Saturday, July 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26


"Hi Madhan " என்று ஜெனிஃபரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

“How r u? Long time no see" அடுத்த மெசேஜ் இறங்கியது.

மதன் ஆடிப் போனான்.

"Hi..fine" என்றான்.

“வாவ்..என்னால் நம்பவே முடியலை. ஜஸ்ட் பிங் பண்ணேன்.”
“ஓ”
“மதன். எங்கே இருக்கே இப்போ?”
“சென்னை..நீ?”
“பெங்களூர்” (ஊர்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது)
“அங்க ஒர்க் பண்றயா ஜெனி?”

“ஆமா வீட்ல..ஹவுஸ் வைஃப்”

“கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஆமா.வீட்ல ரொம்ப கட்டாயப்படுத்தி பெரிய ரகளை பண்ணி..ஹும்..அது பெரிய கதை. அப்புறம் சொல்றேன்”

”ஹஸ்பண்ட் என்ன பண்றார்?”
“அவன் இங்க ****ல வேலை பார்க்கான்.”
“ஓ..பெரிய கம்பெனி ஆச்சே..லைஃப் எப்படிப் போகுது?”
இப்போக் கூட ஆஃபீஸ்ல தான் இருக்கான்...வேஸ்ட்”
“அவனா?”
“ம்...அப்படியும் சொல்லலாம்..எனக்கு அவனைப் பிடிக்கலை”
“ஏன்?”
“உன்னால தான்”
“என்னாலயா..ஏன்?”
“நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்”

ஜமீலா தட்டைக் கழுவும் சத்தம் கேட்டது. மதனுக்கு கை நடுங்கியது.

“ஜெனி, நான் அவசரமா வெளில போறேன்..அப்புறமா வர்றேன்”

”ஹே..வெய்ட்..வெய்ட்..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

மதன் ஒரு நிமிடம் யோசித்தான்.

“இல்லை’” என்று டைப் செய்து எண்டரைத் தட்டினான். மெசேஞ்சரில் இருந்து வெளியேறினான்.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அவள் மாறவே இல்லையா? எப்படி இவ்வளவு சகஜமாக அவளால் பேச முடிகிறது? 

ஜமீலா பிரியாணியுடன் வந்து கொண்டிருந்தாள். ச்சே, இவ எங்கே? அந்தக் கழிசடை எங்கே? இனி அவகூட சாட் கூடப் பண்ணக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் மதன்.

டுத்த நாள் ஆஃபீஸில் எனக்கு ஒரு ஆப்பு ரெடியாகி இருந்தது. முதல் நாள் இண்டர்வியூ நடந்து, அன்றே நான் கடமை உணர்ச்சியுடன் வேலையைத் துவங்கி விட்டாலும் அப்பாயின்மெண்ட் லெட்டர் அடுத்த நாள் தான் தருவோம் என்று சொல்லி இருந்தார்கள்.

இன்று ஹெச்.ஆர். மேடம் ஃபோனில் அழைத்தார். அவர் பெயர் சுகீலா. பார்ப்பதற்கு ஷகீலா மாதிரியே இருந்ததால் அவர் பெயரின் முதல் எழுத்துடன் ‘சுகீலா’ என்று அங்கு வேலை செய்வோரால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவரும் கேரளாவைச் சேர்ந்தவரே. அவர் ரூமிற்குள் நுழைந்தேன். உள்ளே பாபு நின்று கொண்டிருந்தான். பாபு குவாலிட்டி கண்ட்ரோல் எஞ்சினியர். பார்த்தவுடன் சிரித்தான். நானும் சிரித்தபடியே மேடத்தைப் பார்த்தேன்.

“செங்கோவி, இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர். டிரக்டர் கொடுக்கச் சொன்னார். வெல்கம் டூ அவர் கம்பெனி” என்று சிரித்தார்.

நான் அப்பாயின்மெண்ட் லெட்டரிலேயே கண்ணாக இருந்ததால், அவர் ‘கம்பெனி’ பற்றி கண்டு கொள்ளவில்லை.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். கவரைப் பிரித்தேன்.

“தங்களை ஒரு வருடம் காண்ட்ராக்ட்டில் பைப்பிங் எஞ்சினியராக எடுப்பதில் கம்பெனி மகிழ்ச்சி கொள்கிறது. காண்ட்ராக்ட் எம்ப்ளாயீ என்பதால் பி.எஃப், லீவ் போன்ற சலுகைகள் உங்களுக்குக் கிடைக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்குப் பின் தேவைப்பட்டால் காண்ட்ராக்ட் நீட்டிக்கப் படும்’ என்று இருந்தது.

“மதன்ன்ன்ன்ன்ன்” என்று அலறிய படியே ஓடினேன்.

மதனும் லெட்டரை வாங்கிப் பார்த்தான். “என்னடா இப்படிப் போட்டிருக்காங்க?” என்றான்.

”அதைத் தான் நானும் கேட்கேன். ஏண்டா, ஒரு பெர்மனெண்ட் ஜாப் கிடைச்சுச்சு. அதை விட்டுட்டு இங்க வந்தா, காண்ட்ராக் ஜாப்-ஐக் கொடுக்காங்க. நீ உன் டைரக்டர்கிட்டப் பேசு” என்றேன்.

“இல்லைடா..அவர் சிடுமூஞ்சி. இந்த வேலை கொடுத்ததே அதிசயம். நீ ஏண்டா கவலைப்படுறே. தனியார் கம்பெனில ஏதுடா பெர்மனெண்ட் ஜாப்? அது சும்மா பேருக்குத் தானே? ஒரு வருசம் வேலை பாரு. பைப்பிங் கத்துக்கோ. அப்புறம் எங்கயாவது ஜூட் விட்டுடு.இவங்களே அப்போ உன்னை பெர்மனெண்ட் ஆக்குவாங்க பாரு” என்றான். 

சிறிது நேர விவாதத்திற்குப் பின் நான் அமைதி ஆனேன்.

”சரி, வா..டீ குடிப்போம்” என்று பாண்ட்ரிக்கு கூட்டிப் போனான்.

அங்கே சுகீலா நின்று கொண்டிருந்தார். கூடவே பாபுவும்.

“என்ன மதன், உங்க ஃப்ரெண்ட்டுக்கு சந்தோசம் தானே? ஒன்னும் குழப்பம் இல்லையே?” என்றார்.

“இல்லை மேடம்” என்றான்.

சுகீலா சிரித்த படியே வெளியேறினார். பாபுவும் கிளம்பினான்.

“என்னடா பாபு, காலைலயேவா?” என்றான் மதன்.

சிரிப்பை உதிர்த்து விட்டு நகன்றான் பாபு.

“டேய், இவன் குவாலிட்டி எஞ்சினியர்னு தானே சொன்னே?”
“ஆமா”
“அப்புறம் ஹெச்.ஆர்ல என்ன பண்றான்? “

“அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்” என்றான் மதன்.

(தொடர்ச்சி 12 மணி நேரம் கழித்து...)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

 1. இன்னைக்கு அண்ணனுக்கு லீவு நாளு... லீலையை கோப்பையில் மிதந்துட்டே எழுதினாராம்.
  குவைத் உளவுத்துறை செய்தி.

  ReplyDelete
 2. ஹஸ்பண்ட் என்ன பண்றார்?”
  “அவன் இங்க ****ல வேலை பார்க்கான்.”>>>>

  நல்ல மரியாதை "அவன்"

  ReplyDelete
 3. நல்ல ஆரம்பம்!ஜமாயுங்க!!பொறாமையாயிருக்கு!!!

  ReplyDelete
 4. “நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்”>>>

  ரைட்டு, பட்சி சிக்கிடுச்சு மறுபடியும்.

  ReplyDelete
 5. \\“அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்”\\
  அப்படியா?

  ReplyDelete
 6. “தங்களை ஒரு வருடம் காண்ட்ராக்ட்டில் "பைப்பிங்" எஞ்சினியராக எடுப்பதில் கம்பெனி மகிழ்ச்சி கொள்கிறது.///"பைப்பிங்" என்ஜினியரா?அப்புடீன்னா?

  ReplyDelete
 7. “தங்களை ஒரு வருடம் காண்ட்ராக்ட்டில் பைப்பிங் எஞ்சினியராக எடுப்பதில் கம்பெனி மகிழ்ச்சி கொள்கிறது.>>>>

  ஆகா வடை போச்சே...

  ReplyDelete
 8. “நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்”.
  மதனுக்கு கை நடுங்கியது.////அது ஏன் "கை" நடுங்குது?????(டவுட்டு!)

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash //இன்னைக்கு அண்ணனுக்கு லீவு நாளு... லீலையை கோப்பையில் மிதந்துட்டே எழுதினாராம்.
  குவைத் உளவுத்துறை செய்தி.//

  உள்ளூர் உளவுத்துறை ரேஞ்சுக்கே நான் ஒர்த் இல்லை..இதுல குவைத் உளவுத்துறை வேறயா?

  ReplyDelete
 10. “அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்” >>>>

  செக் பண்ணி SCRAP ஆக்குவாரா, இல்லை REWORK செய்ய சொல்லுவாரா?

  ReplyDelete
 11. @தமிழ்வாசி - Prakash //நல்ல மரியாதை "அவன்"// அம்மணிகிட்ட வேறென்ன எதிர்பார்த்தீங்க?

  ReplyDelete
 12. @Yoga.s.FR //ஜமாயுங்க!!பொறாமையாயிருக்கு!!!//

  எனக்கே பாபுவைப் பார்த்தப்போ பொறாமையாத் தான் இருந்துச்சு.

  ReplyDelete
 13. @gokul //அப்படியா?// ம்..ம்ம்!

  ReplyDelete
 14. @gokul //அப்படியா?// ம்..ம்ம்!

  ReplyDelete
 15. @Yoga.s.FR //"பைப்பிங்" என்ஜினியரா?அப்புடீன்னா?// நீங்க நினைக்கற மாதிரி இல்லை பாஸ்..இது வேற.

  ReplyDelete
 16. @! ஸ்பார்க் கார்த்தி @ //thappache.........kai nadunga koodaadhe.....// இதை நான் பலமுறை அவன்கிட்ட சொல்லி இருக்கேன் பாஸ்.

  ReplyDelete
 17. //“நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்//

  உண்மையான அன்பு வச்சுருந்தவங்க இதமாரி பேச மாட்டாங்க..

  //“ம்...அப்படியும் சொல்லலாம்..எனக்கு அவனைப் பிடிக்கலை”
  “ஏன்?”
  “உன்னால தான்”
  “என்னாலயா..ஏன்?”
  “நான் அவனை உங்கூடக் கம்பேர் பண்ணேன்..அதான்”//

  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

  கலி முத்தி போச்சுங்கோ.....

  ReplyDelete
 18. கை நடுங்க கூடாதா ... யார்யா இது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 19. மாப்ள கலக்கறய்யா...தொடர் நல்லா போகுது!

  ReplyDelete
 20. நல்லாத் தொடருறீங்க!

  ReplyDelete
 21. @மாய உலகம் //கை நடுங்க கூடாதா ... யார்யா இது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்// பயப்படாதீங்க மாயா..தொடரை முதல்ல இருந்து படிச்சீங்கன்னா, கை நடுங்குறதால நஷ்டம் ஒன்னும் இல்லேன்னு புரியும், தொடர்ந்து மதனை வாட்ச் பண்ணாலும் புரியும்!!

  ReplyDelete
 22. @விக்கியுலகம் //மாப்ள கலக்கறய்யா.// இந்தாளு படிச்சுட்டுத் தான் சொல்றாரா...டவுட்டா இருக்கே.

  ReplyDelete
 23. @வினையூக்கி //new character Babu ,,,, super// அதுல என்னய்யா சூப்பரைக் கண்டீங்க?

  ReplyDelete
 24. அய்யய்யோ அடுத்தது ரிலீஸ் பண்ணப்புறம்தான் இதப் பாக்கிறேன்!

  ReplyDelete
 25. @ஜீ... கண்டினியூட்டி மிஸ் ஆகுறது தெரியலையா..அதுசரி, படிச்சாத்தானே அதெல்லாம் தெரியும்....அவ்வ்வ்!

  ReplyDelete
 26. அடுத்த பகுதியை முதலில் படித்து விட்டேன்!

  ReplyDelete
 27. சுவாரஸ்யமாகத் தொடரினை நகர்த்துகிறீங்க.

  பாவு, சசிகலா மேடம் கமெண்ட்....ஹா...ஹா..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.