூரில் உணர்ந்தி ருக்கிறேன்.// உண்மை தான் சார்..கொங்கு மண்டலத்தின் சிறப்பு அது.
  தொடருங்கள்!காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 22. //சே.குமார் said...
  தொடர்ந்து அசந்துங்க.// அசத்தறேன் குமார்.

  ReplyDelete
 23. // RK நண்பன்.. said...
  ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பார்ட் போடுங்க பாஸ்... டெய்லி வெயிட் பண்ண கஷ்டமா இருக்கு... // சோம்பேறித்தனத்தைக் குறைச்சு டைப் பண்ணனும்..முயற்சி பண்றேன்.

  ReplyDelete
 24. RK நண்பன்.. said...
  //பய்யனுக்கு ஊர் செட் ஆயிருச்சா?

  பொடி காத்து அடிக்கும்போது ஜாக்கிரதையா பாத்துக்கொங்க...// ஆமா நண்பரே..அது ஒன்னு தான் பிரச்சினையா இருக்கு..அந்த நேரத்துல வெளில கூட்டிப்போறதில்லை..இந்த வருசம் அதிகமா இருக்கே...நம்ம வந்ததாலயோ..இது பத்தி பதிவு ஒன்னு போடணும்.

  ReplyDelete
 25. தொடர் நன்றாக போகிறது...அடுத்து என்ன???

  ReplyDelete
 26. @செங்கோவி

  இருக்கும் இருக்கும் பொடியன் வந்ததை பார்த்து பொடி காத்து குஷி ஆயிருச்சோ என்னவோ?!!

  போடுங்க எதிர்பார்க்கிறேன்...

  இங்க இன்னைக்கு பொடி காத்து பயங்கரமா இருக்கு.... :-(

  ReplyDelete
 27. செங்கோவி said... [Reply]
  @தமிழ்வாசி - Prakash //side actor'kku thaniyaa oru pathivaa?// சைடு ஆக்டர் மீராவைப் பத்தி ஒரு பதிவு எழுதுனா இப்படிக் கேட்பீங்களாய்யா..ஆம்பிளைன்னா இளக்காரமா?>>>>

  நீங்க மீரா'வ பற்றி எழுதினா வரவேற்போம்... ஆமா, லீலையில ஒரு சைடு லீலை வந்தா செம ஜாலி தானே....

  ReplyDelete
 28. வணக்கம் லீலைகளின் மன்மதரே,

  ReplyDelete
 29. நாம் ஒன்றை இழப்பதன் ஊடாக இன்னொன்றைச் சிறப்பாகப் பெற்றுக் கொள்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களின் கோவையிலிருந்து சென்னைக்கு இடம் மாறிய,
  சம்பவம் அமைகிறது.

  உங்களின் நண்பன் மதனின் உதவியினைப் படிக்கையில் புல்லரிக்கிறது பாஸ்.

  ReplyDelete
 30. ஆப்பிசில் இருந்த பெண் ஒரு காட்சியில் மாத்திரம் வில்லியாகிட்டாளே.

  முடியலை பாஸ்.

  அவளைத் தூக்கனுமா, சொல்லுங்க...

  ஹி....ஹி...

  ReplyDelete
 31. //கடைசியில் ’சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்காதய்யா’என்பதை “எனக்கு பைப்பிங் பத்தி ஒன்னும் தெரியாது. சொல்லிக் கொடுத்தா கத்துக்குவேன்”- என்று டீசண்டாகச் சொன்னேன்.
  //
  ஹிஹிஹி இதில என்ன டீசெந்து வேண்டி கிடக்கு பாஸ்??ஹிஹி ஓஹோ உண்மைய சொல்லிட்டீங்களோ ???

  ReplyDelete
 32. @நிரூபன் //அவளைத் தூக்கனுமா, சொல்லுங்க...// வேணாம் நிரூ..ஏற்கனவே தூக்கிட்டாங்க.

  ReplyDelete
 33. @செங்கோவி தூக்கினது யாரு??? ;)

  ReplyDelete
 34. @Urbansaint யாரோ ஒரு ஃபாரின் மாப்பிள்ளை தான்..மீரா மேல் காட்டிய அக்கறைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.