Wednesday, July 27, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29


மதனுக்கு அம்மை சரியான இரண்டு நாளில் எனக்கு அம்மை போட்டது. 

”ஒரு தடவை வந்தா இன்னொரு தடவை வராதுன்னு சொல்வாங்களே” என்று மதனிடம் புலம்பினேன்.
“அப்போ போன தடவை உனக்கு சரியா அம்மை போடலையோ என்னவோ..மிச்சம் ஏதாவது இருந்திருக்கும்” என்றான் மதன்.

ஜமீலா தான் குற்றவுணர்ச்சியில் தவித்தாள். “எங்களால தானே இப்படி ஆச்சு?” என்று வருத்தப்பட்டாள்.

“அட, இதுல என்னங்க இருக்கு. அப்புறம் இன்னும் 10 நாளைக்கு இந்தப் பக்கம் வராதீங்க. மிச்சம் இருக்குறது நீங்க தான். எதுவா இருந்தாலும் இவன்கிட்ட சொல்லுங்க. போதும்” என்றேன். மதனும் ஆமோதித்தான்.

ஆனாலும் ஜமீலா கேட்கவில்லை. மூன்று வேளைக்கு சாப்பாடும் அவளே எடுத்து வந்தாள். தனியே வளர்ந்த எனக்கு ‘சகோதர’ உணர்வின் அர்த்ததை புரிய வைத்தாள். மோசமான திட்டுக்களைக் கூடத் தாங்கும் என்னால் அன்பைத் தாங்க முடிவதில்லை. மதனும் ஜமீலாவும் காட்டிய அன்பில் அழுதேன். அவர்கள் இல்லையென்றால் என்னைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது புரிந்தது. ஜமீலாவும் அதை உணர்ந்தாள்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்கண்ணே. இப்படியே எத்தனை நாளுக்கு இருப்பீங்க?” என்றாள். நன்றாக இருக்கும்வரை யார் தயவும் தேவையில்லை தான். ஆனால் கஷ்டம் என்று வந்துவிட்டால், தோள்சாய ஒரு ஒரே ஒரு ஆளாவது தேவை என்பதை உணர்ந்தேன்.

அதில் இருந்த முதல் சிக்கல் வேலை. ஒரு வருடக் காண்ட்ராக்ட் வேலையை நம்பி, யார் பெண் கொடுப்பார்கள்? எனவே ஆறு மாதத்தில் இந்த வேலையை பெர்மனெண்ட் ஆக்குவது அல்லது வேறு வேலைக்குத் தாவுவது என்ற முடிவுக்கு வந்தேன். மதனும் அதை ஒத்துக்கொண்டான்.

“எப்படியும் அடுத்த மாசம் எனக்கு யு.கே.விசா கிடைச்சிடும். நான் இன்னும் 2 மாசத்துல கிளம்பிடுவேன். நீயும் அப்புறம் வேற வேலை பார்த்துட்டுக் கிளம்பிடு” 

“சரிடா..தங்கச்சிக்கு பாஸ்போர்ட் எடுத்தாச்சா?”
“இல்லைடா..அட்ரஸ் ப்ரூஃப் எல்லாம் அப்பா வீட்டுக்குத் தான் இருக்கு. போலீஸ் வெரிஃபிகேசன் அங்க தான் போகும். என்ன செய்றதுன்னு புரியலை”

“நீ ஊருக்குப் போய் அப்பாவைப் பாரு. அவர் கோபக்காரர் தான். ஆனா உன்னைப் பார்த்தா மனசு இளகிடுவாரு. போ” என்றேன்.

மதன் தயங்கினான். ஜமீலாவும் வற்புறுத்த மதுரை கிளம்பினான்.

ல நாட்கள் பார்க்காத மகனைப் பார்த்ததும் மதன் அப்பாவால் அழுகையை அடக்க முடியவில்லை. “ஒரு நிமிசத்துல என்னை தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டியேப்பா. உன் மனசு கோணாம வளர்த்ததுக்கு இதான் பதில் மரியாதையாப்பா” என்று கலங்கினார்.

மதனும் அழுதான். பாசத்தின் முன் ஜாதிப்பற்று மறைந்தது.

“மருமவளைக் கூட்டிட்டு வா. இங்க நம்ம சொந்தக்காரங்க முன்னாடி சிம்பிளா இன்னொருக்கா கல்யாணம் நடத்திடுவோம்” என்றார்.

சொன்னபடியே சொந்த பந்தம் புடைசூழ கல்யாணத்தை நடத்திக்காட்டினார். பாஸ்போர்ட்டும் அப்ளை செய்தார்கள்.

மருமகளின் நல்ல குணத்தை சீக்கிரமே புரிந்து கொண்டார். “இனிமே என் பையனைப் பத்திக் கவலை இல்லை. என் மருமவ பாத்துப்பா” என்று சொந்தங்களிடம் சொல்லி மகிழ்ந்தார். ஜமீலாவும் ‘அப்பா..அப்பா” என அவர் மேல் பாசத்தைப் பொழிந்தாள்.

மாமனாருடன் இணைந்த சந்தோசத்தில் இருந்த ஜமீலாவிற்கு, அடுத்த மாதமே தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்தது. ஹார்ட் பேசண்டான அவர் மூன்றாவது அட்டாக்கில் இறந்துவிட்டார் என்றார்கள். தகவல் சொன்னவர்களே ‘நீ இங்கு வரவேண்டாம். அது பிரச்சினையை உண்டாக்கும்’ என்றார்கள். எங்களுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

ஜமீலாவை அவள் அம்மாவுடம் ஃபோனில் பேச வைத்தோம். அது அந்த இரு பெண்களுக்குமே ஆறுதலாக இருந்தது. 

யு.கே. விசா இண்டர்வியூ டேட் நெருங்கியது. பேங்க் பேலன்ஸில் குறிப்பிட்ட தொகை வைக்க வேண்டும் என்றார்கள். ஜமீலா தன் அக்கவுண்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்த 2 லட்சம் ரூபாயைக் கொடுத்தாள். மீதி வங்கி லோன் மூலம் திரட்டிக் கொண்டு இண்டர்வியூ அட்டெண்ட் செய்தான்.

யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.

மதன் இடிந்து போனான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

 1. யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.//

  என்னோட விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆகாததால நான் இடிஞ்சு போனன் தெரியுமா? (என்ன கொடுமைட இது)

  ReplyDelete
 2. ethirparatha idaththil thodarum...
  mmm... nadakkattum...

  ReplyDelete
 3. @KANA VARO //என்னோட விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆகாததால நான் இடிஞ்சு போனன் தெரியுமா? // ஓ..மதனை விட மோசமான ஆளா இருப்பீங்க போலிருக்கே!

  ReplyDelete
 4. @சே.குமார் எதிர்பாராத இடத்தில் வருவது தானே திருப்பம் குமார்?

  ReplyDelete
 5. //யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.

  மதன் இடிந்து போனான்.//
  பாவம் மதன்.பிறகு என்ன ஆச்சு?

  ReplyDelete
 6. present sir..
  படிச்சி அப்புறம் கமென்ட் போடுறேன்..

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash //meendum sensor pannaatha pathivu poturikinga// இதுல சென்சார் பண்ற அளவுக்கு ஒன்னும் இல்லை சார்!

  ReplyDelete
 8. //சென்னை பித்தன் said...

  பாவம் மதன்.பிறகு என்ன ஆச்சு?//

  பாவம் ஆச்சு சார்.

  ReplyDelete
 9. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  present sir..
  படிச்சி அப்புறம் கமென்ட் போடுறேன்..//

  ஓ..அப்போ இதுக்குப் பேரு கமெண்ட் இல்லையா?

  ReplyDelete
 10. // மோசமான திட்டுக்களைக் கூடத் தாங்கும் என்னால் அன்பைத் தாங்க முடிவதில்லை.//

  Excellent Nanba.

  ReplyDelete
 11. மதனுக்கு அம்மை சரியான இரண்டு நாளில் எனக்கு அம்மை போட்டது. >>>>

  சிக்கன் சாப்பிடு சரியாயிரும்.

  ReplyDelete
 12. “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்கண்ணே. இப்படியே எத்தனை நாளுக்கு இருப்பீங்க?” >>>>

  செம காமெடி....

  ReplyDelete
 13. லீலை ரொம்பவே சீரியஸா போகுது... கதாசிரியருக்கு என்னாச்சு?

  ReplyDelete
 14. சஸ்பென்ஸ் -ஆ முடிச்சிட்டீங்களே

  அடுத்த பாகம் உடனே போடுங்க நண்பரே

  ReplyDelete
 15. @M.R //அடுத்த பாகம் உடனே போடுங்க நண்பரே// வெள்ளி இரவு வரை பொறுங்க நண்பரே.

  ReplyDelete
 16. “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்கண்ணே. இப்படியே எத்தனை நாளுக்கு இருப்பீங்க?” என்றாள். நன்றாக இருக்கும்வரை யார் தயவும் தேவையில்லை தான். ஆனால் கஷ்டம் என்று வந்துவிட்டால், தோள்சாய ஒரு ஒரே ஒரு ஆளாவது தேவை என்பதை உணர்ந்தேன்./

  செண்டி மெண்டல் சீன் எல்லாம் மாப்பிளை போடுறாரு,
  மனசிற்குள் விருப்பம் இருந்திருக்கும், யாராச்சும் ரெக்கமண்ட் பண்ணிய உடனேம், இது தான் சான்ஸ் என்று கலியாணம் பண்ண
  ஓடியிருப்பீங்க;-)))

  ReplyDelete
 17. சஸ்பென்ஸ் ஆக முடிச்சிருக்கிறீங்க, அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்,
  மச்சி, எச் ஆர் மேடம் சுகிலா பற்றி ஏதாச்சும் அடுத்த பாகத்தில் வருமா;-)))

  ReplyDelete
 18. @நிரூபன் //எச் ஆர் மேடம் சுகிலா பற்றி ஏதாச்சும் அடுத்த பாகத்தில் வருமா;-)))//

  ஹா..ஹா..சுகிலாவுக்கு ஒரு ரசிகர் கிடைச்சாச்சு.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.