Sunday, July 31, 2011

மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31

“செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?

மதனுக்கு கால் பண்ணினேன். அவனும் ஒரு சந்தோசமான செய்தியை வைத்திருந்தான்.

“நீ நாய்மாமன் ஆகப் போறடா” என்றான்.

”என்னடா சொல்றே?” என்றேன்.

“ஜமீலா கன்சீவ் ஆயிருக்காடா”

“அப்படியா..அப்போ நீ கிழவன் ஆயிட்டயா...சந்தோசம்டா” என்றேன்.

பிறகு டெல்லி விஷயத்தைச் சொன்னேன்.

“அமெரிக்காவா? நல்ல கம்பெனியான்னு விசாரிடா. ஏதாவது டுபாக்கூர் கம்பெனியா இருக்கப்போகுது” என்றான்.

கம்பெனிப் பெயர் சொன்னேன். 

”அந்தக் கம்பெனியா..அய்யர் அங்க தான்டா இருக்கான். ஃபோன் நம்பர் தர்றேன். பேசு” என்றான்.

அய்யர் என்று அழைப்பட்ட கோபால கிருஷ்ண அய்யங்கார், நான் சென்னைக் கம்பெனிக்கு வரும் முன் இங்கு வேலை பார்த்தவன். எங்களுக்கு ஜூனியர். எனக்கு நேரடித் தொடர்பில்லை என்பதால் தயங்கியவாறே அழைத்தேன்.

“சின்னக் கம்பெனி பாஸ். புதுசு. ஆனால் கை நிறையக் காசு. வேற ஒன்னும் பிரச்சினை கிடையாது. இவங்களுக்கு சீனா, சிங்கப்பூர்னு பல இடங்கள்ல புராஜக்ட் போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் வாங்க” என்றான். சந்தோசமாக அந்த வேலைக்கு ஒத்துகொண்டேன்.

மும்பைக் கம்பெனிக்கு மெயில் அனுப்பி ‘உடனே சேர முடியாது. மூன்று மாதம் டைம் வேண்டும்’ என்றேன். அவர்களும் சரியென்று சொல்ல, அதை ஒரு சேஃப்டிக்கு க்ளோஸ் பண்ணாமல் வைத்துகொண்டேன்.

நண்பர்களுக்கு விஷயம் பரவியது. எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி “அப்போ, மதன்?” என்பது தான்.

நெருங்கிய நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். “என்னடா மாப்ளே, நீ வெளிநாடு போறதால கம்பெனியைப் பார்த்துக்க ஆள் வேணும்னு அவனைக் கொண்டு வந்தே. இப்போ அவன் கிளம்பிட்டான். அப்போ கம்பெனியை நீ தான் பார்த்துக்கப்போறியா?” என்றார்கள்.

கம்பெனியிலும் இந்தப் பேச்சு தொடர்ந்து. “இவர் கிளம்புவாருன்னு பார்த்தா, இவருக்கு ஆப்பு வைச்சிட்டு அவர் கிளம்பிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

மதன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானான். நண்பனின் வளர்ச்சியில் கோபம் கொள்ள ஒன்றும் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க அவமானமாக இருந்தது.

ஜமீலாவும் நேரம் காலம் புரியாமல் “பரவாயில்லைங்க..நம்மால தான் முடியலை. அண்ணனாவது போறாரே” என்றாள்.

ஜமீலா தன்னை குத்திக்காட்டுவதாக மதன் நினைத்தான்.

மதனின் மேனேஜரும் “அவர் போனா என்ன மதன்? எனக்கு நீங்க இருக்குறதே போதும்” என்று குத்தினார்.

என்னைப் பற்றிப் பேசுவதையே வெறுக்கத்தொடங்கினான் மதன். தொடர்ந்து என் மீதும் அந்த வெறுப்பு படிந்தது.

“அமெரிக்கா ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. உலகத்துலயே கேவலமா இங்க்லீஸ் பேசுறது அமெரிக்கன்ஸ் தான். பெட்ரோலுக்காக அவங்க பண்ண அநியாயம் கொஞ்சநஞ்சமா? எத்தனை போர்..” என்று அமெரிக்காவையும் திட்டித் தீர்த்தான்.

எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. நண்பர்களிடம் விடைபெற்று முதல் விமானப் பயணத்தை அமெரிக்கா செல்வதன் மூலம் துவக்கினேன்.

என் கல்லூரி நண்பன் பழனிக்கு மதனின் நிலை நன்றாகப் புரிந்தது. என்னை வழியனுப்பி விட்டு மதனிடம் பேசும்போது, மதனின் பிரச்சினையை அவன் புரிந்து கொண்டான். பிறகு சில மாதம் கழித்து என்னிடம் சாட்டில் விஷயத்தைச் சொன்னான் பழனி.

“அவன் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிருக்கான்யா. அவனுக்கும் யூ.கே.ல ஏதாவது வேலை கிடைக்கான்னு பாரு. ஐரோப்பா போகலைன்னா அவன் மெண்டல் ஆயிடுவான் போலிருக்கு”

எனக்கு கவலையாய் இருந்தது. சென்னைக் கம்பெனி நண்பர்களிடம் பேசினேன். ஐரோப்பாவில் உள்ள சில கம்பெனிகளின் லிஸ்ட் நண்பர்களால் தேடி எடுக்கப்பட்டு, மதனுக்கு கொடுக்கப்பட்டது. மதன் தீவிரமாய் வேலை தேட ஆரம்பித்தான்.

நான் தொடர்ந்து அவனிடம் பேசியவாறே இருந்தேன். அவனும் என்னிடம் வழக்கம்போல் பேசியபடியே இருந்தான். 

ஜமீலா அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மதன் சந்தோசத்தின் உச்சிக்கே போனான். எப்போதும் தன் மகன் சந்தோசமாய் இருக்கவேண்டும் என ‘சந்தோஷ்’ என்று பெயரிட்டான்.

வெகுநாட்கள் எங்களுடன் தொடர்பற்று இருந்த கல்லூரி நண்பன் சிவா, திடீரென மதனைத் தொடர்பு கொண்டான். மதனை அவனால் மறக்க முடியவில்லை போலும். பிரவீணா மேட்டரில் கட்டி உருளாத குறையாய் சண்டை போட்டவர்கள் ஆயிற்றே.

“சிவா, நல்லா இருக்கிறயா..இப்போ எங்கடா இருக்கே?” என்றான் மதன்.

“யூ.கே.ல” என்றான் சிவா.
”யூ.கேவா? அங்க நீ எப்படிடா போனே?”
கம்பெனி தன்னை அங்கு ஒரு புராஜக்ட்டுக்கு அனுப்பியதையும் தொடர்ந்து மேற்படிப்புக்காக தான் அங்கேயே தங்கிவிட்டதையும் சிவா சொன்னான்.

“அப்புறம் மதன். பெர்சனல் லைப் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
“ஒரு பையன் இருக்காண்டா. ஒன்னும் பிரச்சினை இல்லை. அப்புறம் யூ.கே.போக என்னென்ன வழில ட்ரை பண்ணலாம். சொல்லு.”

தொடர்ந்து ஐரோப்பா செல்ல எளிதான வழிகள் என்னென்ன என்றும் எடுத்துச் சொன்னான்.

சிவாவின் அறிவுரைகள் மதனுக்கு உதவியாய் இருந்தன. அடுத்த சில மாதங்களில் நார்வேயில் ஒரு வேலையை வாங்கினான் மதன்.

தன் நெடுநாள் கனவான நார்வே வேலை கிடைத்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடத் துவங்கினான்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

 1. இனிய இரவு வணக்கம் மச்சி,

  ReplyDelete
 2. வணக்கம் மாப்ளே.

  ReplyDelete
 3. //
  தமிழ்வாசி - Prakash said...
  nadu nisi vaazhthukkal//

  வாழ்த்தெல்லாம் எதற்கய்யா..வடை போச்சே?

  ReplyDelete
 4. america poneengalaa. anga white color figures patri oru pathivu podumaiyya

  ReplyDelete
 5. //
  தமிழ்வாசி - Prakash said...
  anga white color figures patri oru pathivu podumaiyya //

  ஹலோ..ஹலோ..என்ன பாஸ்..நீங்க சொல்றது ஒன்னுமே கேட்கலையே..ஏதோ சிக்னல் பிராப்ளம்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. //ஓ...நீ நாய்மாமன் ஆகப் போறடா”//

  புரியல்ல பாஸ்... தாய் மாமனா நாய் மாமனா?

  ReplyDelete
 7. //
  மதுரன் said...

  புரியல்ல பாஸ்... தாய் மாமனா நாய் மாமனா? //

  தாய் மாமன் தான்...மதன் கிண்டலாக நாய் மாமன் என்று சொன்னான்.

  ReplyDelete
 8. பாஸ் ஒண்ணுமே புரியல்ல... ஆரம்பத்திலைருந்து படிச்சிட்டு அப்புறமா வாறன்

  ReplyDelete
 9. “செங்கோவி, இது பெரிய புராஜக்ட். வேலை அமெரிக்கால. அங்க போறதுல உங்களுக்கு அப்ஜெக்சன் ஏதும் இல்லையே?”

  அமெரிக்காவா..அப்ஜெக்சனா..என்னாங்கடா பேசுறீங்க..எவனாவது நம்மளை வைச்சு காமெடி கீமெடி பண்றானா?//

  அவ்...அவ்...அமெரிக்கா என்றால், நாம மாட்டேன்னு சொல்லுவோமா,

  ReplyDelete
 10. யோ...ப்ளாக் ஓனரு, நான் ஒருத்தன் வணக்கம் சொல்லிட்டு, முதல் கமெண்ட் போட்டிருக்கேன், கண்டுக்கவே இல்லை,. இது என்ன நியாயம் மாப்பு.

  ReplyDelete
 11. “ஓ...நீ நாய்மாமன் ஆகப் போறடா” என்றான்.//

  என்னது தாய் மாமனா அல்லது நாய் மாமனா((((((((((((((((((;@##$#$#%#$#ஈ$ஓ#ஓ#ஈஓ

  ReplyDelete
 12. “அப்படியா..அப்போ நீ கிழவன் ஆயிட்டயா...சந்தோசம்டா” என்றேன்.//

  ஓவர் குசும்பையா உமக்கு,

  ReplyDelete
 13. //
  செங்கோவி said...
  வணக்கம் மாப்ளே.//

  நிரூ, இது உங்களுக்கு போட்ட பதில் தான். இடையில் பிரகாஷ் புகுந்ததால் அவருக்குன்னு நினைச்சுட்டீங்களா?

  ReplyDelete
 14. //மதுரன் said...
  பாஸ் ஒண்ணுமே புரியல்ல... ஆரம்பத்திலைருந்து படிச்சிட்டு அப்புறமா வாறன்//

  இது தொடர் பாஸ்..பாதில படிச்சா எப்படி புரியும்?

  ReplyDelete
 15. அண்ணன் அமேரிக்காவுக்குலாம் போயிருக்காரு போல, பெரிய கைதான்... அண்ணே வணக்கம்ணே...!

  ReplyDelete
 16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் அமேரிக்காவுக்குலாம் போயிருக்காரு போல, பெரிய கைதான்..// என்னது அமெரிக்கா போனா கை பெருசாயிடுமா?

  ReplyDelete
 17. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் அமேரிக்காவுக்குலாம் போயிருக்காரு போல, பெரிய கைதான்..// என்னது அமெரிக்கா போனா கை பெருசாயிடுமா?
  //////

  இதுக்கு என்ன பதில் சொல்வேன்னு தெரியும்ல.... அதுனால அப்படியே விட்டுடுறேன்....!

  ReplyDelete
 18. ///
  தன் நெடுநாள் கனவான யூ.கே.வேலை கிடைத்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடத் துவங்கினான்.///////

  மறுபடியுமா?

  ReplyDelete
 19. நல்லாவே தெரியும்ணே..அடக்குங்க..அடக்குங்க.

  ReplyDelete
 20. /////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  மறுபடியுமா? //

  இதுவரை வந்தது ட்ரையல்ணே!

  ////////

  அடங்கொன்னியா... அப்போ மறுபடியும் மொதல்ல இருந்தா..... சியர்ஸ்...........

  ReplyDelete
 21. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  மறுபடியுமா? //

  இதுவரை வந்தது ட்ரெய்லர்ணே!

  ReplyDelete
 22. ////செங்கோவி said...
  நல்லாவே தெரியும்ணே..அடக்குங்க..அடக்குங்க.

  //////

  கற்பூரம்யா நீரு..... பச்சக்குன்னு புடிச்சிட்டீங்களே....!

  ReplyDelete
 23. என்னைப் பற்றிப் பேசுவதையே வெறுக்கத்தொடங்கினான் மதன். தொடர்ந்து என் மீதும் அந்த வெறுப்பு படிந்தது//

  அடடா...ஈகோவைப் பத்த வைக்கிறதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறதே,

  ReplyDelete
 24. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கற்பூரம்யா நீரு..... பச்சக்குன்னு புடிச்சிட்டீங்களே....! //

  அப்படில்லாம் இல்லை பாஸ்.

  ReplyDelete
 25. ஆகா..சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது கதை, ஆமா செங்கோவிக்கு எப்போ கலியாணம் ஆச்சு எனும் விடயமும் கதையில் வருமா?

  ReplyDelete
 26. வணக்கம் நிரூ...வணக்கம் நிரூ...வணக்கம் நிரூ...

  ReplyDelete
 27. //
  நிரூபன் said...
  ஆகா..சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது கதை, ஆமா செங்கோவிக்கு எப்போ கலியாணம் ஆச்சு எனும் விடயமும் கதையில் வருமா?//

  அதை ஏன்யா ஞாபகப்படுத்துறீங்க..ஒரு மனுசனை குஜாலா இருக்க விடுறாங்களா?

  ReplyDelete
 28. ////செங்கோவி said...
  வணக்கம் நிரூ...வணக்கம் நிரூ...வணக்கம் நிரூ...
  /////////

  ஆகா வணக்கம் போடுறத பாத்தா நிறைய ராணுவ ரகசியங்கள் இருக்கும் போல தெரியுதே? இன்னிக்கு இங்கேயே தங்கிட வேண்டியதுதான்...... நிரூ, விடாதீங்க, அப்படித்தான்.... நல்லா கேள்வி கேளுங்க....

  ReplyDelete
 29. ராம்சாமியண்ணே.வணக்கம் எதுக்குன்னா...//
  நிரூபன் said...
  யோ...ப்ளாக் ஓனரு, நான் ஒருத்தன் வணக்கம் சொல்லிட்டு, முதல் கமெண்ட் போட்டிருக்கேன், கண்டுக்கவே இல்லை,.//

  இதுக்கு!

  ReplyDelete
 30. /////செங்கோவி said...
  ராம்சாமியண்ணே.வணக்கம் எதுக்குன்னா...//
  நிரூபன் said...
  யோ...ப்ளாக் ஓனரு, நான் ஒருத்தன் வணக்கம் சொல்லிட்டு, முதல் கமெண்ட் போட்டிருக்கேன், கண்டுக்கவே இல்லை,.//

  இதுக்கு!

  ////////

  வெளங்கிருச்சு.. நல்லா வெளங்கிருச்சு.....

  ReplyDelete
 31. அமெரிக்கா சென்ற ஆற்றலரசு!

  ReplyDelete
 32. //நான் தொடர்ந்து அவனிடம் பேசியவாறே இருந்தேன். அவனும் என்னிடம் வழக்கம்போல் பேசியபடியே இருந்தான். //
  ஆனா அந்த பேச்சில் நட்பு ஒரு பக்கம்தானே இருந்திருக்கும்!

  ReplyDelete
 33. //சிவாவின் அறிவுரைகள் மதனுக்கு உதவியாய் இருந்தன. அடுத்த சில மாதங்களில் நார்வேயில் ஒரு வேலையை வாங்கினான் மதன்.//
  நல்ல வேளை!

  ReplyDelete
 34. @FOOD//ஆனா அந்த பேச்சில் நட்பு ஒரு பக்கம்தானே இருந்திருக்கும்!// ஆமாம் சார், அப்படித் தான் இருந்தது.

  ReplyDelete
 35. என்னது நாய்மாமணா? மதனுக்கு ரொம்ப தான் நக்கல்..

  ReplyDelete
 36. \\”என்னடா சொல்றே?” என்றேன்.

  “ஜமீலா கன்சீவ் ஆயிருக்காடா”

  “அப்படியா..அப்போ நீ கிழவன் ஆயிட்டயா...சந்தோசம்டா” என்றேன்\\
  குசும்புக்கு எதிர் குசும்பு பலே பலே

  ReplyDelete
 37. அண்ணே 'அமெரிக்காவில் செங்கோவி' ஒரு முழு நீள சாகசத் தொடர் ஒண்ணும் எழுதலாமே?
  அல்லது,
  சென்கோவி : ஒன்றாம் அத்தியாயம் - நியூயார்க்
  இது எப்பூடி?

  ReplyDelete
 38. @!* வேடந்தாங்கல் - கருன் *! அடடா..கருன் பதிவைப் படிச்சிட்டாரு போலிருக்கே.

  ReplyDelete
 39. @கோகுல் //குசும்புக்கு எதிர் குசும்பு பலே பலே // நன்றி கோகுல்.

  ReplyDelete
 40. @ஜீ... //சென்கோவி : ஒன்றாம் அத்தியாயம் - நியூயார்க் //

  கேட்கவே பயங்கரமா இருக்கே ஜீ!

  ReplyDelete
 41. @சே.குமார் //Kalakkal thodar...// நன்றி குமார்.

  ReplyDelete
 42. செங்கோவி said...
  @ஜீ... //சென்கோவி : ஒன்றாம் அத்தியாயம் - நியூயார்க் //

  கேட்கவே பயங்கரமா இருக்கே ஜீ!

  அது கவுதம் மேனன் ஸ்டைல் டைட்டில்! நாலு ஹாலிவூட் படம் பார்த்து ஸ்க்ரீன் ப்ளே எழுதி...அடுத்த வருஷ தேசிய விருதுக்கு குறி வைப்பமாண்ணே? :-)

  ReplyDelete
 43. @ஜீ... //அது கவுதம் மேனன் ஸ்டைல் டைட்டில்! //

  ஆமாம் தம்பி..அதனாலதான் பயங்கரமா இருக்குன்னு சொன்னேன்!

  ஸ்க்ரீன்பேளாவா...தம்பி, இது ரியல் ஸ்டோரி..இதுல ஹாலிவுட் ‘சீன்’ நுழைச்சா இங்க சீன் ஆகிடும். நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..வாழு-வாழ விடுன்னு சொல்வாங்களே..அதைக் கொஞ்சம் ஃபாலோ பண்ணி இந்த குடும்பஸ்தனை காப்பாத்துங்க தம்பி.

  ReplyDelete
 44. பாஸ்.....!

  உங்கட மன்மத லீலைகளை இடைக்கிடை படித்திருக்கிறேன். அத்துடன் அதனை நிறுத்தி விட்டேன். ஏனெனில், ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும் என்பதால். அதுதவிரவும் உங்கட அனுபவங்கள் ஆங்காங்கே என்னுடைய அனுபவத்துடனும் ஒத்துப்போகிறது.


  வாழ்த்துக்கள் பாஸ்....! அச்சு வடிவில் மன்மதலீலைகளைக் கொண்டுவர!!

  ReplyDelete
 45. // சிவாவின் அறிவுரைகள் மதனுக்கு உதவியாய் இருந்தன. அடுத்த சில மாதங்களில் நார்வேயில் ஒரு வேலையை வாங்கினான் மதன்.

  தன் நெடுநாள் கனவான யூ.கே.வேலை கிடைத்த சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடத் துவங்கினான்.
  //

  Norway or UK ---> Confusing these lines.

  -----

  I liked the way you bring back all the characters and intertwine with the main story. Welcome back to Siva Character.

  It looks like inithaan athiradi arambam :P

  ReplyDelete
 46. முற்றும் போடுற போது முழுசா படிச்சிடலாம்ன்னு இந்த தொடருக்கு மட்டும் விரதம்:)

  ReplyDelete
 47. பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.... கிழிந்த டைரி என்று ஒட்டவைக்கப்படும்

  ReplyDelete
 48. @வினையூக்கி //Norway or UK ---> Confusing these lines. // சாரி பாஸ், நான் தான் தப்பா டைப்பிட்டேன்.

  ReplyDelete
 49. @மாய உலகம் //கிழிந்த டைரி என்று ஒட்டவைக்கப்படும்// சீக்கிரம்!

  ReplyDelete
 50. அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்றேன் -
  எதுக்கு இந்த வீண் விளம்பரம்

  ReplyDelete
 51. போற போக்க பாத்தா இனிமே மன்மத லீலைகள் இருக்காது போலருக்கே, அப்போ ஹிட்ஸ் கொறஞ்சிடும் ஹா ஹா ஹா, சுவாரசியமா போயிட்டு இருக்கு அடுத்த பகுதிக்கு காத்திருக்கேன்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.