Sunday, July 17, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_25

“காசில்லையாம். நான் பில் பே பண்ணனுமாம்”
ஜமீலா சிரித்துக்கொண்டே “சரி, அவாரி நைட் இங்க சாப்பிட வரச்சொல்லுங்க” என்றாள்.

அன்று இரவு மதனின் வீட்டிற்குச் சென்றேன்.

“வாங்கண்ணா” என்று கதவைத் திறந்த ஜமீலா சொன்னாள்.

அப்பாவித் தனமான முகமும், கள்ளங்கபடமற்ற சிரிப்புமாக நின்றாள்.

“மதன் வீடு இதானே?” என்றேன்.

“ஆமாண்ணா, உள்ள வாங்க”

“வந்துட்டானா?” என்றபடியே மதன் ஹாலுக்கு வந்தான்.

எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன்.

“உள்ளே வாங்கண்ணா, உட்காருங்க” என்றாள் ஜமீலா.

உள்ளே நுழைந்தேன்.

“டேய் நாதாரி, இன்னைக்கு ட்ரீட்டுல இருந்து நீ தப்பிச்சிருக்கலாம். ஆனா சேலரி வந்ததும் கண்டிப்பா எங்களை வெளில கூட்டிப் போகணும்” என்றான் மதன்.

“சரிடா” என்று நல்ல பிள்ளையாகச் சொன்னேன்.

“இவன் இப்படித்தான் ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி முதல்ல இருப்பான். ஹாஸ்டல்ல ஃபர்ஸ்ட் பார்த்தப்போ நானும் இவனை பூச்சின்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது..”

“சும்மா இருடா” என்றேன்.

“நம்ம வீட்டுல என்னண்ணா கூச்சம்? சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றாள்.

“அவன் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்ட்டிடுவான். எடுத்து வை” என்றான் மதன்.
பல வருடங்களுக்கு முன் பார்த்தது, இன்னும் இதை ஞாபகம் வைத்திருக்கின்றானே என்று நெகிழ்ச்சியாக இருந்தது.

எனக்காக ரெடியான கமகம பிரியாணி பரிமாறப்பட்டது.

“பாய் வீட்டுப் பிரியாணின்னாலே தனி டேஸ்ட் தான். அது இங்கயும் நல்லாவே தெரியுது” என்றேன்.
“ஆமாண்டா..ரம்ஜானப்போ ஹாஸ்டல்ல ஹிசாம் சையது கொண்டு வர்ற பிரியாணிக்கு அடிச்சுக்குவமே..ஹா..ஹா”

பேசிச் சிரித்தவாறே சாப்பிட்டு முடித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமாகப் பேச ஆரம்பித்து இருந்தேன். ஜமீலாவின் ஊர் பற்றியும் படிப்பு பற்றியும் கேட்டுக்கொண்டேன்.

பிறகு மதன் தனது யு.கே.பிளானைச் சொன்னான்.
“விசா அப்ளை பண்ணீட்டேண்டா. இன்னும் ரெண்டு மாசத்துல விசா இண்டர்வியூ வந்திடும். எப்படியும் அடுத்த ரெண்டு மாசத்துல கிளம்பிடுவேன். அதுக்குள்ள கத்துக்கோ.நான் போனப்புறம் டிபார்ட்மெண்ட்டே உன் கைல தான் இருக்கணும்.பார்த்துக்கோ” என்றான்.
”சரிடா” என்றேன்.

கப்பல் கட்டுமானம் பற்றியும் பைப்பிங் டெக்னாலஜி பற்றியும் சில புத்தகங்களைக் கொடுத்தான். வாங்கி விட்டு வெளியேறினேன். உருப்படாமல் போய் விடுவான் என்று நினைத்த நண்பன், நல்ல நிலையில் நல்ல வாழ்க்கைத்துணையுடன் வாழ்வதைப் பார்த்த சந்தோசத்துடன் வீடு திரும்பினேன்.

”நீ சாப்பிடும்மா..நான் மெயில் செக் பண்ணிக்கிறேன்” என்றவாறே மதன் பெட் ரூமிற்குள் நுழைந்தான்.

நெட் கனென்க்ட் செய்ததும் யாஹூ மெசேஞ்சர் தானாக ஓப்பன் ஆகியது. ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தான். அப்போது தான் iamyourjeni ஐடி ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தான். அது ஜெனிஃபரின் ஐடி.

இந்த ஐடியை அவள் யூஸ் பண்ணி பல வருசம் இருக்குமே. இப்போது எங்கே இருக்கிறாள் என்று கேட்போமா? ச்சே..நமக்கெதுக்கு அது? எப்படியோ அந்தச் சாக்கடையில் விழாமல் தப்பித்தாகி விட்டது. இப்போது அவள் எப்படி இருந்தால் என்ன? பேசுவாளா?

“கொஞ்சம் பிரியாணி எடுத்து வைக்கிறேன். தூங்கும்போது சாப்பிட்டுக்கோங்க” என்று ஜமீலாவின் குரல் ஹாலிலிருந்து கேட்டது.

பக்கென்று ஆகியது மதனுக்கு. “இ..இல்லே..வேண்டாம்” என்றான்.

சொன்னாலும் கேட்க மாட்டாள் என்று தெரியும். ’இப்படிப்பட்ட மனைவி இருக்கும்போது..’என்று யோசிக்கும்போதே

"Hi Madhan " என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

How r u? Long time no see" அடுத்த மெசேஜ் இறங்கியது.

மதன் ஆடிப் போனான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

 1. முதல் மொட்டு மலர்ந்ததே

  ReplyDelete
 2. @தமிழ்வாசி - Prakash யோவ், இன்னும் எனக்கு பேஜே ஓப்பன் ஆகலையே..அதுக்குள்ள கமெண்ட்டா?

  ReplyDelete
 3. அப்பாவித் தனமான முகமும், கள்ளங்கபடமற்ற சிரிப்புமாக நின்றாள்.>>>

  நல்ல தங்கை உங்களுக்கு கிடைத்திருக்கிறாள்....

  ReplyDelete
 4. எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன்.>>>

  இத நாங்க நம்பனுமாக்கும்? இந்த டகால்ட்டி வேலையை நம்ம கிட்ட காட்டாதிங்க....

  ReplyDelete
 5. நிஜமாத் தான்யா..

  ReplyDelete
 6. எனக்காக ரெடியான கமகம பிரியாணி பரிமாறப்பட்டது>>>>

  பழனிக்கு மட்டன்ல பிரியாணி இருந்துச்சு? உங்களுக்கு எதுல பிரியாணி இருந்துச்சு?

  ReplyDelete
 7. நமக்குச் சிக்கன் தான்..

  ReplyDelete
 8. அப்போது தான் iamyourjeni ஐடி ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தான். அது ஜெனிஃபரின் ஐடி>>>>

  இந்த ஐ டி இப்பவும் வொர்க் ஆகுதா? செக் பண்ணியிருப்பிங்களே?

  ReplyDelete
 9. //வினையூக்கி said...
  another interesting twist//

  நன்றி செல்வா.

  ReplyDelete
 10. "Hi Madhan " என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

  “How r u? Long time no see" அடுத்த மெசேஜ் இறங்கியது.

  மதன் ஆடிப் போனான்.>>>>

  வச்சான் பாரு கடைசியில டிவிஸ்ட்டு... அடுத்த வெள்ளி வரைக்கும் வெயிட் பன்னன்னுமே...???

  ReplyDelete
 11. //தமிழ்வாசி - Prakash said...
  இந்த ஐ டி இப்பவும் வொர்க் ஆகுதா? செக் பண்ணியிருப்பிங்களே? //
  உங்களை நம்பி உண்மையான ஐடியைத் தருவேனா?

  ReplyDelete
 12. @செங்கோவி
  //தமிழ்வாசி - Prakash said...
  இந்த ஐ டி இப்பவும் வொர்க் ஆகுதா? செக் பண்ணியிருப்பிங்களே? //
  உங்களை நம்பி உண்மையான ஐடியைத் தருவேனா?>>>>>

  பொய்யான ஐடி கொடுத்து நம்மளை ஏமாற்றிய செங்கோவிக்கு நமீதா, ஹன்சிகா ஜொள்ளர் சங்கம் சார்பாக எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... அக்காங்...

  ReplyDelete
 13. //பொய்யான ஐடி கொடுத்து நம்மளை ஏமாற்றிய செங்கோவிக்கு நமீதா, ஹன்சிகா ஜொள்ளர் சங்கம் சார்பாக எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... அக்காங்.//

  அடப்பாவிகளா..நல்லவேளை இண்ட்லில மைனஸ் ஓட்டு இல்லை.

  ReplyDelete
 14. வணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டுவாரேன்.

  ReplyDelete
 15. எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன்.//

  ஆனால் புதுசா யாராச்சும் பொண்ணுங்களைப் பார்த்தால்...ஐயா பேச ஆரம்பிச்சிடுவாரு.

  ReplyDelete
 16. //எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன்.//
  என்னண்ணே இதுலயும் நம்மள மாதிரியேதானா? அதுவும் பெண்கள்னா அந்தப் பக்கமே...என்னமோ போங்க!

  ReplyDelete
 17. //இவன் இப்படித்தான் ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி முதல்ல இருப்பான். ஹாஸ்டல்ல ஃபர்ஸ்ட் பார்த்தப்போ நானும் இவனை பூச்சின்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது..”//
  இதே டயலாக்...! :-))

  ReplyDelete
 18. அப்புறம்... நீங்க ஒண்ணும் பண்ணலையே! ஏதோ நீங்க வில்லனா வந்தமாதிரி முன்னாடி சொல்லி இருந்தீங்களே அதான் கேட்டேன்!

  ReplyDelete
 19. அடுத்த வெள்ளி வரைக்கும் வெயிட் பன்னன்னுமே...?

  ReplyDelete
 20. சிக்கன் அதாவது கோழி....

  ReplyDelete
 21. //எனக்கு யாரையாவது புதிதாகப் பார்த்தால் பேச்சு வராது, பேக்கு மாதிரி முழிப்பது நம் வழக்கம். அங்கும் அப்படி முழித்தவாறே நின்றிருந்தேன்.//
  பாவம், குழந்தை என்ன பண்ணும்?

  ReplyDelete
 22. கடைசியில் செம டுவிஸ்ட்.

  ReplyDelete
 23. @ஜீ... //என்னண்ணே இதுலயும் நம்மள மாதிரியேதானா? // ஆமாம் தம்பி, ஆமாம்!

  ReplyDelete
 24. @ஜீ... //ஏதோ நீங்க வில்லனா வந்தமாதிரி முன்னாடி சொல்லி இருந்தீங்களே அதான் கேட்டேன்!// எனது வருகை-ன்னு சொன்னேன்..நான்னு சொல்லலை..வருகை எப்படி...ன்னு தொடர்ந்து படிங்க//

  ReplyDelete
 25. @சே.குமார் //அடுத்த வெள்ளி வரைக்கும் வெயிட் பன்னன்னுமே...? // முடிஞ்சா இடையில போடுறேன் குமார்.

  ReplyDelete
 26. @MANO நாஞ்சில் மனோ //சிக்கன் அதாவது கோழி.... // என்னண்ணே சொல்ல வர்றீங்க?

  ReplyDelete
 27. @FOOD //பாவம், குழந்தை என்ன பண்ணும்?// ஹா..ஹா..

  //கடைசியில் செம டுவிஸ்ட்.// அது!

  ReplyDelete
 28. ஒரு முக்கிய திருப்பத்துடன் ’தொடரும்’ போட்டு விட்டீர்களே!

  ReplyDelete
 29. “டேய் நாதாரி, இன்னைக்கு ட்ரீட்டுல இருந்து நீ தப்பிச்சிருக்கலாம். ஆனா சேலரி வந்ததும் கண்டிப்பா எங்களை வெளில கூட்டிப் போகணும்” என்றான் மதன்.

  “சரிடா” என்று நல்ல பிள்ளையாகச் சொன்னேன்.//

  ஆகா... நம்ம மாப்பிளை செங்கோவி ஓச்சிச் சாப்பாட்டு சாப்பிட்டு விட்டு ரீட் கொடுக்காமல் எஸ் ஆகினாலும் ஆகிடுவான் என்பதால், நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் போல இருக்கே.

  ReplyDelete
 30. “இவன் இப்படித்தான் ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி முதல்ல இருப்பான். ஹாஸ்டல்ல ஃபர்ஸ்ட் பார்த்தப்போ நானும் இவனை பூச்சின்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சது..”//


  ஆகா...மதன் சைட் கைப்பிலை நம்ம மச்சானைப் போட்டுக் கொடுத்து மனைவியிடம் ஹீரோவாகிட்டானா.

  ஹி....ஹி....

  ReplyDelete
 31. இந்த ஐடியை அவள் யூஸ் பண்ணி பல வருசம் இருக்குமே. இப்போது எங்கே இருக்கிறாள் என்று கேட்போமா? ச்சே..நமக்கெதுக்கு அது? எப்படியோ அந்தச் சாக்கடையில் விழாமல் தப்பித்தாகி விட்டது. இப்போது அவள் எப்படி இருந்தால் என்ன? பேசுவாளா?//

  ஆகா....நம்ம மாப்பிளைக்கு மனசுக்குள்ளை காதல் பற்றிய ஒரு ஐடியா அப்போ இருந்திருக்கு.

  ReplyDelete
 32. Hi Madhan " என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

  “How r u? Long time no see" அடுத்த மெசேஜ் இறங்கியது.

  மதன் ஆடிப் போனான்.//

  அடடா...சுவாரஸ்யமான இரவு உணவுப் பகிர்வோடு, கொஞ்சம் எதிர்பார்ப்பையும் கூட்டிப் பகிர்ந்திருக்கிறீங்க. அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 33. ம்ம்.... அடுத்த பாகம் ப்ளீஸ்.....!

  ReplyDelete
 34. @நிரூபன் //அடடா...சுவாரஸ்யமான இரவு உணவுப் பகிர்வோடு, கொஞ்சம் எதிர்பார்ப்பையும் கூட்டிப் பகிர்ந்திருக்கிறீங்க. அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.// நன்றி நிரூ.

  ReplyDelete
 35. @பன்னிக்குட்டி ராம்சாமி //ம்ம்.... அடுத்த பாகம் ப்ளீஸ்.....!// அடுத்த வாரம் வரை வெயிட் ப்ளீஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.