Saturday, July 16, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_24

“ஓகே.உங்க எக்ஸ்பீரியன்சுக்கு நீங்க எதிர்பார்க்குறதை எங்களால கொடுக்க முடியாது. இப்போதைக்கு பதினைஞ்சாயிரம் கொடுக்கிறேன். ஒரு வருசம் கழிச்சு உங்களை பெர்மனண்ட் ஆக்கும்போது, சேலரி இன்க்ரீஸ் பண்ணுறேன்”

பதினைஞ்சாயிரமா என்று அதிர்ச்சியாகி உட்கார்ந்திருந்தேன்.

இண்டர்வியூ முடிந்து வெளியே வந்ததும் மதனிடம் ஓடினேன்.

“மாப்ளே, செலக்ட் பண்ணீட்டாருடா” என்றேன்.

“நாந்தான் அப்பவே சொன்னேன்ல. நீ தான் பயந்துட்ட”

“ஆமாண்டா..அப்புறம் சேலரி எவ்ளோ தெரியுமா? பதினைஞ்சாயிரம்” என்று 32 பல்லும் தெரிய சிரித்தபடியே கூறினேன்.

“பத்..பதினைஞ்சாயிரமா? என்னடா சொல்றே?”
“ஆமாண்டா..அது பெரிய ஜோக்கு..நீ நல்லவேளை ஒன்னும் கேட்க வேண்டாம்னு சொன்னே. இல்லேன்னா நானும் கேணத்தனமா எட்டாயிரம் கொடுங்கன்னு கேட்டிருப்பேன்.” 
“ஓ..பதினைஞ்சாயிரம் தர்றேன்னு சொல்லிட்டாரா?”
“ஆமாண்டா..அவரு நல்லவரா கேணையராடா?”

“ம்..உனக்கு வேலை குடுத்தா நீ இதுவும் கேட்பே..இன்னமும் கேட்பே. உனக்கு பைப்பிங்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லேன்னு சொன்னல்ல?”
“ஆமாடா.”
“அப்ப்டியுமா பதினைஞ்சாயிரம்னு சொன்னாரு? இங்க எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் எனக்கே அவ்ளோ தானடா”
“அதுக்கு நான் என்னடா செய்ய? சரி, ட்ரீட்டுக்கு எங்க போலாம் சொல்லு”
“ட்ரீட்டா..சொல்றேன்..இப்போ லஞ்சுக்கு வீட்டுக்குப் போறேன். வீட்ல கேட்டுட்டுச் சொல்றேன்”.

‘கம்பெனியில் ரொம்ப நாளா இருக்குறவனுக்கு ஒன்னும் செய்யாம விடுறதும், புதுசா வந்தவனுக்கு அள்ளிக் குடுக்குறதும் நிறையக் கம்பெனிகள் பண்றது தான். ஆனால் இந்தக் கம்பெனியும் அப்படித் தானா?’ என பொறுமியவாறே வீடு போய்ச் சேர்ந்தான் மதன்.

“என்னங்க, உங்க ஃப்ரெண்டுக்கு வேலை என்னாச்சு? செலக்ட் பண்ணீட்டாங்களா?”
“ம்..பண்ணிட்டாங்க..பண்ணீட்டாங்க”

“அதை ஏன் இவ்வளவு கடுப்பாச் சொல்றீங்க? என்னாச்சு?”
“அவனுக்கு சம்பளம் எவ்ளோ ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா?”
“எவ்வளவு?”
“பதினைஞ்சாயிரம்”
“பதினைஞ்சா? உங்களுக்கே அவ்ளோதானே?”
“ம்..அதான் கடுப்பா இருக்கு. எத்தனை நாள் நைட்டெல்லாம் உட்கார்ந்து வேலை செஞ்சிருக்கேன். இவனை எனக்கு ஜூனியராத் தான் எடுத்திருக்காங்க. ஆனா, சம்பளம் மட்டும் எனக்கு ஈகுவலா?”
“ஓ..சரி, அதுக்கு ஏன் கடுப்பாகுறீங்க? நம்ம ப்ளான் என்ன?”
மதன் பேசாமல் இருந்தான். ஜமீலா தொடர்ந்தாள்.
“சீக்கிரம் யு.கே.வுக்கு விசா வாங்கிட்டு, ஃபாரின்ல செட்டில் ஆகுறது தானே நம்ம ப்ளான்? உங்களைக் கம்பெனி உடனே ரிலீவ் பண்ணாது. பிரச்சினை பண்ணும். அதனால உங்க அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள் இருந்தா, அவனைக் கைகாட்டிட்டு நாம கிளம்பிக்கலாம். எவனோ ஒருத்தன் வர்றதுக்கு உங்க ஃப்ரெண்டு வந்தா நல்லதுன்னு தானே வேற வேலை கிடைச்ச ஆளை இங்க கூட்டிட்டு வந்தீங்க. அப்புறம் என்ன?”

”இல்லைம்மா..காலேஜ்ல நான் நல்லாப் படிக்கிற பையன் இல்லே. இவன்லாம் மாங்கு மாங்குன்னு படிப்பான். ஆனா என்ன பிரயோஜனம்? இன்னைக்கு அவனுக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு நான் இருக்கேன், அதுவும் பைப்பிங்ல. இதெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் தெரியணும்னு தான் அவனை இங்க வரவைச்சேன். நான் பழைய மதன் இல்லேன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். ஆனா இப்போ இவனுக்கும் என் சேலரின்னா எப்படி? இவனே என்னை மதிக்க மாட்டானே?”
“நீங்க தானே சொல்லி இருக்கீங்க? செங்கோவிக்கு யாரும் இல்லே, பாவம். ரொம்பக் கஷ்டம்னு. இல்லாதவங்களுக்கு உதவி செய்றது நல்லது தானே? நாம இங்க இருக்கப் போறது மேக்ஸிமம் ஆறு மாசம் தானே? நம்மகிட்ட உதவி வாங்குனவங்க, நம்மை விட நல்லா இருந்தா, அது நமக்குப் பெருமை தாங்க.”

ஜமீலாவின் பேச்சு, மதனின் கோபத்தை ஆற்றியது. “நான் செங்கோவியை ஒன்னும் சொல்லலை. கம்பெனி ஏன் இப்படிப் பண்ணுதுன்னு தான் கோவம்..சரி, நைட்டு ட்ரீட்டுக்கு கூப்பிட்டான். நீயும் வா. போய்ட்டு வருவோம்”

ஜமீலாவும் புன்சிரிப்புடன் “சரி” என்றாள்.

மதன் உடனே அங்கிருந்து ஃபோன் செய்தான். நான் எடுக்காமல் கட் செய்தேன்.

“ஏன் கட் பண்றான்? சாப்பிட்டுக்கிட்டு இருப்பானோ?” என்று மதன் சொல்லும்போதே அவன் மொபைல் ரிங்கியது.

“ஹலோ..டேய், நீயா? ஏண்டா கட் பண்ணே?”
“மாப்ளே, கம்பெனில ஜாயிண்ட் பண்ணப்புறமும் நம்ம காசுல ஃபோன் பேசலாமா? அதான் கட் பண்ணிட்டு, ஆஃபீஸ் லேண்ட்லைன்ல இருந்து கூப்புடுதேன்.”
“அடப்பாவி, நைட்டு ட்ரீட் சொன்னேல்ல. போவோம். ஜமீலாவும் வர்றா”
“ஓ..சரி.சரி. அப்புறம் வரும்போது மறக்காம காசு கொண்டு வந்துடு”
“காசா? எதுக்கு?”
“ஓட்டல் பில் கட்ட வேண்டாமா? ஏண்டா நானே இப்பதான் வேலைல ஜாயிண்ட் பண்ணி இருக்கேன். காசு எங்கிட்ட எப்படி இருக்கும்?”
“இதுக்குப் பேரு ட்ரீட்டாடா?”
“அப்புறமா தர்றேன்பா”
ஜமீலா இடை மறித்து ”என்ன?” என்றாள்.

“காசில்லையாம். நான் பில் பே பண்ணனுமாம்”
ஜமீலா சிரித்துக்கொண்டே “சரி, அவரை நைட் இங்க சாப்பிட வரச்சொல்லுங்க” என்றாள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

 1. முதல் மொட்டு மலர்ந்தே...

  ReplyDelete
 2. பதினைஞ்சாயிரமா என்று அதிர்ச்சியாகி உட்கார்ந்திருந்தேன்>>>>

  எங்கேயோ மச்சம் இருக்குயா உங்களுக்கு?

  ReplyDelete
 3. ஆமாண்டா..அவரு நல்லவரா கேணையராடா?”>>>

  உங்களுக்கு நல்லவரு... மதனுக்கு கேனயறு

  ReplyDelete
 4. நல்ல தொடக்கம் - தொடரட்டும் - இறுதியாக மறுமொழி போடலாம் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakash //எங்கேயோ மச்சம் இருக்குயா உங்களுக்கு?// அப்படியா?..இருங்க தேடிப் பார்த்துட்டு சொல்றேன்.

  ReplyDelete
 6. //cheena (சீனா) said...
  நல்ல தொடக்கம் - தொடரட்டும் - இறுதியாக மறுமொழி போடலாம் - நட்புடன் சீனா// நன்றி ஐயா.

  ReplyDelete
 7. எத்தனை நாள் நைட்டெல்லாம் உட்கார்ந்து வேலை செஞ்சிருக்கேன்.>>>>>

  கம்பெனில உட்கார்ந்து வேலை செய்யணும்... மதன் பாட்டுக்கு வேற ஞாபகத்துல....????

  ReplyDelete
 8. வணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 9. அரபு தேசத்தின் இரவு கலைஞனே,
  அரபுக் கன்னிகள் கொஞ்சும் மன்மதனே!
  வணக்கம்

  ReplyDelete
 10. “மாப்ளே, செலக்ட் பண்ணீட்டாருடா” என்றேன்//

  நமக்கெல்லாம் சாக்கிலேட் தரமாட்டீங்களா?

  ReplyDelete
 11. “ஆமாண்டா..அப்புறம் சேலரி எவ்ளோ தெரியுமா? பதினைஞ்சாயிரம்” என்று 32 பல்லும் தெரிய சிரித்தபடியே கூறினேன்//

  உங்களுக்கு 32 பல்லு இருக்கா, பார்த்தால் அப்படித் தெரியலையே, நான் நினைச்சேன், நீங்க இன்னும் சின்ன புள்ளையாத் தான் இருக்கிறீங்க என்று,

  ReplyDelete
 12. நீ நல்லவேளை ஒன்னும் கேட்க வேண்டாம்னு சொன்னே. இல்லேன்னா நானும் கேணத்தனமா எட்டாயிரம் கொடுங்கன்னு கேட்டிருப்பேன்.”//

  இதான் தோள் கொடுப்பான் தோழன் என்பதோ..

  ReplyDelete
 13. @நிரூபன் //அரபு தேசத்தின் இரவு கலைஞனே,
  அரபுக் கன்னிகள் கொஞ்சும் மன்மதனே!
  வணக்கம்//

  ஆரம்பமே ஆப்பு தானா?

  ReplyDelete
 14. பதினைஞ்சாயிரம்”
  “பதினைஞ்சா? உங்களுக்கே அவ்ளோதானே?”//

  ஒரு சில பெண்களோடை குணமே இது தான்...மெதுவாப் பத்த வைக்கிறது.

  ReplyDelete
 15. “சீக்கிரம் யு.கே.வுக்கு விசா வாங்கிட்டு, ஃபாரின்ல செட்டில் ஆகுறது தானே நம்ம ப்ளான்? உங்களைக் கம்பெனி உடனே ரிலீவ் பண்ணாது. பிரச்சினை பண்ணும். அதனால உங்க அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள் இருந்தா, அவனைக் கைகாட்டிட்டு நாம கிளம்பிக்கலாம்.//

  ஆகா...பிழைக்கத் தெரிந்த ஆளுங்கப்பா....

  ReplyDelete
 16. //நமக்கெல்லாம் சாக்கிலேட் தரமாட்டீங்களா?// பதிவின் முடிவில் மதனிடம் சொன்னது தான் உங்களுக்கும்: ”நானே இப்பதான் வேலைல ஜாயிண்ட் பண்ணி இருக்கேன். காசு எங்கிட்ட எப்படி இருக்கும்”

  அதனாலே நீங்கள்தான் எனக்கு சாக்லேட் வாங்கித் தர வேண்டும்.

  ReplyDelete
 17. “மாப்ளே, கம்பெனில ஜாயிண்ட் பண்ணப்புறமும் நம்ம காசுல ஃபோன் பேசலாமா? அதான் கட் பண்ணிட்டு, ஆஃபீஸ் லேண்ட்லைன்ல இருந்து கூப்புடுதேன்.”//

  அடப் பாவி...வேலை எடுத்து கொடுத்தவனுக்கே இவ்ளோ பந்தாவா..

  ஹி....ஹி....

  ReplyDelete
 18. @நிரூபன் //நான் நினைச்சேன், நீங்க இன்னும் சின்ன புள்ளையாத் தான் இருக்கிறீங்க என்று,// மனசைப் பொறுத்தவரை நான் குழந்தை தானே நிரூ?

  ReplyDelete
 19. ஓட்டல் பில் கட்ட வேண்டாமா? ஏண்டா நானே இப்பதான் வேலைல ஜாயிண்ட் பண்ணி இருக்கேன். காசு எங்கிட்ட எப்படி இருக்கும்?”
  “இதுக்குப் பேரு ட்ரீட்டாடா?”//

  ஹா....ஹா...சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

  ReplyDelete
 20. தொடரினைத் தொய்வின்றி, சுவாரசியம் கூட்டி நகர்துகிறீங்க. அடுத்த பாகத்தினைப் படிக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 21. @நிரூபன் //தொடரினைத் தொய்வின்றி, சுவாரசியம் கூட்டி நகர்துகிறீங்க. அடுத்த பாகத்தினைப் படிக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்.// நாளை வரை பொறுத்திருங்கள். வருகைக்கு நன்றி நிரூ.

  ReplyDelete
 22. ரொம்ப விறு விறுப்பா போகுதே! நைஸ்.

  ReplyDelete
 23. //ஆமாண்டா..அவரு நல்லவரா கேணையராடா?//
  வேலை கொடுத்தவரா,கேட்பவரா, கேட்டுக்கொண்டிருப்பவரா?# டவுட்டு.

  ReplyDelete
 24. //செங்கோவி said...
  @நிரூபன்
  நான் நினைச்சேன், நீங்க இன்னும் சின்ன புள்ளையாத் தான் இருக்கிறீங்க என்று,
  >>>>>
  மனசைப் பொறுத்தவரை நான் குழந்தை தானே நிரூ?//
  அதானால்தான், முகம் காட்டுவதில்லையோ!

  ReplyDelete
 25. தமிழ்வாசி உங்க வீட்லதான் இருக்காரா செங்கோவி...?
  வழக்கம் போல கலக்குறீங்க...

  ReplyDelete
 26. ஹிஹிஹி சேம் குவேச்டியன்...தமிழ்வாசி உங்க பக்கத்தி வீடா??ஹ்ஹீ

  ReplyDelete
 27. //“ம்..அதான் கடுப்பா இருக்கு. எத்தனை நாள் நைட்டெல்லாம் உட்கார்ந்து வேலை செஞ்சிருக்கேன். இவனை எனக்கு ஜூனியராத் தான் எடுத்திருக்காங்க. ஆனா, சம்பளம் மட்டும் எனக்கு ஈகுவலா?”//
  நயிட்டு என்ன வேலை பாஸ் பாத்தீங்க?

  ReplyDelete
 28. @FOOD//ஆமாண்டா..அவரு நல்லவரா கேணையராடா?//
  வேலை கொடுத்தவரா,கேட்பவரா, கேட்டுக்கொண்டிருப்பவரா?#// -- இதற்கு காலம் பதில் சொல்லும் சார்.(ஹி..ஹி..எசகுபிசகா மாட்டிக்கிட்டா இப்படித் தான் சமாளிக்கணும்)

  //மனசைப் பொறுத்தவரை நான் குழந்தை தானே நிரூ?
  அதானால்தான், முகம் காட்டுவதில்லையோ!//
  ஹி..ஹி.அது உங்க நன்மை கருதித் தான் சார்.

  ReplyDelete
 29. @Reverie //தமிழ்வாசி உங்க வீட்லதான் இருக்காரா செங்கோவி...?// ஹா..ஹா..அவர் நம்ம ப்ளாக்கோட ‘ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்’ரெவரி.

  ReplyDelete
 30. @மைந்தன் சிவா //தமிழ்வாசி உங்க பக்கத்தி வீடா?// அவர் எங்க இருக்காரோ தெரியாது சிவா..ஆனா, வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்திருவாரு.

  ReplyDelete
 31. இப்படியும் ட்ரீட் கொடுக்கலாமா? சூப்பர்ணே! :-)

  ReplyDelete
 32. //“மாப்ளே, கம்பெனில ஜாயிண்ட் பண்ணப்புறமும் நம்ம காசுல ஃபோன் பேசலாமா? அதான் கட் பண்ணிட்டு, ஆஃபீஸ் லேண்ட்லைன்ல இருந்து கூப்புடுதேன்.”//
  செம்ம விவரம்ணே! நாங்களும் இருக்கோம்..!

  ReplyDelete
 33. 2 latsam hitS வரப்போகுது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது!

  ReplyDelete
 35. @ஜீ... //செம்ம விவரம்ணே! நாங்களும் இருக்கோம்..!// நெட், ஃபோன் இல்லாக் கம்பெனியில் வேலை செய்வதில்லைன்னு கல்யாணம் ஆகிற வரிக்கும் ஒரு கொள்கை வைச்சிருந்தேன் ஜீ.

  ReplyDelete
 36. @சி.பி.செந்தில்குமார் //2 latsam hitS வரப்போகுது வாழ்த்துக்கள் // யோவ், நானே ஒருவாரமா கடை காத்து வாங்குதேன்னு கவலையில இருக்கேன்.

  ReplyDelete
 37. @ //சென்னை பித்தன் //அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது!// சந்தோசம் ஐயா.

  ReplyDelete
 38. ம்ம் விடுபட்ட பதிவுகளை படிச்சிட்டு இருக்கென், முதல்கட்டமா மன்மத லீலையை முடிச்சிட்டேன், சுவராசியத்துக்கு கொஞ்சம் கூட குறைவே இல்லாம போகுது....!

  ReplyDelete
 39. @பன்னிக்குட்டி ராம்சாமி விசிட்டிங் சூப்பர்வைசர் மாதிரி அப்பப்போ வந்து செக் பண்ணி சர்ட்டிஃபிகேட் தர்றதுக்கு நன்றி ராம்சாமி சார்!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.