Saturday, July 30, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30


யாரும் எதிர்பாராத விதத்தில் அவனது விசா அப்ளிகேசன் ரிஜெக்ட் ஆனது.

மதன் இடிந்து போனான்.

சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே. எவ்வளவு குறைவான நபர்கள் பார்த்தார்களோ அவ்வளவு குறைவான வலி/வருத்தம் ஏற்படும். காதல் தோல்வி உட்பட எல்லாத் தோல்வியிலும் வருத்தத்தின் அளவு அறிந்தோரின் எண்ணிக்கையுடன் நேரடித் தொடர்பு உடையது.

மதன் வெளிநாடு செல்வதையும், என்னை அதற்காகவே கம்பெனிக்குக் கொண்டு வந்ததையும் எல்லோரிடமும் சொல்லி இருந்தான். என் கல்லூரி நண்பர்கள் முதல் எங்கள் மேனேஜர் வரை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் எப்படி விழிப்பது என்ற கவலையில் விழுந்தான்.

ஜமீலா ஆறுதலாய் இருந்து அவனைத் தேற்றினாள். ஆறுமாதம் கழித்து மீண்டும் முயல்வோம் என்றாள். நானும் எப்பவும் போல் ‘இதெல்லாம் சப்பை மேட்டரு..விடுடா மாப்ளை. அடுத்துப் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்த சில மாதங்களில் மதன் தெளிந்தான்.

எனக்கு என் வேலை பற்றிய கவலை அதிகம் ஆனது. ஒரு வருடம் கழித்து பெர்மனண்ட் செய்வார்களா என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன். மதனிடம் கேட்டேன்.

“நாம போய்க் கேட்டா பெர்மனண்ட் ஆக்குவோம்னு தான் சொல்வாங்க. அப்புறம் ஒரு வருசம் முடியவும் ஏதாவது கதை சொல்வாங்க. இந்த மேட்டர்ல உண்மையான நிலவரம் சுகீலாவுக்கு நல்லாத் தெரியும். அவகிட்ட பாபு கேட்டான்னா உண்மை வெளில வந்திடும். ” என்று சொல்லி பாபுவிடம் அழைத்துப் போனான்.

பாபுவிடம் எப்போது சென்றாலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இப்போதும் அப்படியே ஆனது. மிகவும் சின்சியராக வேலை செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் போய் நின்றதும் மதன் ஷாக் ஆனான்.

”பன்னிப்பயலே, ஏண்டா ஜிப்பை திறந்து போட்டிருக்கே?” என்றான் மதன்.

பாபுவும் பதறிப்போய் குனிந்து பார்த்தான். எழுந்து பூட்டியவாறே ”ப்ச்..பார்த்தியா..பூட்டாம விட்டுட்டாங்க பாரு..ச்சே!”என்றான்.

”யோகக்காரண்டா நீ” என்று மதன் பாபுவைப் பாராட்டிவிட்டு விஷயத்திற்கு வந்தான்.

பாபுவுக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தது.

“மதன், இந்த புராஜக்ட்டுக்கு டிசைன் ஒர்க் எல்லாம் இன்னும் 3 மாசத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் டிசைன்ல ஆட்களைக் குறைக்கப் போறாங்க, என்னையும் சேர்த்து. நான் பெர்மனெண்ட் எம்ப்ளாயி. எங்களுக்கே இப்படின்னா, செங்கோவியை எப்படி வச்சிருப்பாங்க? அதனால தான் அவரை காண்ட்ராக்ட்ல எடுத்தது. உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்”

“எனக்குத் தெரியாது பாபு.” என்றான் மதன்.

அடுத்த கட்ட நடவடிக்கை மீண்டும் வேலை தேடும் படலம் என்று புரிந்து போனது. நண்பர்களுக்கு தகவல் பறந்தது. எல்லோரும் தெரிந்த இடங்களில் விசாரித்தார்கள். மும்பையில் ஒரு கம்பெனிக்கு ஆள் தேவையென்றும் அட்வெர்டைஸ்மெண்ட் கொடுக்காமலேயே ஆள் எடுப்பது தெரிய வந்தது. ரெசியூம் ரெடி பண்ணி அனுப்பி வைத்தேன். இண்டர்வியூவிற்கு வரச்சொல்லி அழைப்பு வர, மும்பை சென்று அட்டெண்ட் செய்தேன். வேலையும் கிடைத்தது.

மதனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான். சென்னை திரும்பியதும், ரிசைன் லெட்டர் கொடுத்தேன். கம்பெனி பதறியது. இன்னும் 4 மாதம் நான் இருந்தால் நல்லதே என்று யோசித்தது. ‘ஒரு வருடத்தில் பெர்மனெண்ட் ஆக்குகிறோம்’ என்று என் மேனேஜர் மூலம் தூது விட்டது.

நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன். “நாங்க ஐயா பெர்மனெண்ட் பண்ணுங்க, பண்ணுங்கன்னு கெஞ்சுவோம். அப்போல்லாம் பெர்மனெண்ட் ஆக்க மாட்டாங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் தகவல் சொல்லி போராடி வேற வேலை வாங்கினதும் கூசாம ‘அதே சாலரி தர்றோம், இருந்துக்கோ’ன்னு சொல்வாங்களா? நாளைப்பின்ன நான் யார்கிட்டயாவது வேலைக்கு ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேட்க முடியுமா?” அவர் நல்லவர். “இவங்க கிடக்காங்க. நீங்க போங்க தம்பி” என்றார்.

வேலையில் இருந்து ரிலீவ் ஆகி ஊருக்குச் சென்றேன். 

மும்பை இண்டர்வியூ சென்றபோது வேறொரு தமிழரும் வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கையில் மொபைல் நம்பர் பரிமாறிக்கொண்டோம். அவர் திடீரென்று அழைத்தார்.

“செங்கோவி, டெல்லில ஒரு கம்பெனிக்கு அர்ஜெண்டா ஆள் தேவைப்படுது. புராஜக்ட் கையில இருக்கு. ஆனா ஆள் இல்லாம கதறிக்கிட்டு இருக்காங்க. மும்பையை விட நல்லா இருக்கும். உடனே ரெசியூம் அனுப்புங்க”என்று மெயில் ஐடி தந்தார். 

அருகில் இருந்த பிரௌசிங் செண்டர் போய் மெயில் அனுப்பி விட்டு வெளியே வந்தேன். மொபைல் ரிங்கியது.

“ஹலோ..இஸ் இட் மிஸ்டர் செங்கோவி..பைப்பிங் எஞ்சினியர்?”
“எஸ்”
“நாங்க டெல்லில இருந்து கூப்பிடறோம். உங்க சிவி பார்த்தோம். யூ ஆர் செலக்ட்டேட்” என்றார் அந்தப் புண்ணியவான்.

‘என்னடா இது..பொதுவாக ரெண்டு மணி நேரம் இண்டர்வியூ என்ற பெயரில் டார்ச்சர் செய்து தானே வேலை தருவார்கள்? இதென்ன மன்னார்&மன்னார் கம்பெனியா?” என்று சந்தேகம் வந்தது.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

“செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?

(நாளை...தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

 1. annan konja naalaa leelaiyil thannai patriye athigama solraar. maranrthaapla suyasarithai'yai inge ezhutharaar'nu ninaikkiren.

  ReplyDelete
 2. அடடா வட போச்சே

  ReplyDelete
 3. //maranrthaapla suyasarithai'yai inge ezhutharaar'nu ninaikkiren.// ச்சே..ச்சே..அது இன்னும் ஆபாசமால்ல இருக்கும்!

  ReplyDelete
 4. //M.R said...
  அடடா வட போச்சே//

  வடை போனா என்ன பாஸ்..லீலைகள் இருக்கே!

  ReplyDelete
 5. செங்கோவி said...
  //maranrthaapla suyasarithai'yai inge ezhutharaar'nu ninaikkiren.// ச்சே..ச்சே..அது இன்னும் ஆபாசமால்ல இருக்கும்!

  அப்பிடியா .அப்ப என் மெயிலுக்கு தனியா அனுப்பிடுங்க

  ReplyDelete
 6. leelaiyil eppadi velaiyil join pannuvathu ena technical pathivu ezhutharaare. leelai sarakku illaiyaa?

  ReplyDelete
 7. // சந்தேகம் வந்தது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார். “செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?” //

  இது பாம்பே இன்டர்வியு சக தமிழன் பண்ண சதி வேலை மாதிரி இருக்கு.

  ReplyDelete
 8. //M.R said...
  அப்பிடியா .அப்ப என் மெயிலுக்கு தனியா அனுப்பிடுங்க //

  எப்படிப் போனாலும் விட மாட்டாங்க போலிருக்கே.

  ReplyDelete
 9. தமிழ்10 குத்தியாச்சு

  ReplyDelete
 10. //தமிழ்வாசி - Prakash said...
  leelai sarakku illaiyaa? //

  வேற லின்க் வேணுமாய்யா..

  ReplyDelete
 11. //
  உண்மை said...
  இது பாம்பே இன்டர்வியு சக தமிழன் பண்ண சதி வேலை மாதிரி இருக்கு.//

  எனக்கும் அப்படித் தான் தோணுச்சு உண்மை!

  ReplyDelete
 12. //
  M.R said...
  தமிழ்10 குத்தியாச்சு//

  விட்டா மவுண்ட் ரோட்ல ஃப்ளக்ஸ் போர்டு வச்சுச் சொல்வாரு போலிருக்கே..நன்றிங்க.

  ReplyDelete
 13. ஹி ஹி ஒரு விளம்பரம் ....

  ReplyDelete
 14. //M.R said...
  ஹி ஹி ஒரு விளம்பரம் ..//

  ஓட்டுப் போடறதெல்லாம் சீக்ரெட்யா...சூப்பர் ஸ்டார் மாதிரிப் பண்ணக்கூடாது சரியா?

  ReplyDelete
 15. ஓகோ..

  சூப்பர் ஸ்டார் அப்பிடியா ...

  ReplyDelete
 16. சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே. எவ்வளவு குறைவான நபர்கள் பார்த்தார்களோ அவ்வளவு குறைவான வலி/வருத்தம் ஏற்படும்.


  உண்மையான வரிகள் இல்லை இல்லை வார்த்தைகள்

  ReplyDelete
 17. ஓ..இப்பதான் பதிவையே படிக்கிறீங்களா..கிழிஞ்சது!

  ReplyDelete
 18. மனமத லீலையை வென்றார் உண்டோ...

  ReplyDelete
 19. //யோகக்காரண்டா நீ” என்று மதன் பாபுவைப் பாராட்டிவிட்டு.//

  யொகக்காரகார பதிவுங்க....ஹி ஹி

  ReplyDelete
 20. ஸப்பா ஐஸ் வச்சாச்சு அப்படியே நம்ம விளம்பர்த்த ஏத்திரவேண்டியதான்...

  ReplyDelete
 21. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  ReplyDelete
 22. //சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே. எவ்வளவு குறைவான நபர்கள் பார்த்தார்களோ அவ்வளவு குறைவான வலி/வருத்தம் ஏற்படும். //
  அனைவருக்கும் ஏற்படும் அனுபவம்.

  ReplyDelete
 23. //அருகில் இருந்த பிரௌசிங் செண்டர் போய் மெயில் அனுப்பி விட்டு வெளியே வந்தேன். மொபைல் ரிங்கியது.//
  என்னுடைய மொபைல் போன் பாடும் பாஸ்!

  ReplyDelete
 24. இப்ப தான் ஓட்டு போட்டேன்.

  ReplyDelete
 25. அண்ணன் எப்பவும் 12 டூ 12.30 பதிவு போட்டுடறாரே? அதன் மர்மம் என்ன?

  ReplyDelete
 26. அருகில் இருந்த பிரௌசிங் செண்டர் போய் மெயில் அனுப்பி விட்டு வெளியே வந்தேன். மொபைல் ரிங்கியது.//ரிங்கியதுஇது உங்கள் கண்டு பிடிப்பா? nice .

  ReplyDelete
 27. அல்லோ.... அமேரிக்காவா...... ப்ரதர் மார்க் இருக்கானா....?

  ReplyDelete
 28. காதல் தோல்வி உட்பட எல்லாத் தோல்வியிலும் வருத்தத்தின் அளவு அறிந்தோரின் எண்ணிக்கையுடன் நேரடித் தொடர்பு உடையது //

  Fantastic ... Waiting for Madhan's UK and your USA episodes ...

  ReplyDelete
 29. // மாய உலகம் said...
  ஸப்பா ஐஸ் வச்சாச்சு அப்படியே நம்ம விளம்பர்த்த ஏத்திரவேண்டியதான்...// ம்..ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்.

  ReplyDelete
 30. // FOOD said...

  அனைவருக்கும் ஏற்படும் அனுபவம்.// ஆமாம் சார், அந்த அனுபவம் அனைவருக்கும் பொதுவானது.

  ReplyDelete
 31. // மைந்தன் சிவா said...
  என்னுடைய மொபைல் போன் பாடும் பாஸ்! // அடேங்கப்பா...அதிசயம் தான்.

  ReplyDelete
 32. // தமிழ்வாசி - Prakash said...
  இப்ப தான் ஓட்டு போட்டேன். // சரி, அப்போ உங்களுக்கு குஷ்பூ மாதிரி புள்ளை பொறக்கட்டும்!

  ReplyDelete
 33. // சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணன் எப்பவும் 12 டூ 12.30 பதிவு போட்டுடறாரே? அதன் மர்மம் என்ன? // இங்க 9.30 டூ 10..அதான் மர்மம்.

  ReplyDelete
 34. //குணசேகரன்... said...
  ரிங்கியதுஇது உங்கள் கண்டு பிடிப்பா? nice .// தெரியலை பாஸ்.

  ReplyDelete
 35. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அல்லோ.... அமேரிக்காவா...... ப்ரதர் மார்க் இருக்கானா....? // ப்ரதர்கூட மட்டும் தான் பேசுவீங்களா?

  ReplyDelete
 36. //வினையூக்கி said...
  Fantastic ... Waiting for Madhan's UK and your USA episodes .// USA எபிசோட் எழுதும் எண்ணம் இல்லை பாஸ்..டைரக்டா யூ.கே தான்.

  ReplyDelete
 37. //middleclassmadhavi said...
  interesting! // ரொம்ப நன்றிக்கா.

  ReplyDelete
 38. சூப்பர்ணே! கலக்கலா போகுது! அப்புறம் உங்க USA கில்மா எல்லாம் வருமா? :-)

  ReplyDelete
 39. @ஜீ... கில்மாவா? அப்படீன்னா என்ன ஜீ? ஏதாவது புதுமுக நடிகையா?

  ReplyDelete
 40. மாப்ள நீங்க பெரிய ஆளுங்க.......பகிர்வுக்குநன்றி !

  ReplyDelete
 41. @விக்கியுலகம் யோவ், நான் பெரிய ஆளுன்னு இப்ப தான் தெரியுதா? ’நானா யோசிச்சப்பவே’ தெரிய வேணாம்?

  ReplyDelete
 42. வணக்கம் மாப்பிளே,

  //மதன் இடிந்து போனான்.//

  ஏன் மதன் இடிந்து போனான், வேண்ணா எடுத்து ஒட்ட வைக்க வேண்டியது தானே;-))

  ReplyDelete
 43. சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே. எவ்வளவு குறைவான நபர்கள் பார்த்தார்களோ அவ்வளவு குறைவான வலி/வருத்தம் ஏற்படும். காதல் தோல்வி உட்பட எல்லாத் தோல்வியிலும் வருத்தத்தின் அளவு அறிந்தோரின் எண்ணிக்கையுடன் நேரடித் தொடர்பு உடையது.//

  மாப்ளே, நீங்க ரொம்ப அனுபவிச்சு எழுதுறீங்க,
  ஹா...ஹா...

  ReplyDelete
 44. சைக்கிளில் செல்கையில் கீழே விழுந்து விட்டால், முதலில் நாம் பார்ப்பது யாராவது பார்த்துவிட்டார்களா என்பதையே//

  இதிலை நம்ம கௌரவத்தை மிக மிகச் சோதிக்கிற விஷயம் என்னவென்றால், கூடப் படிக்கிற பொண்ணுங்க யாராவது வாறாங்களா என்பது தான்;-)))

  ReplyDelete
 45. பாபுவிடம் எப்போது சென்றாலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இப்போதும் அப்படியே ஆனது. மிகவும் சின்சியராக வேலை செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் போய் நின்றதும் மதன் ஷாக் ஆனான்.

  ”பன்னிப்பயலே, ஏண்டா ஜிப்பை திறந்து போட்டிருக்கே?” என்றான் மதன்.//

  யோ, மாப்பு உங்களுக்கு எப்போ போகனும், எந்த டைம்மிலை போகனும் என்று தெரியாது;-)))

  கொடுமை.

  ReplyDelete
 46. “செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

  அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?//

  ஆகா....நம்ம மசிக்கு அதிஷ்டமா....இதுவா நீங்கள் அமெரிக்காவில் ஒர்க் பண்ணியதன் பின்னணி, அடுத்த சுவையான பகுதியினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 47. இந்தத் தொடரின் வெற்றிக்கான காரணங்கள்,
  ஒவ்வோர் தொடரிலும், எங்காவது ஓரிரு வரிகளில் வாசகர்கள் சலிப்படையக் கூடாது எனும் நல் நோக்கத்தில் நகைச்சுவைகளைச் சேர்த்திருப்பது,
  ஒவ்வோர் அங்கத்திலும் தொய்வின்றிச் சுவாரஸ்யமாகப் பதிவினை நகர்த்துவது.

  கலக்கல் பதிவு பாஸ், தொடர்ந்தும் கலக்குங்கள், வெகு விரைவில் நூலுருவில் கொண்டு வாருங்கள்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.