Saturday, July 23, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27


“அவன் இஞ்சினியரிங்குக்கு மட்டும் குவாலிட்டி பார்க்கலை. சுகீலாவுக்கும் அப்பப்போ குவாலிட்டி செக் பண்ணுவான்”

"ஹெச்.ஆர் மேடத்தையேவா?” என்றேன்

“அவ ஹெச்.ஆரே இல்லைடா..ரிசப்சனிஷ்ட்டா வந்தா. பல தலைகளை கவுத்திட்டு, இப்போ ஹெச்.ஆர் ரூம்ல உட்கார்திருக்கா. இவன் பாதி நேரம் அவ பின்னாடியே தான் அலைவான்..நீ உள்ள போனப்போ என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்?”

“பேசிகிட்டு இருந்தான்”

“நீ குடுத்து வச்சது அவ்வளவு தான். நாங்கள்லாம் நிறையப் பார்த்திருக்கோம். நீயும் பார்ப்பே” என்றான் மதன்.

ன்று இரவு நான் எனது ரூமில் இருந்த போது மதன் வந்தான்.

“செங்கோவி, காய்ச்சல் மாதிரி இருக்கு. வா, மருந்து வாங்கிட்டு வருவோம்” என்று அழைத்தான்.

அவன் வீட்டிற்கு அடுத்த தெருவிலேயே நாங்கள் தங்கி இருந்த வீடும் இருந்தது. இருவரும் கிளம்பினோம்.

ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போதே சட்டென்று ரெஸ்ட்டாரண்ட் பார் ஒன்றில் நுழைந்தான் மதன்.

“என்னடா இங்க வந்துட்ட?”
”காய்ச்சல்னு சும்மா சொன்னேன். இல்லேன்னா நீ இங்க வர மாட்டியே.  உட்காரு” என்றவாறே புரியாத பெயர்களைச் சொல்லி ஆர்டர் செய்தான்.

“உனக்கு பெப்ஸியா கோக்கா?” என்றான். 

“7 அப்” என்றேன்.

பேச்சு கல்லூரி நாட்களைப் பற்றித் திரும்பியது.

“மாப்ளே, நல்லா எஞ்சாய் பண்ணேண்டா காலேஜ் லைஃபை. நீங்க எல்லாம் சின்சியராப் படிச்சது தாண்டா மிச்சம். இப்போப் பாரு,எல்லாரும் ஒரே இடத்துல தான் உட்கார்ந்திருக்கோம்”

“ஆமா, ஜெனிஃபர்கூட நல்லாத் தான் எஞ்சாய் பண்ணே” என்றேன்.

”ஹா..ஹா..கடைசில எல்லாத்தையும் முடிச்சிட்டு கழட்டியும் விட்டுட்டேன்” என்ரான் மதன்.

”ம.., நீ எங்க கழட்டி வி ட்டே..உங்கப்பா அவ அம்மாவை மிரட்டுன மிரட்டுல அவ உன்னை விட்டு ஓடுனா” என்றேன்.

“என்னடா சொல்றே?” 

நடந்ததைச் சொன்னேன். அவன் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான்.

“நல்ல காரியம் பண்ணீங்கடா..இல்லேன்னா நானும் அந்தப் புதைகுழில விழுந்திருப்பேன். ஜமீலா மாதிரி ஒரு பொண்ணு எனக்குக் கிடைச்சிருக்குமா?”

“ஆமா மதன். உன் யோக்கியதைக்கு அந்தப் பொண்ணு ரொம்ப அதிகம். இனிமேலாவது ஒழுங்கா இருடா” 

“டேய், நான் அவளை எப்படி வச்சிருக்கேன் தெரியுமா? அவ என்ன கேட்டாலும் வாங்கித் தர்றேன். அவ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேண்டா”

“எப்படியோ நல்லா இருந்தாச் சரிதாண்டா மாப்ளே” என்றேன்.

சரக்கு அத்தனையும் தீர்ந்து போயிருந்தது. பேசியவாறே என்னை என் ரூமில் விட்ட பின், தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கினான் மதன்.

‘அப்போ ஜெனிஃபர் அவளாவே என்னை விட்டுப் போகலையா? இவங்க மிரட்டுனதால தான் என்னை விட்டுப் போனாளா? ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான்.

‘சாட்டில் அவள் ஏன் வந்தாள்? இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா? என்ன வேண்டும் அவளுக்கு? பிடிக்காம கட்டிக்கிட்டேன்னு சொன்னாளே? அடுத்த முறை சாட்டில் வந்தால் கேட்க வேண்டும், பாவம்’ என்று நினைத்துக் கொண்டான் மதன்.

(தொடரும்...தொடர்ச்சி 12 மணி நேரம் கழித்து)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. டே பிரகாஷ் வாடா .. மாப்ள இன்னைக்கு பகல்ல பதிவு போட்டிருக்கு .. எங்கடா போன?

  ReplyDelete
 2. வந்துட்டேன்! :-)

  ReplyDelete
 3. //”ம.., நீ எங்க கழட்டி வி ட்டே..உங்கப்பா அவ அம்மாவை மிரட்டுன மிரட்டுல அவ உன்னை விட்டு ஓடுனா” என்றேன்.//
  7 UP குடிச்சதுக்கே அண்ணன் உண்மைய உளறிட்டாரு.....என்ன கொடுமை அண்ணே! :-)

  ReplyDelete
 4. //“நீ குடுத்து வச்சது அவ்வளவு தான். நாங்கள்லாம் நிறையப் பார்த்திருக்கோம். நீயும் பார்ப்பே” என்றான் மதன்.//
  அப்புறம் ஏதாவது பாத்தீங்களாண்ணே? அதுபற்றி விலாவாரியா விவரிச்சு விவரமா விறுவிறுபபு பதிவு போடுவீங்களா?
  எஞ்சினியர்ஸ் மானத்தைக் காப்பாத்துங்கண்ணே! :-)

  ReplyDelete
 5. @!* வேடந்தாங்கல் - கருன் *! //டே பிரகாஷ் வாடா .. மாப்ள இன்னைக்கு பகல்ல பதிவு போட்டிருக்கு .. எங்கடா போன?// ஹா..ஹா..பிரகாஷ்க்கு வடை போச்சே.

  ReplyDelete
 6. @ஜீ... //7 UP குடிச்சதுக்கே அண்ணன் உண்மைய உளறிட்டாரு...// ஆமா தம்பி, 7 அப்புக்கே நமக்கு தூக்கிடும்.

  ReplyDelete
 7. @ஜீ... //எஞ்சினியர்ஸ் மானத்தைக் காப்பாத்துங்கண்ணே! :-)//

  பாபு ஏற்கனவே காப்பாத்திட்டான் ஜீ..கவலைப்பட வேண்டாம்.

  ReplyDelete
 8. நண்பா சுவாரஸ்ஸமாக போகிறது, இன்னும் கொஞ்சம் லென்க்த கூட்டினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன், அய்யோ சும்மா சொன்னேன் :-)

  ReplyDelete
 9. @இரவு வானம் நைட்டு, டபுள் மீனிங் ஏதாவது ட்ரை பண்ணீங்களா?

  ReplyDelete
 10. //ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான்//
  எவ்வளவு பட்டாலும், ஆப்பு அடிபட்டாலும் எப்புடி அவங்களுக்கு சப்போர்ட்டாவே பசங்க யோசிக்கிறாய்ங்க? அதான் எனக்குப் புரியல! காதலின் மகிமை???

  ReplyDelete
 11. மனிதன் மனம் ஒரு குரங்கு என்பதே தொடர்ந்து உணர்த்திவரும் பதிவு நன்றி மாப்ளே

  ReplyDelete
 12. @விக்கியுலகம் //மனிதன் மனம் ஒரு குரங்கு// பாயிண்ட்டைப் பிடிச்ச விக்கிக்கு சபாஷ்!

  ReplyDelete
 13. செங்கோவியை வன்மையா கண்டிக்கிறேன்.. சொல்லாம பகல்ல பதிவு போட்டதற்கு....

  ReplyDelete
 14. (தொடரும்...தொடர்ச்சி 12 மணி நேரம் கழித்து)enna nadakkuthu sengovi?? bit bit ah poduringa?!!ennamo pattaya kelappunga....

  ReplyDelete
 15. கன்னித்தீவை விட நீளமான தொடரா இருக்கே. முதல்ல அந்த டைரிய பறிமுதல் செய்யணும்!!

  ReplyDelete
 16. கொஞ்ச நாளா நீங்க தூங்கின மாதிரியே தெரியலையே...
  ரூம் போட்டு யோசிச்சு ...ஆள் வச்சு எழுதுறீங்களோ...?

  ReplyDelete
 17. 7 up(!) இல்லையா? அதான் தூக்கிடிச்சு!

  ReplyDelete
 18. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  டே பிரகாஷ் வாடா .. மாப்ள இன்னைக்கு பகல்ல பதிவு போட்டிருக்கு .. எங்கடா போன?////இன்னிக்கு சனிக்கிழமை இல்லியா?அதான் பகல்லயே "போட்டுட்டாரு"!

  ReplyDelete
 19. ////“நீ குடுத்து வச்சது அவ்வளவு தான். நாங்கள்லாம் நிறையப் பார்த்திருக்கோம். நீயும் பார்ப்பே” என்றான் மதன்./////என்னத்தப் பாத்து,என்னத்தக் குடுத்து வச்சு???????

  ReplyDelete
 20. இரவு வானம் said...
  ///நண்பா சுவாரஸ்ஸமாக போகிறது, இன்னும் கொஞ்சம் லென்க்த கூட்டினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.///லெந்தக் கூட்டுறதா?அப்புடி அசிங்கமால்லாம் பேசப்படாது!!!

  ReplyDelete
 21. ///“டேய், நான் அவளை எப்படி வச்சிருக்கேன் தெரியுமா?///ஒங்களுக்கு எப்புடீங்க தெரியும்?

  ReplyDelete
 22. @Yoga.s.FR தல, 27ஐ விடுங்க...28ஐ போட்டாச்சு.பாருங்க.

  ReplyDelete
 23. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..சாரி, தனித்தனியே பதிலிட முடியவில்லை..இன்று ஆஃபீஸில் க்ஞ்சம் பிஸி.

  ReplyDelete
 24. ஏழாவது ஓட்டோடு களமிறங்கியிருக்கிறேன். இருங்க வாரேன்.

  ReplyDelete
 25. மதன் மீண்டும் ஜெனிபரிடம் போகப் போறானா.....எனும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது இந்தப் பகுதி.

  அடுத்த பாகத்தைப் படிப்போம்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.