Sunday, July 24, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28

‘அப்போ ஜெனிஃபர் அவளாவே என்னை விட்டுப் போகலையா? இவங்க மிரட்டுனதால தான் என்னை விட்டுப் போனாளா? ஒருவேளை இவங்க குறுக்க வரலேன்னா என்கூடவே இருந்திருப்பாளோ?’ என மதன் யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் எழும்போது ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தான் மதன். காய்ச்சல் போன்று உடம்பு கொதித்தது. மேலே ஹீட்டுக்கு வந்த கொப்புளம் போன்று உடம்பில் ஏதோ இருந்தது. 

”ஏம்ம்மா” என்று அடுப்படியில் இருந்த ஜமீலாவை அழைத்தான்.

“என்ன?” என்று கேட்டுக்கொண்டே வந்தவள் அவனைப் பார்த்ததும் திகைத்தாள்.

“என்னங்க இது முகமெல்லாம்?” என்றாள்.

கண்ணாடி பார்த்ததும் புரிந்து போயிற்று ‘அம்மை’ போட்டுள்ளது என!

சட்டையைக் கழற்றி செக் பண்ணியதில் உடம்பெல்லாம் அம்மைக் கொப்புளங்கள் இருந்தன. உடனே எனக்கு ஃபோன் செய்தான்.

“ஓ..., இன்னுமாடா தூங்குறே..இங்க உடனே வா”

ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து நானும் கிளம்பிப் போனேன். மதனைப் பார்த்ததும் விசயம் புரிந்தது.  ஆஸ்பத்திரி போக ரெடியாக இருந்தான்.

“இதுக்கு ஹாஸ்பிடல் போகக்கூடாதுன்னு சொல்வாங்களே?” என்றேன்.
”அது உங்க பாட்டி காலத்துல. போய் ஆட்டோ கூட்டி வா” என்றான். 

ஜமீலா பயந்து போயிருந்தாள்.

“இதுக்கு ஏங்க பயப்படுறீங்க? இதெல்லாம் ஒன்னுமே இல்லை. மேக்ஸிமம் 10 நாள்ல அதுவா போயிடும். எனக்கு நைன்த் படிக்கும்போது வந்திருக்கு. ஆனா நீங்க அவன் பக்கத்துலயே போகாதீங்க. ஏற்கனவே வந்ததால எனக்கு திரும்ப வராது. எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்” என்றேன்.

”சரிடா, மருந்தெல்லாம் எடுத்துக்கோ. நான் ஆஃபீஸ் கிளம்புறேன். வேறெதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றேன்.
“இல்லைடா”
“ஹெச்.ஆர்.மேடத்துகிட்ட சொல்லணுமா?”
“அய்யோ..சுகிலான்னு சொல்லுடா.ஹெச்.ஆருக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இவளை அப்படிச் சொல்லாத. போய் சுகீலாகிட்டயும் நம்ம மேனேஜர்கிட்டயும் சொல்லிடு. நானும் அப்புறமா கால் பண்றேன்” என்றான்.

ஃபீஸில் மேனேஜரிடம் விசயத்தைச் சொன்னேன். பாம்பைக் கண்டவன் போல் பதறினார். “ஆஃபீஸ் பக்கம் அவரை வர வேண்டாம்னு சொல்லிடுங்க. மூணு தண்ணி ஊத்துனப்புறம் வந்தாப் போதும்” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து சுகீலா ரூமிற்குப் போய்ப் பார்த்தேன். ஆளில்லை. பாபுவிடம் கேட்போம் என்று அவன் சீட்டிற்குப் போனேன். அங்கு அவனும் இல்லை. அருகில் இருந்தவனிடம் கேட்டேன்.

“பாத் ரூம் போனான்.”

யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அது ’சிங்கிள்’ பாத்ரூம் என்பதால் வரட்டும் என வெளியே நின்று கொண்டேன். பாபு கதவைத் திறந்துகொண்டு வந்தான். பார்த்ததும் வழக்கமான புன்னகை. 

“பாபு, சுகீலா மேடத்தை எங்கே?” என்றேன்.
தனக்குப் பின்னால் கை காட்டினான். பார்த்தால், சுகீலா அதே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். பாபு நகர்ந்து சென்றுவிட்டான். நான் பேயறைந்தது போல் ஆனேன்.

“என்னா செங்கோவி, மதனுக்கு சிக்கன் போக்ஸா? கால் பண்ணார். நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. ஓஃபீசுக்கு இப்போதைக்கு வர வேண்டாம்” என்று ஹெச்.ஆர்.மிடுக்கு குறையாமல் பேசி விட்டு அகன்றார் சுகீலா.

அந்த பாத்ரூமிற்குள் போக மனமில்லாமல் அப்படியே திரும்பினேன்.

டுத்த வந்த 10 நாட்களும் மதனின் மனதைப் புரட்டிப் போட்டன. ஜமீலா அன்பை மழையாகப் பொழிந்தாள். குழந்தையைப் பார்ப்பது போன்று அவனைப் பார்த்துக் கொண்டாள். மதன் மனதிற்குள் தன்னை நினைத்து  மெயில் செக் பண்ணியபோது ஜெனிஃபரிடம் இருந்து மெயில் வந்திருப்பதைப் பார்த்தான்.

“ஹாய் மதன்,

உங்கூட சாட் பண்ணப்புறம் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? காட் இஸ் கிரேட். எனக்கு உன்னைப் பார்க்கணும்போல இருக்குப்பா. பெங்களூர் ஒரு தடவை வாயேன். இங்க ரெண்டு மூணு நாள் தங்கற மாதிரி வா. இங்க நிறைய நல்ல ஹோட்டல்ஸ் இருக்கு. நீ எங்காவது தங்கிக்கலாம். நாம மீட் பண்ணுவோம். 

பகல்ல நான் ஃப்ரீ தான். உன்கூட நிறையப் பேசணும்.

மதன், I still love you.”

மதன் அந்த மெயிலை டெலீட் செய்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலாவைப் பார்த்தான். அவள் அருகில் சென்று படுத்தபடியே அவளைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி இருந்தான். பல வித சிந்தனைகள் மனதிற்குள் ஓடியது.

‘எனக்கு நீ போதும்மா. வேற யாரும் வேண்டாம். எனக்கு எதனாலயோ மோசமா அலைபாயுற மனசை ஆண்டவன் கொடுத்திட்டான். அதைக் கட்டுப்படுத்த நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். என்னை விட்டு விலகிடாதே ஜமீலா. என்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து. என்னை ஆயுசுக்கும் நல்லவனா வாழ வை. தாயே..என் தாயே..என்னைக் காப்பாத்து என் தாயே’


(இரண்டு நாள் கழித்து தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

72 comments:

 1. எனக்கு நீ போதும்மா. வேற யாரும் வேண்டாம். எனக்கு எதனாலயோ மோசமா அலைபாயுற மனசை ஆண்டவன் கொடுத்திட்டான். அதைக் கட்டுப்படுத்த நீ என் பக்கத்துல இருந்தாலே போதும். என்னை விட்டு விலகிடாதே ஜமீலா. என்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து. என்னை ஆயுசுக்கும் நல்லவனா வாழ வை. தாயே..என் தாயே..என்னைக் காப்பாத்து என் தாயே’


  மனதார உண்மையாக உணர்ந்தாலே போதும் .வாழ்வு மேன்மை அடையும்

  ReplyDelete
 2. இந்த பதிவின் முடிவில் தப்பு செய்யும் மனதிற்கு ஒரு உறுத்தலாய் அமையும் படி முடித்து இருக்கிறீர்கள்.

  நல்ல பகிர்வு நண்பரே .

  ReplyDelete
 3. @M.R நன்றி நண்பரே..//இந்த பதிவின் முடிவில் தப்பு செய்யும் மனதிற்கு ஒரு உறுத்தலாய் அமையும் படி முடித்து இருக்கிறீர்கள்.// இப்போ பிரச்சினையே இந்த (தொடரும்) தான்.

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash தொடர்ந்து வடையை மிஸ் பண்ணும் தமிழ்வாசிக்கு கடும் கண்டனங்கள்.

  ReplyDelete
 5. nethu mathiyam potta part'i innum padikkala. athai padichuttu intha part'i padikkiren. padichuttu intha part'i padikkiren.

  ReplyDelete
 6. leelaikalin sensor officer naan thaan. kadantha irandu pathivukalai sensor'kku kaattaamal potta sengovi'kku kadum kandanangal. ini melum ithu pola nadanthaal sensor poruththuk kollaathu.

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash //leelaikalin sensor officer naan thaan.// நீங்க எப்பய்யா சென்சார் பண்ணியிருக்கீங்க..இன்னும் பிட்டு சேருன்னு தானே சொல்லி இருக்கீங்க!

  ஓவராகப் பேசினால் சென்சார் ஆஃபீசரின் லீலைகள் அடுத்த பகுதியில் இடம்பெறும்.

  ReplyDelete
 8. sensor officer'i thaakki pesum pathivar sengovi ozhiga.

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash //sensor officer'i thaakki pesum pathivar sengovi ozhiga.// ஷர்மிலி வாழ்க.

  ReplyDelete
 10. அச்சச்சோ!மிஸ் பண்ணிட்டனே?அங்க,இஞ்ச அலைஞ்சு வட போச்சே!பரவால்ல இன்னைக்கு பொண்டாட்டி சுட்ட வடை சாப்புட்டேன்!!!!!!!!!

  ReplyDelete
 11. @Yoga.s.FR //அச்சச்சோ!மிஸ் பண்ணிட்டனே?// நீங்க 27க்கு கமெண்ட் போட்டப்பவே இதை பப்ளிஷ் பண்ணிட்டேன். அதுக்குள்ள நிஜ வடை சாப்பிடப் போயிட்டீங்க.

  ReplyDelete
 12. நல்ல திருப்பம்!!!வண்டி ஓட்டுறப்போ இடம்,வலம் பாத்து ஓட்டுங்க!!!!!!!!!!!!

  ReplyDelete
 13. @Yoga.s.FR //நல்ல திருப்பம்!!!வண்டி ஓட்டுறப்போ இடம்,வலம் பாத்து ஓட்டுங்க!!!!!!!!!!!//

  அப்போ நேரா பார்க்க வேண்டாமா பாஸ்?

  ReplyDelete
 14. தமிழ்வாசி - Prakash said...

  vanakkamne.......///இங்கிலீசு?????ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்...............!

  ReplyDelete
 15. //Yoga.s.FR said...
  தமிழ்வாசி - Prakash said...

  vanakkamne.......///இங்கிலீசு?????.......//

  கோபப்படாதீங்கண்ணே..நம்ம பிரகாசும் தமிழ் ஆர்வலர் தான்..மொபைல்ல இருந்து சின்சியரா கமெண்ட் போடுறாரு. அதான் அப்படி!!

  ReplyDelete
 16. செங்கோவி said...
  @Yoga.s.FR //அச்சச்சோ!மிஸ் பண்ணிட்டனே?// நீங்க 27க்கு கமெண்ட் போட்டப்பவே இதை பப்ளிஷ் பண்ணிட்டேன். அதுக்குள்ள நிஜ வடை சாப்பிடப் போயிட்டீங்க.////அப்புடியே நே...........ரா பாத்த மாதிரி சொல்லுறீங்க!நிஜம் தாங்க!அத்தோட இன்னைக்கி எங்க ஊர்ல லோக்கல் எலெக்சன் இல்லீங்களா?அதான் ரிசல்ட்டு பாக்க வேற,வேற நியூஸ் பேப்பர பாத்துட்டிருந்தனா,மிஸ் பண்ணிட்டன்!பரவால்ல,பசங்க சாப்புடட்டும்,வடய!ரெண்டு நாள் கழிச்சு பாத்துக்கலாம்.

  ReplyDelete
 17. செங்கோவி said...அப்போ நேரா பார்க்க வேண்டாமா பாஸ்?///வண்டி ஓட்டுறப்போ பாருங்க!மத்தப்படி பாக்காதீங்க(பொண்ணுங்கள)நேரா பாத்தா கண்ண குத்திப்புடுவாளுங்க!

  ReplyDelete
 18. செங்கோவி said...
  @தமிழ்வாசி - Prakash //sensor officer'i thaakki pesum pathivar sengovi ozhiga.// ஷர்மிலி வாழ்க.///இன்பமே சூழ்க!எல்லோரும் வாழ்க!!!!!!!

  ReplyDelete
 19. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.

  ReplyDelete
 20. தொடர்ந்து கலக்குங்கள்..

  ReplyDelete
 21. யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அது ’சிங்கிள்’ பாத்ரூம் என்பதால் வரட்டும் என வெளியே நின்று கொண்டேன். பாபு கதவைத் திறந்துகொண்டு வந்தான். பார்த்ததும் வழக்கமான புன்னகை.//

  அவ்...அவ்...ஒரு லைவ் சோவை மிஸ்ட் பண்ணிட்டீங்களே மாப்ப்ளே.

  ReplyDelete
 22. மதனின் தடுமாறும் மன உணர்வினைத் தாங்கியவாறு பதிவு நகர்கிறது.

  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 23. //நான் பேயறைந்தது போல் ஆனேன்//அப்போ நீங்களும் பாத்துட்டீங்க..ம்ம்ம்..

  ReplyDelete
 24. புத்தகமா போடுவமா? ஆனா இது எலக்கியத்தில சேரணும்னா கொஞ்சம் அதிகமா டீட்டேயிலிங் குடுக்கணும் எந்தந்த இடத்திலன்னு உங்களுக்கு தெரியும்தானே!
  அப்புறம் அண்ணன் CHAT பண்ணுவீங்களா? :-)

  ReplyDelete
 25. @Reverie //தொடர்ந்து கலக்குங்கள்..// கலக்குவோம் ரெவரி.

  ReplyDelete
 26. @நிரூபன் //ஒரு லைவ் சோவை மிஸ்ட் பண்ணிட்டீங்களே மாப்ப்ளே.// எனக்கும் அதே ஃபீலிங்ஸ் தான் மாப்ளே.

  ReplyDelete
 27. @ஜீ... //கொஞ்சம் அதிகமா டீட்டேயிலிங் குடுக்கணும் எந்தந்த இடத்திலன்னு உங்களுக்கு தெரியும்தானே!// எனக்கு அந்த அளவுக்கு விவரம் கிடையாது தம்பி.

  ReplyDelete
 28. எல்லோரும் ஓட்டுப்பட்டைகளை ஒரே இடஹ்ட்துல தான் வைப்பாங்க ,அண்ணன் மட்டும் ஒன்றன் கீழ் ஒன்றா கேப் விட்டு வெச்சிருக்காரு. இதன் மூல்கம் நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா? ஹி ஹி

  ReplyDelete
 29. /யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அ//
  அட கடவுளே இப்பிடியுய்மா??

  ReplyDelete
 30. //“ஹாய் மதன்//
  இவர் எப்ப இங்க வந்தாரு??

  ReplyDelete
 31. @சி.பி.செந்தில்குமார் //கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா?// நிறுத்தும் உம்ம நீதி போதனையை..

  ReplyDelete
 32. @மைந்தன் சிவா //அட கடவுளே இப்பிடியுய்மா?? // அது கடவுளின் லீலை.

  ReplyDelete
 33. செங்கோவி said...

  பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.///அது!!!!!!!

  ReplyDelete
 34. Blogger "Rever"ie said...

  தொடர்ந்து கலக்குங்கள்..////இது "ரிவர்" இல்லீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!( நீர்த்தேக்கம்)

  ReplyDelete
 35. கதை எக்ஸ்பிரஸ் வேகத்துல போக ஆரம்பிச்சிடுச்சே....?

  ReplyDelete
 36. மைந்தன் சிவா said...
  //“ஹாய் மதன்//
  இவர் எப்ப இங்க வந்தாரு??§§§§எடேய்,அவர் வேறையடா!!!!!!!!!!!!

  ReplyDelete
 37. //////சி.பி.செந்தில்குமார் said...
  எல்லோரும் ஓட்டுப்பட்டைகளை ஒரே இடஹ்ட்துல தான் வைப்பாங்க ,அண்ணன் மட்டும் ஒன்றன் கீழ் ஒன்றா கேப் விட்டு வெச்சிருக்காரு. இதன் மூல்கம் நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா?///////

  ஒரு மேட்டருக்கும் அடுத்த மேட்டருக்கும் கேப் விடனும்........

  ReplyDelete
 38. சி.பி.செந்தில்குமார் said...

  எல்லோரும் ஓட்டுப்பட்டைகளை ஒரே இடத்துல தான் வைப்பாங்க ,அண்ணன் மட்டும் ஒன்றன் கீழ் ஒன்றா கேப் விட்டு வெச்சிருக்காரு. இதன் மூலம் நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா?ஹி!ஹி!!////எந்த விதமான முற்றுகைக்குள்(இராணுவ)இருந்தாலும் தேசியத்துக்கு ஆதரவாக "வாக்களிக்க" வேண்டும் என்பது!!!!

  ReplyDelete
 39. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கதை "எக்ஸ்பிரஸ்" வேகத்துல போக ஆரம்பிச்சிடுச்சே....?////இது அந்த(நாஞ்சில்)எக்ஸ்பிரஸ் இல்லீங்க!"செங்கோவி" எக்ஸ்பிரஸ்!!!!!!!

  ReplyDelete
 40. வினையூக்கி said...

  mmmmmm////ஏனுங்கோ,தொண்ட கட்டிடுச்சுங்களோ?முணுமுணுக்குறீங்கோ?நல்ல தேனு வாங்கி நாவுல தடவுங்கோ,சரியாயிடும்!

  ReplyDelete
 41. பன்னிக்குட்டி ராம்சாமி said......ஒரு மேட்டருக்கும் அடுத்த மேட்டருக்கும் கேப்.................விடனும்!////சினிமா தியேட்டரில இன்டர்வல் வுடுவாங்க இல்ல,அப்புடீன்னு தலைவரு சொல்ல வராரு!ஆனா தன்மானம்?!தடுக்குது!(பாதாம்பாலும் சாப்புடணும்!)

  ReplyDelete
 42. செங்கோவி said...
  @ஜீ... //கொஞ்சம் அதிகமா டீட்டேயிலிங் குடுக்கணும் எந்தந்த இடத்திலன்னு உங்களுக்கு தெரியும்தானே!// எனக்கு அந்த அளவுக்கு விவரம் கிடையாது தம்பி.§§§§§பச்சப் புள்ளகிட்டப் போயி?பப்ளிக்கா வேணாம்,மெயில்ல குடுங்க!(டீட்டெயில)

  ReplyDelete
 43. நிரூபன் said...

  யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன். அது ’சிங்கிள்’ பாத்ரூம் என்பதால் வரட்டும் என வெளியே நின்று கொண்டேன். பாபு கதவைத் திறந்துகொண்டு வந்தான். பார்த்ததும் வழக்கமான புன்னகை.//

  அவ்...அவ்...ஒரு லைவ் சோவை மிஸ்ட் பண்ணிட்டீங்களே மாப்ப்ளே.§§§§§அந்த பாத்ரூமிற்குள் போக மனமில்லாமல் அப்படியே திரும்பினேன்!!!!!!!!!!!

  ReplyDelete
 44. மைந்தன் சிவா said...
  /யாராவது போனால் நமக்கும் வந்திடுமே. எனவே நானும் பாத்ரூம் பக்கம் போனேன்.//
  அட கடவுளே இப்பிடியுமா??/////ஏண்டாப்பா,ஒனக்கு வரதேயில்லயா?

  ReplyDelete
 45. செங்கோவி said...
  @சி.பி.செந்தில்குமார் //கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா?// நிறுத்தும் உம்ம நீதி போதனையை..§§§§§சும்மாவாச்சுக்கும் கேட்டிருக்கலாமில்ல?ஜனநாயகமில்லீங்களா?

  ReplyDelete
 46. அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 47. சே.குமார் said...

  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.///Day after tomorrow!!!!

  ReplyDelete
 48. அவன் சும்மா இருந்தாலும் சண்டாள சிரிக்கி இவ சும்மாவே இருக்க மாட்டா போலருக்கே, நடுவுல ஹெச்.ஆர் வேற

  ReplyDelete
 49. உணர்வினைத் தாங்கியவாறு பதிவு நகர்கிறது.

  ReplyDelete
 50. நல்லா..அருமையா போகுது

  ReplyDelete
 51. // Yoga.s.FR said...
  வினையூக்கி said...

  mmmmmm////ஏனுங்கோ,தொண்ட கட்டிடுச்சுங்களோ?முணுமுணுக்குறீங்கோ?நல்ல தேனு வாங்கி நாவுல தடவுங்கோ,சரியாயிடும்!//

  அவரு நம்ம கல்லூரி நண்பர்..இந்த தொடர்ற வர்ற விசயத்தையெல்லாம் கண்ணால பாத்தவரு..அதான் அப்படி ஃபீல் பண்றாரு பாஸ்.

  ReplyDelete
 52. / Yoga.s.FR said...
  நிறுத்தும் உம்ம நீதி போதனையை..§§§§§சும்மாவாச்சுக்கும் கேட்டிருக்கலாமில்ல?ஜனநாயகமில்லீங்களா?//

  அவரு ஏடாகூடமா ஏதாவது சொல்லி குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குவாருங்க

  ReplyDelete
 53. // Yoga.s.FR said...
  சே.குமார் said...

  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.///Day after tomorrow!!!! // பாஸ், நீங்களே எல்லாருக்கும் பதில் சொல்லிட்டா, கடை ஓனரு நான் என்ன செய்ய?

  ReplyDelete
 54. // Heart Rider said...
  அவன் சும்மா இருந்தாலும் சண்டாள சிரிக்கி இவ சும்மாவே இருக்க மாட்டா போலருக்கே, நடுவுல ஹெச்.ஆர் வேற // இதே தான் நானும் அப்போ நினைச்சேன் ரைடர்.

  ReplyDelete
 55. / மாலதி said...
  உணர்வினைத் தாங்கியவாறு பதிவு நகர்கிறது. // நன்றி சகோதரி.

  ReplyDelete
 56. @குணசேகரன்... //நல்லா..அருமையா போகுது// நன்றி குணா.

  ReplyDelete
 57. ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்..!உங்கள வலை வீதியில அடிக்கடி சந்திச்சிருக்கேன்க.. இப்ப உங்கட படலையில குழ வைச்சிட்டு போறேங்க..

  ReplyDelete
 58. மதனோட மனக் குரங்கு அடங்கிடுச்சோ?

  ReplyDelete
 59. மனம் கலங்குபவர்களுக்கு கடைசி சில வரிகள்... காப்பாற்றும் ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. செங்கோவி said...

  // Yoga.s.FR said...
  சே.குமார் said...

  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.///Day after tomorrow!!!! // பாஸ், நீங்களே எல்லாருக்கும் பதில் சொல்லிட்டா, கடை ஓனரு நான் என்ன செய்ய?§§§§§ Escape!!!!!!!!!

  ReplyDelete
 61. @காட்டான் //உங்கள வலை வீதியில அடிக்கடி சந்திச்சிருக்கேன்க..// நானும் அப்படியே..’காட்டான் குழ போட்டான்’ வலைவீதியில் ஃபேமஸான கமெண்ட் ஆச்சே..இங்கேயும் முதல் குழ போட்டதில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 62. @சென்னை பித்தன் //மதனோட மனக் குரங்கு அடங்கிடுச்சோ?// அடங்கிடுமோ?

  ReplyDelete
 63. @மாய உலகம் வாழ்த்துக்கு நன்றி மாயா.

  ReplyDelete
 64. வேகமெடுத்துச் செல்லுது, விரைவா அடுத்த பதிவை எதிர்பார்க்க சொல்லுது.

  ReplyDelete
 65. இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ், ஏதாவது ஒன்ன சொல்லி மனச கெடுத்திடுவாங்க,
  இவங்களுக்கு மத்தில வால்றதே நமக்கு ஒரு பெரிய பொழப்பா போச்சு,

  ReplyDelete
 66. @ஸ்வீட் ஜல்சா //இவங்களுக்கு மத்தில வால்றதே நமக்கு ஒரு பெரிய பொழப்பா போச்சு,// ஆமா பாஸ்..அதுக்கு நம்ம வாலும் ஒரு காரணம் தானே பாஸ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.